உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
ராஜீவ் காந்தி கொலையில் சி.ஐ.ஏ க்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பங்கு இருப்பதாக கூறுகிறார் ஜெயின் கமிசன் முன்பு ஆஜாராகி பரபரப்பாக சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமி http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_3748.html
-
- 4 replies
- 2k views
-
-
நடிகர் ஷோபன்பாபு மரணம்! உப்பு ஷோபன சலபதி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நடிகர் ஷோபன்பாபு இன்று மரணமடைந்தார். அவரது வயது 71. நான்கு முறை ஃப்லிம் பேர் விருதும், ஐந்து முறை நந்தி விருதும் மற்றும் ஏராளமான விருதுகளும் பெற்ற தலைசிறந்த நடிகர் அவர். 30 ஆண்டுகளில் அதிக விருதுகள் பெற்ற ஆந்திராவின் ஒரே நடிகர் அவர் தான். 1965ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தெலுங்கு படங்களில் கதாநாயகனாக 1997 வரை நடித்துக் கொண்டிருந்தார். என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்கள் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட ஷோபன்பாபுவுக்கு என்று ரசிகர்களும், ரசிகைகளும் ஆந்திராவில் அதிகளவில் இருந்தார்கள். ஷோபன்பாபு படங்களில் மிதமான மேக்கப்பில் மிக அழகாக உடையணிவா…
-
- 2 replies
- 2.2k views
-
-
இந்தக் காலத்தில மேற்குநாடுகளில பல்கலைக்கழகப் படிப்பு என்பது வியாபாராமாகிப் போச்சு. அதுவும் இணைய வரவுக்குப் பின்னர் டிகிரிக்குத் தேவையான எழுத்து வேலைகளை அடுத்தவையைக் கொண்டு செய்வித்து கொடுத்து டிகிரி வாங்கிறது பெருமையாகிட்டு வருகுது. அதுமட்டுமன்றி கோஸ் வேர்க்குகளைக் கூட இணையத்தில் இருந்து கொப்பி அண்ட் பேஸ்ட் செய்து சின்னச் சின்ன மாற்றங்களோடு சமர்ப்பிச்சு மார்க்ஸ் வாங்கிக்கிறாங்க. இதால உண்மையான திறமை என்பது அடிபட்டுப் போகுது. இப்ப என்னடான்னா.. இப்படி சீற் பண்ணுற மாணவர்களைப் பிடிக்கிறது கஸ்டமாகிட்டு வருவதா பல்கலைக்கழகங்களுக்கு கவலை பெருகிட்டு வருகுது. என்னதான் சீற் பண்ணுறதை கண்டறிய மென்பொருட்கள் வந்தாலும் அதையும் உச்சி.. காசுக்கு கட்டுரைகள்.. திசிஸ் எழுதிக் கொடுக்க…
-
- 8 replies
- 2.2k views
-
-
மழையைக் கொடுக்கும் பக்டீரியா அமெரிக்காவில் கண்டுபிடிப்பு [18 - March - 2008] மழையைக் கொடுக்கும் பக்டீரியா எதுவென்று அமெரிக்காவின் மொன்டானா மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பக்டீரியாவின் பெயர் மேலும் பல ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படவுள்ளது. இந்த பக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப்பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும். அமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெ…
-
- 1 reply
- 1k views
-
-
ஈராக்கில் வெற்றி கிட்டாது: ஹிலாரி . Tuesday, 18 March, 2008 10:19 AM . வாஷிங்டன், மார்ச் 18: ஈராக் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என்று ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். . இந்த போர் காரணமாக அமெரிக்காவுக்கு ஒரு டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதுடன் மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்க தொடங்கி ஐந்தாவது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார். ஈராக் மீதான போர் காரணமாக …
-
- 1 reply
- 885 views
-
-
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் வி.எஸ்.கார்த்திக் என்பவர், தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெல்லியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்வதை தனது காதலிக்கு வெப்காம் மூலம் நேரடியாக அவர் காட்டியதால் அவரது காதலி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இணையதள வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கார்த்திக், டெல்லியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார் கார்த்திக். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தற்கொலை ச…
-
- 65 replies
- 7.3k views
-
-
கொசோவாவை அங்கிகரித்த ஜப்பான் கொசோவாவை, பிரித்தானியா அமெரிக்கா உட்பட்ட 25 நாடகளுடன் இணைந்து தாங்கள் தனிநாடாக அங்கிகரிதுள்ளதாக ஜப்பானின் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும்....
