Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கையை முன்வைக்கப்பட்டு போலந்தும் அனுமதியை வழங்கினால் அவற்றை வழங்குவோம் என ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதையும், உக்ரைனின் பிரதேசம் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெர்லின் அங்கீகாரம் அளிக்கத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை, மேற்கத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்ட முக…

  2. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் காட்சி லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தத…

  3. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=169992

  4. உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்யாவும் சீனாவுமே காரணம் – அமெரிக்கா குற்றச்சாட்டு! உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் எனவும் அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2023/1321253

    • 2 replies
    • 498 views
  5. தலைநகர் கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற…

  6. பெரு நாட்டில் தீவிரமடைந்த மக்கள் போராட்டம்; மூடப்பட்ட உலக அதிசயம் தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் போராட்டம் உச்ச அடைந்துள்ளது. அந்நாட்டில் சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் ஓயாது நிலவி வருகிறது. அதன் விளைவாக 2022 டிசம்பரில் அங்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ, பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை அறிவிக்க திட்டமிட்டார். அதற்குள்ளாகவே அவரை பாராளுமன்றம் பதவியை விட்டு நீக்கியது. துணை ஜனாதிபதியாக இருந்த டினா பொலுவார்டேஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்ஜனாதிபதி ஆவார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதிய பெட்ரோ மெக்சிகோ நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரை பெரு அரசு கைது செய்து சிறையி…

  7. ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சின்ஹா(நடுவில்) மற்றும் இதர மக்கள் ஒன்றிணைைந்து தண்ணீர் பிரச்னை குறித்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர் இந்தியாவின் இமயமலை நகரமான ஜோஷிமட், கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், கண்முடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் புதைந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் பல நகரங்கள் இந்தக் கதியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள…

  8. ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்! உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும். இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி …

    • 39 replies
    • 2.2k views
  9. ரிசி சுனக்கிற்கு காரின் பின் இருக்கையில் இருக்கை பட்டி இன்றி பயணித்த குற்றத்துக்காக தண்டம் விதித்தது பிரித்தானியாவின் லாங்கஷேர் காவல்துறை. பிரித்தானியாவில் தனது அரசாங்கத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு சிறு வீடியோவை ஓடும் காரில் இருந்து வெளியிட்டே இப்படி சிக்கலில் மாட்டி உள்ளார் ரிசி. ஒரு தண்ட அறிவிப்பு 42 வயதான இலண்டன் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது லாங்கஷேர் காவல்துறை. ரிசி தவறை முழுமையாக ஏற்று மன்னிப்பு கோருவதுடன், தண்டதையும் செலுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பு கொவிட் விதிகளை மீறி விருந்தில் கலந்தமைக்காக பொரிசுடன் சேர்த்து ரிசிக்கும் தண்டம் விதிக்கப்பட்டது நினைவுகூறதக்கது. பிரதமர் சட்டங்களை ப…

  10. 'எதிர்காலத்துக்காக' 12,000 பேரை கூகுளில் இருந்து நீக்கிய சுந்தர் பிச்சையின் கடிதம் பட மூலாதாரம்,GETTY IMAGES 56 நிமிடங்களுக்கு முன்னர் கூகுளின் செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதியத் திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது. 'முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்' …

  11. இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் பலஸ்தீனர்கள் இருவர் பலி By SETHU 19 JAN, 2023 | 04:51 PM இஸ்ரேலிய இராணுவத்தினரால் பலஸ்தீனியர்கள் இருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 வயதான ஜவாத் பரீட் பவாக்னா, 28 வயதான அதாம் மொஹம்மத் பசேம் ஜெபறீன் ஆகியோ இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜெனின் நகர அகதிகள் முகாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது, இஸ்ரேலிய படையினர் மீது பலஸ்தீன ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலியப் படையினர் பதில் தாக்…

