Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேலின் முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் பலி, 80 பேர் காயம்: பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவிப்பு Published By: SETHU 22 FEB, 2023 | 06:30 PM இஸ்ரேலியப் படையினர் இன்று நடத்திய முற்றுகையின்போது பலஸ்தீனியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக்கரையின் நப்லஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுகளால் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர் ன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். கொல்லப்பட்டவர்கள் 23 முதல் 72 வயதானவர்கள் எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனது படையினர் நப்லஸ் நகரில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக …

  2. சாதி பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரம் - எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம்,TWITTER/KSHAMA SAWANT 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது. 6-1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர். சியாட்டில…

  3. ரஷ்ய அதிபர் புதினின் 2 மணி நேர உரை: இதில் உண்மை, பொய் எவ்வளவு? பட மூலாதாரம்,GETTY IMAGES 27 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தமது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது. அந்த உரையில், அவர் யுக்ரேனில் நடந்த போர் குறித்து தொடர்ச்சியாக சில கருத்துக்களை வெளியிட்டார். அத்துடன் மேற்கு நாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். புதினின் அந்த சில கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது தொடர்பாக பிபிசி ஆராய்ந்தது. "2014 க்குப் பிறகு யுக்ரேனில் நிறுவப்பட்ட நியோ-நாஜி ஆட்சி" யுக்ரேனில் ரஷ்யாவின் படையெடு…

  4. இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …

  5. மத்திய கிழக்கில் நீளும் பனிப்போர்: இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தலை தடுக்க ஈரான் திறந்துள்ள நிலத்தடி வான்தளம் ஐங்கரன் விக்கினேஸ்வரா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் சமீபத்திய இராணுவப் பயிற்சியில் அச்சுறுத்தி உருவகப்படுத்தியது போன்ற சாத்தியமான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் போர் விமானங்களை ஈரான் தயார்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல் : ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, மேஜர் ஜெனரல் முகமது பாகேரி ஆகியோர், ஈரானில் வெளியிடப்படாத இரகசிய இடத்தில், “ஈகிள் 44” எனப்படும் முதல் நிலத்தடி விமானப்படை தளத்தை கடந்த வாரம் பார்வையிட்டனர். ஆயினும் இத்தளத்தின் இருப்…

  6. துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு - மக்கள் அதிர்ச்சி துருக்கி, சிரியாவில் இன்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தினத்தந்தி அங்காரா, துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன…

  7. உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந…

  8. ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தகவல்! உக்ரைன் போருக்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக, அமெரிக்க இராஜங்க செயலாளர் அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யா இராணுவ தளவாடங்களை கோரியதாக வெளியான தகவலை சீனா முற்றாக மறுத்துள்ளது. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயை சந்தித்த பின்னர் ஆண்டனி பிளிங்கன் இந்த கருத்தினை வெளியிட்டார். இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கு சீனா ஆபத்தான பொருள் ஆதரவை வழங்கும் சாத்தியம் குறித்து ஆழ்ந்த கவலைகளை தெரிவித்ததாக அவர் கூறினார். சீனாவின் சாத்தியமான திட்டங…

  9. ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் இந்தியாவை வேறு வகையில் பாதிக்கிறதா? இக்பால் அகமது பிபிசி செய்தியாளர் 49 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA 2022 பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. அதை சமாளிக்க சர்வதேச சந்தையை விட குறைந்த விலையில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்தது. ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. தேசிய நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு க…

  10. அணுசக்தி தாக்குதலை நடத்தி ரஷ்யா மீது பழிபோட உக்ரைன் திட்டம்! ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிலிருந்து கதிரியக்க பொருட்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, மேலும் உக்ரைன் ஒரு பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அபாயகரமான கதிரியக்க வசதிகள் மீது ரஷ்யாவின் இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டுவது ஆத்திரமூட்டலின் நோக்கம், இத…

  11. கடத்தப்பட்ட நியூ ஸிலாந்து விமானியின் படங்களை பப்புவா கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர் Published By: SETHU 15 FEB, 2023 | 01:04 PM இந்தோனேஷியாவின் பப்புவா பிராந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு, பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நியூ ஸிலாந்து விமானி காணப்படும் படங்களை மேற்படி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிலிப் மெஹ்ர்டென்ஸ் எனும் இந்த விமானி, இந்தோனேஷியாவின் சுசி எயார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்தவர். கடந்த 7 ஆம் திகதி, பப்புவா பிராந்தியத்திலுள்ள தூரப்பிரதேசமொன்றிலுள்ள பரோ விமான நிலையத்தில் தனது விமானத்தை அவர் தரையிறக்கிய பின்னர் அவ்விமானியும் விமானத்திலிருந்த பயணிகளும் திரும்பிவரவில்லை. …

  12. உளவு பலூன் சர்ச்சைக்குப் பின் அமெரிக்க-சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு! உளவு பலூன் சர்ச்சைக்கு பின்னர் அமெரிக்க-சீன வெளியுறவு அமைச்சர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அமெரிக்காவில் இந்த மாத ஆரம்பத்தில் மொன்டானா மாகாண வான்பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறப்பதை அவதானித்த ராணுவம் அது, உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என்று குற்றம்சாட்டியது. ஆனால் சீனாவோ வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் காற்றின் வேகத்தில் திசைமாறி அமெரிக்காவுக்குள் சென்றுவிட்டதாக கூறியது. எனினும் அதை ஏற்க மறுத்த அமெரிக்கா, போர் விமானம் மூலம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. ஏற்கனவே இருநாடுகளும் கீரியும், பாம்புமாக மோதிக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த விவகாரம் நாட…

