Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: SETHU 18 APR, 2023 | 11:14 AM உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் செய்துள்ளார். கேர்சன் பிராந்தியத்தில் நடைபெற்ற ரஷ்ய இராணுவத் தளபதிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி புட்டின் பங்குபற்றினார் என ரஷ்ய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது. எனினும் எப்போது இச்சந்திப்பு நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. கேர்சன் பிராந்தியத்தின் தலைநகரான கேர்சன் உட்பட அப்பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது உக்ரேனிய மாநகரம் கேர்…

  2. Published By: SETHU 18 APR, 2023 | 03:40 PM உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன. அதையடுத்து, உக்ரேனிய உணவுப் பொருட்கள் அதன் அயலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஊடாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், விநியோக சிக்கல்கள் …

  3. 18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா? பட மூலாதாரம்,AFP உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும். 1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன். இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது. 2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்ச…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் உமர் சுல்தான் ஒலாமா, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை பாராட்டினார். யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் வழிநடத்திய விதத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார். “வரலாற்று ரீதியாக உலகம் ஒருமுனை, இருமுனை அல்லது மும்முனையாக இருந்துள்ளது. எனவே நீங்கள் எந்த தரப்பை தேர்ந்தெடுப்பீர்கள்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவருடைய பல உரை…

  5. Published By: SETHU 16 APR, 2023 | 08:23 PM அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர். https://www.virakesari.lk/article/152958

  6. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மைக் பொம்பியோ அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இது சந்தர்ப்பம் அல்ல என முன்னாள் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், ட்ரம்ப் பதவியில் இருந்தபோது 2018 முதல் 2021 வரை அமெரிக்க இராஜாங்க செயலாளராக பாம்பியோ பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  7. உக்ரைனுக்கு எதிரான போர்... நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்; சந்தேகம் கிளப்பிய நிபுணர்கள் உக்ரைனுக்கு எதிராக ரஷியா போரிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது தினத்தந்தி பீஜிங், உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷியா நீண்டகால எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும், உக்ரைன் தனது முயற்சியை நிறுத்தவில்லை. இது ரஷியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. போரின் விளைவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, உணவு பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதனால், வளர…

    • 5 replies
    • 710 views
  8. ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் தினத்தந்தி ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

  9. Published By: RAJEEBAN 15 APR, 2023 | 12:51 PM அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தகவல்களை வெளிநாடுகளிற்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிட்னியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் தேசிய புலானய்வு அமைப்பும் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் என்ற இந்த நபர் பொன்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சேர்கோ வெளிநாடொன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை புத்திஜீவிகளின் அமைப்பை சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொண்டு சேர்கோ தனது இரண்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ற…

  10. Published By: RAJEEBAN 15 APR, 2023 | 10:12 AM ஜப்பான் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் குண்டுவீசப்பட்டதாகவும் எனினும் பிரதமர் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டார் எனவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு ஜப்பானில் பிரதமர் பியுமோ கிசிடா கலந்துகொண்ட கூட்டத்தில் சந்தேகநபர் ஒருவர் அவரை இலக்குவைத்து புகைக்குண்டொன்றை வீசியுள்ளார் எனினும் பிரதமர் காயங்களின்றி தப்பியுள்ளார். பாரியசத்தமொன்று கேட்டது பிரதமர் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் உடனடியாக செயற்பட்டார் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட…

  11. அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர் ஆவணங்கள் இணையத்தில் வெளியான விவகாரம் - 21 வயது இளைஞன் கைது Published By: Rajeeban 14 Apr, 2023 | 09:40 AM அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர் மற்றும் புலனாய்வு ஆவணங்கள் இணையத்தில் கசிந்தமை தொடர்பில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவலர் உறுப்பினரான 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜக்டெய்செரியா என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஆவணங்கள் கசியவிடப்படும் இணைய சட் குழுவின் தலைவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு எதிராக உளவு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்…

