Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்! லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது. இந்த மோதலின்…

    • 21 replies
    • 1.1k views
  2. அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுவதை ரஸ்யா குழப்பியது - அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு By RAJEEBAN 28 AUG, 2022 | 12:23 PM அணுசக்தி உடன்படிக்கை குறித்த ஐநா உச்சிமாநாட்டை ரஸ்யா வேண்டுமென்றே தடுக்கின்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் குற்றம்சாட்டியுள்ளார் உக்ரைன் அணுஉலைக்கு அருகில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நியுயோக்கில் ஐநாவில் 151 நாடுகள் மத்தியில் நான்குவார பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னரும் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்த மறு ஆய்வு மாநாடு வெற்றியளிக்காமமை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆ…

  3. உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு, நிதியுதவி: புடின் அறிவிப்பு. உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார். ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்…

    • 58 replies
    • 2.3k views
  4. பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல் -80 பேர் மீட்பு Digital News Team 2022-08-27T14:51:45 -சி.எல்.சிசில்- பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரிலிருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது. அப்போது கப்பல் துறைமுகத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர். உடனே கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் …

  5. ஐரோப்பா வியாழக்கிழமை பாரிய கதிரியக்க விபத்தை மயிரிழையில் தவிர்த்துள்ளது - உக்ரைன் ஜனாதிபதி அதிர்ச்சி தகவல் By RAJEEBAN 26 AUG, 2022 | 01:01 PM ஐரோப்பா கதிரியக்க விபத்தொன்றை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை ரஸ்யா ஆக்கிரமித்துள்ள ஜபோரிஜியாஅணுமின்நிலையம் உக்ரைனின் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதால் ஐரோப்பா கதிர்வீச்சு பேரழிவு ஆபத்தை எதிர்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். இன்னுமொரு மின் இணைப்பு இருந்ததால் ஜபோரிஜியா அணுஉலை மீண்டும் செயற்பட ஆரம்பித்தது என அவர் தெரிவித்துள்ளார். தீமூண்டதால் மேல்நிலை மின்கம்பிகள் சேதமடைந்தன அணுமின்ந…

  6. சீன விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா: பொறுப்பற்ற செயல் என சீனா கண்டிப்பு! அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமானங்களை அமெரிக்க விமான நிறுவனங்கள் ரத்து செய்த நிலையில் இது பொறுப்பற்ற செயல் என சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்துள்ளது இதற்கு பதிலடியாக சீனாவின் 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் கொரோனா தொற்று இல்லாத பயணிகளுக்கு சீனா சென்ற ப…

  7. ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவை விலைக்கு வாங்குகிறதா சீனா? ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு ஒன்றை சீனா விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா அருகில் உள்ள கான்க்லிட் என்ற தீவின் சொந்தகாரர் ஸ்மித் என்பவர் இந்த தீவை ஆஸ்திரேலிய அரசுக்கு விற்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் கூறிய விலையை கொடுக்க ஆஸ்திரேலியா அரசு தர தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் தங்களுடைய தீவு வழியாகத்தான் ஆஸ்திரேலியாவின் ரகசிய கேபிள்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த தீவை ஆஸ்திரேலியா வாங்கவில்லை என்றால் சீனாவுக்கு விற்றுவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனா இந்த தீவ…

    • 0 replies
    • 227 views
  8. எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் By Rajeeban 26 Aug, 2022 | 12:19 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசுவதோடு "நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்" என்று ஆவேசமாகப் பேசுகிறார். நடந்தது என்ன? டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியப் பெண்கள் நால்வர் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித…

    • 44 replies
    • 3k views
  9. நீருக்கடியில் உள்ள... கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, உக்ரைனிய கடற்படையினருக்கு... ட்ரோன் பயிற்சி! உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர். இது ரஷ்ய துருப்புகளால் கடற்பகுதியில் நிரப்பப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்கள் ஏற்கனவே தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பயிற்சி குழாமில் மூன்று வார பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளனர். கப்பல்களில் இருந்து தரவை எவ்வாறு இயக்குவது மற்றும் பகுப்பாய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொண்டனர். சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன்கள் கடற்பரப்புகளை…

  10. பிரித்தானியா.. வெளியுறவுத் துறை அமைச்சர், லிஸ் ட்ரஸின்... சர்ச்சையான, கருத்து: மக்ரோன் பதில்! அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், ‘மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என கூறினார். அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘சொற்கள் அல்ல செயல்களால்’ அவரைத் கையாளுவேன் என்று அ…

  11. பிரான்ஸ் கடற்கரையில்... சுகாதாரம்- கடல்வாழ் உயிரினங்களை, பிரித்தானியா அச்சுறுத்துகிறது: யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்! சானல் மற்றும் வட கடலில் மூலக் கழிவுநீரைக் கொட்ட அனுமதிப்பதன் மூலம் பிரான்ஸ் கடற்கரையில் சுகாதாரம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பிரித்தானியா அச்சுறுத்துகிறது என்று மூன்று யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 50 கடற்கரைகளுக்கு மாசு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறுகள் மற்றும் கடலில் கலக்கிறது. சுற்றுச்சூழல் பொறுப்புகளை பிரித்தானியா புறக்கணிப்பதாகவும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடித்தலை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் பிரான்ஸ் யூரோ ந…

