நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
“ஒரு புத்தகமே போர்க்குற்ற வழக்கிற்கு வழிசெய்துவிடும் என எதிர்பார்ப்பது பிழை” - கார்டன் வெய்ஸ் தொகுப்பு: கானகன் தற்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் கார்டன் வெய்ஸ் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிரவாதம் மற்றும் மனிதநேயச் சட்டத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். இயற்கைப் பேரிடர்களுக்கும் போர்ச் சிக்கல்களுக்கும் உள்ளான போஸ்னியா, கொஸாவா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்ஃபூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காஸா, அஸே, ஹைட்டி போன்ற பல பகுதிகளில் பணியாற்றியவர். வானொலி மற்றும் அச்சு ஊடகங்களுக்குச் சுயேச்சையான செய்தியாளராகவும் இருந்தவர். ஸ்ரீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராக 2007 முதல் 2009வரை வெய்…
-
- 0 replies
- 640 views
-
-
‘பயங்கரவாதி’ தீபச்செல்வன் எழுதும் புதிய நாவல். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு என்பது புதிய விஷமல்ல. தனிமைப்படுத்தலும் புதிய விஷமல்ல. முப்பது வருஷங்களாய் ஊரடங்கில் வாழ்ந்தவர்கள் நாம். காரணமின்றி சிறை வைப்புக்களுக்கு உள்ளானவர்கள் நாம். இந்த ஊரடங்கில் வெறித்துப்போன நகரத்தில் ஊடகப் பணிக்காக செல்லும்போது போர்க்காலம்தான் நினைவுக்கு வருகிறது. கடுமையாக சண்டை நடந்த சமயத்தில், யாழ்ப்பாணத் தெருக்களில் நாயை சுடுவதைப் போல மனிதர்களை சுட்டுப் போட்டிருக்கும் பொழுதுகளிலும், நான் உலாவியிருக்கிறேன். ஊடரங்கு வாழ்வில் இராணுவ துப்பாக்கிகளின் குறிகளுக்குள் ஒரு கிண்ணம் தேநீருக்கு அலைந்திருக்கிறேன். அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. ஈழத்தவர் எவருக்கும் வரக்கூடிய நினைவுதான். …
-
- 0 replies
- 470 views
-
-
படம்: இயான் லாக்வுட் சீனாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டது ‘தாவோ தே ஜிங்’. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை. கன்பூசியஸைவிட 50 வயது மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்தார். அரசியல் நிலைமை மோசமானதால் பதவி விலகினார். இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதால், இவர் 5,000 சித்திர எழுத்துகளில் ‘தாவோ தே ஜிங்’ எழுதியதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி நிலவும் பலகதைகளில் ஒன்று இது. ‘தாவோ’ என்பதற்குப் பல பொருள்கள், அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது ‘வழி’ என்னும் பொருள். ‘தே’வுக்கு ‘நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை’ எ…
-
- 0 replies
- 2.1k views
-
-
1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் …
-
- 0 replies
- 959 views
-
-
இன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும் என்கின்ற நூலின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரதானசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் 29-11-14 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர் திரு.கோபிரட்ணம், நாடுகடந்த தமிழீழ அரசின் முந்நாள் உதவிப்பிரதமர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நூலின் சிறப்புப்பிர…
-
- 0 replies
- 697 views
-
-
ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை by அரவின் குமார் 2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து உணர்வைக் கலைக்கும் எதனையும் குற்றவுணர்வாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். பின்னாளில், ஷோபா சக்தியின் நாவல்களைப் படிக்கிற போதுதான், இலங்கையில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிய மாற்றுப்பார்வைத் தெளியத் தொடங்கியது. தனிந…
-
- 0 replies
- 214 views
-
-
A bloodstained label Stuck to his lapel Reads: In... Does it mean 'Indian, Informer, Intruder, Insurgent?' It bewilders to make it read 'Innocuous Innocent.' சொந்த ஊர், சொந்த மண் என்பது அங்கே இருக்கும் உங்கள் வீடு மட்டுமானது அல்ல. அல்லது அந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்கள், சொத்துக்கள் என்பவையும் அல்ல. அங்கே குடியிருக்கும் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. காலம் காலமாக அந்த மண் சந்தித்து வரும் மாற்றங்கள், இழந்து வரும் புராதனங்கள், எதிர்கொள்ளும் துயரங்கள், அமிழ்த்தி வைக்கப்பட்ட சோகங்கள்... இவைகளினூடே இருக்கும் ஒடுக்கப்படல் நிகழ்வுகளும், விடுதலைக்கான கனவுகளுமாகச் சேர்ந்து புவிப்பரப்பில் தனக்கான எல்லைகளை வரைந்து கொண்டு மதம், இனம், கலாச்சாரம் போன்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் தமிழ் எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன! லக்ஷ்மி சரவணக்குமார்: தற்போது தமிழில் இயங்கிவரும் குறிப்பிடத்தகுந்த இளம்படைப்பாளிகளில் ஒருவர். நீல நதி (2009), யாக்கை (2010), வசுந்தரா என்னும் நீலவர்ண பறவை (2011), மச்சம் (2012), மயான காண்டம் (2015), யானை (2015) தேர்ந்தெடுத்த கதைகள் ஆகியவை இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள். 2013 ல் வெளியான மோக்லியைத் தொலைத்த சிறுத்தை– இவருடைய கவிதைத் தொகுப்பு. உப்புநாய்கள் (2011), கானகன் (2014), நீலப்படம் (2015) ஆகியவை இவர் எழுதிய நாவல்கள். திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். உப்புநாய்கள் நாவலுக்காக 2012 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்றவர…
