Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. குணமளிக்கும் கொய்யாப்பழம் நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா! கொய்யா மரத்தின் வேர்இஇலைகள்இ பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல் …

    • 0 replies
    • 2.3k views
  2. இனிய வணக்கங்கள், தினமும் நாங்கள் எல்லோரும் பெரும்பாலும் Headphones பாவிக்கின்றோம். iPod தொடக்கம் கணணி வரை பல்வேறு கருவிகளில இந்த Headphonesஐ நாங்கள் பயன்படுத்தவேண்டி இருக்கின்றது. முக்கியமாக மற்றவர்களை இரைச்சல் மூலம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்கும், இசையை நாங்கள் மட்டும் கேட்டு மகிழ்வதற்கும் இதை பாவிக்கின்றோம். பல்வேறு வடிவங்களில், வகைகளில், விலைகளில் Headphones இருக்கின்றன. கலைஞர்கள் பாடல்களை கலைக்கூடங்களில் ஒலிப்பதிவு செய்யும்போது.. அது தமிழ் சினிமா பாடலாக இருக்கட்டும்.. அல்லது Hollywoodல் உருவாக்கப்படும் ஓர் இசைAlbumமாக இருக்கட்டும்.. குறிப்பிட்ட பாடலை - இசையை கேட்பதற்கு சில அடிப்படை தரம் உள்ள கேட்கும் கருவிகளை ரசிகர்கள் பயன்படுத்தவேண்டும் என்று அவற்றை உர…

  3. வெள்ளைப்படுதல் என்பது என்ன ? : வெள்ளைப்படுதல் என்பது பதினைந்து முதல் நாற்பத்தைந்து வரை வயதுடைய மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு வரும் ஒரு வித நோய் ஆகும். வெள்ளைப்படுதல் என்பது சில பேச்சு வழக்கின் படி வெள்ளைப்பாடு அல்லது வெட்டை என்றும் கூறப்படுகிறது. வெள்ளைப்படுதல் எவ்வாறு ஏற்படுகிறது ? : பொதுவாகவே பெண்களுக்கு பிறப்புருப்பில் சுரக்கும் திரவம்,வெள்ளையாய் வெளியாவது ஏனெனில் அதிகமான உடல் சூடு, பட்டினி கிடத்தல்,அடிக்கடி உடலுறவு கொள்ளுதல்,காரம்,உப்பு மற்றும் புளிப்பு நிறைந்த பொருட்கள் அதிகமாக உண்ணுதல், சுய இன்பம் மேற்கொள்ளுதல் ஊளை சதை மற்றும் ரத்த சோகை காரணமாக வரும் உடல் சூடு ஆகிய காரணத்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் : சிறுநீ…

  4. உலக ரத்த தான நாள்: ஜூன் 14 மனித உயிர்களைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ரத்தத் தானம், தானங்களில் சிறந்தது என்பதில் கேள்விக்கு இடமிருக்காது. ஒருவர் செய்யும் ரத்தத் தானம், ரத்தம் பெறுபவருக்குக் கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு. ஒவ்வொரு முறையும் தானமாகக் கொடுக்கப்படும் ரத்தம் மூலம் மூன்று பேரைக் காப்பாற்ற முடியும். மருத்துவ உலகில் அத்தியாவசியமானதாகக் கருதப்படும் ரத்தம், உலக அளவில் எப்படிக் கிடைக்கிறது, அதை யார் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அவற்றைப் பார்ப்போம். ரத்தத் தானம் # ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 10.8 கோடி யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்படுகிறது. இதில் 50 சதவீதம் வளர்ந்த நாடுகளில் பெறப்படுகிறது. உலக மக்கள்தொகை…

    • 0 replies
    • 673 views
  5. ரத்த அழுத்தம் சீராக சாக்லெட் சாப்பிடுங்க!! சாக்லெட்களை சிறிதளவு தினந்தோறும் சாப்பிட்டால் உடலின் ரத்த அழுத்தம் குறைகிறது என ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கோகோ அதிகம் உள்ள கறுமை நிற சாக்லெட்களை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால், அதில் இருக்கும் கூடுதல் சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் கலோரி ஆகியவற்றால் கோகோவால் ஏற்படும் நன்மை கெட்டுவிடுகிறது என்றும் மற்றொரு ஆய்வு அறிக்கை தெரிவித்தது. ஆனால், சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், அதாவது தினந்தோறும் 7 கிராம் அளவுக்கு சாக்லெட் சாப்பிட்டால், எந்த வித பாதிப்பும் இல்லாமல் ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் டிர…

