யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. வேறு திரிகளில் இருந்து காவுவதும், தலைப்புக்கு சம்பந்தமற்று கருத்தாடல் புரிவதும் களவிதிகளுக்கு முரணானவை. தொடர்ச்சியாக மீறுபவர்கள் காலவரையின்றி மட்டுறுத்துனர் பார்வையில் வைக்கப்படுவர்.
-
-
- 13 replies
- 2.8k views
-
-
யாழ் இணையத்தில் ஏற்படும்/செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக இங்கு தொடர்ந்து பதியப்படும்.
-
- 11 replies
- 2.8k views
-
-
வணக்கம், இவ்வருட ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் யாழ் கருத்துக்கள பகுதிகளை மீளாய்வு செய்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைப் புகுத்த கள நிர்வாகம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக "ஊர்ப்புதினம்" பகுதியில் இருந்த உப பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த உபபிரிவுகளில் இருந்த திரிகள் பொருத்தமான பிற பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. ஊர்ப்புதினம் பகுதியில் நீக்கப்பட்ட உப பிரிவுகள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள். ஏற்கனவே உள்ள திரிகள் ""வாழும் புலம்"" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. புறக்கணி சிறீலங்கா: சிறீலங்…
-
- 10 replies
- 4.3k views
-
-
சமீப நாட்களாக களத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தளம் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதாவது தளத்தின வேகம் நிலையில்லாது ஒரு தளம்பலாக இருந்தது. Databaseன் அளவே தளம்பலுக்கு முக்கிய காரணியாக இருந்தது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் அதிக அளவிலான தரவுகளைக் கொண்ட database பலருக்கு ஒரே நேரத்தில் தகவல்களைக் கொடுக்க முடியாது சிக்கல்களை எதிர் கொண்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் செலவு குறைந்த வழியினையே தெரிந்தெடுக்க வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம். இதன்படி இவ்வாருட ஆரம்பத்திற்கு முற்பட்ட அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டு இக்கருத்துக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடமோ அல்லது அதற்கு முன்னரோ ஆரம்ப…
-
- 10 replies
- 5.1k views
-
-
வணக்கம், கருத்துக்கள மென்பொருள் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதால் இன்று (18 Oct 2022) பின்னேரம் 5 மணியளவில் இருந்து சில மணி நேரங்களுக்கு யாழ் இணையம் இயங்க மாட்டாது. நன்றி நிர்வாகம்
-
-
- 8 replies
- 2.4k views
-
-
Youtube, Google ஆகியவற்றில் உள்ள ஒளிப்பதிவுகளை அத்தளங்களுக்குச் செல்லாது களத்திலேயே பார்ப்பதற்கு [video] ஒளிப்பதிவு உள்ள முகவரி [/video] என்னும் குறியீடுககைளப் பாவிக்கலாம். உதாரணமாக [video]Hq6f3B76jx8[/video] என்பதை இணைக்கும்போது கீழுள்ளது போன்று களத்தில் நேரடியாகப் பார்க்க முடியும்.[/code] <!--id1--><!--id2-->
-
- 7 replies
- 4.2k views
-
-
தயவு செய்து களம் தொடர்பான பிரச்சனைகளை களத்தில் தீர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை இங்கு களத்தில் சுட்டிக்காட்டுங்கள். அவ்வாறில்லாது அவர் அப்படி எழுதுகின்றார், இப்படி எழுதுகின்றார் என்று தொலைபேசியில் களநிர்வாகத்தினரை அழைத்து பேசுவது போன்ற விடயங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள். இது பலமுறை நடைபெற்றதால் இங்கு குறிப்பிடவேண்டியதாகப் போகின்றது. நன்றி மோகன்
-
- 7 replies
- 6.8k views
-
-
முன்கூட்டியே அறிவித்தபடி களம் update செய்யப்பட்டுள்ளது. Update செய்யப்பட்டுக்கொண்டிருப்ப
-
- 5 replies
- 4.3k views
-
-
இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-
- 5 replies
- 1.3k views
-
-
கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள் அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர
-
- 2 replies
- 15.1k views
-
-
