நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
வரட்டு இருமல், சளி தொல்லைக்கு மிக எளிதாக கிடைக்கும் பொருள்களிலிருந்து மருந்து தயாரிக்கும் முறையை சித்த வைத்தியர் இராஜமாணிக்கம் அவர்க ள் செய்து காட்டுகிறார்.
-
- 0 replies
- 3.6k views
-
-
[size=4]உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலுக்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரசாரமாய் உணவில் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிடுபவர்கள் உடல் எடையைப் பற்றி இனி கவலைப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[/size] [size=4]இந்திய சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பொருட்களை சேர்க்கின்றனர். சீரகம், வெந்தையம், மிளகு, பூண்டு, மிளகாய் என பல பொருட்களை கலந்துதான் சமையல் செய்யப்படுகிறது. இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவைகளையும் சமையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பல பொருட்களை சமையலில் பயன்படுத்திவருகின்றனர் முன்னோர்கள்.[/size] [size=4]நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொரு…
-
- 0 replies
- 526 views
-
-
“சோதனைக்கூட விந்தணுக்கள் மூலம் குழந்தைகள் சாத்தியம்” சோதனைக்கூடத்தில் விந்தணுக்கள் உருவாக்கி சாதனை செய்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவிப்பு குருத்தணுவில் இருந்து சோதனைக்கூடத்தில் விந்தணுவை உருவாக்கி அதன் மூலம் ஆரோக்கியமான குட்டி/ழந்தைகளை உருவாக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை தாங்கள் நிரூபித்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். விலங்குகளின் உடலுக்கு வெளியே விந்தணுக்களை உருவாக்கியிருப்பதும் அதன்மூலம் கருவூட்டப்பட்டு பிறந்த எலிக் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதும் விஞ்ஞான உலகில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான சுண்டெலிக்குட்டிகள் பிறந்திருப்பதாகவும் இதனை மனிதர்கள…
-
- 0 replies
- 373 views
-
-
செரிமான கோளாறை போக்கும் புளி நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத…
-
- 0 replies
- 3.2k views
-
-
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை. மீன் எண்ணெய் என்றால் என்ன? இந்த எண்ணெய்…
-
- 0 replies
- 1.6k views
-
-
என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது...' என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல. கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு. நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற' வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம். சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்' வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நட…
-
- 0 replies
- 1.1k views
-
-
முடிகொட்டுதல் தீர்வு என்ன? எனக்கு வயது 25 . நான் ஒரு பெண். அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன? வி. கஜானி கண்டி பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை. ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்க…
-
- 0 replies
- 955 views
-
-
காளான் - மருத்துவ பயன்கள் காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. …
-
- 0 replies
- 856 views
-
-
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அத…
-
- 0 replies
- 330 views
-
-
பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சா…
-
- 0 replies
- 650 views
-
-
உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன. பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகி…
-
- 0 replies
- 1.7k views
-
-
உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியே கமான இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற் பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த ஓட் டம் தடைப்பட்டு, அந்தத் தசைகள் பழுத டைவதையே மாரடைப்பு என்கிறோம். ஒரு முறை அந்தத் தசைகள் பழுதாகி மாரடைப்பு ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத் தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன், அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுப்பதே சிறந்தது. மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய கார ணிகளுள் மிக முக்கியமானவை ஆறு. 1. புகையிலை பாவனை. 2. அதீத…
-
- 0 replies
- 518 views
-
-
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன. * நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும். * `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். * நட…