    • 0 replies
    • 1.7k views
  6. மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள் சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள் புரதச்சத்து - 20.9 கிராம் கொழுப்பு சத்து - 10.5 கிராம் சாம்பல் சத்து - 1.9 கிராம் நீர்ச்சத்து - 66.70 கிராம் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.…

  7. அதிகரித்து வரும் மலக்குடல் புற்றுநோய் இப்போதைய இளைய தலைமுறையினர், இணைய தலைமுறையினராக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் தருவதில்லை. பொருளீட்டுவதற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதன் பின்விளைவாக எந்த நேரத்திலும் உணவு உண்பது, சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் துரித வகை உணவுகள் உண்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்வது, புகைபிடிப்பது, மது அருந்துவது, மாசடைந்த புறச்சூழலில் தொடர்ந்து இயங்குவது போன்ற காரணங்களால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மலக்குடல் புற்றுநோயால் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். 6 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் இதன…

  8. இது தாங்க எங்களுக்கு சோலியே! (நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3) வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை ம…

  9. சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் ! இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்…

    • 0 replies
    • 3.3k views
  10. உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'…

    • 0 replies
    • 1.7k views
  11. பெண்ணுறுப்பின் கருமை நிறம் ஆபத்தா?- பெண்களை ஆபத்துக்குள்ளாக்கும் சமூக ஊடக பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கு அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் பதிவுகள் பரிந்துரைக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஓஸ்ஜ் ஓஸ்டெமிர் பதவி, பிபிசி துருக்கி 23 ஆகஸ்ட் 2024 சமூக ஊடகங்களில் பெண்ணுறுப்பு பற்றி நடந்து வரும் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள பல பெண்களின் மனதில் தேவையற்ற அச்ச உணர்வை விதைத்துள்ளது. பெண்ணுறுப்பின் உள்புறம் ‘யோனிக் குழல்’ (vagina) எனப்படும். கருப்பையை வெளிப்புற உடலுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. பெண்ணுறுப்பின் …

  12. ''விளையாட்டு வினையாகும்னு சொல்வாங்க. நானே அதைப் பல தடவை பல பேருக்குச் சொல்லியிருக்கேன். ஆனா, எனக்கு நானே அப்படிச் சொல்லிக்கிற துர்பாக்கிய நிலைமை வரும்னு நினைக்க லீங்க. சின்ன வயசுல பசங்களோடு சேர்ந்து திருட்டு தம்மடிக்க எங்கேயாச்சும் ஓரமா ஒதுங்குவோம். ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்தவெச்சுப் புகைவிட்டதுமே, நாமளும் பெரியவங்க ஆகிட்டோம்கிற மாதிரி ஒரு மிதப்பு வரும். உலகத்தையே கால்ல போட்டு மிதிச்ச மாதிரியான நினைப்பு. அதுல வாழ்க்கையைத் தொலைச்சவங்க எத்தனையோ பேரில் நானும் ஒருத்தன். விளையாட்டா ஆரம்பிச்ச பழக்கம் இப்ப வினையாகிப்போச்சு. என்னைப் பத்தி சில வார்த்தைகளை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்புறேன். இது வளரும் சமுதாயத்துக்கு ஒரு பாடமாக அமையும். தயவுசெஞ்சு காது கொடுத்துக் கேளுங்க. நான் ப…

    • 0 replies
    • 942 views
  13. 1. முழு தானியம் ( சிவப்பரிசி) கூறுகள்: விற்றமின் பி, ரூரின் நன்மைகள்: தெளிவான மற்றும் ஈரலிப்பான சருமம் 2. விதைகள் ( பாதாம் பருப்பு) கூறுகள்: விற்றமின் ஈ நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம் மேலும் படிக்க http://vizhippu.blogspot.com/2009/03/blog-post.html

    • 0 replies
    • 1.6k views
  14. உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின் உடலிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெறுபவரின் சீரண…

  15. 22 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே. உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்த…

  16. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் …

  17. "பிளாஸ்டிக்" எமன் !!!அனைத்து மாற்றங்களும்... நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே.... தொடங்குகின்றன.ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் …

  18. ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன? எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு. இருந்போதும…

