உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஜேக்குவார், லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலைகளை டாடா வாங்கிக்கொள்ளட்டும் : தொழிலாளர்கள் விருப்பம் லண்டன் : இங்கிலாந்தில் தயாரிக்கப்படுபவை புகழ் பெற்ற கார்களான ஜேக்குவார் மற்றும் லேண்ட்ரோவர். இப்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கிறது. இந்த இரண்டு கார் நிறுவனங்களையும் விற்று விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்துள…
-
- 0 replies
- 1.1k views
-
-
`தமிழர்களுக்காக தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல் தன்சானியா பிரதமரா குரல்கொடுப்பார்'? [04 - December - 2007] `மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்பட வேண்டுமே தவிர மலேசியப் பிரச்சினையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்' இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் `நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ். அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு உரிய ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியாவும், இஸ்ரேலும் சேர்ந்து மிக நவீன உளவு செயற்கைக் கோள் ஒன்றை உருவாக்கியுள்ளன. இதில் பூமியில் உள்ளவற்றைத் துல்லியமாக படம்பிடிக்கும் காமிராக்கள் பெர்றுத்தப்பட்டுள்ளன. இவை தவிர தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க ராடார் கருவிகளும் உள்ளன. கடந்த மாதம் இந்த உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த தயார் நிலையில் இருந்தது. இது ஏவப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு உளவு செயற்கைக் கோளை பறக்க விடுவது திடீரென நிறுத்தப்பட்டது. தொழில் நுட்பக் காரணங்களால் அந்த செயற்கைக் கோள் பறக்கவிடப்படவில்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அந்தச் செயற்கைக் கோள் ஏவப்படவில்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந…
-
- 9 replies
- 2.3k views
-
-
பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்வது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் உலர் பழங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வாகா எல்லை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு இரு புறமும் எல்லையின் நுழைவு வாயிலில் இருந்து 1 கிலோ முன்பு சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுவிடும். லாரியில் உள்ள சரக்குகளை தலைச்சுமையாக அடுத்த பகுதிக்கு கொண்டு சேர்த்தனர். இதனால் கால விரையம் ஏற்பட்டதுடன், செலவும் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நேரடியாக சரக்கு லாரிகள் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுவே காய்கறி ஏற்றுமதி அதிகரித்து இருப்பதற்கு முக்கிய க…
-
- 0 replies
- 1k views
-
-
சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்! தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து..... ‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்! சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார். ‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல…
-
- 1 reply
- 1.6k views
-
-
குஜராத்தில பாரதியஜனதா கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை விட மோடிக்கு தான் செல்வாக்கு அதிகமா இருக்கின்றது. இதனால் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது குறிப்பாக இளையர்கள் அதிகம் பேர் எழுச்சியுடன் கூடுகின்றனர். குஜராத்தில் முன்பு அத்வானிக்கு தான் அதிகம் செல்வாக்கு இருந்தது இப்பொழுது மோடிக்கே அதிக செல்வாக்கு இருக்கின்றது. எனவே வேட்பாளர்கள் அனைவரும் தமது தொகுதியில் மோடி அதிகம் பேசவேண்டும் என்று கேட்டுவருகினறனர். மோடி ஒரு தடவை தங்கள் தொகுதியில் பேசிவிட்டாளே தாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று பாரதியஜனதா வேட்பாளர்கள் கருதுகின்றனர். மோடி தனது பேச்சில் காங்கிரஸையும் சோனியாவையும் கடுமையாக தாக்கி பிரச்சாரம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
கோலாலம்பூர்: மலேசியத் தமிழர்களின் இனப்படுகொலை குறித்த புகார் அடிப்படையற்றது, பொய்யானது. அதை நிரூபித்தால் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். மலேசியாவில் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கப்பட வேண்டும், பாரபட்சப் போக்கு களையப்பட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகத்தில் அமைதியான முறையில் மனு கொடுக்கச் சென்ற தமிழர்கள் மீது மலேசிய காவல்துறை நடத்திய அடக்குமுறைத் தாக்குதல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறுவதைப் போல, மலேசிய அரசும், தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொல…
-
- 1 reply
- 973 views
-
-
சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் யாருக்காக? [03 - December - 2007] - டி.எஸ்.எஸ்.மணி- கடந்த செப்ரெம்பர் 18.2007 அன்று `வாஷிங்டன் போஸ்ட்' டில் ஒரு கட்டுரை. `கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வுத் தடங்கலால் தடைப்பட்டுள்ளது' என்ற ராமலட்சுமியின் கட்டுரை. அதில் `சுற்றுச் சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம் மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது' என முடிக்கப்பட்டிருந்தது. `சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த `சுற்றுச் சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு' மீதே நாம் காணமுடியும். * இந்த வங்காள விரிகுட…
