உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு 11 Sep, 2025 | 10:19 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ரோ…
-
- 0 replies
- 166 views
-
-
செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு 11 September 2025 அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, ம…
-
- 0 replies
- 148 views
-
-
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும…
-
- 4 replies
- 283 views
- 1 follower
-
-
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு! அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை. எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்…
-
-
- 10 replies
- 801 views
- 2 followers
-
-
'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு ரூ. 1 லட்சம்'; விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் Navya nair/Facebook நடிகை நவ்யா நாயர் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது? ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் …
-
- 2 replies
- 377 views
- 1 follower
-
-
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம் 10 Sep, 2025 | 09:52 AM பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார். லெகோர்னுவின்…
-
- 1 reply
- 200 views
-
-
இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்! இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து…
-
- 1 reply
- 118 views
-
-
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News
-
-
- 13 replies
- 728 views
- 2 followers
-
-
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை! தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும். அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார்…
-
- 0 replies
- 214 views
-
-
காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் 09 Sep, 2025 | 09:57 AM காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (09) ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் இந்த கப்பலில் சென்றுள்ளார். “குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் செ…
-
- 0 replies
- 164 views
-
-
பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. எவ்வாறாயினும் ப…
-
- 2 replies
- 231 views
-
-
பட மூலாதாரம், Getty Images 8 செப்டெம்பர் 2025 அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் புதிய மாற்றங்கள் என்னென்ன ? பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாது…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 08 Sep, 2025 | 01:23 PM அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. 50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர…
-
-
- 35 replies
- 1.5k views
- 2 followers
-
-
உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்! உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார். உக்ரேன் மீதான முழ…
-
- 0 replies
- 146 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர். கட்டுரை தகவல் ஸ்டீவ் ரோசென்பெர்க் பிபிசி ரஷ்யா 5 மணி நேரங்களுக்கு முன்னர் சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், "யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினரையும், வீரர்களை அனுப்புவது பற்றி யோசிக்கவே வேண்டாம்" என மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். "அங்கு சில படைகள் தென்பட்டால் அதிலும் குறிப்பாக சண்டை நடந்துகொண்டிக்கும்போது தென்பட்டால், இவை அழிவுக்கான சரியான இலக்குகளாக இருக்கும்" என ரஷ்ய அதிபர் புதின் கூறினார…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு 07 Sep, 2025 | 04:05 PM ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்ட…
-
- 0 replies
- 99 views
-
-
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம் 07 Sep, 2025 | 03:51 PM பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார். பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 161 views
-
-
உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது. இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட…
-
- 0 replies
- 111 views
-
-
காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை! காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்கு பகுதி நோக்கி செல்லுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸரேல் இராணுவம் வேகமாக முன்னேறி வருகின்றது. இஸ்ரேலிய இராணுவத்தினர் கடந்த பல வாரங்களாக காசாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன. காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும்,…
-
- 0 replies
- 129 views
-
-
பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் Flora Drury BBC News 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.…
-
- 0 replies
- 103 views
-
-
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்க…
-
- 0 replies
- 141 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ரெஹான் ஃபாசல் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் "அங்கிள் ஹோ" என்று அறியப்பட்டார். அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை. பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார். ஸ்டான்லி கார்னோவ் தனது 'வியட்நாம் ஒரு வரலாறு' என்ற புத்தகத்தில், "1920களில், அவரது ஆசிய தோற்றத்தை மக்கள் கவனிக்கவில்லை என்றால்…
-
-
- 2 replies
- 194 views
- 1 follower
-
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. கணிசமான பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் நதியில் டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. சுத்தந்த பத்ரா எழுதியது புதுப்பிக்கப்பட்டது:ஆகஸ்ட் 30, 2025 11:39 IST எங்களை பின்தொடரவும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. ஜூலை 2025 இல், இந்தியா மற்ற சப்ளையர்களை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூலமாக மாறியுள்ளது , இது இறக்குமதியில் 15.5 சதவீதமாகும். உக்ரைனிய எண்ணெய் சந்த…
-
-
- 9 replies
- 526 views
-