யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
நாந்தாம்ப்பா துக்குடு... """"""புக்குடுவா இருந்த என்ன துக்குடு வா மாத்தி அனுப்பிச்சிருக்காங்க... அதற்கு காரணம் யாழ் கள மேலதிகாரிகள்... என்னை பெயரை மாத்த சொன்னங்க.. நானும் சுக்குடு-ன்னு மாத்தி அனுப்பிச்சேன்... அது தமிழ் பெயர் இல்லயாம்... இன்னும் மாத்தி இன்னோர் நல்ல பெயர் அனுப்பிச்சேன்.. ஒரு பதிலும் வரலை.. ஒரு புலிப்பாசறை என்ற நண்பருக்காக..அதுவும் எனக்கு அவரை யாழ் களத்தில் மட்டுமே தெரியும்.. அவரோட முற்பிறவி தற்பிறவி பிற்பிறவி எதுவும் தெரியாது.. அவர் கருத்துக்கள் எனக்கு ரொம்ப உண்மையாவும் எதார்த்தமாவும் இருந்துச்சு... அவருக்கு சப்போர்ட் பண்ணினதுக்காக என்னை வெளியே அன்ப்பியது நியாமா ???""""" என்றெல்லாம் நாக்கு வெளிய வர வாந்தி எடுக்க ஆசைதான்.. என்…
-
- 44 replies
- 5.5k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா
-
- 38 replies
- 5.5k views
-
-
யாழ் தள உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் நீண்ட காலமாக (சுமார் மூன்று வருடங்கள்) யாழ் தள செய்திகளையும் அன்பர்களினதும் கருத்துக்களையும் வாசித்து ரசித்தவன், மகிழ்ந்தவன், சில வேளைகளில் கவலையும் கொண்டவன். எனது கருத்துக்களையும் பகிரும் அவா இருந்தாலும் கடும் சமூகப் பணிகளுக்கு மத்தியில் அது சாத்தியம் இல்லாது போய்விட்டது. தற்போது சிறிதளவு நேரத்தை ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளேன். கடந்த வருடப் பெரும் துயரங்களில் இருந்து எம் இனம் விரைந்து மீண்டு எழ வேண்டும் என்ற விருப்புடன் எனது அறிமுகத்தை தொடங்குகிறேன். அன்புடன் ஆசான் குறிப்பு: தளத்தில் இணைந்த்தவுடன் எனது மின்னஞ்சலுக்கு வந்த நிலாமதியின் செய்தியை தொடர்பின் மூலம் அடையமுடியவில்லை.
-
- 57 replies
- 5.5k views
-
-
என் பெயர் தமிழ்வாணன், நான் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகிறேன். எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்த நேரம், நான் 3 வயதில் இருக்கும் போது எனது அப்பா, அக்கா, அண்ணா மூவரும் ஒரே நாளில், அத்துலத்த்முதலி போட்ட தார்பீப்பா குண்டில் சிக்கி மரணம் அடைந்தார்கள். அவர்களின் அவலச்சாவினை என் அம்மா எப்படி ஜீரணித்தால் என்பதினை நான் எண்ணி எண்ணி அழுவதுண்டு. அப்போது கூட எனக்குத்தெரியும் 3 பேரினதும் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. என் அம்மா என்னை தன் ஒரு கையால் தூக்கிவைத்தபடி அழுது கதறியது. இன்று என் அம்மா என் பக்கத்தில் இருந்து ஆதரவுதர நான் இந்த யாழ் களத்தில் சில உண்ர்வுமிக்க ஆக்கங்களினை தந்து, எம்மைப்போல எத்தனையோ குடும்பங்களின் சோகமான யுத்த வடுக்களை மற்றவர்களும் தெரிந்து உணர்ந்த…
-
- 30 replies
- 5.5k views
-
-
வணக்கம் உறவுகளே, மிகவும் நீண்ட ஓர் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் களத்திலே தவழுகின்றேன்... என்னை முன்னர் அரவணைத்த கரங்களுக்கும், இனி அரவணைக்கப்போகும் கரங்களுக்கும் என் நன்றிகள், அரவணைக்காது அறுக்கப்போகும் கைகளுக்கும் என் ஆதரவுகள், என் உளமார்ந்த நன்றிகள்... சோகம், கவலை, சோம்பேறித்தனம், இவற்றைக்கடந்த அன்பு, ஆதரவு என்பதுதான் யாழ்க்கள உறவுகள் என்று மீண்டும் ஓர்முறை நிரூபியுங்கள். தமிழினம் மீண்டும் உயிர்ப்பெறும்... நாம் மனதுவைத்தால்...