-
- 0 replies
- 762 views
-
-
சென்னை: நலிந்த தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோத்தகிரியில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யாமலும், நலிந்த தேயிலை தொழிலாளர்கள் மீது அரசு ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோசமான சாலைகளை மேம்படுத்தாத ஊராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதது; கெரடா மட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையை சீர்படுத்தாதது, சமூக வனப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவது, சாலை அமைக்கும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டது; இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை …
-
- 0 replies
- 672 views
-
-
மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது. மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவைகளைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புக்களின் கண்ணிவெடியில் சிக்காமல், தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்று தமிழகத்தின் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசியா இன்னொரு இலங்கையாக மாறும் என்று மலேசிய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசியாவில் வம்சாவளி இந்தியர்கள் தடையை மீறி பேரணி போலீஸ் கண்ணீர்புகை குண்டு வீச்சு சிங்கப்பூர்இ நவ.26- மலேசியாவில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்ற வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தியதோடு 240 பேரை கைது செய்தனர். மக்கள் தொகையில் 8 சதவீதம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போதுஇ இந்தியாவில் இருந்து மலேசியா (அப்போது மலேயா) நாட்டுக்கு ஏராளமான தமிழர்கள் உட்பட இந்தியர்களை சட்டப்பூர்வமாக குடியேற்றப்பட்டனர். தன்னுடைய சொந்த நலனுக்காகவே ஆங்கிலேய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. கடந்த 1800-ம் ஆண்டுகளில் இவ்வாறு குடியேறிய இந்தியர்களின் சந்ததியினர் இப்போதும் மலேசியாவில் இரண்டாம்…
-
- 20 replies
- 6k views
-
-
கரடி பொம்மைக்கு 'முகமது' பெயரிட்ட சர்ச்சை: ஆசிரியருக்கு தண்டனை போதாது என்று கூறி கார்டூமில் ஆர்ப்பாட்டம் பிரிட்டிஷ் பள்ளிக்கூட ஆசிரியை கிலியன் ஜிப்பொன்ஸ்ஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறி அதனைக் கண்டித்து, சுடானின் தலைநகர் கார்ட்டூமின் ஊடாக நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். தனது வகுப்புக் குழுந்தைகளை கரடிப் பொம்மைக்கு 'முகமது' எனப் பெயரிட அனுமதித்ததை அடுத்து, மத நிந்தனைக் குற்றத்துக்காக கிப்பொன்ஸ் அவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனையும், கடுமையான அபராதம் அல்லது 40 சவுக்கடிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த ஊர்வலம் மிகுந்த இரைச்சலுடன் காணப்பட்டது எ…
-
- 0 replies
- 881 views
-
-
அதிநவீன விமானப்படை விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்று அப்பாவி ஆப்கான் மக்களை தினமும் கொன்று குவிக்கின்றன. அப்படி கொன்று குவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல நூறாகும். ஆனால் நேட்டோவின் ஆதிக்கத்துள் இருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஐநாவும் இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. ஏனெனில் மனித உரிமைகளை மீறிறவர்கள் அமெரிக்க தலைமையிலான ஜனநாயக முதலாளிமார். அண்மையில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய அகோர விமானத் தாக்குதலில் வீதிப்புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதை அம்மாகாணத்துக்கான கவர்னர் உறுதிப்படுத்தி இருந்தார். …
-
- 1 reply
- 939 views
-
-
துருக்கியில் 56 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது அங்காரா : துருக்கியில் உள்ள இஸ்பார்டா என்ற மாகாணத்தில் 56 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியீட்டுள்ளது.மீட்புக்குழ
-
- 1 reply
- 936 views
-
-
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி , “கர்மயோகம்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்பவர்கள் அதன் மூலம் ஒரு கட்டத்தில் ஆன்மீக ரீதியாக உயர்வான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். சி.என்.என்.ஐ.பி.என் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும் http://www.ibnlive.com/news/scavenging-a-s...di/53024-3.html
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் நகரில் தொடரும் கலவரங்களில் இதுவரை 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயம்' [29 - November - 2007] [Font Size - A - A - A] *நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு பாரிஸ்: பிரான்ஸின் நகரப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்களுடனான அவசர சந்திப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினால் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோபமடைந்த இளைஞர்கள் அங்கு கலவரங்களில் ஈடுபட்டு வருவதனால் இதுவரைக்கும் 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயமடைந்துள்ளனர்.நேற்று முன்தினம் கலவரங்கள் சற்று தணிந்துள்ள போதும் ம…
