யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே! புதிதாக இந்த களத்தில் நானும் நுழைகிறேன். எழுத வேண்டும் என்ற ஆசையில் விசைப்பலகையை தட்டுகிறேன், என்னை உங்களில் ஒருவனாக வரவேற்பீர்கள் என நம்புகிறேன். சோழநேயன்
-
- 18 replies
- 2.2k views
-
-
-
எல்லா கள உறுப்பினர்களுக்கும் வணக்கம் நான் ஒரு வருடத்திக்கு மேலக யாழ் இணையத்தின் வாசகாரக இருக்கிறேன். யாழ் இணையத்தில் இப்பொழுது முதல் நான் கருத்துக்களை எழுத விரும்புகிறேன். கருத்துக்களுடன் சந்திப்போம். உமை
-
- 23 replies
- 4.3k views
-
-
-
நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்! நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புடன் அல்லிகா!
-
- 29 replies
- 3.7k views
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கமுங்க...நான் குட்டி ஜப்பானிலிருந்து பாபு. நான் தமிழ் இன உணர்வாளன்.தமிழ் ஈழம் எனது கனவு.தமிழகத்தில் எங்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மா நாடு நடத்தினாலும் தவறாமல் கலந்து கொள்வேன்.சில நாட்களுக்கு முன் கூகிள் செர்ச் இன்ஞினில் "தமிழ் ஈழம்" என்ற வார்த்தையை போட்டு தேடிய போது "யாழ் இணையம்" தென்பட்டது.அன்று முதல் தினமும் யாழ் இணையத்தை பயன்படுத்துவது எனக்கு பழக்கமாகி விட்டது.யாழ் இணையத்தின் மூலம் வீரத்தமிழர்களாகிய ஈழத்தமிழர்களுடன் கதைப்பதற்கு அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.விரைவில் தமிழ் ஈழம் மலர்ந்து உலகத்தில் "தமிழ் ஈழம்" பணக்கார நாடாக வேண்டும் என்பது எனது ஆசை.யாழில் வரும் "செய்திகள்" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.யாழ் தமிழ் உறவுகளே என்…
-
- 32 replies
- 4.1k views
-
-
-
நான் யாழ் களத்தின் வாசகன் கடந்த 3 வருடங்களாக தமிழ் எழுதுவதில் சிக்கல் காரணமாக நான் களத்தில் முதலில் இணையவில்லை.இன்று முதல் நான் உங்களில் ஒருவனாக விரும்புகின்றேன் என்னை உங்களில் ஒருவனாக சேர்த்துக்கொள்விர்களா?
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம் யாழ் களத்தில் இணையும் நான் நெல்லை பூ. பேரன் தொடர்ந்து கருத்து களத்தில் ஆக்க பூர்வமான விவாதங்களில் இணைய விரும்புகிறேன். களத்தில் என்னை அனுமதித்தமைக்கு முதலில் நன்றி.
-
- 32 replies
- 4k views
-
-
களத்தில் உலா வரும் எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வந்தனம். விதுஷா என்ற பெயரையுடைய நான் யாழ் தளத்தின் நீண்ட நாள் பார்வையாளர், என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், இன்று உங்களுடன் ஒரு குடும்ப உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி விதுஷா
-
- 29 replies
- 4k views
-
-
எமக்கு நீதி வேண்டும்? அன்பின் சைவத்தமிழ் அடியார்களே; கடந்த சில நாட்களுக்கு முன்பாக, லண்டன் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய முன்னால் நிர்வாகி திரு கந்தையா தங்கராஜா அவர்கள் பட்டப்பகலில் சவுத்ஹரோப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீண்ட காலங்களாக ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறை தொண்டு செய்து வந்த அன்னாரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இக்கொலையானது ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வெட்கப்படும் படியான ஒழுக்கக்கேடுகளின் விளைவாகவே நடந்தேறியிருக்கிறது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பாக எம்மால் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக எடுக்கப்பட்ட அடியார்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மறுபடியும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை மக்களின் சொத்தக்கப்படப்பட வேண்டும் எ…
-
- 0 replies
- 717 views
-
-
-
என் பெயர் வந்தியத்தேவன், தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இடம் யப்பான்... யாழ்களத்தில் இணைந்து இருப்பதற்கு கொள்ளை ஆசை... என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்பற்றி மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் இன்னும் விரைவில்!!! என்னுடைய ஆசை கவிதை எழுதுவது!
