நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும். ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடை கூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்…
-
- 4 replies
- 6k views
-
-
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு "இன்சுலின்' மருந்து மட்டுமே வர பிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் "குளுகோஸ்' அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டு பிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது."இந்த பரிசோதனை வெற்றியடைந்தா…
-
- 0 replies
- 568 views
-
-
காபி vs டீ காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ ,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது . பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது . அதற்கான ஐந்து காரணங்கள் இதோ . 1 .விலை காஃபி ,டீ இரண்டும் வெவ்வேறு தரங்களில் வெவ்வேறு விலைகளில் கிடைத்தாலும் தரமான காஃபி அல்லது டீயின் விலையை ஒப்பிட்டால் காஃபியின் விலை அதிகம் . மேலும் காஃபியை விட டீயை அதிக நாட்கள் கெடாமல் வைக்கலாம் . 2 . பல் பாதுகாப்பு காஃபி ,டீ இரண்டுமே பற்களில் கரையை ஏற்படுத்துபவை என்றாலும் காஃபி அதிக கரையையும் வாய் துர் நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது .…
-
- 1 reply
- 614 views
-
-
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்? ஆஸ்துமா குணமாக: முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி. இருமல் குணமாக: சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ். இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த: காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி. இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உட…
-
- 0 replies
- 884 views
-
-
பாதிப்புகள். 1) கல்லீரலில் பாதிப்பு கல்லீரலை வீங்கச் செய்யும் கல்லீரலை நிரந்தரமாக சேதம் அடைய செய்யும். 2) மயக்கத்தில் ஆழ்த்துதல் அதிகமாக மது அருந்துவதால் மயக்கம் ஏற்படும். கண் விழிக்கும்போது தலைவலி இருக்கும். 3) மூளையைப் பாதித்து அதன் செயல்திறனைக் குறைக்கிறது. உங்களின் முடிவுகள், சுய கட்டுப்பாடு மற்றும் உடல் ஒத்துழைப்பு அனைத்தையும் பாதிக்கிறது. எனவே விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. 4) பசி இழப்பு. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது. மது பழக்கத்திலிருந்து விலகும் வழிமுறைகள். 1) உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள். 2) மதுவின் அளவை கு…
-
- 13 replies
- 1.5k views
-
-
உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம்! உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. தரமான லிப்ஸ்டிக் உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பாதுகாக்க முடியும். இல்லையெனில் உதடுகள் கருத்தும் வறண்டும் போய்விடும். முதன்முறையாக லிப்ஸ்டிக் உபயோகிக்கப்போகிறீர்களா? இதோ லிப்ஸ்டிக் போடும் முறை பற்றி ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்குகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது இதனால் தொற்றுக்கிருமிகள் தாக்கும். எனவே தனியாக லிப்ஸ்டிக் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். நிறத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக். தற்போது இளஞ்சிவப்பு முதல் பிரவுன், வைலெட் மற்றும் கறுப்பு வரை பல்வேறு வர்ணங்களில் கடைகளில் லிப்ஸ்டிக்குகள் கிடைக்…
-
- 37 replies
- 3k views
-
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் கீழே தரப்பட்டுள்ளது. பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும். பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து…
-
- 5 replies
- 17.3k views
-
-
மாற்றம் செய்த நேரம்:4/2/2012 3:29:05 PM 15:29:05 Monday 2012-04-02 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சோள வகை உணவான பாப்கார்னில் உள்ள சத்துக்களும் பயன்களும் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தியேட்டர்களில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதிகம். விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள்…
-
- 2 replies
- 553 views
-
-
Courtesy: Raman, kalakad வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச் செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது. உண்மையில் வெற்றிலை போடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவெருக்கத் தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்! அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்)…
-
- 0 replies
- 481 views
-
-
மாலை மணி 6:30, வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இ…
-
- 5 replies
- 869 views
-
-
முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது? இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள…
-
- 12 replies
- 9.7k views
-
-
இது முகநூலில் பகிரபட்டிருந்தது இதன் உண்மை தன்மை தெரியவில்லை சிறுநீரககல் பிரச்சினை படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும்... ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம். எனக்கு நான்கு வருடங்களுக்கு ம…
-
- 0 replies
- 506 views
-
-
