உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26652 topics in this forum
-
ஜப்பானின்.. முன்னாள் பிரதமர், ஷின்சோ அபே மீது... துப்பாக்கி சூடு! ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில், மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. உரை நிகழ்த்தும் போது, அவர் தரையில் விழுவதற்கு சற்று முன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும் சுடப்பட்ட பின்னர் மார்பில் இருந்து இரத்தம் கசிந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை ம…
-
- 12 replies
- 779 views
- 1 follower
-
-
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர்... 21,000க்கும் மேற்பட்ட, போர்க் குற்றங்களை விசாரித்து வருவதாக... உக்ரைன் தெரிவிப்பு! ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான போர்க்குற்றங்கள் குறித்து தனக்கு அறிக்கைகள் வருவதாக அரசு வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார். ஆனால், கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்புக்கு பின்னர், அனைத்து போர்க்குற்ற குற்றச்சாட்டுகளையும் உக்ரைன் மறுத்துள்ளது. பொதுமக்களைக் கொன்ற, சித்திரவதை செய்த அல்லது பாலியல் பலாத்காரம் செய்த ரஷ்ய வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என இரினா வெனெடிக்டோவா த…
-
- 1 reply
- 163 views
-
-
நைஜீரியாவில், சிறை உடைப்பு: கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443 பேரை இன்னும் காணவில்லை என நைஜீரிய சீர்திருத்த சேவையின் செய்தித் தொடர்பாளர் உமர் அபுபக்கர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிலர் தாங்களே பொலிஸ் நிலையங்களில் சரணடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தப்பியோடிய அனைத்து கைதிகளையும் கண்காணித்து, அவர்களை அதிகாரிகள் காவலில் வைப்பார்கள் என அபுபக்கர் மேலும் கூறினார். செவ்வாய்கிழமை இரவு அபுஜாவில் உள்ள குஜே உச்ச சிறைச்சாலை இஸ்லாம…
-
- 0 replies
- 160 views
-
-
போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இறுதி செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுவர். அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார். ஆனால், யார் அந்த இருவர்? ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது. …
-
- 12 replies
- 690 views
- 1 follower
-
-
சீனா பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: வரலாற்றில் முதல்முறையாக கூட்டாக அறிவித்த பிரிட்டன் - அமெரிக்கா கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK POOL VIA ITN பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, "நம்முடைய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நீண்ட கால பெரும் அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது" என்றும், சமீபத்திய தேர்தல் உ…
-
- 3 replies
- 451 views
- 1 follower
-
-
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்...! தினத்தந்தி லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. தற்போது தொடர் ராஜினாமாவாக கடந்த 48 மணி நேரத்தில் அமைஅச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். இதை தொடர்ந்து இன்று …
-
- 26 replies
- 1.2k views
- 1 follower
-
-
ரஷ்யா... உண்மையான முன்னேற்றத்தை கண்டுள்ளது - மேற்கத்திய அதிகாரிகள் பாராட்டு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களின் நிலைத்தன்மை சவாலானது எனினும், அவர்களின் ஆயுதங்கள் மற்றும் மன உறுதியின் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கது என்று மேற்கத்திய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வார இறுதியில், ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய பிராந்தியமான லிசிசான்ஸ்க்கைக் கைப்பற்றினர். இதன் பொருள் ரஷ்யா உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த ஆண்டு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லைகளை ரஷ்யா பாதுகாக்குமா என்பது மிகவும் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளிடையே சிறந்த ஒத்துழைப்பு டான்பாஸ் எனப்பட…
-
- 1 reply
- 262 views
-
-
சிங்கப்பூர் - மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை; வரலாறு என்ன? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2022, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசியா, சிங்கப்பூர் இடையே கடந்த அறுபது ஆண்டுகளாக தண்னீர் பிரச்னை ஒன்று நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு என்ன? இதன் வரலாறு என்ன? மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது. இந்த தண்…
-
- 2 replies
- 493 views
- 1 follower
-
-
இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...! தினத்தந்தி லண்டன், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.…
-
- 24 replies
- 1.4k views
- 2 followers
-
-
வருங்கால அறிவியல்: உலகத்தின் சாலைகள் அனைத்தும் நிலத்தடிக்கு மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? லாரா பேடிஸன் பிபிசிக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ZHUANG WANG/GETTY சாலைகள் நகரங்களை மாசுபடுத்துகின்றன. பொது இடங்களையும் ஆங்காங்கே துண்டுகளாக இருக்கும் வாழ்விடங்களையும் விழுங்கிவிடுகின்றன. அத்தகைய சாலைகளை நிலத்தடி சுரங்கச் சாலைகளாக மாற்ற முடியுமா? அது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுமா? 1863-ஆம் ஆண்டில், தெருக்களில் இருக்கும் போக்குவரத்தைக் குறைக்கும் முயற்சியில், உலகின் முதல் சுரங்கப் பாதையான மெட்ரோபோலிட்டன் ரயில்பாதையை லண்டன் திறந்தது. அதற்கு இருபது ஆண்டுகளுக…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
இஸ்லாமியர்களின் மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்: அரபு ஊடகம் 4 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு நேரலையாக ஒலிபரப்பப்படுவது ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி இந்த உலகுக்கு அறிவிக்கப்படும் என்று மெக்கா மற்றும் ம…
-
- 3 replies
- 545 views
- 1 follower
-
-
இல்லினாய்ஸில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் நடந்த அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக லேக் கவுண்டி பிரேத பரிசோதனை அதிகாரி ஜெனிபர் பானெக் தெரிவித்தார். அவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என்று Banek தெரிவித்துள்ளது. அணிவகுப்பு நடந்த இடத்தில் இறந்த ஐந்து பேரும் பெரியவர்கள் என்று அவர் கூறினார். ஆறாவது பாதிக்கப்பட்டவரின் வயது குறித்த தகவல் அவளிடம் இல்லை. "உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். பாதிக்கப்பட்டவர் குறித்த கூடுதல் தகவல்கள் என்னிடம் இல்லை," என்று அவர் கூறினார்.