-
- 0 replies
- 804 views
-
-
மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது பாலத்தீன அதிபர், இஸ்ரேலிய பிரதமர் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் புஷ் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது. அந்த பகுதியில் ஒரு போர் நடந்து வரும் வேளையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே ஒரு சமாதானம் ஏற்பட இதுவே சரியான தருணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டமானது, பேச்சு வார்த்தைகளை துவக்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், எந்தவிதமான முடிவையும் எட்ட ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்றும் புஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கூட்டம் தொடங்குவதற்க…
-
- 0 replies
- 705 views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் -- சட்டவிரோத கட்சி !!! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சட்டவிரோத கட்சியாக அறிவித்து நடவடிக்கைகளை முடக்குக!! -- கொளத்தூர் மணி தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களைத் தடை செய்ய வேண்டும். "ஆயுத கலாசாரமாகிவிட்டது சத்தியமூர்த்தி பவன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் அறிவித்திருப்பதால் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டிலும் தீவிர சோதனைகளை நடத்தி அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு சீல் வைத்து அக்கட்சியின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் …
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன் ஹோவர்டிடமிருந்து 11 ஆண்டுகள் கழித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹொவர்டைக் காட்டிலும் 20 வயது குறைவான நாட்டின் புதிய தலைவர் கெவின் ருட், முன்பு ராஜீய அதிகாரியாக இருந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று உறுதியளித்ததோடு, நாடு தனது சரித்திரத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதப்போகிறது என்று வெற்றிபெற்ற பின்னர் முதன்முதலாக கருத்துவெளியிட்ட கெவின் ருட் …
-
- 12 replies
- 2.2k views
-
-
பிரிட்டனின் அரைவாசிக்கும் அதிகமான மக்களின் முக்கிய தரவுகளடங்கிய கணினி பதிவேடுகள் தொலைவு [24 - November - 2007] [Font Size - A - A - A] பிரிட்டனின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்களின் தனிப்பட்ட விபரங்களடங்கிய கணினிப் பதிவேடுகள் தொலைந்து போயுள்ள விவகாரம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சிகளில் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுண் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையின் விபரங்களடங்கிய இரு கணினிகளின் பதிவேடுகள் தொலைந்து போயுள்ளமை நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த பாரிய தவறுகளில் ஒன்றென கருதப்படுகிறது. இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கேட்பதுடன் ஆழ்ந்த கவலையும் அடைவதாக தெரிவித்த பிறவுண் இதனால், மில்லியன் கணக்கான…
-
- 1 reply
- 1k views
-
-
ராகுல் காந்தியை கொல்ல சதி 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது வீரகேசரி நாளேடு ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்தற்காக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். சீதாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை பொலிஸார் நிறுத்த சைகை காட்டிய போதும் அந்தக் காரை நிறுத்தாமல் சென்றனர். உடனே காரை மடக்க பொலிஸார் முயற்சித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி காரை மடக்கிப் பிடித்தனர். உள்ள…
-
- 7 replies
- 1.7k views
-
-
இதைப்பாருங்கள் இதயமே நின்று விடும். எனக்கு இந்த நாட்டு மொழி தெரியாது. அதனால் விளக்கம் குறைவு. http://www.dagbladet.no/tv/index.html?clipid=23923
-
- 3 replies
- 3k views
-
-
பிரித்தானியாவில் இளையவர்கள் மத்தியில் வேகமாக பாலியல் நோய்கள் பெருகி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 16- 24 வயதுக்கு உட்பட்டவர்களில் இதன் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. உறுதியான சுகாதார நடைமுறைகளுக்கும் மத்தியில் பாலியல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவது பிரித்தானியாவுக்கு கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 3 76 508 ( கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர்) பாலியல் நோய்களின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். சுமார் 73,000 பேர் எயிட்சுக்கான எச் ஐ வியுடன் வாழ்கின்றனர். குறிப்பாக ஆண் ஒருபால் சேர்க்கை உள்ளவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் அதிகம் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் syphilis, gonorrhoea, chlamydia மற்றும் பிற பால்வினை நோய்களின் த…
-
- 3 replies
- 2k views
-