உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
மலேசியாவில் கோயில் இடிப்பு: இந்துக்கள் ஆத்திரம் on 03-12-2008 14:46 மலேசியாவில் தடையை மீறி 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்குள்ள இந்துக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மாற்று இடம் அளிக்கப்படாமல் கோயில்கள் எதையும் இடிக்கக் கூடாது என்று மாகாண அமைச்சரவை தடை விதித்துள்ளது.பல மொழி மற்றும் இனத்தவர் வாழும் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் 8 சதவீதம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் இந்து சமூகத்தவர். இந்தத் தடையை மீறி தாமன்தேஷா என்ற இடத்தில் அமைந்திருந்த கோயில் ஒன்றை கோலாலம்பூர் நகர நிர்வாகிகள் இடித்துள்ளனர். இது அங்குள்ள சிறுபான்மை இந்துக்களை ஆத்திரமடைய செய்துள்ளது. 15 ஆண்டு பழமையான இந்தக் கோ…
-
- 0 replies
- 739 views
-
-
விண்வெளியில் உள்ள 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லை சிறிது நகர்த்தி அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா' திட்டமிட்டுள்ளது.இந்த முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் முதல் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்லும் விண்வெளி வீரர்கள், தங்கள் ஓடத்தில் எரிபொருள்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விண்வெளி மையமாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். பூமிக்கும், நிலவுக்கும் நடுவே இந்த பிரமாண்டமான விண்கல் அமைந்துள்ளது. அட்லஸ் வி ராக்கெட் மூலம் அந்த விண்கல்லைச் சுற்றி உறை அமைக்கப்பட்டு, அது இயல்பான இடத்தில் இருந்து சிறிது நகர்த்தப்படும். விண்வெளியில் உள்ள இதுபோன்ற பிரமாண்டமான விண்கற்கள், குறுங்கோள்…
-
- 0 replies
- 636 views
-
-
ஹிலாரி கிளிண்டனின் பிரசார கணினி செயல் வரைவுக்குள் ஊடுருவல் ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் புரோகிராமிங் என்ற அழைக்கப்படும் கணினி செயல்வரைவு ஒன்று ஊடுருவப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவியவர்கள், கணினி அமைப்பிற்குள்ளும் நுழைந்துள்ளதாக கிளிண்டன் பிரசாரங்களை நிர்வகிக்கும் மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தங்களுடைய அமைப்பும் அனுமதியின்றி ஊடுருவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஊடுருவலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ரஷியா புலனாய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாகஅமெரிக்க ஊடக…
-
- 0 replies
- 270 views
-
-
நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கனடாவுக்குள் நுழைய முயற்சி! கனடாவும் அமெரிக்காவும் எல்லையை மூடுவதை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்போது, எங்கள் பகிரப்பட்ட எல்லையில் 12,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் திருப்பி விடப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் கனடாவுக்கு வருகை தந்து தொற்றுநோயையும் மீறி, கடையை வேடிக்கை பார்க்க வருகிறார்கள். மார்ச் 22 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை 12,819 அமெரிக்க குடிமக்கள் பகிரப்பட்ட எல்லையிலிருந்து விலகிச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கனடாவுக்கு வருகை தருவதை வெளிப்படுத்திய பின்னர் உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. 6,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் வெளியிடப்படாத பிற காரணங்களுக்காக திரு…
-
- 0 replies
- 428 views
-
-
சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு எரிகல் விழுந்து சுமார் 1500 பேர் வரை காயமடைந்த செய்தியே இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில் அதை விட பலமடங்கு பெரிய ஒரு எரிகல்லை அண்டார்டிகா பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிழக்கு அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற ஜப்பான் மற்றும் பெல்ஜிய விஞ்ஞானக் குழுவினர் சுமார் 40 பவுண்டு எடையுள்ள ஒரு எரிகல்லை கண்டுபிடித்துள்ளனர். இந்த எரிகல் எப்பொழுது விழுந்தது என தெரியவில்லை என்றாலும் இவ்வளவு பெரிய எரிகல் இதுவரை பூமியில் கிடைக்கவில்லை என்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யம். Vinciane Debaille, என்ற பெல்ஜிய புவியியல் ஆராய்ச்சி நிபுணர் இந்த எரிகல் பற்றி கூறும்போது "இந்த எரிகல் பூமியில் விழுந்திருந்த காலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏ…
-
- 0 replies
- 422 views
-
-
பிரான்ஸ் நகரமான லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு! பிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு கூறியதுடன், இப்பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக அறிவிக்கப்படாத போதிலும் கொலை முயற்சி தொடர்பான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 251 views
-
-
-
லிபியாவில் கடலில் கவிழ்ந்த இரு படகுகள்: 94 அகதிகள் பரிதாபமாக பலி! லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் இடம்பெற்ற இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உயிரிழந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட குறித்த விபத்தில் படகு கவிழ்ந்து 74 குடியேற்றவாசிகளை பரிதாபமாக உயிரிழந்தனர். இத…
