யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
என்னால் கருத்து களத்தில் புதிய பதிவு செய்ய முடியவில்லை..... தயவு செய்து உதவி தேவை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆதியால் பாதிக்கப்பட்ட யாழ்க்கள உறவுகளுக்கு, ஆதியின் அநாகரீகமான வார்த்தைகளால் புண்பட்ட யாழ்க்கள உறுப்பினர்கள் யாரேனும் இங்கிருந்தால் பதிவு செய்யுங்கள். ஆதி, அப்படிப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன். இது நிற்கவா? போகவா? விளையாட்டு அல்ல http://www.yarl.com/forum3/index.php?showtopic=14416
-
- 7 replies
- 2k views
-
-
ஆதியின் சந்தேகங்கள் களத்துவிதிகளுக்கு அமைய கருத்துகளை எழுதும்போது இதுவரை காலமும் ஆதி பாவித்த சொல்லாடல்கள் தவிர்க்க வேண்டியவையா? உ-ம் அடேய் மாப்ளே! வாப்பா, இருப்பா, நில்லுப்பா (இங்கு நீ என்பது தோன்றா எழுவாயாக இருக்கும் அல்லவா) பட்டப்பெயர்கள் ( கப்பி, தூயாப்பொம்மி, கோணல்வில் போன்றவை) நிர்வாகத்தினர் இவற்றையும் தெளிவுபடுத்தினால் நன்று.
-
- 14 replies
- 3.1k views
-
-
கிராபிக்கிஸில் கைதேர்ந்த யாழ்க் கள உறவுகளுக்கு வேண்டுகோள். சிறிலங்கா அரச படைகள் அனுராதபுரத்தில் வீரச்சவடைந்த கரும் புலிகளின் உடலங்களை அவமானப்படுதியதையும் புலிகள் இறந்த சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுதுவதையும் ஒப்பிடும் படங்களை கிராபிஸ் ரீதியா ஒன்றிணைது யார் பயங்கரவாதிகள் என்னும் கேள்வியுடன் படங்களைச் செய்து தரவேற்றவும்.இவற்றை இணையத்தில் எல்லாத் தளங்களிலும் பாவிக்கும் வண்ணம்.வலைப்பதிவுகளீலும் இவர்றைப்பாவிக்கலாம்.யாழ்க்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைவரையும் யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம் சார்பில் எமது முதலாவது அறிவுப்பட்டறைக்கு அன்புடன் வரவேற்கின்றோம். இது எமது சங்கம் யாழில் நடாத்தும் முதலாவது செயற்திட்டம் ஆகும். இந்த அறிவுப்பட்டறையின் நோக்கம் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்ற ஒரு வரைவிலக்கணத்தை எட்டி கருத்துச் சுதந்திரம் பற்றிய அறிவை கள உறவுகளிடையே வளர்த்தல் ஆகும். எமது சங்கத்தின் கெளரவ செயாலாளர் திருவாளர். குறுக்காலபோவான், மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள் திருவாளர்கள் மணிவாசகன், ஈழவன், யமுனா ஆகியோர் இந்த அறிவுப்பட்டறையில் தமது ஆலோசனைகளையும் கூறி யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன இந்த தொனிப்பொருளை தெளிவாக்குவார்கள். யாழ் இணையத்தில் நாம் எவற்றையும் எழுதக்கூட…
-
- 8 replies
- 1.8k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே... உதயசூரியன் பத்திரிகை சார்பாக யுத்தத்தால் பாதிக்கபட்டு கனவனை இழந்த பெண்களுக்கு உதயசூரியன் பத்திரிகை சர்பில் ரூபா 10.000 மாதம் ஒருவருக்க என்ற ரீதியில் வழங்கபட இருக்கின்றது... உங்கள் பிரதேசங்களில் அதாவது இலங்கையில் யுத்தத்தால் கனவனை இழந்து அல்லலபடும் யாரவது இருப்பின் எமக்கு பரிந்துரைக்கவும்....விதானையார?ன் உறுதிபத்திரம் இருப்பது அவசியம்.... இப்படிக்கு உதயசூரியன் பத்திரிகை சார்பாக சுண்டல்..... மேலதிக விபரம் வேண்டின் தனி மடலில் தொடர்புகொள்ளவும் தெரிவுசெய்யபடுபவர்களுக்க நேரடியாக பணம் அணுப்பி வைக்கபட இருப்பதால் தயவுசெய்து வங்கி விபரம் அணுப்பி வைக்கவேண்டும்..... திருப்திகரமான முறையில் விபரங்கள் நிரூபிக்கபடவேண்டும் என்றும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