-
- 0 replies
- 495 views
-
-
'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல் 'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்…
-
- 0 replies
- 700 views
-
-
வாழ்நிலத்தை இழப்பது ஆர். அபிலாஷ் அ. முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவலில் விஸா இல்லாமல் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர முயற்சிக்கும் ஈழ அகதிகளை ஒரு முகவர் உக்ரேனில் ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவதில், தூங்குவது, ஒரே தமிழ்ப் படத்தை வீடியோ கேஸட்டில் திரும்பத் திரும்பப் பார்ப்பது என கழிக்கிறார்கள். அவர்களுடைய சமையலுக்கான கறி, மீன், காய்கனி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பொறுப்பை கேயார் என்பவர் மேற்கொள்கிறார். துபாயில் வேலை செய்து அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு உக்ரெய்ன் வந்த புஷ்பநாதன் என்பவர் தன்னை வீரசைவ வேளாளர், ஊரில் பெரிய குடும்பம் என பெருமைப்ப…
-
- 0 replies
- 373 views
-
-
அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை By Ravindramoorthy -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- தேசியக் கலைஞர் சீ.கோபாலசிங்கம் அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை மட்டக்களப்புத் தேசத்தின் முதன்மையான கல்வியாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள். அவருடன் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. நான் 1957ல் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரிக்குச் சென்றபோது அவர் 9ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவருடன் ஏற்பட்ட அண்ணன் தம்பி எனும் ம…
-
- 0 replies
- 607 views
-
-
ஆதித் தமிழனைத் தேடி ஒரு அகதியின் பயணம் 'கர்ப்பநிலம்' நாவல் கூறும் இலங்கை அனர்த்தப் பதிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழநிலம் அடைகாத்து வைத்திருக்கும் அறத்தவிப்பை அதன் ஓட்டை உடைத்து வெளிக்கொணரும் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார் குணா கவியழகன். ‘கர்ப்பநிலம்’ நாவல் மூலம் இலங்கையில் நடைபெற்ற அனர்த்தங்களைப் பதிவு செய்வதோடு, ஈழத் தொல்குடிகளின் வேர்களையும் அதன் பண்பாடுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். …
-
- 0 replies
- 384 views
-
-
மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டிவாசிப்பிலிருந்து தான் சிறந்ததாகக் கருதும் படைப்புகளை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஜி.குப்புசாமியும் ஒருவர். ஒரு படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்தப் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர். அதனாலேயே, இவரின் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்துகொண்டிருக்கிறது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று முழு நேர மொழிபெயர்ப்பாளராக ஆகியிருக்கும் வேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து... கிட்டதட்ட 30 வருட அரசுப் பணி. இப்போது என்ன தோன்றுகிறது? ஒவ்வொருநாளும் கரடுமுரடான சாலைகளில் ஓட்டை பஸ்களில் குலுங்கிக் குலுங்கி 130 கி.மீ.…
-
- 0 replies
- 595 views
-
-
திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி... By PONMALAR 16 NOV, 2022 | 02:40 PM திருக்கோணேஸ்வரம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கோணேஸ்வரம் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸியர் என்ற அன்னியரின் ஆதிக்கத்துக்குள் திருக்கோணமலை கொண்டுவரப்பட்டமை அதற்குரிய காரணங்களாக இருக்கலாம். இதனால் தான் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ் தன் குறிப்பொன்றில் ‘கீழைத்தேயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களின் ரோமாபுரி திருக்கோணேஸ்வரம்’ என வர்ணித்துள்ளார் என்ற தொடரும் திருக…
-
- 0 replies
- 461 views
-
-
நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமர் தம்பி 14 NOV, 2022 | 12:25 PM முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் எழுதிய ‘இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்’ நுால் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை 13ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள இந்திய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள் கிளையின் பணிப்பாளர் எஸ். முரளிதரன், கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப்பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதரா கதிர்காமர் தம்பி மற்றும் கொழும்பில் வாழும் மலையக வர்த்தக சமூ…
-
- 0 replies
- 321 views
-
-