-
- 0 replies
- 390 views
-
-
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு அமெரிக்கா தடையாகவுள்ளது – ஈரான் குற்றச்சாட்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான தங்களின் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் அப்தோல்நேசர் ஹேமதி கூறுகையில், ‘உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியை பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எழும் பணப்பரிமாற்ற பிரச்சினைகளால் தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கு மனிதாபிமான கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் மறுத்து விட்டதா…
-
- 0 replies
- 364 views
-
-
ஜூலைக்குள் இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குவோம் என மிரட்டல்! கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த கடிதத்தில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ´அல் ஜிஹாத்´ என பெயரிடப்பட்டுள்ள லெட்டர் பேர்டில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் நகலை கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மும்பை பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அல் ஜிஹாத் என்ற பெயரில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லாததால் ஏற்கனவே இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என மும்பை…
-
- 0 replies
- 448 views
-
-
FEB 28 இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள ''அவாள்''களின் அதிகார பாரீர்! ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!…
-
- 0 replies
- 465 views
-
-
சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹங்கேரியில் போராட்டம் ஹங்கேரிய தலைநகரில் ஒரு சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டம் நாட்டின் உயர்கல்வியைக் குறைத்து சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளின் செல்வாக்கை அதிகரிக்கும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர் விக்டர் ஆர்பனின் வலதுசாரி அரசாங்கம் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, புடாபெஸ்டில் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக வளாகத்தை கட்டும் திட்டத்தை எதிர்த்து பாராளுமன்றம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புடாபெஸ்டில்…
-
- 0 replies
- 221 views
-
-
பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சார நாள் ========================================= பிரான்ஸின் அரசியலை தலைகீழாக புரட்டிப் போடும் உக்கிரமான தேர்தல் பிரச்சாரம் இது. ஞாயிறன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக அந்த நாட்டு வாக்காளர்களிடம் தமது கோரிக்கையை முன்வைக்க அதிபர் வேட்பாளர்களுக்கு இது இறுதி வாய்ப்பு. முன்னணியில் திகழ்வதாக கருதப்படும் மையவாத சுயேச்சை வேட்பாளர் இமானுவல் மெக்ஹோனுக்கு மேலும் ஒரு உற்சாகமாக, அறுபத்தியிரண்டு வீத வாக்குகளை பெற்று போட்டியாளர் தேசியவாத மரின் லு பென்னை அவர் தோற்கடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூருகின்றன. பிபிசியின் காணொளி. BBC
-
- 0 replies
- 202 views
-
-
பிரிவினையால் உலகப் போர் வெடிக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். படம்: ஏஎப்பி நாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. இதைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டாம் உலகப்போரின் 72-வது ஆண்டு வெற்றி தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது: உலகின் தலையெழுத்தை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று ஜெர…
-
- 0 replies
- 317 views
-
-
வெறுப்புப் பதிவுகளை நீக்காவிட்டால் 50 மில்லியன் யூரோ அபராதம்: ஜெர்மனி சட்டத்தால் ஃபேஸ்புக் அதிருப்தி சமூகவலைதளங்களில் வெறுப்புப் பதிவு மற்றும் பொய் செய்திகள் நீக்கப்படாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்ற ஜெர்மனி நாட்டின் புதிய சட்ட மசோதாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வெறுப்புப் பதிவுகளை எதிர்கொள்ள சரியான முறையல்ல என கருத்து தெரிவித்துள்ளது. நெட்வொர்க் அமலாக்க சட்டம் (The Network Enforcement Act) என்ற இந்த சட்ட மசோதா பயனர்களைத் தாண்டி, அந்தந்த சமூக வலைதளங்களை நேரடியாகத் தண்டிக்க வகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மனி அமைச்சரவை ஏப்…
-
- 0 replies
- 263 views
-
-
சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் - ஜோ பைடன் உறுதி தாய்வானை பாதுகாப்பதில் எமக்கு அர்ப்பணிப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார். சி.என்.என். டவுன் ஹாலில் வியாழக்கிழமை நடைபெற்ற நேரடி உரையாடலின்போது, தாய்வானை பாதுகாப்பதாக உறுதியளிக்க முடியுமா என்று கேள்வி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தொகுப்பாளரினால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆம், நான் சீனாவுடனான பனிப்போரை விரும்பவில்லை - நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதை சீனாவுக்குப் புரியவைக்க விரும்புகிறேன், நாங்கள் எங்கள் கருத்துக்களை மாற்றப்போவதில்லை" என்று பைடன் சி.என்.என்னின் பால்டிமோர் நகர் தொகுப்பாள…