-
- 1 reply
- 1.1k views
-
-
விஜயகாந்த் விளக்கம் . Sunday, 16 March, 2008 02:18 PM . சென்னை, மார்ச். 16: மாநிலங்களவை தேர்தலில் யாரையும் ஆதரிக்காதது ஏன் என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். மக்களுடன் தான் கூட்டணி என்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார். . தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று பாமகவைச் சேர்ந்த வள்ளல் பத்மநாபன், மணலி நகர் மன்ற கவுன்சிலர் சுப்பையா ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை வாழ்த்தி, வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது: நீங்கள் அனைவரும் தேமுதிகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் கட்சி வளர்ந்து வருகிறது என்பதாலும், என் …
-
- 0 replies
- 798 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு கோயிலில் இரண்டரை லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஹரோவில் உள்ள சித்தாஸ்ரம் சக்தி மையத்தில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மக்களிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டப் பட்டு இருந்தது. கோயிலின் பூட்டை உடைத்த திருடன் அங்கிருந்த இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளையடுத்து சென்றான். கோயிலில் வைக்கப்பட்ட கேமராவில் திருடனின் செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. திருடன் கருப்பு நிற உடையும் சூவும் அணிந்திருத்ததாக தெரிவித்த போலீசார் திருடனை கண்டுபிடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் திருடனை கண்டுபிடிக்கும் வரை திருடப்பட்ட பணத்திற்கு கோயில் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். …
-
- 22 replies
- 4.1k views
-
-
திபெத்தில் தனிநாடு கோரி கலவரம் ; புத்த துறவிகள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சுடு : 7 பேர் பலி திகதி : Saturday, 15 Mar 2008, [saranya] 1950 முதல் திபெத் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. தனிநாடு கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புத்த துறவிகளும் திபெத்தை தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தின் லாசா நகரில் சீன அரசை கண்டித்தும் தனிதிபெத் கோரியும் போராட்டம் நடந்தது. இதில் புத்த துறவிகளும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போதுகலவரம் வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த கலவரம், துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த கலவரத்தை தீபெ…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஆயிரமாயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை, மகிழ்ச்சியை தன்னுள் கரைத்த ஆழிப்பேரலையின் கொடூரத்தை, பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்வையில் கோடு காட்டும் குறும்படம். http://www.keetru.com/video/neelam/arivumathi.wmv நன்றி கீற்று இணையம்
-
- 0 replies
- 930 views
-
-
சுதந்திர நாடு கோரி திபெத்தியர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் திபெத்தியர்கள். டில்லியில் உள்ள சீன தூதரகம் முன் பாதுகாப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் உள்ள சீன தூதரகத்தில் அத்து மீறி நுழைந்த திபெத்தியர்கள் அங்கிருந்த சீன கொடியை வலுக்கட்டாயமாக இறக்கி திபெத் கொடியை ஏற்ற முற்பட்டனர். திபெத் தலைநகர் லாசாவில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. தலாய் லாமா சீன அரசுக்கு திபத்தியர்களை கவுரமாக நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமைச்செயலகம் முன்பும் போராட்டம் நடந்து வருகிறது. ஆதாரம் தினமலர்
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒபமாவை விமர்சித்த ஹிலாரியின் ஆலோசகர் இராஜினாமா 14.03.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபமா கறுப்பினத்தவராக இல்லாதவிடத்து அவரால் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் திகழ முடியாது என விமர்சித்தமை காரணமாக பெரும் சர்ச்சைக்குள்ளான ஹிலாரி கிளின்டனின் ஆலோசகர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ""ஒபமா வெள்ளையராக இருந்தால் அவர் இந்நிலைக்கு ஒருபோதும் வந்திருக்க முடியாது'' என ஹிலாரி கிளின்டனின் ஆலோசகரான ஜெரால்டின் பெர்ராரோ கலிபோர்னிய பத்திரிகையெ?985;்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜெ?992;ால்டின் பெர்ராரோ, ஹிலாரி கிளின்டனின் நிதிச் சபையிலான கௌரவ பதவி…
-
- 0 replies
- 823 views
-
-