-
- 9 replies
- 436 views
- 1 follower
-
-
உக்ரைனின்... "லிசிசான்ஸ் நகரம்" ரஷ்ய துருப்புகள், வசம்... வீழ்ந்தது! உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கை ரஷ்ய படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு தெரிவித்துள்ளார். ஆனால், லிசிசான்ஸ்கில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சியெவெரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு இடையே ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை வடக்கிலிருந்து முதல்முறையாக ரஷ்ய படையினர் சனிக்கிழமை கடந்தனர். இதனால், லிசிசான்ஸ்க் நகர் வீழ்வது உறுதியானது. அதன்படி, லிசிசான்ஸ்கை ரஷ்ய படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் க…
-
- 0 replies
- 329 views
-
-
டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர் மாவட்டத்தில் உள்ள பெரிய வணிக வளாகத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மற்றும் பலர் தாக்கப்பட்டனர்," என்று கோபன்ஹேகன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரின் தெற்கில் உள்ள வணிக வளாகத்திற்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலா…
-
- 2 replies
- 379 views
-
-
லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சூறையாடினர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/130637
-
- 1 reply
- 301 views
-
-
அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், உக்ரேனிய ஆயுதப் படைகள் உக்ரைனுடனான போரில் உயிரிழந்த ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன்படி, பெப்ரவரி 24 முதல் குறைந்தது 35,750 பேர் கொல்லப்பட்டதாக இப்போது உக்ரைன் அறிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய மதிப்பீடுகள் ரஷ்யா மற்றும் மேற்கத்திய முகவரங்கள் வெளியிடப்பட்டதை விட தொடர்ந்து அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை உட்பட க…
-
- 68 replies
- 4.7k views
-
-
2030ஆம் ஆண்டுக்குள்... மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும்: பிரதமர் பொரிஸ்! 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55 பவுண்டுகள் பில்லியனுக்கு சமம். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சுதந்திரத்திற்கான விலை. எப்போதும் செலுத்தத் தகுந்தது. உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், புடின் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு எதிராக மேலும் அல்லது குறைவான தண்டனையின்றி ஆக்கிரமிப்பு நட…
-
- 0 replies
- 256 views
-
-
புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2009ஆம் ஆண்டில் மேலாடையின்றி குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் எடுத்து தமது கட்டுமஸ்தான உடல்வாகை வெளிப்படுத்தினார் விளாதிமிர் புதின். தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால் "பார்க்க சகிக்காது" என்று அவர் கூறியுள்ளார். தமது குதிரை சவாரியின்போது மேல் சட்டையின்றி படங்களுக்கு போஸ் கொடுத்த ரஷ்ய அதிபரின் போக்கை…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு! உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை 2.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்துகின்றது. மேலும், பிரித்தானியா மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக 1.5 பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது. புதிய பிரித்தானிய உதவியானது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், எலக்ட்ரானிக் போர் உபகரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கிட்களுக…
-
- 16 replies
- 623 views
-
-
உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது! கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்பதை உணர்த்துவதாக அமையும் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலேயே ஸ்னேக் தீவை ரஷியா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்க…
-
- 37 replies
- 2.5k views
-
-
போலந்தில்... நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க, அமெரிக்கா முடிவு! போலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தளத்தை நிறுவுவது இதுவே முதல் முறை. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, உரையாற்றுகையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போ…
-
- 15 replies
- 710 views
-
-
ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது! வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆகையால், நீண்ட இழுபறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்று…
-
- 0 replies
- 222 views
-
-
சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி. வளர்ந்த நாடுகளிலும்கூட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்படும் வேளையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. சாலைகள்தோறும் திறந்தவெளி உணவகங்கள்…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
எரிபொருள் கொள்வனவுக்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் – மஹிந்தானந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் காலங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் எரிபொருள் கொள்வனவுக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு தொலைபேசியில் உரையாடுவதற்கு வசதியாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஜூலை 10ஆ…
-
- 0 replies
- 171 views
-
-
2 கோடுகளால் மாறிப்போன இலங்கையின் தலையெழுத்து! 69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (29) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு விடயத்தையும் அலட்சியமாக பார்க்கவோ செயற்படவோ கூடாது. அப்படி செயற்பட்டதால் தான் இன்றைய நிலை…
-
- 3 replies
- 539 views
-