-
- 25 replies
- 3.5k views
-
-
வணக்கம் என் யாழ் சிவதொண்ட ரசிகப்பெருமக்களே! நாம் ஊருரோடு சேர்ந்து கோவிலுக்கு போகின்றோம். சனம் இடிபடுவதினையும் பார்க்கின்றோம். விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம் என்று வேறு செய்வதனையும் பார்க்கின்றோம். சுவாமியையும், அம்மனையும், முருகனையும், பிள்ளையாரையும் தரிசித்துவிட்டு ஐயர்மாரிடம் சலுகை வேறு காட்டி கியூவினில் நிற்காது, பணவலிமையால் பிரசாதம் வேறு வாங்கிக் கொண்டு விட்டு கச்சான், கடலை வாங்கி சாப்பிட அல்லது ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட ஓடிவிடுகிறோம் இல்லையா? ஆனால் அந்த கோவிலில் சுற்றி வரும் போது காணும் சிலையுருவங்களும், அதன் அடி பற்றியிருக்கும் அறுபத்து மூன்று நாயன்ன்மார்களினதும் உருவச்சிலைகளினை கண்ணில் ஏறெடுத்து பார்ப்பதேயில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும் இல்…
-
- 34 replies
- 4.5k views
-
-
வணக்கத்தோடு வருகிறேன் வரவேற்பிர்களா? எனது பெயர்: கங்காதரன்( சொந்த பெயர்) வயது: 1 (?).........28 ஊர்: நல்ல ஊர் வசிக்கும் நாடு: வசதி உள்ள நாடுதான் வேற விபரங்கள்? தேவை எனில் நல்ல வரவேற்பு கொடுத்தால் தொடரும்...........
-
- 39 replies
- 4.6k views
-
-
எம்பேரு போக்கிரி.... நானொரு துக்கிரி... நானும் பாக்காத களமில்லே.. போகாத சைட்டில்லே..ஐயா.. நல்ல நண்பன்..இல்லையென்றால்.. எங்கு போனாலும் விடமாட்டேன்... நானாகத்தொட மாட்டேன் ஐயா... டாண்டட்ட்டஒய்ங்க்...டாண்டட்ட
-
- 65 replies
- 7.2k views
-
-
தமிழர் தாயக விடுதலைக்காக தம்முயிரினை வேழ்வுத்தீயில் பொசுக்கிya முன்னால் வீரர்களுக்கும், இந்நாள் எம் இதய கமலங்களில் வீற்றிருக்கும் மாவீரர்களுக்கு காணிக்கையாக இந்த பக்கத்தினை துவக்குகிறேன். தூக்கி விடாதீர்கள். அப்பழுக்கில்லாத என்போன்ற தமிழர்களின் போராட்டப்பங்களிப்புக்கு இந்த தலைப்பு ஒரு காணிக்கை!! திரும்பிப்பார்க்கின்றோம்!!. சுதந்திரத்தின் சிகரத்தினை நோக்கிய உங்கள் நெடும்பயணம் எங்கள் கண்ணுக்குள் விரிகிறது. அந்த நெடுவழிப்பாதை, எழ, எழ விழுந்து, விழ விழ எழுந்து....அப்பப்பா எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், அத்தனை குழிபறிப்புக்கள், ...எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ, எழ விழுந்து...விழ, விழ..எழுந்து ..... திரும்பிப்பார்க்கின்றோம்!!. nanRi v…
-
- 14 replies
- 2.3k views
-
-
-
யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்! முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன். முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில…
-
- 111 replies
- 10.7k views
-
-
வணக்கம் தமிழ் பேசும் கள உறுப்பினர்களே! தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நான் ஒரு வழிகாட்டி. என் பெயர் முற்பிறப்பினில் வள்ளுவன், தமிழ் மக்களுக்காக நான் சொல்லிவிட்டு போனவை கருத்தில், நடைமுறையில் இடம்பெறவில்லை ஆகவே மீண்டும் பிரம்மாவிடம் அனுமதி பெற்று இங்கே வருகிரேன். எத்தனை வருட அனுபவங்கள்,எத்தனை மனிதர்களினை பார்த்து இருக்கின்றேன்,. ஆகவே நான் இங்கே வருவதால் தமிழ் வளர சந்தர்ப்பங்கள் உண்டு என்று நினைத்து வருகிறேன். என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம். அதற்கு முதல்... திருவள்ளுவர் என்று நான் முன்னம் எழுதியவைகளை அப்படியே பிரிண்டு பண்ணி வியாபாரம் ஓகோவாக நடக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் என் நூலைக்காணக்கூடியதாக இருக்கிறது. இங்கே யாழ் களத்தில் எத்தனை பேர் அ…
-
- 102 replies
- 12k views
-
-
நான் பழைய ஆள்.. ஆனால் பல நாட்களாக உள்ளே நுழையாததால் என்னவோ மீண்டும் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் மீண்டும் வந்திருக்கிறேன்
-
- 12 replies
- 2.1k views
-
-
வணக்கம் எல்லாருக்கும். ஒருமாதிரி தமிழில் எழுத கன்டுபிடிச்சாட்சு.உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக வல்வை மைந்தன், மோகன், யாழ் பிரியா மற்றும் பன்டிதர் அனைவர்க்கும். இனி நான் கருத்துக்களத்துக்கு தமிழிலில் எழுதமுடியுமா ? தயவு செய்து அறியத்தரவும். நன்றிகள். கரடி.
-
- 51 replies
- 6k views
-
-
-
-
உங்கள் யாழ்களத்தில் அரசியல், வாழ்வியல், பண்பியல் கோலங்களை நாவூற சுவைக்க வந்துள்ளேன்! வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 3.3k views
-