    • 8 replies
    • 466 views
  12. புலம் பெயர்ந்தோரின்... வருகையைக் கண்காணிக்க, பிரித்தானியா வரும்... அல்பேனிய பொலிஸார்! பிரித்தானியா மற்றும் அல்பேனிய அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோரின் வருகையைக் கண்காணிக்க அல்பேனிய பொலிஸார் குழுவொன்று பிரித்தானியா வரவுள்ளது. சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்வோரை விரைவாக அகற்ற உதவுவதற்காக மூத்த சட்ட அமுலாக்க அதிகாரிகளை பிரித்தானியாவுக்கு அனுப்புவதன் மூலம் அல்பேனியா ஆதரவளிப்பதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அல்பேனிய அதிகாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் ஆதரவு செயலாக்கத்தையும் வழங்குவார்கள் என்று உட்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கால்வாய்களை கடக்கும் புலம்ப…

  13. உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை" எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை, ஜேர்மனியில் ஆரம்பம்! உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. இரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் தயாரித்த ரயில்கள், குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் பக்ஸ்டெஹூட் ஆகிய வடக்கு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பிராந்திய ரயில் நிறுவனமான எல்.என்.வி.ஜி.ஆல் இயக்கப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்…

  14. யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சேப்லைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் மக்கள் குடியிருந்த வீடு ஒன்றும் நாசமானது. யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடையும் நாளில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் யுக்ரேன் கூறியுள்ளது. யுக்ரேன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர். இந…

  15. மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நஜிப் ரஸாக் மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு. முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தா…

  16. கோட்டா தாய்லாந்தில் தங்கியிருக்கும் நிலையில் தாய்லாந்து பிரதமரின் பதவியும் பறிபோனது! தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை இடைநிறுத்த அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (24) தீர்மானித்துள்ளது. பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த மனு மீது அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் பிரதமருக்கு எதிராக 5:4 என்ற விகிதத்தில் வாக்களித்தனர், அதன்படி பிரதமரின் பதவிக்காலம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 23, 2022 உடன் முடிவடைந…

  17. சிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது உலகின் பெரும்பாலான நாடுகளில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இன்னும் அமலில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக பல நாடுகள் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி வருகின்றன. ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் 337ஏ சட்டப்பிரிவை ரத்து செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் த…

  18. "ஸபோரிஷியா" அணுமின் நிலையத்திலிருந்து... வெளியேற முடியாது: ரஷ்யா திட்டவட்டம்! தெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, ஸபோரிஷியா அணுமின் நிலைய வளாகத்தை இராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதனை ரஷ்யா நிராகரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல் மற்றும் செய்திப் பிரிவு இணை இயக்குநர் இவான் நெசயெவ் கூறுகையில், ‘உக்ரைனின் ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தைஇ ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்று ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது ஆகும். அவ்வாறு அந்…

  19. புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார். 29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார். அலெக்சாண்டர் டுகினும் அவரது மக…

    • 65 replies
    • 3.1k views
  20. ஜுலு ராஜ்ஜியம்: நாடும், அதிகாரமும் இல்லாத இந்த மன்னர் பதவிக்கு ஏன் இத்தனை சண்டை, இவ்வளவு பெருமை? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜுலு ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஓராண்டு நீடித்த குடும்ப சண்டைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் நடந்த பாரம்பரிய விழாவில் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜுலு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை. 48 வயதான புதிய மன்னர், முந்தைய மன்னரின் மகன். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவர் முறையான வாரிசு இல்லை என்றும் மறைந்த மன்னரின்…

  21. "சபோரிஜியா" அணுமின் நிலையத்தை... ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய, ரஷ்யா இணக்கம். சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக…

  22. மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்! Aug 19, 2022 13:59PM IST பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு. இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்த பெருமை இவருக்கு உண்டு. 2019ஆம் ஆண்டு பின்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதிவியேற்றதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார். அப்படித்தான் இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடி…

  23. "விருந்து காணொளி" வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை... மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்! இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபின்லாந்து பிரதமராக இருந்துவரும் சன்னா மரின், விருந்தொன்றில் கலந்துக்கொண்ட காணொளியொன்று வெளியானதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெளிப்படையான காதலுக்காக அடிக்கடி விமர்சனங்களுக்கு இலக்காகி வரும், சன்னா மரின், ஒரு விருந்தில் பாடுவது, நடனம் செய்வது மற்றும் குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, 36 வயதான சன்னா மரின், சில அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர்கள், சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரினர். இதற…

  24. ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு! ரஷ்யாவில்... 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புடின் வெளியிட்டுள்ள ஆணையில், ‘ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும். தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10ஆவது குழந்த…

    • 38 replies
    • 1.3k views
  25. ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு! ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது. கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அ…

    • 26 replies
    • 999 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.