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது [14 - March - 2008] டாக்டர் எமன் என வர்ணிக்கப்பட்ட ஜெயந்த் பட்டேல் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபபட்டுள்ளார். தனது கடமைகளில் கவனயீனமாக இவர் இருந்ததால் இவரது நோயாளர்கள் பலர் இறந்தும் பலர் தீராத நோய்கள், தேவையற்ற சத்திரச் சிகிச்சைகள் போன்றவற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இவர் கைது செய்ப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் 17 நோயாளிகளின் இறப்புக்கும் வேறு சிலரின் உடல் உபாதைகளுக்கும் அவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. …
-
- 1 reply
- 752 views
-
-
நீங்கள் நினைத்தது என்ன? இதை கண்டுபிடிக்க ஜோதிடம் வேண்டாம்; அறிவியல் கண்டுபிடிப்பு வந்துவிட்டது. ஆம், அடுத்தவர் மனதில் இருப்பதென்ன என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். நீங்கள் பார்க்கும் படம் மூளையில் ஆராய்ச்சி செய்வதில், அமெரிக்க நிபுணர்கள் புதிய ஆராய்ச்சி முடிவை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக, கம்ப்யூட்டருடன் இணைந்த சாதனத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்கள் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூளையில் உள்ள செல் அதிர்வுகளை வைத்து, அவற்றின் செயல்பாடுகளை கணக்கிடலாம். ஒரு விஷயம் பற்றி நினைக்கும் போது, மூளையின் சில செல்கள் இயங்குகின்றன; அவற்றின் அதிர்வுகள் மூலம், நம் மனதில் நினைக்கும் எண்ணங்களை வடிவமைக்கலாம்; இதற்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் முறை …
-
- 13 replies
- 2k views
-
-
உலகமயமாகி வரும் சூழ்நிலையில் ஏழு பாவச் செயல்கள் பட்டியலை வத்திக்கான் கத்தோலிக்க சர்ச் மாற்றியமைத்துள்ளது. வத்திக்கான் சர்ச், மனிதர்கள் செய்யக்கூடாத பாவச் செயல்கள் பட்டியலை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. தற்போது, உலகமயமாகி வரும் சூழ்நிலை காரணமாக, இந்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாடிகனின் பழமையான பாவப்பட்டியலில், ஏழு செயல்கள் பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. சிற்றின்ப வெறி, பெருந்தீனி, பொருள் திரட்டும் பேராசை, சோம்பல், கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியவை பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது உலகமயமாகி வரும் சூழ்நிலையில், திருத்தி அமைக்கப்பட்டுள்ள பாவப்பட்டியலில், போதை கடத்தல், ஒழுக்கக் கேடான செயல்கள் மூலம் செல்வம் சேர்த்…
-
- 9 replies
- 1.9k views
-
-
இன்றைய செய்தி உலாவில் கண்ட செய்தியை இங்கே இணைக்கிறேன். சுவையான இந்தத் தகவல் தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தோர் இதில் பதிவிட்டு இக்கருத்துக்களத்தை மெருகூட்டலாம். (லண்டன் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் 41 விதமான மொழிகளைப் பேசும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். உலகிலேயே அதிக மொழிகளைப் பேசும் மாணவர்கள் படிப்பது இங்கு மட்டும்தான் என்று கருதப்படுகிறது. கிழக்கு லண்டனின், ரெட்பிரிட்ஜ் பகுதியில் உள்ள தி நியூபெரி பார்க் தொடக்கப் பள்ளிதான், இந்த சர்வ மொழி சாலையாகும். இங்கு மொத்தம் 851 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 41 மொழிகளைப் பேசுகின்றனர். ஆப்ரிகன் முதல் ஹீப்ரு வரை, ஜப்பானிஸ் முதல் நார்வே மொழி வரை படு சரளமாக இந்த மாணவ, மாணவியர் பேசுகின்றனர். ஒவ்வொரு மாணாக்கருக்…
-
- 2 replies
- 1k views
-
-
ஊழலில் இந்தியாவை முந்தியது சீனா திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] இந்தியாவை விட சீனாவில் ஊழல் அதிகரித்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆசியப் பகுதி சிந்தனையாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆசியாவில் உள்ள 13 பெரிய நாடுகளில் நிலவும் ஊழல் பற்றி 400 தொழிலதிபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 0 முதல் 10 வரை அவர்கள் மதிப்பெண் வழங்கினர். இதில் இந்தியாவுக்கு 7.25 மதிப்பெண்ணும், சீனாவுக்கு 7.98 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் (1.13), ஹாங்காங் (1.80), ஜப்பான் (2.25) ஆகிய நாடுகளில் குறைந்த அளவே ஊழல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் இந்தியாவுக்கு 8-வது இடமும் சீனாவுக்கு 10 வது இடமும் கிடைத்துள்ளது. அதிகமான ஊ…
-
- 3 replies
- 1.4k views
-
-
