உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இஸ்ரேல் சென்று நேரில் சந்தித்தார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உண்மையான நண்பர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இஸ்ரேலுக்கு பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். போர் நடக்கும் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றல்ல. எனினும் தன்னுடைய நேரடி சந்திப்பு சில தீர்வுகளை கொண்டு வரும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் இந்த பயணத்தை மேற்கொண்டார். …
-
- 7 replies
- 579 views
- 1 follower
-
-
இஸ்ரேல் மீது இரான் போர் தொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? கள நிலவரம் என்ன? பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK 18 அக்டோபர் 2023, 10:59 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து, அடுத்தக்கட்டமாக தற்போது காஸாப் பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், அதன் தாக்கம் மற்றும் அதன் முடிவு உள்ளிட்டவை குறித்து நூற்றக்கணக்கான கேள்விகளை பிபிசி பெற்றுள்ளது. மற்ற நாடுகளும் இந்த மோதலில் ஈடுபடுமா என பலர் கேட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் இருந்து செய்தி சேகரித்…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு சீன ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் : 8 அம்சக் கொள்கை வெளியீடு Published By: DIGITAL DESK 3 18 OCT, 2023 | 04:58 PM அமைதி, பரஸ்பர ஆதரவு மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பழைய பட்டுப்பாதையின் நவீன வடிவம் என்றும், இதன் ஊடாக ஒரு நாட்டுக்கு மாத்திரமன்றி பல நாடுகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் தெரிவித்தார். ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு இன்று புதன்கிழமை (18) பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி தலைமையில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் …
-
- 3 replies
- 321 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் க்ரிட்டென் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் க…
-
- 69 replies
- 5.8k views
- 1 follower
-
-
புதிய பட்டுப் பாதை திட்டம்: உலகையே வளைக்கும் சீனாவின் கனவை நனவாக்கியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 அக்டோபர் 2023, 12:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் கனவுத் திட்டமான 'புதிய பட்டுப் பாதை திட்டம்' என்று வர்ணிக்கப்படும் பெல்ட் அன்ட் ரோடு இனிஷியேட்டிவ்(BRI) திட்டம் தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகின் பிற பகுதிகளோடு இணைக்க இரண்டு புதிய வர்த்தக பாதைகளை அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். பத்தாண்டு கொண்டாட்ட உச்சி மாநாட்டிற்காக, உலகம் முழுவதும் 130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சீனாவை வந்தடையத் தொடங்கியுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதமர்களு…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு," என்று கூறினார். ஆனால், "தீவிரவாதிகளை" அகற்றுவது "மிகவும் அவசியமானது" என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று பைடன் பதிலளித்தார். மேலும் பேசிய அவர், "பாலத்தீனத்தி…
-
- 2 replies
- 380 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப், கான் யூனிஸிலிருந்து பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காசா நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் காசா நகரத்திலிருந்து வெளியேறிய ஒரு பெரும் மனிதக் கூட்டம் தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் நகருக்குள் நுழைந்துள்ளது. வடக்கிலிருந்த பல லட்சம் மக்கள், தாம் சுமக்கக்கூடிய அனைத்தையும் தூக்கிக்கொண்டு கான் யூனிஸுக்கு வந்திருக்கின்றனர். எரிபொருள் வைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வைத்திருந்தவர்கள் குதிரை வண்டிகளிலும் வந்தனர், எதுவுமே இல்லாதவர்கள் நடந்தே வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் கண்ட கான் யூனிஸ், நிலைகுலைந்து போயிருந்தது…
-
- 2 replies
- 536 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 15 OCT, 2023 | 09:30 PM தென் காசாவில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையையும் அங்கிருந்து அகற்றுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ரபாவில் உள்ள மருத்துவமனையிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர்களை இரண்டு மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டுள்ளனர். இரண்டு மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டுள்ளனர் என தென்காசவில் உள்ள குவைத்தி மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜமால் ஹம்ஸ் தெரிவித்துள்ளார். அந்த மருத்த…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MENAHEM KAHANA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி பதவி, பிபிசி ஐரோப்பா செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக் கைதிகளை மீட்பதே" நோக்கம் என்றார். காஸாவில் வசிக்கும் மக்களை வாடி காஸாவின் வடக்குப் பகுதி முழுவதையும் காலி செய்துவிட்டு தெற்…
-
- 3 replies
- 423 views
- 1 follower
-
-
14 OCT, 2023 | 05:44 PM நியூசிலாந்து நாட்டின் 54 ஆவது பொது தேர்தல் இன்று சனிக்கிழமை (14) இடம்பெற்றது இந் நிலையில், நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதால் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான நியூசிலாந்தின் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்ற கருத்துக்கள் இருந்தன. இருப்பினும் சிறு கட்சிகளின் துணையுடன் தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்துக்களும் …
-
- 1 reply
- 331 views
- 1 follower
-
-
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பான்-ஐரோப்பிய ஒத்துழைப்புத் துறையின் தலைவர் நிகோலாய் கோப்ரினெட்ஸ், துருக்கியில், இஸ்தான்புல், தக்சிம் மாவட்டத்தில் உள்ள அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ரஷ்ய தூதுவர் இஸ்தான்புல்லிற்கு கூட்டம் ஒன்றிற்கு கலந்துகொள்வதற்காக வருகை தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த கூட்டத்தை தவற விட்டமையால் ரஷ்ய அதிகாரிகள் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த வேளை அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை விசாரணைகளின் ஆரம்ப அறிக்கைகள் கோப்ரினெட்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றன. எனினும் அவரது உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்…
-
- 1 reply
- 355 views
- 1 follower
-
-
பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது. இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளன. அதேவேளையில் உலகின் பல நாடுகளில் இருக்கும் பாலஸ்தீன மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 454 views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. அப்போதிருந்து, ராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த "ஆபரேஷன் அல்-அக்ஸா தாக்குதலை" திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்றுதான் கேள்விகள் எழுந்தன. காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸின் உயர்மட்ட நபர்கள் பலர் ஊடகங்களின் முன் இதுவரை தோன்றியதே இல்லை. பல நேரங்களில் அவர்கள் இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைமறைவாகவே கழித்தனர். நாம் மிகவும் முக்கியமான தற்போதைய ஹமாஸ் தலைவர்கள், அரசியல் பி…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7ஆவது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 இலட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coo…
-
- 2 replies
- 456 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்தாக்குதலின் பகுதியாக, தரைவழித் தாக்குதல் நடத்த காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கனரக பீரங்கி…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
11 OCT, 2023 | 09:07 PM இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் எதிர்கட்சியினரும் அவசரகால அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ளனர். யுத்தகால அமைச்சரவையொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசரகால அரசாங்கத்தின் காலத்தில் யுத்தத்துடன் தொடர்பில்லாத எந்தவொரு சட்டமூலத்தையும் அல்லது அரசாங்க தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/166667
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 12 அக்டோபர் 2023, 04:42 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசம் தான் அயர்ன் டோம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். அக்டோபர் 7 அன்று, பாலத்தீனியக் குழுவான ஹமாஸின் திடீர் தாக்குதலால் அதிநவீன அமைப்பின் பாதுகாப்புத் தன்மை வெளிப்படையாக கேள்விக்குள்ளாகி இருக்கிறது. வான், தரை மற்றும் கடல் வழியாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை உள்ளடக்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவின் பேரழிவு தாக்குதல் நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. தாக்குதலின் ம…
-
- 1 reply
- 519 views
- 1 follower
-
-
போர் விதிகளை பின்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு வலியுறுத்து ! பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸை அழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் சபதம் செய்துள்ள நிலையில் போர் விதிகளை பின்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல், தற்போது கோபத்துடனும் விரக்தியுடனும் இருக்கும் என்பதை தான் அறிவதாகவும் எவ்வாறாயினும் போர் விதிகளின்படி செயல்படுவது அவசியம் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியுள்ள ஜோ பைடன், ஹமாஸ் ஆதரவாளரான ஈரான் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க யூத சமூகத் தலைவர்களின் கூட்டத்தின் ப…
-
- 0 replies
- 317 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப் பதவி, பிபிசி செய்திகள், காசா 11 அக்டோபர் 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நாங்கள் எங்கே போவோம்? இந்தப் பகுதியில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இருக்கிறதா?" காசாவில் ரிமால் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இப்படிக் கேட்டார்கள். சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவின் வரலாறு காணாத தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலியப் போர் விமானங்கள் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தின. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழி…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை தொடர்வதால் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அன்னாபெல் லியாங் பதவி, பிபிசி வணிகச் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.25 டாலர் அதிகரித்து 86.83 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் பெட்ரோலியப் கச்…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : விளாடிமிர் புடின் தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் பேருக்கு காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் மொஹமட் அல்-சூடானியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளின் தோல்விக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என தன்னுடைய கருத்தோடு பலரும் உடன்படுவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானங்களை புறக்கணித்து, பாலஸ்தீன மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது என்று…
-
- 3 replies
- 762 views
-
-
பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA படக்குறிப்பு, காசாவின் தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு மசூதி இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யோலண்டே ஆணி பதவி, பிபிசி நியூஸ், ஜெருசலேம் 7 நிமிடங்களுக்கு முன்னர் 1973 ல் இஸ்ரேல் மீது எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் திடீர் தாக்குதல் நடத்திய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை நடத்தினர். ஹமாஸின் இந்தத் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யூதர்களின் விடுமுறை தினமான ஷபாத் அன்று நடந்தது. 1973ல் நடந்த அந்தத் தாக்கு…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 01:47 PM (ஆர்.ராம்) 20ஆவது வால்டாய் இன்டர்நேஷனல் கலந்துரையாடல் கழகத்தின் வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல் கடந்தவாரம் ரஷ்யாவின் சூச்சி நகரில் அக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிப்பாளர் ஃபியோடர் லுக்யானோவ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சர்வதேச அளவில் நேட்டோ, முதன்மையானது, அது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அது உலக சமாதானத்துக்கான கட்டமைப்பு அல்ல. பாதுகாப்புத் துறையில் நாங்கள் சீனாவுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவோம். நாங்கள் யாருக்கும் எதிராக எந்தக் கூட்…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 06:22 PM ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று ரிச்டர் அளவுகோலில் 6.2, 6.1 மற்றும் 5.9 ஆக மூன்று பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. அரை மணி நேரத்தில் மூன்று சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மதியம் 12:19 மணிக்கு 5.6 ஆகவும், மதியம் 12:11 மணிக்கு 6.1 ஆகவும் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6.2 ரிக்டர் அளவுகோலில் சமீபத்திய பூகம்பம் மதியம் 12:42 மணிக்கு பதிவாகியுள்ளது. ஹெராட் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு நடவடிக்கையின் மையம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று நேபாள…
-
- 19 replies
- 965 views
- 1 follower
-