Today is World Autism day; empathy not sympathy, opportunity not isolation is what should be the mantra ஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் . தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் . அறிகுறிகள்: இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது . கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது கண்ணோடு கண் பார்க்க மாட்டான் முகத்தை நேருக்கு நேர் பார்க்காது . சில விசயங்களை திரும்ப திரும்ப ஒரே மாதிரி செய்து கொண்டு இருப்பது இதை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிகிறோமோ அவ்வளவு நல்லது …
-
- 3 replies
- 1.4k views
-
-
what is human Endogenus cholesterol? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது. சரி …
-
- 0 replies
- 595 views
-
-
யோகா பயிற்சிகள் யோக முத்திரா ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. “குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும்” என்பது தமிழ்வாக்கு.…
-
- 2 replies
- 1k views
-
-
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லத…
-
- 0 replies
- 548 views
-
-
"ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்" மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன். எலுமிச்சை ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பி…
-
- 0 replies
- 368 views
-
-
பரசிட்டமோல்(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது. உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் கூட. இந்த மாத்திரையை தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே. இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப்படும்போது அந்தத் தயாரி…
-
- 1 reply
- 1.9k views
-
-
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களை விட ஆக்டிவாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 11 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம். மனஅழுத்தம், முதுகுவலி, இதயநோய், உயர்ரத்த அழுத்தம், வாய்வு கோளாறுகள் ஏற்படுவதே இந்த பிரெசென்டீசம் நோயின் அறிகுறி என்கிறது மருத்துவ அகராதி. வேலை என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதுதான். அந்த வேலையே உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒய்வு இல்லாத வேலை …
-
- 1 reply
- 513 views
-
-
March 28, 2012 in மருத்துவம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தாலே உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் விவரம்: குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களைவிட, அதிக தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வது குறையும். மாறாக குறைவாக தண்ணீர் குடித்தால் அதிக கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிக்கும். உடலில் போதுமான தண்ணீர் இல்லை என்றால் சிறுநீரகம் (கிட்னி) சீராக செயல்படாது. சிறுநீரகம் சரியாக செயல்படாத பட்சத்தில் கல்லீரலின் செயல்பாடும் தடைபடும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து உடல் இயக்கத்திற்கு தேவையான புரதத்தை சேமிப்பதே கல்லீரலி…
-
- 0 replies
- 485 views
-
-
டாக்டர். க.வெள்ளைச்சாமி RHMP., RSMP., செவ்வாய், 06 அக்டோபர் 2009 06:14 பயனாளர் தரப்படுத்தல்: / 7 குறைந்தஅதி சிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆண் - பெண் பாகுபாடின்றி அனைவரும் செரிமானக் கோளாறுகளுக்கு ஆட்படாமல் தப்பித்து இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவிலுள்ள மாவுச்சத்து, புரதச்சத்துக்களை பிரித்து இரத்தத்தில் சேர்ப்பதற்காக இரைப்பையில் சுரக்கும் அமிலநீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சுரப்பதால் இரைப்பையில் உள்ள உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாய் வழியாக மேல் நோக்கி எதுக்களித்து வருவதால் நெஞ்சுஎரிச்சல், புளித்தஏப்பம் ஏற்படுகிறது. காரணம் : உணவில் மசாலா மற்றும் காரமான, நறுமணமுள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சேர்ப்பதாலும், மிளகாய், ஊறுகாய், உணவின் சுவையை அதிகர…
-
- 0 replies
- 2.9k views
-
-
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது. தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலி…
-
- 1 reply
- 838 views
-
-
அருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம்… என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம். அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்! புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம். வேரோடுப் பிடுங்கி எடுத்த பசுமையான அருகம்புல் முழுச் செடியையும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பத்து மிளகைச் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் நீருடன் உட்கொண்டு வர ரத்தம் சுத்தமாகும். கண் பார்வையும் தெளிவாகும். அருகம்புல் வேர…
-
- 0 replies
- 547 views
-
-
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்? இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம். முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும். உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால், முதலாம் மாதத…
-
- 3 replies
- 906 views
-
-
பதிவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா) சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர் நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கி…
-
- 0 replies
- 2k views
-