அறம் சார்ந்து வாழ விரும்புகிற மனிதர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் குறித்த சிந்தனையே இல்லாத இடத்தில் எனக்கான வாழ்க்கை எது? அறத்துக்கும் அன்புக்கும் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் உள்ள இடம் எது? இந்தக் கேள்விகள் உருவாக்கும் வெளி அவற்றின் பதிலைவிட மேலானது. ஜோ டி குருஸின் 'அஸ்தினாபுரம்' நாவல் இப்படியான வெளியில் வாசகர்களைப் பயணிக்க வைக்கிறது. 'அஸ்தினாபுரம்' நவீன வாழ்க்கையின் யுத்த பூமி. இந்த யுத்தம் மறைமுகமானது. ஆகவே சிக்கலானது. எதிரியைத் தனித்து அறிய முடியாத இடத்தில் நடக்கிற வேறு யுத்தம். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் தவிர்க்க முடியாதவை. அதுபோல அழிவும் ஆக்கமும் உண்டு. யாருக்கு வெற்றி, யாருக்கு வாழ்வு? என்ப…
-
- 0 replies
- 772 views
-
-
தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' இளங்கோ-டிசே 1.பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது, வாசிப்பதற்கெனச் சில நாவல்கள் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் என்னைப் போன்ற 'புலம்பெயரி'களுக்கு அந்த நாவலின் சூழல், பாத்திர வார்ப்புக்கள் போன்றவை முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன. அதனால் பல நாவல்களை 'சும்மா' எழுந்தமானமாய் விருப்பின்றியே வாசித்திருக்கின்றேன். அன்றையகாலத்தில் வாசித்த Great Gatsby, To Kill a Mockingbird, Lord of the Flies போன்றவை மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.எனக்குத் தெரிந்த நகரை, எனக்குப் பரிட்சயமான வாழ்வை, என்னைப் போன்ற மண்ண…
-
- 0 replies
- 552 views
-
-
பிராங்பர்ட் தரும் புதிய வாய்ப்புகள் ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட்டில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் காட்சி, உலகில் பல்வேறு மொழிகளில் புத்தகம் வெளியிடுபவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் புதிய வாசல்களைத் திறந்துவைக்கிறது. இது புத்தக விற்பனைக்கான சந்தையல்ல. எழுத்தாளர்கள் பதிப்பகங்களைச் சந்திப்பது, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் வெளியிடுவதற்கான உரிமங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், புத்தக வியாபாரிகள் மேற்கொள்ளும் கொள்முதல் போன்றவற்றுக்கான களம் இது. உரிமங்களுக்கான முகவர்கள், அச்சுத் துறை, பதிப்புத் துறைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அளிப்பவர்கள் எனப் பல விதமானவர்கள் இங்கு வணிகம் செய்ய …
-
- 0 replies
- 427 views
-
-
தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதனாலையே “இப்படி ஒரு காலம்” எனும் நூலினை “மதக வன்னிய” என சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினேன் என நூலின் மொழி பெயர்ப்பாளர் அனுஷா சிவலிங்கம் தெரிவித்து உள்ளார். கவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. எழுத்தாளரான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம்” எனும் நூல் கிள…
-
- 0 replies
- 445 views
-
-
‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும் தயாஜி முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு முன்னரே மலேசியா வந்துவிட்டார் ஷோபாசக்தி. ஏற்கனவே சில முறை மலேசியா வந்திருந்தாலும் இலக்கிய நிகழ்வுக்காக ஷோபா வருவது இது இரண்டாவது முறை. இதுதான் மலேசியா என ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் க…
-
- 0 replies
- 940 views
-
-
உரை அறிமுகவுரை -சுப. சோமசுந்தரம் எனது நண்பரும் ஆசானுமான ஆங்கிலப் பேராசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றிய உரையை என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அந்நூலுக்கான அறிமுக விழாவைத் தனது நெல்லை வி.மு.சத்திரம் கிளையில் நிகழ்த்தியது. அறிமுக உரையாற்ற எனக்கு அவர்கள் அளித்த வாய்ப்பு நான் ஈட்டியது என்றே சொல்ல வேண்டும். அவ்வுரையை எழுதும்போது பேரா.தில்லைநாயகம் அவர்கள் பத்துப் பத்து அதிகாரங்களாக எனக்கு அனுப்பி எனது கருத்தினை அளிக்க உரிமையோடு பணித்திருந்தார். நான் அளித்த கருத்துகளை சி…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம். இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்', பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது. இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும். எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார். முன்னுரையிலிருந்த…
-
- 0 replies
- 8.8k views
-
-
குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பிர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக மேஜர் ஷெனன் சிங்குக்கு இலங்கை இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங் எழுதி வெளியிட்டுள்ள நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Mission overseas - daring operations by the indian military என்ற தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிட்டப்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்திய இராணுவத்தினர்…
-
- 0 replies
- 335 views
-
-
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் த…
-
- 0 replies
- 736 views
-
-
ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை இன்றும் தொடர்கிறது. யாழ்ப்பாண நூலக எரிப்பும், வன்முறைகளும், 1983-லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்…
-
- 0 replies
- 857 views
-