Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முடக்கநிலை விதிகளை மீறியதாக,,, இரண்டாவது அமைச்சர், ஒப்புக்கொண்டார்! டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் விருந்துகளில் கலந்துக்கொண்டு முடக்கநிலை விதிகளை மீறியதாக இரண்டாவது அமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளார். துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டொமினிக் ராப் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச வர்த்தக செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெலியன் ஒப்புக்கொண்டார். எனினும், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த வார தொடக்கத்தில், 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கட்சிகள் மீதான விசாரணையின் விளைவாக விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை பெருநகர பொலிஸ்துறை …

  2. உளவு செயற்கைக்கோளை... வெற்றிகரமாக ஏவி, தென்கொரியா சாதனை! திட எரிபொருளில் இயங்கும் ரொக்கட்டில் உளவு செயற்கைக்கோளை ஏவி தென் கொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக தென்கொரியா பெருமைக் கொண்டுள்ளது. இந்தச் சோதனை தென் கொரிய இராணுவ அமைச்சர் சூ வூக் முன்னிலையில் தலைநகர் சீயோலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் என் எனும் பகுதியில் நடத்தப்பட்டது. இது குறித்து தென் கொரிய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது நமது இராணுவத்தில் ஒரு மைல்கல். அதுமட்டுமல் விண்வெளி ஆராய்ச்சிகளில் சுதந்திரமான முயற்சி. இதனால் நமது கண்காணிப்பு திறனும் அதிகரிக்கும்’ என த…

  3. ரஷ்யா, உறுதி அளித்தது போல்.... படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு! இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா உறுதியளித்தது. ஆனால், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வாக்குறுதியை நம்ப தயாராக இல்லை எனவும் ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உக்ரைனில் ரஷ…

  4. அணு ஆயுதங்களுடன் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள்: திடுக்கிட வைக்கும் தகவல் அணு ஆயுதங்களுடன் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள் குறித்த திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷிய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் தேதி, நான்கு ரஷிய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக சுவீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை செ…

  5. இஸ்ரேலில் ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில், ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களினால், மொத்தமாக 11பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய அரேபியர்களின் தாக்குதல்களில் 6பேர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருந்தனர். துப்பாக்கிதாரி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த மருத்துவ உதவியாளர் தெரிவித்தார். இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்த…

  6. பெரும்பான்மையை இழந்தது பாகிஸ்தான் அரசு – என்ன செய்ய போகிறார் இம்ரான் கான்? பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதோடு அல்லாமல் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் MQM கட்சி உடன்படிக்கையையும் செய்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. …

    • 1 reply
    • 209 views
  7. பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்றும் £50 நோட்டுகள் செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) அறிவித்துள்ளது. ஜே.எம்.டபிள்யூ டர்னர் மற்றும் கணிதவியலாளர் ஆலன் டூரிங் ஆகியோரைக் கொண்ட காகிதத் தாள்களுக்குப் பதிலாக நீடித்து நிலைத்திருக்கும் பிளாஸ்டிக் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவர பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தங்களின் காகித £20 மற்றும் £50 நோட்டுகளை செலவழிக்க அல்லது வங்கியில் வைப்பிலிடுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காகித நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல்,…

  8. "நேட்டோ" உச்சி மாநாட்டில்... பங்கேற்குமாறு, உக்ரைனுக்கு அழைப்பு! பிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்ரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2-ஆவது முறையாகும். சில அமைச்சர்கள் வீடியோ இண…

  9. இராணுவ நடவடிக்கையை... குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம், யாரும் ஏமாற வேண்டாம் என்கிறது அமெரிக்கா! கிவ் நகரின் மீது இராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். திடீரென படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையினையும் அவர் விமர்சித்துள்ளார். சிறிய அளவிலான படைகள் கிவ் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது படைகளை இடம் மாற்றும் உத்தியே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனின் ஏனைய பகுதிகளில் கடுமையான ம…

