உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். மெல்போர்ன் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 1994 மற்றும் 2002 க்கு இடையிலான காலப்பகுதுியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக இன்றையதினம் கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்…
-
- 4 replies
- 383 views
-
-
அவுஸ்திரேலியாவில் கடும்மழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:43 AM அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கடும்மழையால் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் நியு சௌத்வேல்ஸ், வடகிழக்கு விக்டோரியா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை கடும்மழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தெற்கு அவுஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் துண்டிக்கப…
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 11:33 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன …
-
- 4 replies
- 317 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அந்த நபர் 41 வயது பெண்மணியை கத்தியால் குத்தியுள்…
-
- 0 replies
- 375 views
-
-
அவுஸ்திரேலியாவில் கன மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 2 மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லையெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்துவருகின்றது. அத்துடன் அங்கு அதிக மக்கள் தொகை கொண்ட 3 ஆவது நகரமும், குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்டினி ஆகிய இரு நகரங்களும் கனமழையால…
-
- 1 reply
- 168 views
-
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு மேற்கு அவுஸ்திரேலியாவில் 18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில் கிளியோ ஸ்மித் என்ற சிறுமி தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போனார், இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கிளியோ ஸ்மித் கூடாரத்தில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டு இரு…
-
- 10 replies
- 695 views
-
-
16 AUG, 2023 | 11:10 AM அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தில் முன்னர் எப்போதையும் விட வெப்பம் மிக அதிகமாக காணப்பட்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஜூலை மாத வெப்பநிலை வழமையான சராசரி வெப்பநிலையை விட 1.2சென்டிகிரேட் அதிகமாக காணப்பட்டது. கான்பெராவை தவிர ஏனைய அனைத்து தலைநகரங்களிலும் வழமையை விட அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது என வானிலை ஆய்வு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சிட்னி, மெல்பேர்ன், ஹொபார்ட் உட்பட பல முக்கிய நகரங்கள் தங்களின் ஜூலை மாத வெப்பத்தில் சாதனை அளவை எட்டியுள்ளன. சில நகரங்களில்…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
01 JUL, 2025 | 04:31 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை [05 - March - 2008] அவுஸ்திரேலியாவிலுள்ள பாடசாலைகளில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்திலுள்ள ஓர்மிஸ்டன் கல்லூரியிலேயே இத்தடை முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோரை அழைத்த கல்லூரி நிர்வாகம்; தலைமுடியை சீராக கத்தரித்து சீவியும் மாணவர்கள் பாடசாலைக்கு தலைப்பாகை அணியாமலும் வருகை தரவேண்டும். தலைப்பாகை அணிவதற்கு பாடசாலை விதிகளில் இடமில்லை. அதனால் இக்கட்டுப்பாடுகளை அம்மாணவர்கள் விரும்பாவிட்டால் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறுவழி இல்லையெனத் தெரிவித்துள்ளது. இவ்விடயம…
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி By RAJEEBAN 05 FEB, 2023 | 12:20 PM பேர்த்தில் சுறாதாக்குதலில் சிறுமி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவில் நோர்த் பிரெமென்டல் பகுதியில் ஸ்வான் ஆற்று பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. கடலில் நண்பிகளுடன் நீச்சலில் ஈடுபட்டிருந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகி;ன்றன. டொல்பின்களை பார்த்ததும் அவற்றை நோக்கி நீந்திய சிறுமியை சுறா தாக்கியதை பார்த்ததாக நண்பிகள் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் சிறுமியை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தார் ஆனால் …
-
- 0 replies
- 484 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் தேர்தல் திகதி அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் மே மாதம் 18 ம் திகதி நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்கிரோவை இன்று காலை சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொறிசன் தேர்தலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார் இதன் பின்னர் காலை 8.29 மணியளவில் 45 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான சம்பிராதாய பூர்வ நிகழ்வு இடம்பெற்றது இதன் பின்னர் ஆளுநர் நாயகம் காலை 8.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டார் இதன் பின்னர் உரையாற்றியுள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் வலுவான பொருளாதாரத்தை உருவாக்ககூடியவர் யார் என்ற தெரிவையே மே 18 ம் திகதி வாக்காளர்கள் மேற்கொள்ளப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ளார் 2013 இல…
-
- 0 replies
- 420 views
-
-
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் விடுத்துள்ளார். தேர்தலை நடத்தவுள்ள நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஆளுநர் நாயகம் குயீன்ரின் பிரைஸை தான் கேட்கவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். 8 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் அறிவிக்கப்படுவது நாட்டின் ஆகவும் நீண்ட பிரசாரமொன்றை தொடக்க அல்லவெனவும் இவ்வருடத்தின் போக்கை நெறிப்படுத்துதலே இதன் நோக்கமெனவும் அவர் கூறியுள்ளார்;. தேர்தல் இவ்வாறான நீண்டகாலத்தின் முன்னர் அறிவிக்கப்படுதல் தனியாட்கள், தொழில் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னரே திட்டமிட்டு செயற்படுவதற்கு வ…
-
- 0 replies
- 482 views
-
-
Published By: RAJEEBAN 12 NOV, 2023 | 12:02 PM அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இடம்பெற்ற பாலஸ்தீனியர்கள் சார்பு ஆர்ப்பாட்டங்களில் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளனர். இதேவேளை சிட்னியில் பணயக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இஸ்ரேல ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக அவுஸ்திரேலியாவில் வார இறுதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை சிட்னி மெல்பேர்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறி…
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையர் - இரண்டு வருட சிறைத்தண்டனை Published By: RAJEEBAN 30 APR, 2024 | 12:06 PM அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜெராட் சிசில் வாமதேவன் என்ற 56 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்துவந்தார். அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி துண்டுதுண்டாக வெட்டிக்கொல்வேன் என அச்சுறுத்தியுள்ளார்.…