  12. ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியது நோர்வே அரசாங்கம் உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன. இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 48 நிமிடங்களுக்கு முன்னர் கண்டம் விட்டும் கண்டம் பாயும் வகையிலான புதிய திட எரிபொருள் ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை பரிசோதனை செய்ததிலேயே இதுதான் சக்தி வாய்ந்த ஏவுகணை என்றும் அந்நாடு கூறியுள்ளது. இந்த பரிசோதனையை வெகுவாக பாராட்டியுள்ள வட கொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (KCNA), சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொதுவாக, திட எரிபொருள் ஏவுகணைகளை திரவ எரிபொருள் ஏவுகணைகளை விட வேகமாக செலுத்த முடியும். மேலும், அவற்றைக் கண்டறிவதும், இடைமறிப்பதும் கடினமானது. தங்களின் இந்த பரிசோதனை எதிரிகளுக்கு அதீத பயத்தையும் பதற்றத்தைய…

  14. Published By: RAJEEBAN 13 APR, 2023 | 12:54 PM மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் category 5 என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளcategory 4 இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது காணப்படும். மரங்கள் விவசாயம் இயற்கைக்கு பெரும்…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டேலியா வென்ச்சுரா பதவி,பிபிசி உலக சேவை 12 ஏப்ரல் 2023 1432 ஆம் ஆண்டில், மகத்தான கலைப் பாய்ச்சலின் அற்புதமான சான்றுகளை விட்டுச் சென்ற ஒரு படைப்பு வெளியிடப்பட்டது. அது அந்த கலாசார இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நடந்தது. ஃப்ளெமிஷ் சகோதரர்களான ஹூபர்ட், ஜான் வான் ஐக் ஆகியோரால் ஃபிளென்டர்ஸ் கென்ட்டில் (இன்றைய பெல்ஜியம்) உள்ள தேவாலயத்தில் வரையப்பட்ட ஓவியம் தான் அது. இது தோராயமாக 4.4 x 3.5 மீட்டர் அளவு கொண்ட ஒரு பெரிய படைப்பு. 12 ஆயில் பேனல்களுடன் இருந்த இந்த ஓவியம் "தி அடோரேஷன் ஆஃப் தி மிஸ்டிக் லாம்ப் அல்…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோதனாத்தன் ஹெட் & நிகோலஸ் யாங் பதவி,. இருந்துபாங்காக் & சிங்கப்பூரில் இருந்து 12 ஏப்ரல் 2023, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த ராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாங்கள் 80க்கும் மேற்பட்ட உடல்களை கண்டெடுத்துள்ளதாக கூறும் உயிர் பிழைத்த மக்கள், ஆனால் உயிர்ப் பலி எண்ணிக்கை இதைவிட அதிக…

  17. கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா Published By: Sethu 12 Apr, 2023 | 11:00 AM கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையொன்றை தான் வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கபுஸ்டின் யார் சோதனைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கஸகஸ்தானிலுள்ள சாறி-ஷாகன் பயிற்சி நிலையத்திலுள்ள போலி இலக்கு ஒன்றை ஏவுகணை தாக்கியதகாவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் தான் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும் என உக்ரேன் மீதான ரஷ்யாவின் …

  18. உக்ரைனிற்குள் மேற்குலகின் விசேட படையணிகள் - கசிந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தகவல்களில் தெரிவிப்பு Published By: Rajeeban 12 Apr, 2023 | 09:23 AM உக்ரைனிற்குள் மேற்குலகின் விசேட படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன சில நாட்களிற்கு முன்னர் இணையத்தில் கசிந்துள்ள அமெரிக்காவின் மிகவும் இரகசியமான பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் விசேட படைப்பிரிவினர் உட்பட பலநாடுகளின் விசேட படைப்பிரிவினர் உக்ரைனிற்குள் செயற்படுகின்றனர் என இந்த இரகசிய ஆவணங்கள் தெரிவித்துள்ளன. மேற்குலகின் வி…

