நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி, நோன்பு என இந்துக்களின் பண்டிகைகளின் போது இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது. நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் ஆனதுதான். அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான் இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம். அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவையே. இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104 ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104 (திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.) திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத…
-
- 8 replies
- 1.9k views
-
-
உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) உயிர்மை மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை இது. நம்மில் பலருக்கு இந்த நோய் இருந்தும், அது இருக்கிறதென்று தெரியாமலே வாழ்த்து வருகின்றோம். என்னை மையமாக வைத்து, இந்த நோயைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதில் ‘நான்’ என்பது. நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது என் நண்பராகவோ அல்லது வேறு ஒரு நபராகவோ கூட இருக்கலாம். இதைப் படித்த பலர் பர்சனலாக யோசித்து, எதிர்வினையாற்றுகிறார்கள். இங்கு யாருக்கு இந்த நோய் இருந்தது என்பதல்லப் பிரச்சனை. நோய் மட்டுமே பிரச்சனை. இனித் தொடர்ந்து படியுங்கள். -ராஜ்சிவா- உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் …
-
- 0 replies
- 927 views
-
-
மனித உயிரை காவுகொள்வதில் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பாரிய பங்காற்றுகின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பாம்பு, கரடி, புலி, சிங்கத்தை கண்டு பயந்த நாம் தற்போது கிருமிகளை கண்டும் அஞ்ச வேண்டியுள்ளது. நாம் உண்ணும் உணவு முதல் அனைத்து விடயங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்நிலையில் வீடுகளில் கிருமிகளை பரப்புவதில் தூவாய்கள் மிக மோசமான குற்றவாளியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமலறை துவாய்கள் மட்டுமன்றி குளியலறை துவாய்களும் நோய்களை மிக வேகமாக பரப்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர். துவாய்கள் அதிக நேரம் ஈரத்தன்மையுடன் காணப்படுவதனாலும் வீட்டில் கிருமிகள் அதிகம் காணப்படும் இடங்களில் பயன்படுத்துவதாலும் வீடுகளில் கிருமிகள் பெருகவும் பரவ…
-
- 0 replies
- 606 views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி. மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில வ…
-
- 3 replies
- 3.8k views
-
-
மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது. ‘என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம். …
-
- 0 replies
- 462 views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லா…
-
- 1 reply
- 920 views
-
-
காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம். குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது. சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது. காலையில் அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன. ஹெல்தி ஹார்ட் வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறையும் கொழுப்பின் அளவு பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அ…
-
- 0 replies
- 667 views
-
-
'என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன?' என, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்தராஜ்; சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என, இரண்டு பேர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் பானுவிடம் ஒப்படைத் தோம். 'ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்' என்கிறார் அவர். என்னதான் சொல்றார்... அவர் சொல்றதை படிங்க... மறதி நோய் என்பது, பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும் நோய். 65 வயதுக்கு மேல் வரலாம்; 90 வயதுக்கு மேல், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை, 'அல்சீமர்' என்கிறோம். வயதாகிவிட்டது என, பலர் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இது, மறதி நோயை அதிகரிக்கும். அதனால், வீட்டிற்குள் ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தொற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்... பெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத வாயப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு …
-
- 0 replies
- 468 views
-
-
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும். 2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும். 3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அம…
-
- 0 replies
- 1.3k views
-
-
Be Helpful to Others, தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள். 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் புண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன…
-
- 1 reply
- 6.8k views
-
-
"மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற இலங்கை இந்திய பழங்களுக்குப் பதிலாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெளிநாட்டில் மட்டுமே விளையக்கூடிய பழங்களை, பெரும்பாலானோர் வாங்குவது இல்லை. நம் ஊரில் விளையாமல் இறக்குமதியாகும் அவகேடோ, கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம்தான்'' என்கிற தஞ்சையைச் சேர்ந்த உணவு நிபுணர் ஜெயந்தி தினகரன், வைட்டமின்கள், தாது உப்புகளின் 'பவர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் கிவிப் பழத்தின் மருத்துவப் பலன்கள் பற்றிச் சொல்கிறார். 'வைட்டமின் ஏ, சி, கே, புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச் சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் 'கிவி’த…
-
- 5 replies
- 922 views
-
-
இரண்டு கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” – லண்டன் ஆய்வில் ”திடுக்” தகவல். லண்டன்: எங்குபார்த்தாலும் பால் உடம்புக்கு நல்லது என்ற கூற்று நிலவி வருகின்ற நிலையில் தினமும் இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்தவர்கள் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினர் ஆவார்கள். இந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு கிடைக்கும் நன்மை சிறிதளவுதான். ஆனால், பாதிப்புகளோ கடுமையானது என்று தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளாக ஆய்வு: அவர்கள் இதுகுறித்து, "பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து…