அன்புடையீர், யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது. நோக்கம் 1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர…
-
- 57 replies
- 7.1k views
-
-
நான் போட்ட யாழ்கள ஆதரவாளர் அமைப்பு தூக்கபட்டிறுக்கு அதில என்ன சொற் குற்றமா? இல்ல பொருள் குற்றமா இருக்கு? ஏன் தூக்கபட்டதுன்னு விளக்கம் இன்னும் கொடுக்க படல.. ஜஸ்ட் நிர்வாகத்தக்கு நகர்த்தபட்டிருக்கு அப்பிடினு தான் போட்டிருக்கு சோ எனக்கு விளக்கம் சொல்லனும் நிர்வாகத்தின் பரீசீலனைக்கு பிறகு அது மீண்டும் இடபடுமா இல்ல நிரந்தரமாகவே நீக்கபடுமா? யாழ்பாடிக்கு தனி மடல் போட்டும் இன்னும் விளக்கம் சொல்லல என்னுடைய அந்த தலைப்பு தூக்கபட்டதால மற்ற அமைப்புகளும் தடை செய்ய படனும் இது யாழ்கள ஆதரவாளர் அமைப்பினுடைய வேண்டுகோள்.... :lol:
-
- 0 replies
- 876 views
-
-
இராமன் சாமி பெரிசா? இராமசாமி பெரிசா? எவர் பெரிசா இருந்தா நமக்கென்ன? நாளைய சாப்பாட்டுக்கு என்ன வழி? எமக்கு பசி ஈழம். அதுக்கு சாமி பெரிசா இராமசாமி பெரீசா என்டு சில்லெடுத்து ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு இடுப்பில கட்டுறதுக்கு கூட துண்டில்ல தலையில கட்டுறதுக்கு எதுக்கு பட்டு குஞ்சம்? யாழ்கள செயற்பாட்டின் உச்சத்தை எட்டக் கூடிய காலகட்டத்தில் நிற்கிறோம். வந்து கதையுங்கோ.
-
- 8 replies
- 2.7k views
-
-
இந்த இணையத்தில் நடக்கும் கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் சிங்களவர் ஒருவர் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து இருகின்றார் நாம் அனைவரும் எம்மால் முடிந்தளவு விவாதத்தினை மேற்கொள்வோம் ஒருவருக்கு எமது பரப்புரைகளையோ அல்லது எமது நியாயங்களையோ வெற்றிகரமாக செயற்படுத்தினால் அது இன்னும் பலரை சென்றைடையும் ஆகவே தயவு செய்து உங்கள் நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி இந்த கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் http://worldub.blogspot.com/2007/10/srilan...sm-against.html
-
- 0 replies
- 878 views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173 இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்... அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு... அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...
-
- 45 replies
- 5.9k views
-
-
-
எரிச்சலைத் தரும் அலட்டல்கள் மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு, மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீ…
-
- 8 replies
- 2k views
-
-
-
யாழில் சமகாலமாக தணிக்கைகள் குறித்து சில முரண்பாடுகள் இருக்கின்றன. 1. "கேடி" என்பது எந்த வகையில் தவறான பதம்..???! 2. "நாய் போல" என்ற உவமை எந்த வகையில் கருத்துத் திணிப்பு ஆகும்..??! 3. விபச்சாரிப் பெண்கள் என்ற தலைப்புக்குள் எல்லாப் பெண்களும் அடங்கவில்லை என்பது இயல்பாகத் தெரிகிறதுதானே. அப்படி இருக்க.. அதற்குள் எல்லாப் பெண்களும் வருறாப் போல எப்படி.. பொருள் வரும்..???! இது தவறான அர்த்தம் கற்பிப்பதாக எல்லோ அமையுது...??!