வணக்கம், நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்றவர்களின் அந்தரங்கங்களை எட்டிப் பார்த்து மலினமான ரீதியில் ஒளிபரப்பப்படும் விஜய் ரீவியின் தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையோ தகவல்களையோ காணொளிகளையோ யாழில் இணைப்பதை முற்றாக தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் இவ்வாறான வேறு நிகழ்ச்சிகள் (உதாரணமாக நடிகர் ஆர்யா பங்குபற்றிய சுயம்வரம் போன்ற நிகழ்சிகள்) வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் போது அவற்றை தவிர்க்குமாறு எம்மால் கேட்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம். நன்றி
-
- 2 replies
- 3.7k views
-
-
வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்
-
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம், காலத்துக்கு காலம் யாழின் வடிவங்களிலும், பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்று இப்பொழுதும் யாழில் உள்ள பகுதிகளில் (Sections / Categories) சில மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளோம். சில புதிய பிரிவுகளை ஏற்படுத்துதல், சில புதிய உப பிரிவுகளை உருவாக்குதல், இருக்கும் பகுதிகள் சிலவற்றை ஒன்றாக்குதல் மற்றும் வேறாக்குதல் போன்ற மாற்றங்கள் இவற்றில் அடங்கும். இத்தகையக மாற்றங்கள் தொடர்பான பொது அறிவித்தலுக்காக இந்த திரி பயன்படுத்தப்படும். இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக கருத்துகளை வழங்க விரும்புகின்றவர்கள் மற்றும் சந்தேகங்களை கேட்க விரும்புகின்றவர்கள் நாற்சந்தியில் அதற்கான ஒரு பொதுவான திரி திறக்கலாம். எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியாமல் ப…
-
- 1 reply
- 2.2k views
-
-
வணக்கம், யாழ் இணையம் ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முகமாக சில மாற்றங்களைச் செய்யவுள்ளது. முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கருத்துக்களத்தில் கருத்துகள் வைக்காது வெறுமனே பார்வையாளர்களாக இருப்பவர்களை 'கருத்துக்கள உறுப்பினர்கள்' எனும் புதிய குழுமத்திற்குள் நகர்த்த முடிவு செய்துள்ளோம். அத்துடன் விருப்புக் குறிகள் இடும் வசதியை தவறாகப் பயன்படுத்தும் பாவனைப் பெயர்களையும் இனம் கண்டு அவர்களையும் இக் குழுமத்திற்குள் நகர்த்தவுள்ளோம். இக் குழுமத்திற்குள் நகர்த்தப்பட்டவர்களுக்கு 'கருத்துக்கள உறவுகள்' இற்கு இருக்கும் வசதிகளில் விருப்புக் குறிகளை இடும் வசதியும், திண்ணை அனுமதியும் நீக்கப்படுகின்றன. எனினும் இக் குழுமத்திற்குள் நகர்த்தப்பட்டவ…
-
- 1 reply
- 3.5k views
-
-
அடிப்படைக் குழுமங்கள் [கருத்துகள நோக்கர்கள்] இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணையாது, பார்வையாளர் மட்டத்தில் மட்டும் இருப்பவர்கள் - கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வாசிப்பவர்கள். இவர்களுக்கு "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை. மற்றும் "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் தரவிறக்கம்" பிரிவினைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை. அதேபோல் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது - ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் …
-
- 1 reply
- 2.9k views
-
-
வணக்கம், நேற்று முதல் இணைய வழங்கி மாற்றத்தையும், அத்துடன் கள மாற்றத்தினையும் மேற்கொண்டிருந்தோம். வழமைபோலவே எதிர்பார்ப்பதை விட வேறு வேறு பிரச்சனைகள் என்று நினைத்ததை விட அதிக நேரம் செலவழிக்க வேண்டி வந்து விட்டது. தற்போது கருத்துக்களத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வந்தாலும் சில செயற்பாடுகள் இன்னும் முழுமையாக்கப்படவில்லை. - converter இன்னும் இணைக்கப்படவில்லை - திண்ணைப் பகுதி செயலிழந்து உள்ளது - இணைப்புகள் சரியாக இல்லை - முதற்பக்கத்தில் விடயங்கள் காண்பிக்கவில்லை ... இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ளன. எம்மால் முடிந்தவரை மிக விரைவில் இவைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றோம்.