விலைமாதர் வலையில் நியூயார்க் கவர்னர்!: ராஜிநாமா செய்வாரா? திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] அமெரிக்காவின் நியூயார்க் மாநில கவர்னர் எலியட் ஸ்பிட்சர், ஒரு விலை மாதை ஹோட்டலுக்கு வரவழைத்து உறவு கொண்டது, அம் மாநில குற்றப்பிரிவு போலீஸ?992;ால் கண்டுபிடிக்கப்பட்டது. கவர்னர் என்றும் பாராமல் மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரிடமே நேரடியாக விசாரணை நடத்தி குற்றத்தைப் பதிவு செய்துவிட்டனர். அச் செய்தியை "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் இணையதளம் மக்களுக்குத் தெரியப்படுத்திவிட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட கவர்னர், அதற்காகத் தனது குடும்பத்தாரிடமும் மாநில மக்களிடமும் மன்னிப்பு கோரினார். நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கவர்னரே, விலைமாதர்கள் கும்பலை ஊக்குவிப்பது…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரிட்டன் குடியேற்றத்திற்கும் உதவும் ஐ.இ.எல்.டி.எஸ்.! செவ்வாய், 11 மார்ச் 2008( 17:01 IST ) ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) என்ற சர்வதேச ஆங்கில மொழிப் புலமை பரிசோதனை தேர்வுகள் பிரிட்டன், ஆஸ்திரேலிய கல்வியாளர்களால் நடத்தப்படுகிறது. இத்தேர்வை 2007-ம் ஆண்டில் மட்டும் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டில் மட்டும் இத்தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பல்கலைகழக நுழைவுத்தேர்வு, புதிய குடியேற்ற கொள்கைகள், தனித்துவமிக்க அங்கீகாரம் ஆகியவற்றிற்கு இந்த சான்றிதழ் அவசியம். பிப்ரவரி 2008 முதல் பிரிட்டன் உள்துறை, புள்ளிகள் அடிப்படையிலான புதிய குடியேற்ற முறையை அறிமுகப்படுத்துயுள்ளது. இந்த முறை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தேவை…
-
- 0 replies
- 724 views
-
-
'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக மாஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க பாவிமகன் படும்துயரம் பார்க்கொணாதே...' - துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் கதி இதையெல்லாம் தாண்டியே போச்சு! இலங்கைக் கடற்படைத் தாக்குதல், கண்ணி வெடி அச்சுறுத்தல், கடத்தல்காரர்கள் தொல்லை, போலீஸ் நெருக்கடி என்று திக்திக் வாழ்க்கை நடத்தும் நம் மீனவர்கள், 'எங்கள் பகுதிக்குள் மீன் பிடிக்க வராதே... வந்தால் பதிலடி கொடுப்போம்' என்கி…
-
- 9 replies
- 1.9k views
-
-
கடும் போட்டி உறுதி Wednesday, 12 March, 2008 01:58 PM . சென்னை, மார்ச். 12: மாநிலங்களவை தேர்தலில் திமுக அணி 5 இடங்களிலும், அதிமுக அணி 2 இடங்களிலும் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போட்டி உறுதியாகிவிட்டது. அதிமுக ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் பாலகங்கா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. . மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அல்லது வேளச்சேரி மணிமாறன் போட்டி யிடக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங் களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 7 பேர் போட்டி யிடுவதை அடுத்து, இந்த தேர்தலில் போட்டி உ…
-
- 0 replies
- 543 views
-
-
60 கோடியில் ஆயுதம் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டம்' ப 60 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட் டீல் மக்களவையில் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார். நக்ஸலைட்டுகளுக்கும் நேபாளத்தில் இயங்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இல்லை. மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=904
-
- 0 replies
- 718 views
-
-
கடலில் பலத்த சூறாவளி 4 மீனவர்கள் மாயம் ராமேஸ்வரம் கடலில்இ நள்ளிரவில் வீசிய பலத்த காற்றால் மீனவர்கள் 4 பேர் மாயமானார்கள். ராமேஸ்வரத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர். நடுக் கடலில் நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. மீன்பிடி வலைகள் அறுந்தன. கடல் கொந்தளித்ததால் மீன்பிடிக்க முடியாமல் பலர் கரை திரும்பினர். வலைகள் அறுந்ததில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1277#1277
-
- 6 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவின் மிகப் பெரிய பொலிஸ் பிரிவொன்றின் (GMP) பிரதான பொலிஸ் தலைமை அதிகாரியான Michael Todd நேற்றிரவில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் இன்று Bwlch Glas மலைப்பகுதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமரும் மரணமான அதிகாரியும். இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பிரித்தானிய பொலிஸ் சேவையில் பணியாற்றியவர் ஆவார். இவருக்கு வயது 50 மட்டுமே. இவரது திடீர் மர்ம மரணம் பிரித்தானிய பொலிஸ்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பிரித்தானியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. http://news.bbc.co.uk/1/hi/england/manchester/7290359.stm
-
- 6 replies
- 1.6k views
-