  10. டவுனிங் ஸ்ட்ரீட்- வைட்ஹால்: முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீறி, நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதங்கள்! டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை வழங்கவுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தண்டனையை எதிர்கொள்ளும் நபர்களின் பெயரையோ அல்லது அவர்கள் எந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் என்பதையோ பெருநகர பொலிஸ்துறை வெளிப்படுத்தவில்லை. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ஹில்மேன்’ என்று பெயரிடப்பட்ட விசாரணை தொடர்பான முறையான சட்ட கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்ட 100 பேரில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஒருவர். தொழிலாளர் கட்சியி…

  11. மிகவும் சக்தி வாய்ந்த... தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க, வடகொரியா திட்டம்! மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி வரும் வடகொரியா, தனது ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கும் முயற்சியில் கூடுதல் ஏவுகணை சோதனைகளை நடத்தலாம் அல்லது அணு ஆயுதத்தை விரைவில் சோதிக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் நாட்டின் தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான உறுதியை கிம் வெளிப்படுத்தியதாக, க…

  12. நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் இதனை தெரிவித்துள்ளார் உக்ரைன் யுத்தம் காரணமாக ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தாது ஆனால் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் இராணுவநடவடிக்கையின் முடிவு அணுவாயுதங்களை பயன்படுத்துவதை தீர்மானிக்காது என தெரிவித்துள்ள பெஸ்கொவ் எங்கள் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படு…

    • 0 replies
    • 425 views
  13. ரஷ்யா படையெடுப்பால்... உக்ரைனுக்கு, 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு! ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்த இழப்பில், உட்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும். இதனால், 8,000 கி.மீ தொலைவிலான வீதிகள் சேதமடைந்துள்ளது. 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ரஷ்யர்கள் சுமார் 1 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் அளவுக்கான பணத்தை வெளிநாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கியிருப்பதாக அட்லாண்டிக் சபை என்ற அமெரிக்க சிந்தனைக்…

  14. மத்திய மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 19பேர் உயிரிழப்பு- பலர் காயம்! மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் உள்ள லாஸ் டினாஜாஸ் நகரத்தில் ஒரு கூட்டத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. துப்பாக்கி ஏந்தியவர்கள் சேவல் சண்டைக் குழிக்குள் நுழைந்து பங்கேற்பாளர்களை நோக்கிச் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்டவர்களில் 16 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக மாநி…

  15. போர் நிறுத்தம்: துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் போரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இரு தரப்பிலும் பலத்த உயிர் மற்றும் பொருட் சேதங்கள் மட்டுமன்றி உலகளவிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. போர் நிறுத்தம் தொடர்பாக முன்னதாக பெலராஸில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நட…

  16. யுக்ரேனிய அகதிகளை இலக்கு வைக்கும் பாலியல் தொழில் குழுக்கள் - புதிய ஆபத்து கட்யா அட்லெர் ஐரோப்பா ஆசிரியர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அகதிகள் அந்நியர்களை நம்பியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இப்போது ஐந்து வாரங்களாகி விட்டன. அங்கு வாழ்வது எப்படியிருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். வெடிகுண்டுகள், ரத்தக்களரி, அதிர்ச்சி, நாட்டின் பல பகுதிகளில் உங்கள் குழந்தைகள் செல்வதற்குப் பள்ளிகள் இல்லை. பெற்றோருக்கான சுகாதார வசதியில்லை. பாதுகாப்பான வீடு இல்லை. நீங்கள் அங்கிருந்து த…

  17. ஐ.நா.,வில் தீர்மானம் புறக்கணிப்பு… இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யை தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது போர் ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில், உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது.ஆனால், அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ஷ்யாவின் தீர்மானத்திற்கு தேவையான 9 வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால், அவை நிறைவேற்றப்படவில்லை. தீர்மானத்தை புறக்கணித்தது மூலம், இந்தி…

    • 0 replies
    • 199 views
  18. ரஷ்யாவுடன் இணைய பொது வாக்கெடுப்பு கம் சினி செய்திகள் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியான லுஹான்ஸ்கை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அந்தப் பகுதி ஆட்சியாளா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து லுஹான்ஸ்க் ‘குடியரசு’ தலைவா் லியோனிட் பாசெச்னிக் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ரஷ்யாவின் ஒரு பகுதியாக லுஹான்ஸ்கை அறிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக கூடிய விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா். கடந்த 2014 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது, உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்ட லியோனிட் படை, ரஷ்யா உதவியுடன் லுஹான்ஸ்க் பகுதிய…

