நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
ஒற்றை தலைவலி பாட்டி வைத்தியம் N. சுரேஷ் குமார் ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம். அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள் தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வரு…
-
- 0 replies
- 509 views
-
-
மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) பாட்டி வைத்தியம் - சுரேஷ் குமார் மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். 2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிக…
-
- 1 reply
- 589 views
-
-
தமிழால் இணைவோம் SCORLL DOWN FOR ENGLISH சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...! 1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும். 4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...! Did you know?? Drinking water at the correct time Maximizes its effectiveness on the Human body : 1 glass of water after waking up - helps activate internal organs 1 glass of water 30 minutes before a meal -helps digestion 1glas…
-
- 0 replies
- 584 views
-
-
KIWI(சீனத்து நெல்லிக்கனி) யின் மருத்துவப் பண்புகள் கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது? இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகி…
-
- 1 reply
- 561 views
-
-
மலர்களின் மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்பட்டு, மனிதர்களால் தேனீக்களிடம் இருந்து பறிக்கப்படும் அருமருந்தே தேன். அதனை அருமருந்து என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பழுப்பு நிற திரவமே தேன் ஆகும். தேனை பரவலாக வயிற்றின் நண்பன் என்று கூட சொல்வார்கள். இதற்கு காரணம் வயிறு, பித்தப்பை சம்மந்தமான நோய்களுக்கெல்லாம் மருந்தாக விளங்குவதே ஆகும். தேனில் நோய் தீர்க்கும் பண்புகள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளதால், தேன் சரும பாதுகாப்பு மற்றும் பல மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. கீழே தேனின் பல்வேறு நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேனை அதிகம் பயன்படுத்துங்கள். மாய்ஸ்…
-
- 0 replies
- 535 views
-
-
ஸ்கான் பரிசோனை ஈரலில் கொழுப்பு என்று மருத்துவர் சொன்னால்... ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு என்பது இப்பொழுது புதினமான கதை அல்ல. "உங்கடை ஈரலிலை கொழுப்பு விழுந்திருக்காம்" என்று சொன்னதும் கொழு கொழு என மதத்திருந்த குண்டான மனிதரது முகம் தொய்ந்துவிட்டது. "இதென்ன புதுக் கதையாக் கிடக்கு. வயித்துக் குத்து எண்டு உங்களட்டை வந்தனான். சலக் குழாயிலை கல்லு இருக்கும் போலை எண்டு ஸ்கான் பண்ண அனுப்பினியள். இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு ஈரலிலை கொழுப்பு எண்டு சொல்லுறியள்." உண்மைதான் இப்பொழுதெல்லாம் பலரது வயிற்றறையை வேறு தேவைகளுக்காக அல்ரா சவுண்ட் ஸ்கான் செய்த (ultra Sound Scan of Abdomen) ரிப்போட்டுகளைப் பார்க்கும்போது அவர்களது ஈரலில் கொழுப்பு என ஸ்கான் செய்த ரேடியோலஜிட் ரிப்போட் அ…
-
- 0 replies
- 2.1k views
-
-
வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.. புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும். தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும். 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது. இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரி…
-
- 0 replies
- 579 views
-
-
வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) இன்றைய பல் மருத்துவ டிப்ஸ்... சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும். உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பெரும்பான்மையானோருக்கு அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். இந்நிலையில் கல்வித் தகுதி அதிகம் உடைய நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிட…
-
- 0 replies
- 378 views
-
-
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு. கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் …
-
- 0 replies
- 374 views
-
-
இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்! இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்! 1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். 2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அள…
-
- 1 reply
- 12.7k views
-
-
மசாஜ் செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும், மனஅழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பார்கள். ஸ்பா போன்ற இடங்களில் மசாஜ் செய்வதற்கென்றே தனி ஆட்கள் இருக்கின்றனர். 6 மாதத்திற்கு ஒருநாள் அல்லது வசதியைப் பொருத்து மாதம் ஒருநாள் மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் உடல் சுறுசுறுப்பாகும். மசாஜ் பலவிதங்களில் செய்யப்பட்டாலும், ஆயில் மசாஜ், மில்க் மசாஜ், நத்தை மசாஜ் என பிரசித்தி பெற்ற மசாஜ்கள் வரவேற்பு பெற்றவை. தற்போது பாம்பு மசாஜ் என்ற புதுவித மசாஜ் இஸ்ரேல் அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது . அமேசான் பாம்புகள் இஸ்ரேலில் வழங்கப்படும் மசாஜ், வேறு எங்குமே கேள்விப்பட்டிராதது. அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகளைக் கொண்டு அங்கு மசாஜ் செய்கிறார்கள் .…
-
- 9 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=dRcFQdGKZcU http://www.inquisitr.com/885189/bird-poop-facial-will-set-you-back-180-in-manhattan/
-
- 0 replies
- 491 views
-
-
மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர்…
-
- 0 replies
- 831 views
-
-
உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன படியுங்களேன். ஒரு புண்ணியமும் இல்லை பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லையாம். உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. 300 பெண்கள் பங்கேற்பு இந்த ஆய்வுக்காக 18 முதல் 35 வயது வரையிலான 300 பெண்களின் மார்பகங்கள் அளந்து பார்க்கப்பட்டன. பிரா அணிந்த நிலையிலும், பிரா அணியாத நிலையிலும் இந்த ஆய்வுகள் நடத்த…
-
- 5 replies
- 3k views
-
-
பொடுகு என்றால் என்ன ? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும் 2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். 3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது 4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும் 5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். 6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psori…
-
- 4 replies
- 892 views
-
-
பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும். குடல் பூச்சி நீங்க வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் வலுப்பெற உடல் தேறாமல் மெலிந்து காணப்படுப…
-
- 0 replies
- 2.9k views
-
-
பாரம்பரிய இயற்கை மருத்துவம்..! 1.மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும். 2.ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும். 3.வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும். 4.கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும். 5.வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும். 6.புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். 7.சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும். 8.தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் சிற்சில விஷயங்கள், பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன. சாப்பிடும் உணவு நிறைவையும், திருப்தியையும் தரவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற் குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்ட பின், அதில் திருப்தியையும் மற்றும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களை கொடுத்திருக்கிறோம். அத…
-
- 3 replies
- 5.7k views
-
-
அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல் ‘நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என்று சமீபத்திய விளம்பரங்கள்வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டால், டொக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டொக்டரைத் தேடிப் போவதும்அப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். அப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஒரு நெல்லிக்காய் மூன்று அப்பிள்களுக்குச்சமம். 1. ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இர…
-
- 0 replies
- 17k views
-
-
உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி. ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ…
-
- 4 replies
- 4.6k views
-
-
Proud To Be Tamil பூண்டின் மகத்துவம் பூண்டை ஆயுர்வேதத்தில் மகா ஒளஷதா என்பார்கள். பூஞ்சைக் காளான் மற்றும் கிருமிகளை ஒழித்து நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது பூண்டு. வயதானவர்கள் தினம் ஒரு தம்ளர் பாலில் 5 பூண்டுகளை வேக வைத்து மஞ்சள் தூள், ஏலம், சர்க்கரை சேர்த்து சாப்பிட ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நீங்கி வாதம் தடுக்கப்படும். வலி வீக்கத்தை நீக்கும். பி.பியை சரி செய்யும். சர்க்கரை வியாதியை குறைக்கும். கெட்ட கொழுப்பை நீக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும் நரம்பு வீக்கமுறுவது, கால் கை வீக்கம், முடிச்சு முடிச்சாக நரம்பு சுருள்வது இவற்றை சரி செய்யும். தினசரி உணவில் பூண்டைச் சேர்த்து சாப்பிட்டால் பல நோய்களுக்கு நோ என்ட்ரி! …
-
- 0 replies
- 452 views
-
-
வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..! பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன. வெற்றிலையின் நுனியில் மூதேவியும் வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும் வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும் வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும் வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர். எனவே வெற்றிலை போடும்போது நுனியையும்,காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று. 40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை,பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகு…
-
- 0 replies
- 647 views
-
-
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தத…
-
- 8 replies
- 4.3k views
-
-
வணக்கம், கடந்த சில நாட்களாக மனதுக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. Barbeque செய்வதால் இறைச்சி போன்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பு சூட்டில் உருகிக் குறைந்து விடுமா? அண்மையில் Scarborough வில் உள்ள என்னுடைய நணபர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தாங்கள் Barbeque போடுவதால் என்னையும் விருந்துக்கு அழைத்து இருந்தனர். சரி, நான் தான் இலவசமாக Pynol கிடைத்தாலே அருந்தும் ஜென்மம் என்பதால் சந்தோசமாக போனேன். அங்கு அவர்கள் நிறைய Pork chops உம் Lamb chops உம் வைத்து இருந்தனர். இவை இரண்டும் அதிக கொழுப்புள்ள மோசனாம இறைச்சிகள். என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் உடலில் cholesterol அளவு அதிகம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்து இருந்தமை எனக்குத் தெரியும் என்பதால் "என்னடா உங்கள் இருவ…
-
- 22 replies
- 2.6k views
-