-
- 0 replies
- 725 views
-
-
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPHILIPPE HUGUEN/AFP/GETTY IMAGES 75 வயதான பிரெண்டா விட்டில்க்கு அல்சைமர் நோய் இருப்பது கடந்த 2015ம் ஆண்டு தெரியவந்தது. ஆனால் இப்போதும் அவர் ஜிக்ஸா எனப்படும் அட்டையை கலைத்துப்போட்டு விளையாடும் விளையாட்டு, தையல், நடனம் என உற்சாகமாக பொழுதை கழிக்கிறார். அல்சைமர் ஆராய்ச்சியி…
-
- 0 replies
- 663 views
-
-
கொரோனா காலத்தில் அசைவ உணவு... நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மா.அருந்ததி Biriyani கொரோனா காலத்தில் அசைவ உணவு உண்பவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனப் பல சிக்கல்கள் மக்களையும் அரசையும் வதைக்கின்றன. பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசியின் மூலம் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் தவிக்கின்றனர். இதுமட்டுமன்றி தங்களின் உணவுப் பழக்கத்தின் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் பாதிப்பை குறைக்க முயல்கின்றனர். இந்நிலையில் அசைவ உணவு குறித்து மக்களிடையே சில சந்தேகங்க…
-
- 0 replies
- 384 views
-
-
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான். சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிரிப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறு நீரகக் கல்... ஒரு சிகிச்சை இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சை…
-
- 0 replies
- 702 views
-
-
கருப்பை வாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? எப்படி தடுப்பது? கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன. குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயால் வளர்ந்து வரும் நாடுகளான ஆஃப்ரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இந்தியளவில் தமிழகத…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி? "கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது." என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா. ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். "எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்." என கூறுகிறார் அவர். அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எ…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
மிளகின் சுயசரிதம் முனைவர் சேக்கிழார் அவர்களால் வலைப்பூவில் எழுதப்பட்ட இடுகையை தமிழும் நயமும் பகுதியில் இணைத்திருந்தேன். இங்கும் அதனை இணைத்தலி பொருத்தமாக இருக்கும் என்பதனால் இணைக்கின்றேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=65304
-
- 0 replies
- 1.5k views
-
-
மனிதனின் 6-வது அறிவு மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது. சில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
பழச் சாறுகள்(fruit juice).பழ ரசங்கள்(Cordial) இயற்கையானவை; வைற்றமின்கள் உள்ளவை; ஆரோக்கியமானவை என நம்ப வைப்பது மிகவும் இலகுவானது. ஆனால் அவற்றில் இருக்கும் உடற் கொழுப்பைக் கூட்டக் கூடிய அளவுக்கு அதிகமான சீனியை அதாவது இனிப்புத்தன்மையை யாரும் பெரிதுபடுத்துவதில்லை பழச்சாறு, இவற்றை அதிகளவு அருந்தும் பிள்ளைகளுக்கு பசி இன்மை, வயிற்றோட்டம், பற்சூத்தை, எடை அதிகரிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.(1) விக்டொரியா மாநிலத்திலுள்ள் டேக்கின் பல்கலைக் கழக(Deakin University) ஆய்வு (2)ஒன்று் குறிப்பிடுவது யாதெனில், பழச் சாறு உடற் கொழுப்பினால் ஏற்படும் ஆபத்தை இரணடு மடங்கு ஆக்குகிறது;தினமும் பழச் சாறும், மென் பானங்களும் அருந்தும் ஆரம்பப் பாடசாலை சி்றுவர்கள் எடை அதிகரிப்பு ஏற்படும் நிலையில…
-
- 0 replies
- 886 views
-
-
முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம். கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது. மதுப் பழக்கமுடையோர…
-
- 0 replies
- 526 views
-
-
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். வெந்தயக் கீரையை …
-
- 0 replies
- 423 views
-
-
யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்? படத்தின் காப்புரிமைMADDIE MEYER/GETTY IMAGES) ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1.2 பில்லியன் பவுண்ட் தேசிய சுகாதார சேவையில் செலவை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது. தன்னுடைய 44 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட ஹாரியட் முல்வானே, அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள தீர்மானித்தார். "இப்போது திரும்பிப் பார்க்கையில், நான் அதிகமாக இயங்காமல், செயல…
-
- 0 replies
- 581 views
-