மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
"பலன் தரும் பழக்கங்கள்" "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் " ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய். "நம் செயல்களுக்கு நாமே காரணம்!" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம். "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள் [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே …
-
-
- 7 replies
- 564 views
-
-
"தாந்திரிகம் / தாந்திர வழிபாடு" / "Tantra" ஆரியர் அல்லாதவர்களின் [ஆஸ்ட்ராலாய்ட், மங்கோலியன், திராவிடர் / Austrics, Mongolians, and Dravidians] ஆன்மீக அணுகு முறை பொதுவாக தாந்திர முறையாகும். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. தாந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டு மெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்து இருக்க, அவரை சுற்றி மிருகங…
-
- 0 replies
- 308 views
-
-
"பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்." வார்த்தைகளை சிந்துவது சுலபம். ஆனால்அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது. ஆகவே வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது மற்றவரை எப்படி காயப்படுத்தும் என்று நன்றாக யோசித்த பின்பு தான் நாம் பேச வேண்டும். நாம் கோபத்தில், எரிச்சலில், அவசரத்தில் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியுமா? முடியாதில்லையா ? அப்படியென்றால் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு எப்படி ஒரு சக்தி இருக்க வேண்டும் ? இதை நாம் உணர வேண்டும். தவறை உணர்ந்து நாம் கேட்கும் மன்னிப்பும் அதற்கு நாம் கூறும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படுமே தவிர மறக்கப்பட மாட்டாது. அது மனதின் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கு…
-
- 0 replies
- 178 views
-
-
"ஆன்மீகம்" நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும் தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...? என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீக…
-
- 0 replies
- 391 views
-
-
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆ…
-
- 3 replies
- 614 views
-
-
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" எப்படி முதலாவது சமயம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகியபோது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. இயற்கை அனர்த்தங்களுக்கு எதிரான பயம் தான் சமயத்தை உருவாக்கியிருக்கும். மேலும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம். ஆகவே முதலாவது தெய்வம் அதிகமாக பெண் தெய்வமாகவே இருந்திருக்கும். சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறி…
-
- 0 replies
- 226 views
-
-
"சூரனை சங்காரம் செய்தவன் முருகனா ?" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப் பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்ய வில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்!] இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள், இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை "சூர சம்ஹாரம்" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா? இதற்கு மறுமொழி தரும் முன் ,"சூரன்", "அசுரர்", "சுப்ரமணியன்". "ஸ்கந்தன்", "முருகன்" என்றால் என்ன என பார்ப்போம். சுரன் – வீரமிக்கப் போர் வீரன், அறிஞன் "அசுர" என்றால் "வலிய" அல்லது "அதி…
-
- 0 replies
- 265 views
-
-
"பால் கடல் கடைதல்" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ] வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்கால…
-
- 2 replies
- 511 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வெய்கா ரோல் பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 31 மார்ச் 2024, 11:39 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் யூதேயா மாகாணத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து குறித்து, சுவிசேஷங்களில் (இயேசுவின் உபதேசங்கள்) உள்ள மத விவரிப்புகள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் சித்தரிக்கப்பட்ட விதங்களில் வேறுபாடுகள் இருப்பதாக ஆரம்பகால கிறிஸ்தவ அறிஞர்கள் கண்டறிந்தனர். மத விவரிப்புகளின்படி பிலாத்து நியாய, தர்மங்களில் அக்கறை கொண்டுள்ள நடுநிலையான மனிதர் என தெரிகிறது. இயேசுவிடம் எந்த கு…
-
- 1 reply
- 196 views
- 1 follower
-
-
** கார்த்திகேசு சிவத்தம்பி** நினைவின் சுவடுகள் நிறைவேறும் ஓர் ஆசை 1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது. யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம். நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம். அது ஒரு 'றோசா' பஸ். அதன் சாரதி அம்பலவாணர். அதில் பயணிப்போர்…
-