-
- 1 reply
- 1.7k views
-
-
இங்கு ஏற்கனவே கீழே குறிக்கப்பட்டுள்ள பெயர்களில் பதிவுகள் இருப்பதால் பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்க பின்னவரும் பெயர்களில் பதிவு செய்தவர்கள் தாங்கள் இங்கு பதிவு செய்து கொண்ட பெயர்களில் மாற்றங்களை வேண்டி நிற்கின்றோம். கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட "Madhivadhanan" கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட மதிவதனன். கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட Mathivadhanan இவர்கள் உடனடியாக இப்பகுதியில் அல்லது தனிமடல் மூலம் தாங்கள் விரும்பும் பெயரினைக் குறிப்பிடுவதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும். பெயர்கள் ஆங்கில எழுத்துக்களில் அமைவது நன்று. ஏனெனில் சில பெயர்களை தமிழில் எழுதுவதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றது. மேலும் புதிதாகப் பதிந்து கொண்ட அன்புநண்பன் பனம்கொட்டை …
-
- 0 replies
- 2.6k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும். கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 19 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2018) 20 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் இருபது ஆண்டுகளாகத் தமிழர்களுக்கென ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னைத் தொடர்ந்தும் புதுப்…
-
- 0 replies
- 3.9k views
-
-
யாழிணைய உறவுகளுக்கு வணக்கம், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக யாழிணையம் தொழில்நுட்பச் சிக்கல்களால் இயங்கவில்லை. யாழிணையத்தின் சேவைகளை தொடர்ச்சியாகக் கொடுக்கமுடியாமல் போனமைக்காக வருந்துகின்றோம். யாழிணையமானது இயங்குதளம், தரவுத் தளம், கருத்துக்கள மென்பொருள், முகப்பு மென்பொருள் என பல்வேறு சிக்கலான அடுக்குகளைக் கொண்டது. அத்தோடு யாழிணையம் ஆரம்பித்த காலத்திலிருந்து உள்ள கருத்தாடல்களை வெவ்வேறு கருத்துக்கள மென்பொருள் பதிப்புக்களில் வைத்திருக்கவேண்டிய தேவையும் உள்ளது. மேலதிகமாக சேமிக்கப்பட்ட கருத்தாடல்களையும், படிமங்களையும் தொடர்ச்சியாகப் பிரதியெடுக்கவும் வேண்டும். எனினும் கடந்த சில வாரங்களாக கருத்துக்களத் தரவுகளை (data) பிரதியெடுப்பதில் (backup) சிக்கல்கள் தோன்றிய…
-
- 0 replies
- 492 views
-
-
களத்தில் yahoo காணொளிகளை இணைக்க பின்வரும் குறியீடுகளைப் பாவிக்கலாம். [yahoovideo]id=xxxxxx&vid=xxxxxx[/yahoovideo] yahoo காணொளிப் பகுதியில் காணப்படும் id= என்பதில் இருந்து vid= பின்னர் முடியும் வரையாக இலக்கங்களை இணைக்க வேண்டும்.
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதுபவர்கள் Googleன் சேவையைப் பயன்படுத்தவதன் மூலம் இணையத்தில் இலகுவாக தமிழில் தட்டுச்சு செய்திட முடியும். இந்தச் சுட்டியில் நீங்கள் எவ்வாறு தமிழில் எழுதுவதற்கான செயற்பாட்டினை செய்வது என்ற குறிப்பு உள்ளது.
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ் இணையம் தற்போது அகவை 25 இல் நடைபோடுகின்றது. எனினும்: யாழ் இணையத்தில் கருத்தாடும் கருத்தாளர்களின் எண்ணிக்கையிலும், திரிகளைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் பாரிய சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அண்மைய தரவுகள் காட்டுகின்றன. தாயகத்தில் வசிப்போர் அதிகளவு பிற சமூகவலைத் தளங்களைப் பாவித்தபோதிலும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்து கருத்தாடல்களில் ஈடுபடுகின்றனர். இது யாழ் இணையம் தாயக மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், யாழ் இணையம் தாய…
-
- 0 replies
- 725 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 18 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2017) 19 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் பல மேடு பள்ளங்களைக் கடந்து தனித்துவமான தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களைத் தாங்கும் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் உள்ளது. எமக்கு என்றென்றும் பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனக்கெனதோர் தனித்துவத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கவேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்…
-
- 0 replies
- 4.8k views
-
-
படங்களை இணைப்பது எப்படி? அ) முதலில் கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணைய தளத்திற்கு சென்று இணைக்க வேண்டிய படத்தை தரவேற்றம்(upload) செய்யுங்கள். http://imageshack.us/ ஆ) அதன் பின்பு அங்கே இருக்கும் 8 விதமான இணைப்புகளில் கடைசி இணைப்பாக இருக்கும் Direct link to image எனும் இணைப்பை கொப்பி செய்யுங்கள். இ) கொப்பி செய்யப்பட்ட இணைப்பை யாழில் கருத்து எழுதும் பகுதியில் "" என்பதற்குள் இடுங்கள், இப்போது Preview பார்த்து படம் வருகின்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 4.9k views
-