    • 0 replies
    • 349 views
  19. உக்ரைன் போரே இன்னும் முடியல.. அதற்குள் ஜப்பானை சீண்டும் ரஷ்யா! கீவ்: உக்ரைன் போரே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்து ஜப்பானைச் சீண்டும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது. கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரில் உள்ள முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. புதினின் இந்த போர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேபோல ரஷ்யா மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. உக்ரைன் போர் இருந்தாலும் கூட போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த போர் காரணமாக இரு நாட்ட…

    • 3 replies
    • 392 views
  20. யுக்ரேனை கொரியா போல இரண்டாக உடைக்க நினைக்கும் ரஷ்யா: யுக்ரேன் உளவுத் துறை 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS கொரியாவைப் போல யுக்ரேனை இரண்டாகப் பிளக்க ரஷ்யா முயல்வதாக யுக்ரேன் நாட்டு ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. யுக்ரேன் முழுவவதையும் கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், யுக்ரேனை இரண்டாக உடைத்து ஒன்றை ரஷ்ய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி நடப்பதாக யுக்ரேன் ராணுவ உளவுத் துறையின் தலைவர் கைரைலோ புடனோவ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். யுக்ரேனில் 'வட கொரியா, தென் கொரியா' போல ஒரு பிளவை உருவாக்க ரஷ்யா முயல்வதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய படையெடுப்பு …

  21. உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: நாள் குறித்த ரஷ்யா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் மே 9ம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிடுகிறது. இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவை ரஷ்யா மிக பிரமாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. https://tamilwin.com/article/russo-ukrainian-wa…

    • 8 replies
    • 692 views
  22. அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் March 24, 2022 உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது சமீபத்திய காணொளியில் மூலம் உரையாற்றிய அவர், ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரம் தொடர்புடையது அது – ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் . “உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால் உக்ரைனை…

    • 28 replies
    • 2.1k views
  23. மரியுபோல் மீது தொடர் தாக்குதல்; ரஷ்யா இந்த நகருக்கு முக்கியத்துவம் அளிக்க காரணம் என்ன? ஆயுதங்களை விட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா கூறியதை உக்ரைன் ஏற்றுக் கொள்ளாத நிலையில் உக்ரேனிய நகரமான மரியுபோல் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். தொடர்ந்து குண்டுகளை வீசி நகரத்தை அழித்து சாம்பல் நிலமாக மாற்றிவிட்டனர் ரஷ்ய படையினர் என்று அந்த நகர கவுன்சில் அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு ரஷ்ய – ஆதரவு பிரிவினைவாதிகளால் டோனெஸ்ட்க் நகரத்தை கைப்பற்ற முடியவில்லை, அதனை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மரியுபோலில் போர் புரிந்து வருகிறது ரஷ்யா. இந்த கட்டுர…

  24. யுக்ரேன் போரில் ரஷ்ய ஜெனரல் பலி: லுவீவ் நகரில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிப்பு 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DENIS NASIK/WIKIMEDIACOMMONS யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 31-வது நாளாகத் தொடரக்கூடிய சூழலில் ரஷ்ய ஜெனரலான, லெப்டினென்ட் ஜெனரல் யாகோவ், யுக்ரேனின் தெற்கு நகரமான கெர்சனில் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய அதிகாரி ஒருவர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டுள்ள ஏழாவது ரஷ்ய ஜெனரல் இவர் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் வரிசையில் இரண்டாவது நபர் என்றும் கூறியுள்ளார். ரஷ்ய படை வீரர்களின் மன உறுதி மிகவும் குறைந்து வருவத…

  25. சவுதி அரேபியாவில்... எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது, ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்! சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளில்லா விமானத்தின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதே எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல்களை நடத்திய நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ கார் பந்தயத்தை தடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான வடக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.