Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி? டேவிட் பிரௌன் பிபிசி நியூஸ் விஷுவல் ஜர்னலிசம் குழு 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் பொதுச் செயலாளர்…

  2. யுக்ரேன் போர்: ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதா? சமீபத்தில் கிடைத்த முக்கிய தடயங்கள் உண்மை கண்டறியும் குழு பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் கார்கள் மற்றும் கட்டடங்கள் அழிக்கப்பட்டன யுக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். என்னென்ன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது? சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்க…

  3. உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு! உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. இந்த இராணுவ பொதியில், ஹிமார்ஸ் ரொக்கெட் லொஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1305003

  4. உலக உணவு தினம்: 69 கோடி பேர் பட்டினியில் வாழும் உலகில் நாம் எதிர்கொள்ளும் அபாயம் என்ன? சரோஜ் பதிராணா பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்ற ஐ.நா எச்சரிக்கைக்கு நடுவே உலக உணவு தினம் (அக்டோபர் 16) கடைபிடிக்கப்படுகிறது. "எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில், ப…

  5. சிரியா அகதிகள்: ஆன்லைனில் யாசகம் கேட்பவர்களை சுரண்டுகிறதா டிக்டாக்? பிபிசி புலனாய்வு ஹன்னா கெல்பார்ட், மம்து அக்பீக் மற்றும் ஜியாத் அல்-கத்தான் தவறான தகவல்கள் கண்டறியும் பிரிவு, பிபிசி அரபாபிக், பிபிசி ஐ புலனாய்வு 14 அக்டோபர் 2022 சிரியா நாட்டில் முகாம்களில் அகதிகளாக வசிக்கும் குடும்பங்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிக்டாக் சமூக வலைதளத்தின் மூலம் பண உதவி கோரி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவியாகக் கிடைக்கும் தொகையில் 70 சதவிகிதம் வரை டிக்டாக் நிறுவனம் எடுத்துக் கொள்வது பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் டிக்டாக் ந…

  6. ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும்: புடின் ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிராக இப்போதைக்கு இன்னும் பாரிய தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடவில்லை. ரஷ்யாவின் நோக்கம் நாட்டை அழிப்பது அல்ல. இப்போது பாரிய தாக்குதல்கள் தேவையில்லை. இப்போதைக்கு மற்ற பணிகள் உள்ளன. பின்னர் அது தெளிவாகத் தெரியும…

    • 2 replies
    • 259 views
  7. ‘கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்- ஸி ஜின்பிங் வெளியேற வேண்டும்’ சீனர்கள் போராட்டம்! ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சீனாவில் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில், தற்போது அங்கு நடந்தேறியுள்ள வெளிப்படையான போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஸி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன், ஸி ஜின்பிங் கொவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகள் பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. …

    • 14 replies
    • 1.1k views
  8. உக்ரைன் படை தொடர் தாக்குதல்: கெர்சன் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தில் உக்ரைன் படை தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. தினத்தந்தி கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது. பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீ…

  9. அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வெள்ளம் ; 3 மாநிலங்களை சேர்ந்த மக்களை வெளியேறுமாறு உத்தரவு By T. SARANYA 14 OCT, 2022 | 01:07 PM அவுஸ்திரேலியாவில் பெய்யும் கன மழையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று மாநிலங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மேனியா ஆகிய மாநிலங்களே இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மழைவீழ்ச்சியில் 4 மடங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதனால் குறைந்தது 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை மற்றொருவர் காணா…

  10. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சோதனை நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது என்று மாநில ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. குரூஸ் கப்பல் ஏவுகணை கடலுக்கு மேல் 2,000 கிமீ (1,240 மைல்கள்) பயணித்ததாக கே.சி.என்.ஏ மேலும் குறிப்பிட்டுள்ளது. பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து, ஐந்து ஆண்டுகளில் வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தப் போகிறது என்ற அச்சத்தை அதிகப்படுத்திய தொடர்ச்சியான ஆயுத ஏவுதல்களில் இது சமீ…

  11. சீனா-தைவான் சிக்கல்: 100 கோடி தைவான் டாலர் செலவில் 3 லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்குவதாக அறிவித்த தொழிலதிபர் பிரான்சிஸ் மாவோ பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA தைவானின் தைபேயில் முடி நரைத்த, கண்ணாடி அணிந்த ஒரு வயோதிகத் தொழிலதிபர், தொழில்நுட்ப நிறுவனப் பெருமுதலாளி ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தான் மக்கள் ராணுவம் ஒன்றைக் கட்டமைக்க சுமார் 100 கோடி தைவான் டாலர்கள் அளிப்பதாக உறுதியளித்தார். குண்டு துளைக்காத உடை அணிந்திருந்த ராபர்ட் ட்சோ என்ற அவர், தன் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் சீனாவுக்கு எதிராக சண்டையிட தான் உத…

  12. ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை ம…

  13. உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் சீனா மற்றும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. ரஷ்யாவைத் தவிர, பெலாரஸ், வடகொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன. ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராக பதிவான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதுவாகும். உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ நடவடிக்கையை தொடங்கிய ரஷ்…