-
- 6 replies
- 2k views
-
-
யாழில் சமீப காலமாக.. எந்தத் தலைப்பிலும்.. அது பொங்கு தமிழாக இருக்கட்டும்..தமிழும் நயமுமாக இருக்கட்டும்.. உலகச் செய்திகளாக இருக்கட்டும்.. புலம்பெயர் வாழ்விலாக இருக்கட்டும்.. மெய்யெனப்படுவதாக இருக்கட்டும்.. பிறமொழிச் செய்திகளாக இருக்கட்டும்.. எங்கும்.. "திராவிடம்" "இராமர் சேது" " இந்து மதம்" " பார்பர்னர்கள்" "ஈ வெ ரா புராணம்" " பகுத்தறிவு" இவற்றை எப்படியோ ஒட்டித் திணித்துவிடுகிறார்கள். கள நிர்வாகமும் கேட்டுக் களைத்து விட்டது. எல்லாக் குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டுங்கள் என்று. ஒரு நாலு பாட்டைப் போட்டு.. அதற்கு இராம தலைப்பிட்டு.. தமிழும் நயமும்.. வலைப்பூக்களில் வரும்.. பெரிய நீண்ட வசனக் கோர்வைகளைப் போட்டிட்டு.. ஆராய்சிக்கட்டுரையாக காட்டிக் கொண்டு.. அதற்கு "திராவிட தலை…
-
- 5 replies
- 2k views
-
-
வணக்கம் அனைவருக்கும், யாழ் இணையத்தில் சில உதவிக் குறிப்புகளையும் மென்பொருட் தொகுப்புகளையும் செய்யலாம் என்று தீர்மானதித்துள்ளோம். அதாவது, யாழ் இணையத்திலோ அல்லது யாழ் இணைய கருத்துக்களத்திலோ ஒரு ஆக்கத்தை இணைக்கும் போதோ, அல்லது அதற்காக ஒரு படைப்பை உருவாக்கும் போதோ தேவைப்படுகிற உதவிக் குறிப்புகளாக அவை அமையும். அத்தோடு அவற்றுக்கு தேவைப்படுகிற இலவச மென்பொருட்களையும் யாழ் இணையத்தில் தொகுத்து வைக்கிற போது அதுபற்றி அறியாதவர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும். மென்பொருளைத் தேடி அலையாமல் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே, கருத்துக்கள உறவுகளே இதனை கூட்டுமுயற்சியாக செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உதவிக் குறிப்புகள்: * உதவிக் குறிப்புகள் த…
-
- 7 replies
- 2.5k views
-
-
அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங…
-
- 22 replies
- 2.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஓர் எரிச்சல் தரும் விவாதத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். :P இப்படியான ஓர் தலைப்பை ஆரம்பிக்கலாமா என்று முன்பு ஒருமுறை கேட்டபோது கு.சா அண்ணா அதற்கு பச்சைக்கொடி காட்டினார். எனவே இந்த கருத்தாடல் கு.சா அண்ணாவிற்கு சமர்ப்பணம். கேள்விகள்: 1. யாழில் கருத்துக்கணிப்புக்கள் தேவையா? 2. ஆம் என்றால் ஏன் தேவை என நினைக்கின்றீர்கள்? இல்லை என்றால் ஏன் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்? 3. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் ஆர்வமுடன் பங்குபற்றும் ஒருவராக இருந்தால் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எவை? 4. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் பங்குபற்றாத ஒருவராக இருந்தால் நீங்கள் அவ்வாறு பங்குபற்றாது இருப்பதற்கான கா…
-
- 8 replies
- 2k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா. ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம். ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். நன்றி, சபேஸ்
-
- 8 replies
- 2.5k views
-
-
சுய கட்டுப்பாடு யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன். நட்புடன் என்.பரணீதரன்
-
- 25 replies
- 3.9k views
-
-
எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்…
-
- 34 replies
- 4.6k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே. யாழ்களத்தில் நான் யார் கூடவும் நேரடியாக பேசியது இல்லை ஆனா இன்று இந்த தலைப்பை திறந்து எனது அறிவையும் அதோடு பல சாதனைகளை படைக்க பல கருத்துக்கள் வைக்க உங்கள் ஆலோசனை வேண்டி நிக்கிறேன் அரட்டை அடிப்பது எப்படி? எந்த நேரமும் கலகலப்பாக பேசுவது எப்படி? எனது கருத்து தொகைகளை கூட்டுவது எப்படி? எந்த தலைப்பிலும் நகைச்சுவையாக கருத்து வைப்பது எப்படி? கடைசியாக படுக்க போகும் போது மன்னாரில் கடைசியாக என்ன நடந்ததது என்று பார்த்து விட்டு என்ன கருத்தை எழுதி விட்டு போகலாம்? நன்றி வணக்கம் ஜ.வி.சசி
-
- 4 replies
- 3.2k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம். எடுத்துக்காட்டு: காய் கவ் ஆர் யூ? வட் ஆர் யூ டூஇங் பேர்த்டே டவுட் நோர்மலா ... இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are yo…
-
- 54 replies
- 6.7k views
-
-
வணக்கம்! சில உறவுகள் அடிக்கடி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காணாமல் போகின்றார்கள். இதனால் இவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் கூறிய கருத்துக்களை இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். இதன்மூலம் இவர்கள் மீண்டும் யாழுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்ப்போம். ஒருவர் சொல்வதில் முதலாவதாகவும், கடைசியாகவும் சொல்பவை எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த கருத்துக்களை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். உங்களுக்கும் விருப்பமான கள உறவுகளை காணவில்லையானால் நீங்களும் அவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் கூறிய கருத்துக்களை இங்கு இணைக்கலாம். [குவோட்டை பாவிக்கலாம்] நன்றி! இது லிசான் சொன்னவை.. லிசானை இப்போது அடிக்கடி காணக்கிடைக்கிது இல்லை. இதனால் லிசா…
-
- 22 replies
- 3.5k views
-