- 4 replies
- 2.4k views
-
-
07 FEB, 2024 | 10:29 PM அமரர் என். சண்முகதாசனின் 31ஆவது நினைவு தினம் (பெப்ரவரி 08) (சமுத்திரன்) 'பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு 1939 - 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அதன் பின்னர், நான் அதனின்று வழுவவேயில்லை' இந்த வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சண்முகதாசன். தனது அரசியல் நினைவுகள் பற்றிய நூலை அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் 'Political Memoirs of an Unrepentant Communist' எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் 1989 ஜூலையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்க…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RUPA & COMPANY கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 21 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் 'ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி விவேகானந்தர் சிறுவயதில் இருந்தே சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 'Swami Vivekananda the Feasting, Fasting Monk' அதாவது 'சுவாமி விவேகானந்தர் விருந்து மற்றும் உண்ணாவிரத துறவி', இது அவரது வாழ்க்கை வரலாற்றின் பெயர். ஆனால் இதன் தலைப்பு வெறுமனே வைக்கப்படவில்லை. வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தக…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வில்லியம் மார்க்கெஸ் பதவி, பிபிசி முண்டோ 17 நவம்பர் 2023 இதுபற்றிப் பேசும் பலரும் இதை ‘நண்பர்களுக்கு இடையிலான அரவணைப்பு’, ‘உணர்ச்சிகரமான பிணைப்பு’, ‘இரக்கம்’, ‘மற்றொருவருக்கு நல்லது செய்யும் விருப்பம்’ என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். தென் கொரிய மக்கள் இந்த அத்தனை உணர்ச்சிகளும் சேர்ந்த ஒரு உணர்வை ‘ஜியோங்’ என்று அழைக்கின்றனர். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தென் கொரிய கலாசாரம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நம்மில் பலரும் நிச்சயமாக இதேபோன்ற ஒன்றை உணர்ந்திருப்போம் — குறிப்பாக மேற்கத்திய கலாசாரம் சாராத, தொழில்வளம் மிக்க நுகர்வுக் கலாசார…
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
-
சனாதனம், சனாதன எதிர்ப்பு ஜெயமோகன் jeyamohanSeptember 13, 2023 சனாதன தர்மம் பற்றிய உதயநிதியின் பேச்சு பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் எழுதும் கேரள இதழாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். என் கருத்துக்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவை வெளியாயின. என் கட்டுரைகளில் எப்போதுமே வாசிப்பில் என்னென்ன குழப்பங்கள் உருவாகும் என ஊகித்து, அவற்றையும் கருத்தில் கொண்டு, முழுமையாகவும் விரிவாகவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பேன். ஏனென்றால் எல்லா கருத்துக்களையும் இங்கே திரித்துச் சிதறடித்துவிடுவார்கள். ஆனால் பேட்டிகளில் அவ்வாறு அமைவதில்லை. சுருக்கமாகவே அந்தக் கருத்து இருந்தது. என் கருத்தையொட்டி ஒரு விவாதம் உருவானதை அறிந்தேன் – நான் பயணங்களில் இருந்தமையால் அவற்றைப் பெரியதாக கவன…
-
- 2 replies
- 812 views
-
-
சனாதனமும், மனுதர்மமும் ஒன்றா..? மன்னர் மன்னன் 22 ஆவது நிமிடத்தில் இருந்து தமிழ்நாட்டில் சாதியம்.. ஆச்சரியமான தகவல்கள். மேலும் தகவல்கள் கிடைத்தால் இப்பதிவில் இடுங்கள்.
-
- 0 replies
- 534 views
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 12:19 PM குமார் சுகுணா ஆடி மாதம் என்றாலே அது இறைவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது. அது மட்டும் அல்லாது நமது முன்னோர்களான பித்ருக்களுக்கும் இம்மாதம் உரிய மாதமாக கருதப்படுகின்றது. இம் மாதத்தில் வருகின்ற அமாவாசை தினமானது பித்ருக்களுக்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகும். தை மாதம் வருகின்ற அமாவாசை ஆடி மாதம் வருகின்ற அமாவாசை புரட்டாசி மாதம் வருகின்ற அமாவாசைகள் என்பன இந்துக்களுக்கு முக்கியமானவைகளாகும். அதாவது பித்ருக்களை வழிபட கூடிய முக்கியமான அமாவாசைகளாகும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை நாளாகும். இந்த மாதம் தட்சிணாயினப் புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். மேலும் …
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