  14. உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி! ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உறுதியளித்த ஆயுதங்களில் ஏவுகணைகள் மற்றும் ரேடார்களும் அடங்கும். முன்னதாக அமெரிக்காவும் இதேபோன்ற உறுதிமொழியை வழங்கியது. ஜேர்மனியில் இருந்து ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஏற்கனவே உக்ரைனில் உள்ளது. 50 நாடுகளைச் சேர்ந்த உக்ரைனின் நட்பு நாடுகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் சந்திக்கும் போது இந்த உறுதிமொழிகளை வழங்கின. திங்கள் மற்றும் செவ்வா…

    • 4 replies
    • 641 views
  15. . ஜேர்மனியில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்ற கீழ்சபை கட்டிடத்திற்கு வெளியே அந்நாட்டின் எதிர்கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் அதிகரித்து வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.…

  16. துபாய் அரச குடும்பத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை: பாதுகாப்பு கோரி ஐநா கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கும் முன்னாள் மனைவி செபஸ்டீன் உஷேர் பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் முன்னாள் மனைவியின் வழக்கறிஞர்கள் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரிகளுடன் இணைந்து சேனாப் ஜாவத்லி மற்றும் அவரின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தன் கணவர் ஷேக் சயீத் பின் மக்தூம் பின் ரஷித் அல் மக்தூமிடமிருந்து குழந்தைகளை பெறுவதற…

  17. நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 33 பேர் உயிரிழப்பு 12 OCT, 2022 | 12:01 PM கடந்த வாரத்தில் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக மோசமான பருவமழை வடமேற்கில் உள்ள கர்னாலி மாகாணத்தைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மாகாணம் முழுவதும் குறைந்தது 22 பேர் காணாமல் போயுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் சில பகுதிகளில்…

  18. முகநூல் வலைத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்தது ரஷ்யா முகநூல் வலைத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பிரஜைகள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடும் வன்முறைத் தகவல்களை பேஸ்புக் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு குறித்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்திற்கு மொஸ்கோ நீதிமன்றம் விதித்து இருந்த தடையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்ய அரசாங்கம்…

  19. சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்…

  20. விசித்திர சக்தி கொண்ட'தீய கண்' - உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி? குவின் ஹர்கிடாய் ㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANM / GETTY IMAGES பண்டைய எகிப்து நாகரிகத்தில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மறுசீரமைப்பைக் குறிக்கும் சின்னமான 'ஐ ஆஃப் ஹோரஸ்' காலம் தொடங்கி தற்போதுவரை மனித கற்பனையில் கண்கள் நிலையான இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுகிறார் க்வின் ஹர்கிடாய். உலகின் மர்மமான தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பதற்கான குறியீடாக நம்பப்படும் 'தீய கண்' போல வேறு எந்த அடையாளமும் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. 'வசீகரமான நீல நிறக்கண்கள்' இஸ்தான்புல் நகரின் சந்தைகள…

  21. இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களை பெற முயற்சி- அவுஸ்திரேலியாவில் இருவர் கைது By RAJEEBAN 11 OCT, 2022 | 10:46 AM இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களிற்கான ஒப்பந்தங்களை பெற முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பலநாடுகளை அடிப்படையாக கொண்டு ஒரு தசாப்தகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென்னாசியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தை சேர்ந்த இருவரையே அவுஸ்திரேலிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 14 மில்லியன் அவுஸ்திரே…

  22. காலநிலை நெருக்கடி வெப்ப அலைகளை தீவிரப்படுத்துகிறது : ஐ .நா. எச்சரிக்கை By T. SARANYA 11 OCT, 2022 | 01:13 PM காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் பேரழிவுகரமான வெப்ப அலைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க சிறந்த நடவடிக்கை தேவை என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் நிறுவனமான (OCHA )மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பேரழிவுகளைத் தூண்டும் வகையில் அதிக வெப்பநிலை பதிவானது. இது ஆபத்தான, அடிக்கடி மற்றும் மிகவும் தீவிரமான வெப்பம் தொடர்ப…

  23. செளதி அரேபியா- அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பு? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் யுக்ரேனும் ஒருவருக்கு ஒருவர் எதிராக உள்ளன. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் யுக்ரேனுக்கு ஆதரவாகவும் நிற்கும் இந்த நேரத்தில், செளதி அரேபியா இரு தரப்புடனும் நட்பு பாராட்டுகிறது. இதற்…

  24. வெனிசுவெலாவில் மண்சரிவு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 11 OCT, 2022 | 10:09 AM வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். "நாங்கள் எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என துணைத் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். …

  25. உக்ரைன் தலைநகரில் பல குண்டுவெடிப்புகள்! ரஷ்யா 83 ஏவுகணைகளை ஏவியதாகவும் அதில் 43க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வான் பாதுகாப்பு மூலம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்தார். இதில், காஸ்பியன் மற்றும் கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட கலிப்ர், இஸ்கந்தர் மற்றும் கேஹெச்-101 ஏவுகணைகளில் அடங்கும். எட்டு வெவ்வேறு உக்ரைனிய பிராந்தியங்களில் உள்ள பதினொரு முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தலைநகரான கீவ் இன்று காலை ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன என்று நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார். 2019 இல் திறக்கப்பட்ட கிளிட்ச்கோ பாலம் என்று அழைக்கப்படும் கிய்வில் புதிதாக கட்டப்பட்ட பாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.