  19. நடைப் பயிற்சி எனும் அற்புதம் வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் என்கிறார் கவிஞர் தாராபாரதி. எத்தனை விரல்கள் இருந்தாலும் கட்டை விரல்தான் பிரதானம். அதுபோலத்தான் பருத்த உடலைக் குறைக்க கார்போ வேண்டாம், புரோட்டீனைக் கூட்டு, கொழுப்பைக் குறை, நொறுக்குத் தீனிகளுக்கு டாட்டா என்று எத்தனை ரகசியங்களைச் சொன்னாலும், ‘உடற்பயிற்சி’ என்கிற ரகசியம்தான் ரொம்பவும் அவசியம். ஆனால், அதற்குத்தான் பலருக்கும் இல்லை அவகாசம். நலம் நல்கும் நடை உடற்பயிற்சிகளின் அரசன் நடைப்பயிற்சி. காசு செலவில்லை; தனிக்கருவி தேவையில்லை; காலையில் சீக்கிரம் எழுந்தால் போதும். துணைக்கு ஓர் ஆள் கிடைத்தால் நல்லது. ‘காரியம்’ கைகூடும். ஆனால், ‘காலையில் எழுந்தால் சமைக்கவும் …

  20. பிரா அணியாவிட்டால் மார்பகங்கள் தளருமா? பெரிய மார்பகங்கள் சிக்கலை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 16 மார்ச் 2023, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெண்களின் மார்பக ஆரோக்கியம் குறித்து, பலரிடமும் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. குறிப்பாக ‘பிரா’ அணிவது குறித்த வதந்திகள் அதிகம் காணப்படுகின்றன. பெண்கள் தங்களது உடைகளை சௌகரியமாக அணிவதற்கு பிராக்கள் உதவி செய்கின்றன.நடைமுறையில் பார்க்கும்போது, பள்ளி & கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்க…

  21. கனவுகள் ஓர் அறிமுகம் மருத்துவம் வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும். “அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே! உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல்…

  22. தற்காத்து தப்பித்தல் - வரதராஜன் யுகந்தினி டிசெம்பர் முதலாம் திகதி சர்வதேச ‘எயிட்ஸ்’ தினம் உலகில் வாழ்கின்ற மனிதர்களில் பெரும்பாலானோர் இன்பங்களைச் சுகிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். அதிலும், சிற்றின்பத்தை (உடலுறவு) அனுபவிப்பதில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். தனது இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக இயற்கையால் கொடுக்கப்பட்ட இன்ப நுகர்ச்சியை ஒழுக்கநெறி, பண்புசார்நெறி சார்ந்த எல்லைகளைக் கடந்து, சிற்றின்பத்தில் ஈடுபட்டு, வம்பை விலைக்கொடுத்து வாங்குவதைப் போல், உயிர்கொல்லி நோயைத் தானாகத் தேடிச்சென்று பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் ஏற்படும் விளைவானது, குறுகிய காலத்திலே நோயாளியாகி,…

  23. மின்சாரம் தாக்கியதால் முகத்தின் உறுப்புக்கள் அனைத்தினையும் பறிகொடுத்த அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவருக்கான முழு முகமாற்று சத்திரசிகிச்சை கடந்தவாரம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. பிரிகம் பெண்கள் வைத்தியசாலையில் நடைபெற்ற இது, உலகின் 2 ஆவது முழு முகமாற்று சத்திரசிகிச்சையாகும். டலஸ் வெய்ன்ஸ் என்ற 25 வயதான கட்டிடத் தொழிலாளிக்கே இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்விபத்தில் இவரது முகம் முற்றிலுமாக உருத்தெரியாமல் சிதைந்து போனது. எனினும் மனந்தளராத வெய்ன் கடந்த வாரம் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்துள்ளார். இவரது முகத்தின் தோல், மூக்கு, உதடுகள், மற்றும் நரம்புகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளத…

  24. நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள். சில நேரங்களில் புரதம், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பல பயனுள்ள பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இது ஒரு இயல்பான நிலை தான். உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்!!! அதனால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை உங்கள் ச…

  25. சமூக வலைத்­ த­ளங்­களில் தின­சரி 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைச் செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நலப் பிரச்­சி­னைகள் ஏற்­படும் அபாயம் அதி­க­மா­க­வுள்­ள­தாக புதிய ஆய்­வொன்று எச்­ச­ரிக்­கி­றது. பேஸ்புக், இன்ஸ்­டா­கிராம் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லா­ன சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரத்தைச் செல­விடும் இள­வ­ய­தினர் மனப் பதற்றம், மன அழுத்தம் என்­ப­வற்­றுக்கு தாம் உள்­ளா­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளனர். அமெ­ரிக்க மேரி­லான்ட்டில் பல்­ரி­மோ­ரி­லுள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த குழு­வி­னரால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரத்தைச் செல­விடும் இள ­வ­ய­தி­ன­ரி­டையே ஆக்­கி­ர­மிப்­பு­ண…

    • 0 replies
    • 339 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.