    • 3 replies
    • 454 views
  19. Published By: RAJEEBAN 10 APR, 2023 | 10:39 AM அமெரிக்காவின் மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இதனை அம்பலப்படுத்தியது யார் என்பது குறித்து அமெரி;க்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உக்ரைனின் வான்பாதுகாப்பு இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உட்பட பல முக்கிய பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனை வெளியிட்டது யார் என்பதை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர்களே இந்த விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உக்ரைன்…

  20. Published By: RAJEEBAN 10 APR, 2023 | 05:07 PM தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தான் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன இராணுவம் போர் செய்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது. படையினர் எந்நேரிடமும் போரிட தயாராக உள்ளனர் மேலும் எந்தவகையான தாய்வானின் சுதந்திர முயற்சியையும் வெளிநாட்டு தலையீடுகளையும் முறியடிப்பதற்காக எவ்வேளையிலும் அவர்களால் போரிட முடியும் என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. கூட்டு வாள் என்ற பெயரில் சீன இராணுவம் இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தது. …

  21. கட்டுரை தகவல் எழுதியவர்,மரிட்டா மோலோனி பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் நிர்மூலமான யுக்ரேனின் மின்சார கட்டமைப்புகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது எனவே மின்சார ஏற்றுமதியை அந்நாடு மீண்டும் தொடங்கியுள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் இருதரப்புமே இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதத்தில் யுக்ரேனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா தீவிரமான தொடர் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்களும் குளிர்காலத்தில் இருளில் மூழ்கின. அந்நாட்டின் மின்சார ஏற்றுமத…

  22. Published By: RAJEEBAN 09 APR, 2023 | 01:16 PM உக்ரைனிலிருந்து ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிற்கு கொண்டு செல்லப்பட்ட 31 சிறுவர்கள் மீண்டும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். உக்ரைன் தலைநகரில் பேருந்திலிருந்து இறங்கிய சிறுவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை கட்டித்தழுவுவதை பார்த்ததாக சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலமாதகாலம் பிரிந்திருந்த துயரம் முடிவிற்கு வந்ததால் பலர் கண்ணீர்விட்டு அழுதனர் என சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் இரண்டுவார கால கோடைகால முகாமிற்கு சென்றோம் ஆனால் அங்கு ஆறுமாதகாலம் சிக்குண்டோம் என 13 வயது பொக்டன் தனது தாயை கட்டித்தழுவியபடி தெரிவித…

  23. 2023ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்க இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் முதலாம் இடம் பிடித்துள்ளார். டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியை விட அதிக வாக்குகள் பெற்று நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்தப் பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவர…

  24. டெல் அவிவ்வில் காரை மோதி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு- ஏழு பேர் காயம்! டெல் அவிவ் கடற்கரைக்கு அருகில் கார் மோதியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் இத்தாலிய சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் இத்தாலிய பிரஜை அலெஸாண்ட்ரோ பரினி என இஸ்ரேல் அடையாளம் கண்டுள்ளதாக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், ஒரு உலாவுப் பாதையின் அருகே கவிழ்ந்த கார் மற்றும் ஒரு இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டியது. தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

  25. ரஷ்ய ரூபிள் ஒரு வருடத்தில் அதன் மிகக் குறைந்த மதிப்பிற்கு வீழ்ச்சி! ரஷ்ய ரூபிள் ஒரு வருடத்தில் அதன் மிகக் குறைந்த மதிப்பிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று (வெள்ளி) காலை மாஸ்கோ பங்குச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக நாணயம் 82 ரூபிள் வரை சரிந்தது. பெப்ரவரி 2022 இல் உக்ரைனில் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா பாரிய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யா தனது பொருளாதாரம் 2022 இல் 2.1 சதவீதம் ஆக சுருங்கிவிட்டது, இது கணிக்கப்பட்ட 15 சதவீத வீழ்ச்சியை விட மிகக் குறைவு. வெள்ளிக்கிழமை காலை யூரோவிற்கு எதிராக ரூபிள் 2 சதவீதம் சரிந்து 90.06 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் குறைந்த எண்ணெய் விலைகள் ரஷ்ய வருவாயைக் குறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.