-
- 52 replies
- 5.4k views
-
-
வணக்கம் தமிழ் மக்கள், உஙளுடன் இனணந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி தாயகத்தில் இருந்து அன்புடன், தமிழன், பிரசன்னா உலகத்தில் முதல் மொழி தமிழ் மொழி, தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா
-
- 45 replies
- 5.4k views
-
-
-
யாழ் கருத்துக்களத்தின் அனைத்து கருத்துப் பகிவாளர்களுக்கும் என் வணக்கம். 'அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தலரிது' இதைச் சொன்னது அந்தக்காலத்தில...... இப்ப கொஞ்சம் மாத்த வேணும் போல கிடக்கு... ம்.......பார்போம் ஓளவையார்
-
- 30 replies
- 5.3k views
-
-
யாழுக்கு நான் புதியவன் அல்ல. பல நாள் விருந்தினன். ஆனாலும் உங்களில் ஒருவன் ஆவதில் மகிழ்ச்சி. பிறந்த ஊர் - உரும்பிராய் வளந்த ஊர் - தின்ன வேலி புகுந்த ஊர் - ஜரோப்பிய ஒன்றியம். (பாது காப்பு காரணங்களுக்குகாக ஊரை சொல்ல வில்லை) ஆரம்ப கல்வி - உரும்பிராய் மத்திய மாக வித்தியாலயம். உயர் கல்வி - யாழ் மத்திய கல்லூரி காதலி - இருந்தாள். கல்யாணம் - அவளுக்கு ஆகி வருடங்கள் சில கடந்து விட்டன. அதற்காக நான் ஒன்றும் வசந்த மாளிகை சிவாஜி இல்லை. ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடி வதங்கி இருக்கும் கொக்கு. குழந்தைகள் - ஆருயுயிராய் இருந்து யாரோ உயிராய் போனவளுக்கு உண்டாம். பெயர் கூட என் பெயராம். கண்டங்கள் மாறியாதால் தொடர்புகள் குறைவு. போழுது போக்கு - மற்றவர்களை சிரிக்க வைப்பத…
-
- 43 replies
- 5.3k views
-
-
எல்லாருக்கும் இனிய வணக்கங்கள் நான் கனிஷ்டா. யாழ்கள உறவுகளோடு அளவளாவ வந்திருக்கும் புதிய பறவை. யாழை வாசித்து நேசித்து கொண்டிருந்த பட்டாம் பூச்சி. இப்பொழுது தான் தட்டச்சில் எழுதவும்,சரளமாக வாசிக்கவும் பழகியிருக்கிறேன். உறவுகளே என்னையும் உங்களோடு ஒருவராக்குங்கள். தாழ்மையுடன் கனிஷ்டா கேட்டுக் கொள்கிறேன். தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்று கூறி தந்து யாழிலும் இணைத்த ஜம்மு அண்ணாவிற்கு நன்றிகள். நன்றி
-
- 41 replies
- 5.3k views
-
-
அன்புடைய யாழ் கள அன்பு நெஞ்சங்களுக்கு, பூமகளின் அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், பூமகள்.
-
- 36 replies
- 5.3k views
-
-
வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்.. களத்தில் சந்திப்போம் ....
-
- 32 replies
- 5.3k views
-
-
சகோதரர்களே, நீஙகள் என்னை தலைவராக ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, உள்ள வரலாமா? பிளீஸ்.
-
- 40 replies
- 5.2k views
-
-
-
-
எல்லோருக்கும் ஒரு கும்பிடு..என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா....?
-
- 40 replies
- 5.1k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகள் சிலர் எனது பெயர்மாற்றங்களினால் சிறிது குழப்பம் அடைந்து இருப்பதனால் அடியார் பெருமக்களிற்கு என்னை மீண்டும் அறிமுகம் செய்துகொள்கின்றேன். ஆயத்தம் - மாப்பிளை ஆரம்பம் - கலைஞன் ஓட்டம் - முரளி அடுத்த படிநிலை ?? - எனக்கே தெரியாது..!! அனைத்து சொருபங்களும் அடியேனே என்பதை அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன். இனித்தான் உளவுத்துறை ஒண்டு துவங்கப்போறன். ஓமுங்கோ.. அப்பிடியெல்லாம் கொச்சையா சொல்லக்கூடாது. நிஜம் எப்படி அவதாரமாக இருக்கமுடியுமுங்கோ? நிஜம் நிஜமாகத்தான் இருக்கமுடியும்! அவதாரமாக இருக்கமுடியாது. ஓம்.. நாங்கள் றோயல், டைகர் மற்றும் இதர பமிலிகளில் இருப்ப…
-
- 42 replies
- 5.1k views
-
-
-
எழுத தொடங்கினா பிறகுதான் அறிமுகம் செய்யல எண்டு ஒரு கள நண்பர் சொல்லத்தான் அப்பிடயும் செய்யலாமே எண்டு யோசிச்சன்......
-
- 51 replies
- 5.1k views
-
-
யாழ்கள உறுப்பினர்களுக்கு, பல மாதங்களாக உங்கள் ஆக்கங்களை அறிந்து வைத்திருந்தாலும், ஈழம் வசப்படும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வலுப்பட்டதால் மிக்க ஆர்வத்தோடு இணைகிறேன்... புலம் பெயர்ந்து வந்து தேஜே-விலே குடியிருந்த பெற்றோருக்கு பிறந்த எனக்கு, இதுவரை என் தாய்நாடு எப்படி இருக்குமென்றே தெரியாது.. எப்போதுமே எண்ட அப்பா அம்மா தனி ஈழம் அமைந்த பிறகு அங்கே சென்றே குடியிருக்க வேணும் என்று அடிக்கடி பழைய நினைவுகளைக் கதைப்பார்கள்... என் தந்தையின் ஊக்கத்தால்தான் புலம் பெயர்ந்துஇருந்தாலும், தமிழ்கற்றுக்கொண்டேன்... உங்களுடன் இணைந்து இருப்பதில் பெருமை..
-
- 35 replies
- 5.1k views
-
-
வந்தனம்! உலகம் ஒரு வாசிகசாலை அதில் நானும் ஒரு வாசகி. கற்பனை முகடேறி புதியதோர் உலகைக் காண்பது எனது பொழுதுபோக்கு. என் வாசகசாலை அனைவரையும் அவ்வுலகுக்கு அழைத்துச்செல்ல என்னாசை. அதுக்காக கருத்துக்களத்தில் உங்களுடன் நானும். இந்த வாசகியை வா சகி என வரவேற்று என் வாசகசாலையை சீராக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் முதலடி எடுத்து வைக்கின்றேன்.
-
- 58 replies
- 5k views
-
-
Vanakkam ellarukkum..!!! தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா
-
- 41 replies
- 5k views
-