  12. வாக்னர் கூலிப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ரஷ்யாவின் முடிவிற்கு செர்பியா கண்டனம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த காணொளி வெளியாகியுள்ளது. போருக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதற்காக செர்பிய மொழியில் வெளியிடப்பட்ட காணொளிகளை தேசிய தொலைக்காட்சியில் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கடுமையாக விமர்சித்தார். தங்கள் விதிமுறைகளுக…

  13. போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின் Jan 19, 2023 07:00AM IST உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பலியாகியுள்ள நிலையில், ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்தப் போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்…

    • 39 replies
    • 2.5k views
  14. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு - காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 51 நிமிடங்களுக்கு முன்னர் குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணியில் இருந்த ஆறு சவாலான ஆண்டுகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விவரிக்கும்போது ஜெசிந்தா சற்று தடுமாறினார். தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி 7ஆம் தேதிக்க…

  15. உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி By Sethu 18 Jan, 2023 | 02:09 PM உக்ரேனில் விமானமொன்று பாலர் பாடசாலையொன்றின் மோதி வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளனர், உக்ரேனின் உள்விவகார அமைச்சர் டேனிஸ் மொனாஸ்டிரிஸ்கிம் இச்சம்பவத்pழல் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் துணை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசா‍லையொன்றில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது, கியேவ் ப…

  16. சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை Posted on January 18, 2023 by தென்னவள் 8 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாட…

  17. ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா துன்பெர்க் கைது! ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கலந்துக் கொண்ட கிரேட்டா துன்பெர்க் மற்றும் போராட்டக்காரர்கள் சுரங்கத்தின் ஆபத்தான இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2023/1320627

  18. இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் கிளினிக்கில் மெசினா டெனாரோ தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேட்டியோ மெசினா டெனாரோ, மிகவும் மோசமான சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மாஃபியா குற்றக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினரை தடுத்து வைப்பதில் ஆயுதப் படைகளின் பணிக்காக நன்றி தெரிவித்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டெனாரே, இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விபரித்தார். இந்…

  19. சீனாவில் கொரோனா தாக்கம் உச்சம் - ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் கடந்த ஒரே மாதத்தில் 60,000 பேர் கொரோனா தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) கைவிடப்பட்ட பிறகு வெளியிடப்பட்டுள்ள மிகப்பெரிய உயிரிழப்பு விவரம் இது. மருத்துவமனைகளும் தகன மேடைகளும் நிரம்பி வழிந்த காட்சிகள் அப்பட்டமாக வெளியான போதிலும்கூட, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் குறைத்தே காட்டியதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, அங்கு டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கொரோனா தொடர்பான பாதிப…

  20. ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி.யை சுட்டுக் கொன்ற கும்பல்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு பட…

  21. போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல். ஜேர்மனியைக் கைவிட்ட புடின் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற…

    • 47 replies
    • 3.5k views
  22. உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!! உக்ரைன் தலைநகர் கீவில் ரஷிய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. தினத்தந்தி கீவ், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகர் மீது மீண்டும் கவனம் போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கை…

    • 4 replies
    • 1k views
  23. நேபாள விமான விபத்து 32 பேர் பலி ;16 உடல்கள் மீட்பு நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது. தினத்தந்தி காத்மாண்டு, நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்த…

  24. போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றம் - அவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்குத்தொடரும் வாய்ப்பு By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:45 PM (நா.தனுஜா) எந்தவொரு நாட்டில் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கக்கூடிய 'போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம்' அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில், அதனூடாக அமெரிக்காவிற்குள் அல்லது அமெரிக்காவிற்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கப்பிரஜைகள் அல்லது அமெரிக…

  25. பியானோ வாசித்து அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் காணொளிக் குறிப்பு, பியானோவில் அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டிசம் பாதித்த 11 வயதான ஜூட், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்த சாதாரண பியானோவில் வாசிக்க ஆரம்பித்த ஜூடால், தற்போது எந்தப் பாடலையும் கேட்ட உடனேயே வாசிக்க முடியும். https://www.bbc.com/tamil/articles/clkxd302jvmo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.