-
- 0 replies
- 370 views
-
-
நாளை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா! சென்னை: முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க நிறுவனருமான எம்ஜிஆரின் 93வது பிறந்தநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் தொண்டர்களும் அ.தி.மு.க கட்சியினரும் கொண்டாடத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு தொண்டர்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து தொண்டர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார். எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு அவ்வை சண்முகம் சாலைய…
-
- 0 replies
- 507 views
-
-
வடகொரியாவுடன்... எந்த நிபந்தனையுமின்றி, பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்! வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான தென் கொரியாவுக்கான சிறப்புப் பிரதிநிதி நோ கியு-டுக்கை சியோலில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், ‘வடகொரியாவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடியை அளிக்க வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளோம். வடகொரியாவுக்கான எதிரான நோக்கம் எ…
-
- 0 replies
- 143 views
-
-
ஜெயலலிதா கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் நாடு முழுவதும்... புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது கட்டாயம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். மேலும் 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' வாக மாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார். மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரையாற்றினார். பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக அவர் மக்களவையில் உரையாற்றினார். மோடி பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரை பற்றிய அனைவரின் பேச்சையும் கூர்ந்து கேட…
-
- 0 replies
- 302 views
-
-
மாலத்தீவில் 30 நாட்களுக்கு ‘எமர்ஜென்சி’ நீட்டிப்பு: எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் மாலத்தீவில் அவசர நிலையை (எமர்ஜென்சி) 30 நாட்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மாலத்தீவில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட அரசியல் தலைவர்கள் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்தி மீண்டும் அதிபராக யாமீன் திட்டமிட்டார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், ஆளும் கட்சி எம்.பி.க் கள் 12 பேர் …
-
- 0 replies
- 183 views
-
-
கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANPREET ROMANA இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார். …
-
- 0 replies
- 321 views
-
-
ராஜிவ் காந்தியின் தோல்வியை ஈடுகட்டுவாரா ராகுல்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் அமைப்பு மற்றும் அரசியலில், மாற்றம் கொண்ட…
-
- 0 replies
- 394 views
-
-
மனிதகுல வரலாறு: பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள் கிரேம் கிரீன் . ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS RAINIER மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன. வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை …
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும் எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும்ஏமாற்று ஆட்சியாளரின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகிறது.. ஆயுள்பரியந்த வம்ச ஆட்சிகள் தூக்கி வீசப்படும் உலகப் புதிய காற்று வீசுகிறது… உலகில் உள்ள எந்த ஆய்வாளரும் முன்னெதிர்வு கூறாத பாரிய மக்கள் பேரலை சுனாமி போல உலகின் பல பாகங்களிலும் எழும்ப ஆரம்பித்துள்ளது. பொருளாதார மந்தம், விக்கிலீக்ஸ் உண்மைகள், ஆட்சியில் இருப்போரால் இனியும் ஏமாற்ற முடியாத அரசியல் மக்களின் புரிதல் யாவும் புதிய எழுச்சிகளை கிளப்பிவிட்டுள்ளன.. இதற்கு முதல் எடுத்துக்காட்டு இந்தவாரம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் கூடியுள்ள மக்கள் எழுச்சியாகும். சென்ற ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் பல உண்…
-
- 0 replies
- 925 views
-
-
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதன்படி, முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், எழும்பூர் பரிதி இளம்வழுதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல்லாவரம்: அன்பரசன் காட்பாடி: துரைமுருகன் ராணிபேட்டை: காந்தி திருப்பத்தூர்: ராஜேந்திரன் விழுப்புரம்: பொன்முடி திருக்கோவிலூர்: தங்கம் குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம் அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தென்காசி: கருப்பசாமி ஆலங்குளம்: பூங்கோதை திருச்சுழி: தங்கம் தென்னரசு பாளைய…
-
- 0 replies
- 790 views
-