ஈழத்தில் சைவம் : வி.துலாஞ்சனன் ஒரு வரலாற்றுப் பார்வை இது பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தென்னிந்தியா – இலங்கை பற்றி ஆய்வுகளை மேற்கொண்ட இடச்சு எழுத்தாளர் பிலிப்பஸ் பால்டியசின் (Phillipus Baldaeus) நூலின் ஒரு பகுதி. 1703இல் எழுதப்பட்ட அவரது நூலில் கேரளம், சோழமண்டலக் கரையோரம், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் எத்தகைய சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்பது கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இக்சோரா (Ixora – ஈசுவரன்) பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இக்சோராவையும் சிவலிங்கத்தையும் (Quivelingam) வழிபடும் சமயத்தை யோகிகளின் சமயம் என்றும் சைவம் என்றும் அவர் கூறுகிறார். இலங்கையைப் பொறுத்தவரை சைவ சமயத்துக்கும், அதன் முதன்மையான வழிபடு தெய…
-
- 0 replies
- 1k views
-
-
செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்குஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டு இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள், பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்து விசேடபூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரையான ஒரு வார காலத்திற்கு…
-
- 2 replies
- 703 views
-
-
தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை. கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார். நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர் அருகிலிரு…
-
- 1 reply
- 740 views
- 1 follower
-
-
அறம் என்ற ஒன்றை நாம் பிரிக்கும்போது அறமற்ற இன்னொன்று தொங்கிக் கொண்டு உள்ளதே.. அப்பொழுது இரட்டைத் தன்மை அங்கு உள்ளது என்று பொருள்படுகிறது. இரட்டைத் தன்மை கொண்டமை மனதில் அதிநுட்ப செயல் திட்ட வடிவமே.. மனது அறம் என்பதை விரும்புகிறது. மனம் விரும்பும் அறம், எப்படி ஞானம் என்று சொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லும்.!? மனதின் இன்னொரு முகம் அறிவு. அறிவின் உள்ளாழம் பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்ளப்படும்போது இந்த மனம், அறிவு, பகுத்தறிவு இவையெல்லாம்தான் ஞானத்தின் பாதை தீர்மானிக்குமா.!? மனதின் வரையறை, விளக்கங்கள் எதை திருப்திப்படுத்துவது.!? எதை முழுமைப்படுத்த முனைவது .!? ஒன்று ஒரு வடிவம் கொடுத்து நாம் சொல்வதால் அது ஒன்றே என்று பொருள் கொள்ளப்படுகிறது. …
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”. மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/0…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
இளவல் ஒருவர் அழைத்திருந்தார். “அண்ணா”. “சொல்லுங் தம்பி”. “எப்படினா எப்பயுமே மகிழ்வா, துள்ளலா இருக்கீங்க?” “அப்படியெல்லா ஒன்னுமில்லீங் தம்பி. எனக்கும் கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், சினம்னு வருவதும் போவதுமாத்தான் இருக்கும்” பேச்சு அதனைக் கடந்து சென்று விட்டது. ஆனால் சிந்தித்துப் பார்க்குங்கால், மகிழ்ச்சி, உவப்பு, இன்பம், களிப்பு முதலானவை எல்லாம் வேறு வேறானவை. ஒவ்வொரு மனிதனும் முக்காலே மூணுவீச நேரமும் இன்புற்றிருக்கவே ஆட்பட்டவர்கள். எப்படி? மகிழ்ச்சி: மகிழ்தல் என்றால் பொங்கி வருதல். மனம், இருக்கும் நிலையில் இருந்து குதூகலநிலைக்கு மாறிய ஓர் உணர்வு. அது தற்காலிகமானது. உவப்பு: ஏதோவொரு செயலின் ஈடு(result) மனநிறைவைக் கொடுத்தல். உவப்பும் கசப்பும் ஒன…
-
- 1 reply
- 582 views
- 1 follower
-
-
இனங்களிடையே நல்லுறவை வலுவூட்ட புனித நோன்பு பெருநாள் வழிவகுக்கட்டும்! இறைஅருளையும் பாவவிமோசனத்தையும் அடைய ரமழான் எனும் விஷேட மகத்துவமான மாதத்தை வழியனுப்பி வைத்து கவலையில் ஆழ்ந்த இறைவிசுவாசிகளுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இறைவன் வழங்கிய மாண்புமிக்க தினமே புனித நோன்புப் பெருநாள் தினமாகும். புனித ரமழான் மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள், ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதூகலமாக கொண்டாடுகின்றனர். ரமழானில் நன்மைகளைக் கொள்ளையிட்ட உள்ளங்கள் ஷவ்வால் மாத தலைப்பிறையுடன் ரமழானுக்கு விடைகொடுத்த…
-
- 0 replies
- 605 views
-
-
இன்று என் நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியருடன் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கருத்துக்கள் நாட்டில் திரண்டு வருவதாகவும், தென்னிந்தியா - வட இந்தியா என ஒரு பிரிவினை தோன்றி வருவதாகவும் விரைவில் உள்நாட்டுக் கலகம் தோன்றக் கூடும் என்றார். நான் அவரிடம் எனக்கு வேறொரு பார்வை இது குறித்து உள்ளதாக சொன்னேன். இன்று பாஜகவின் சித்தாந்தத்துக்கு சார்பாகவோ எதிராகவோ மக்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை, மாறாக மக்களுக்கு சிந்திப்பதில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது என்றேன். நான் இதை என்னைச் சுற்றி உள்ளவர்களின் உளவியல், போக்குகள், நான் கற்பிக்கும் இளைஞர்களிடம் தென்படும் இயல்புகள், நாட்டுநடப்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். ஜெயமோகன் ச…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-