  13. ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும்; பொதுமக்களுக்கு வடகொரிய அதிபர் உத்தரவு..! தனது மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும் இதுவரை வைத்திருந்தால் அந்த பெயரை ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அவர்களின் மகள் ஜூ ஏ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகளின் பெயர் வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா அதிபரின் மகளின் பெயர…

  14. பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு! பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மற்றும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ் கூறினார் டிரக்கில் இருந்தவர்கள் குளிராகவும், ஈரமாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் மற்றும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார். டிரக் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் குழுவை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. இந்த…

  15. உக்ரைன் போர்; ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம் உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் 360-வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், கீவ் நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் இன்று காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனால், மின்சார கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் மின் சப்ளையை குறைத்தனர். கடந்த அக்டோபரில் இருந்து உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. பாக்முத் நகரின் கிழக்கே போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், கூடுதல் ஆயுதங்க…

  16. தூதர் பெயரில் உளவாளிகள்; ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து முடிவு ரஷியா ஓராண்டாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வு காண, தூதரகம் வழியே அமைதி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், உலக நாடுகள் கோரிக்கையை ரஷியா புறக்கணித்து உள்ளது. இந்நிலையில், ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தும் அந்நாடு போரில் இருந்து விலகிடவில்லை. இந்த சூழலில், பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் உள்ள ரஷிய தூதர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. ரஷிய உளவாளிகள் என்ற பெயரில் பலரை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ரஷியாவுடன் நடந்த பேச்சு…

  17. ரஷ்ய போர்க்கைதிகளை யுக்ரேன் ராணுவம் எப்படி நடத்துகிறது? - பிபிசி சிறப்புச் செய்தி ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் பிபிசி யுக்ரேன் செய்தியாளர் 17 பிப்ரவரி 2023 ரஷ்ய ஏவுகணைகள் வானைக் கிழித்துக் கொண்டு யுக்ரேன் மீது மீண்டும் பாய்ந்த போது மேற்கு யுக்ரேனில் உள்ள போர்க்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் நுழைந்தோம். யுக்ரேனில் போர்க்கைதிகள் அடைக்கப்பட்டிருந்த 50 இடங்களில் இதுவும் ஒன்று. போரில் பிடிபட்ட நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள், கட்டாயத்தால் போரில் பங்கேற்றவர்கள், கூலிப்படையினர் ஆகியோர் இந்த மோசமான கட…

  18. பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு ! உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததன் மூலம் ரஷ்யா மனித உரிமைகளை மீறுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஜேர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் மாநாட்டில் உக்ரைன் நெருக்கடி குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய நிலையில் இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். மேலும் உ…

  19. அதானி, மோதியை விமர்சித்த சோரோஸ்: பாஜகவை கோபப்படுத்திய அமெரிக்க பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ் யார்? இக்பால் அகமது பிபிசி இந்தி சேவை 18 பிப்ரவரி 2023, 14:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜார்ஜ் சோரோஸ் அதானி - பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத…

  20. அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 4 பிப்ரவரி 2023, 15:06 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் 24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை வெளி…

  21. துருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக கண்டெடுப்பு! துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்ததை அவரது முகவர் உறுதிப்படுத்தியுள்ளார். கானா தேசிய வீரரான 31 வயது கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக் அணிகளான எவர்டன், செல்சியா மற்றும் நியூகேஸில் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். பெப்ரவரி 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அட்சுவை காணவில்லை, தற்போது இது ஹடேயின் அன்டாக்யாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய அணி அல்-ரேட் உடனான ஒரு சீசனுக்கு…

  22. விசா நடைமுறைகளில் மாற்றம் - படகுகள் வருகை அதிகரிக்கலாம் என அச்சம் - கண்காணிப்பை அதிகரிக்கின்றது அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 16 FEB, 2023 | 11:13 AM புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் படகுகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான தற்காலிக பாதுகாப்பு விசா விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் ஆள்கடத்தல்காரர்கள் அதனை பயன்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை படகுகள் மூலம் அழைத்து வர முயலாம் என எதிர்கட்சி எச்சரித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளத…

  23. முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்! தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். மேலும், தென்கொரிய- அமெரிக்கா கூட்டுப் இராணுவப் பயிற்சிகள், வட கொரியா மீதான படையெடுப்புக்கான தயாரிப்புகள் என்று பியோங்யாங்கின் நீண்டகால கூ…

  24. கனடா, அமெரிக்காவைப்போன்று இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? - பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி Published By: T. SARANYA 17 FEB, 2023 | 04:28 PM (நா.தனுஜா) இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தம…

  25. துருக்கி, சிரியா பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது Published By: T. SARANYA 17 FEB, 2023 | 09:21 AM சிரியாவில் பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் தாக்கியது. ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த பூகம்பம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த பூகம்பம் இஸ்ரேல், லெபனான், எகிப்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.