-
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் September 22, 2021 அவுஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார். https://globaltamilnews.net…
-
- 0 replies
- 469 views
-
-
அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் மீது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுச் சமத்தப்பட்டுள்ளது. அவனது செயற்பாடுகள் தொடர்பாக, சமூக ஊடக இணைத்தளப் பகிர்வுகளூடாக அறிந்துகொண்ட பொலிஸார், சிட்னியிலுள்ள அவனது வீட்டில் வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கைது செய்தனர். 'பயங்கரவாத நடவடிக்கைக்குத் தயார்படுத்தினார் அல்லது திட்டமிட்டார் என்ற அடிப்படையில், அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பாரிய குற்றத்தைப் புரியும் நோக்குடன் தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பயன்…
-
- 0 replies
- 203 views
-
-
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதனை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உறுதி செய்துள்ளார். மேலும் சிட்னியில் மேற்;கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படவிருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவ…
-
- 2 replies
- 510 views
-
-
19 JUL, 2023 | 12:42 PM குயின்லாந்தில் இடம்பெற்றுள்ள பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தொன்று இடம்பெறறுள்ள அதேவேளை அமெரிக்காவின் டாங்கிகளை கொண்டு சென்றுகொண்டிருந்த வாகனமும் இந்த விபத்தில் சிக்குண்டுள்ளது. பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் அமெரிக்காவின் ஏபிரகாம் டாங்கிகளை ஏற்றிச்சென்ற டிரக்கும் சிக்குண்டுள்ளது என்பதை அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது. எட்டு வாகனங்களுக்கு மேல் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினர் நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன மூன்று வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன எனவும் காவல…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் பள்ளிவாசல் தீக்கிரை அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரின் தென்மேற்கே கீலோங் எனும் இடத்திலுள்ள பள்ளிவாசலொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழிவடைந்துள்ளது. மேற்படி சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்செயலாக சந்தேகிக்கும் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொஸ்டொக் அவன்யுவிலுள்ள அந்தப் பள்ளிவாசலில் பரவிய தீயை 7 தீயணைப்புப் படைவீரர்கள் நேற்று புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. கிரேட்டர் கீலோங் பிராந்தியத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கி…
-
- 0 replies
- 392 views
-
-
அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல் ; கன்சர்வேடிவ் கூட்டணி முன்னிலையில் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்கு எண்ணுதல் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகிய வண்ணமுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் அடிப்படையில் கன்சர்வேடிவ் கூட்டணி 3 ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. http://www.virakesari.lk/article/8436
-
- 0 replies
- 259 views
-
-
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா Australia's Foreign Minister Kevin Rudd has resigned amid widespread reports of a leadership tussle between him and Prime Minister Julia Gillard. He made the announcement at a press conference in Washington DC, where he had earlier met US Secretary of State Hilary Clinton. Ms Gillard ousted Mr Rudd as PM in June 2010. There has been speculation he plans to challenge her for the top job. Ms Gillard said Mr Rudd did not inform her he intended to resign. http://www.bbc.co.uk...d-asia-17123397
-
- 0 replies
- 357 views
-
-
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த ஆளும்கட்சி பல பரிட்சையில் தாரளமாவாத கட்சியில் தொடர்பாடல் அமைச்சரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான மல்கம் டேர்ன்புல் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார். மேலும் படிக்க: MALCOLM Turnbull will be Australia’s 29th prime minister, after beating Tony Abbott for the Liberal leadership. The former communications minister won the partyroom ballot 54-44. Mr Turnbull beamed as he left the partyroom flanked by his deputy, Foreign Minister Julie Bishop. Mr Abbott looked stunned as he walked past the cameras. There was a second vote for deputy leader, which Foreign Minister Julie Bishop won over Kevin Andrews, 70-30. There were two extra votes f…
-
- 4 replies
- 922 views
-
-
அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வுக்கான எதிர்பார்ப்புடன் நாரூதீவில் காத்திருக்கும் 74 இலங்கை அகதிகள் [Tuesday December 25 2007 09:37:52 AM GMT] [pathma] நாரூதீவில் கடந்த மார்ச் முதல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 74 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் புதுவாழ்வை ஆரம்பிப்பதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நாரூவிலுள்ள தடுப்பு முகாமை மூடிவிடுவதில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் உறுதியாக உள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடையும் நோக்கத்துடன் கடந்த மார்ச்சில் படகில் பயணித்த 83 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த செப்டெம்பரில் அவர்களில் 74 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமது தாயகத்திற…
-
- 0 replies
- 967 views
-
-
கொரோனா வைரஸ் அச்ச சூழ்நிலையின் மத்தியில் மெல்பேர்ன் பேருந்து சாரதியொருவரை இனரீதியில் பயணியொருவர் அவமதித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பயணியொருவர் பஸ் சாரதியை சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வைரசினை கொண்டுவந்தவர் என தெரிவித்து அவமதித்துள்ளார். அவர் என்னை கொரோனா என அழைத்தார்,அவர் என்னை சீனா என அழைத்தார்,நான் வைரசினை அவுஸ்திரேலியாவிற்குள் கொண்டுவந்தவன் என தெரிவித்தார் என பேருந்து சாரதி தெரிவித்துள்ளார். இதுமோசமான அருவருப்பான நடவடிக்கை என பேருந்து சாரதி குறிப்பிட்டுள்ளார். பேருந்து சாரதியின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ள விக்டோரியாவின் தலைமை நிர்வாகி டானியல் அன்றூஸ் குறிப்பிட்ட பேருந்து சாரதியை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு…
-
- 0 replies
- 288 views
-