-
- 23 replies
- 7.2k views
-
-
மெல்லத் தமிழன் இனி...! 18 - ஏழு தலைமுறை தாண்டியும் தாக்கும் ஏவுகணை! கடந்த அத்தியாயத்தில் அந்த இளைஞருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை; ஆனால், அவர் ஏன் மது அருந்துகிறார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்களாலும் சொல்ல இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்துவிட்டு நிறைய பேர் தொடர்புகொண்டு காரணங்களை அடுக்கினார்கள். பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டது ‘திமிர்’. இதுகுறித்து டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டேன். “அப்படிச் சொல்ல வேண்டாம். உண்மையில், மிகவும் பரிதாபத்துக்குரியவர் அவர். அவர் ஏன் மது அருந்துகிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் ஒரு குடிநோயாளி என்பது மட்டுமே உண்மை. அந்தரீதியில் மட்டுமே அவரை அணுக வேண்டும். அந்த இளைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே …
-
- 0 replies
- 600 views
-
-
மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும். இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல். நமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள…
-
- 2 replies
- 973 views
-
-
பெரும்பாலான நாடுகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களே நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பது புரியும். இத்தகைய ஆயுட்கால வித்தியாசம் மனிதர்கள் மட்டுமல்லாது பிற விலங்குகளிலும் காணப்படுகிறது என்கிறது அறிவியல். இதற்கான காரணம் இன்னதென்று கண்டறிந்து திட்டவட்டமான ஒரு கருத்தை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை. இந்த அறிவியல் மர்மத்துக்கு பரிணாம வளர்ச்சியில் இருக்கும் ஒரு ஓட்டைதான் காரணம் என்கிறது ஒரு ஆய்வு. மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களில் காணப்படும் ஆண்,பெண் ஆயுட்கால வித்தியாசத்துக்கு காரணமாக இருக்கும் அந்த பரிணாம வளர்ச்சி ஓட்டை உயிரணுக்களில் உள்ள மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கிறதாம். உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் பகுத…
-
- 5 replies
- 731 views
-
-
முழங்கால் மூட்டு சார்ந்து காலப்போக்கில் ஏற்படும் பிரச்சனைகளில் முழங்கால் மூட்டு பிரதியீட்டு நிலை என்பது உச்ச விளைவு எனலாம்.. இது தொடர்பாக... கேள்வி - பதில் வடிவ குறிப்பொன்றை நோக்குவோம். முழங்கால் மூட்டு எங்குள்ளது.. அது எதனால் ஆக்கப்பட்டுள்ளது..??! முழங்கால் மூட்டு காலின் தொடை எலும்புகளுக்கும் கணுக்கால் எலும்புகளுக்கும் இடையில் உள்ள பிரதான மூட்டு ஆகும். இந்த மூட்டுச் சார்ந்து காலை ஒரு வழியில் (பின்பிறமாக) மடிக்க முடிகிறது. இது மனிதனின் நிமிர்ந்த உடற்கோலத்துடன் கூடிய நடத்தலுக்கு.. உடை எடையை தாக்குவதற்கு முக்கியமான ஒன்றாகும். உதாரணமாக வீட்டின் கதவை திறந்து மூடுவதற்கு பாவிக்கும் பிணைச்சல் போல.. இங்க மூட்டு செயற்படுகிறது. இந்த முழங்கால் மூட்டை ஆக்குவதில்.... தொட…
-
- 3 replies
- 4.3k views
-
-
லண்டனில் உள்ள செக்ஸ் பொம்பை என்ற நிறுவனம் தம்பதிகள் செக்ஸ் வைத்து கொள்ள வாரநாட்களில் எந்த நாள் ஏற்ற நாள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் செக்ஸ் வைத்து கொள்ள சனிக்கிழமையே சாதகமானது என 44 சதவீதத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர். 24 சதவீதத்தினர் ஞாயிற்றுக்கிழமையையும், 22 சதவீதத்தினர் வெள்ளிக்கிழமையையும் தேர்வு செய்து உள்ளனர். இந்த ஆய்வு பற்றிய தகவல் டெய்லி எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119508&category=CommonNews&language=tamil
-
- 9 replies
- 1.3k views
-
-
சாதாரணமாக தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கிறது. இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வருவதால் நம்மை தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி. இதை கடைபிடிக்கும் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இதை பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். செரிமானத்திற்கு உதவும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். அல்சர் பிரச்சினை நீங்கும் காலையில் சாப்பிடாமல் அ…
-
- 0 replies
- 375 views
-
-
மனிக் டிப்ரஷன்... (மன நோய்!) மனிக் டிப்ரஷன்... ------------------------------------------------------------------------------------------ மனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது. ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று ந்டந்துகொள்வார்கள். அதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய். சந்தோச மன நிலையில், இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்கும். தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள். இப்படி, சந்தோஷமாக நடந்துகொள்பவர்..…
-
- 0 replies
- 559 views
-
-
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இங்கு பல்வேறு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருகின்றன, *எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும். *நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும். *ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை இரவில் 100 மி.லி., தண்ணீரில் ஊற…
-
- 0 replies
- 657 views
-
-
தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும். அதிகாலையில் கண்விழித்துப் படுக்கையிலிருந்து எழுகிறபோது களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியுடனும் தெம்புடனும் இருக்கிறவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல பேருக்கு அந்தப் பாக்கியம் லேசில் கிட்டுகிறதில்லை. குழந்தைகளை நீங்கலாக, உலகில் பாதிப் பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் சரியாகத் தூங்க முடியாத பிரச்சினை உள்ளது. மருத்துவர்களாலும் இந்த விஷயத்தில் பெரிதாக உதவ முடிவதில்லை. ஏனெனில் தூக்கத்தைப் பற்றிய முழு விவரங்களும் இன்னமும் திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. எல்லோருக்கும் தூக்கம் இன்றியமையாதது. அன்ன ஆகாரமின்றிப் பல நாட்கள் இருந்துவிடலாம். தூங்காமல் ஓரிரு நாள்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளில்…
-
- 1 reply
- 738 views
-