உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
கொரோனா போல இன்னொரு வைரஸ் வரும்..! – பீதியை கிளப்பும் பில்கேட்ஸ்! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் புதிய வைரஸ் உருவாக உள்ளதாக பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளது. விரைவில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முழுவதுமாக குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பில் கேட்ஸ் “உலகளவில் கொரோனா பர…
-
- 5 replies
- 532 views
-
-
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச எல்லையை திறக்கும் அவுஸ்ரேலியா! அவுஸ்ரேலியா தனது சர்வதேச எல்லையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் திறந்துள்ளது. இந்த செய்தி மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது. கொவிட் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், உலகின் கடுமையான பயணத் தடைகளை அவுஸ்ரேலியா விதித்தது. எனினும், அவுஸ்ரேலியர்கள் மற்றும் சிலர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) சிட்னி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் விமானங்களில் வரத் தொடங்கினர். …
-
- 0 replies
- 240 views
-
-
1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன். 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். 169,000 முதல் 190,000 ரஷ…
-
- 6 replies
- 458 views
-
-
போர் விமானம் மீது லேசர் தாக்குதல் : சீனா மீது அவுஸ்ரேலியா குற்றச்சாட்டு சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று தனது போர் விமானம் ஒன்றின் மீது “மிலிட்டரி கிரேட்” லேசரை பிரகாசித்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்தபோது, சீனக் கப்பல் வடக்கு அவுஸ்ரேலிய அரபுரா கடலில் சென்று கொண்டிருந்தது என்றும் அறிவித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தொழில்சார் மற்றும் பாதுகாப்பற்ற இராணுவ நடத்தையை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் குற…
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
பிரேசில் வெள்ளத்தால் 146 பேர் பலி ; பாதகமான வானிலையால் மீட்பு பணிகள் பாரிய சிக்கலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் பேரழிவினை தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவினையடுத்து உயிர் தப்பியவர்களை தேடுவதற்கான மீட்பு பணிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமையன்று பலமுறை தங்கள் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. அனர்த்தம் காரணமாக குறைந்தது 27 குழந்தைகள் / சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட மொத்தம் 146 பேர் உயிரிழந்துள்ளனர், அதேநேரத்தில் காணால்போன 191 நபர்களை தேடும் பணிகளும் பாதகமான வானிலையினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. 900 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் காப்பகங்களில் …
-
- 1 reply
- 184 views
-
-
கிழக்கு உக்ரேனில் 2,000 போர்நிறுத்த மீறல்கள் பதிவு 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். உக்ரேன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார். இதேவேளை கிழக்கு உக்ரேனில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்கள் சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளன. இந் நிலையில் உக்ரேனின் ஜனாத…
-
- 3 replies
- 368 views
- 1 follower
-
-
கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதலின் வரலாறு டோனி பெரோடட் பிபிசி ட்ராவல் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 30வது கட்டுரை இது.) நியூயார்க் நகரத்தின் 82வது தெருவில் உள்ள வீடு எண் 155, மன்ஹாட்டனின் அப்பர் வெஸ்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
ஐரோப்பாவை தாக்கிய கடுமையான புயலால் எட்டு பேர் உயிரிழப்பு! வடமேற்கு ஐரோப்பாவை மணிக்கு 196 கிமீ (122 மைல்) வேகத்தில் தாக்கிய கடுமையான புயல் அப்பகுதியில் குறைந்தது எட்டு பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் அட்லாண்டிக் புயலான யூனிஸ் புயல், கட்டடங்களை சேதப்படுத்தியது மற்றும் விமானம், நிலம் மற்றும் கடல் வழியான பயணங்களை முடக்கியது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவின் பெரும் பகுதியை தாக்கிய யூனிஸ் புயல், பெல்ஜியம், நெதர்லாந்து மற்ற…
-
- 18 replies
- 797 views
-
-
வேல்ஸில்... கொவிட் கால அனுமதி பத்திர சட்டம் நிறைவுக்கு வருகின்றது! வேல்ஸில் பெரிய நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குள் நுழைய, விதிகள் நீக்கப்பட்டதால், மக்கள் கொவிட் கால அனுமதி பத்திரத்தை காட்ட வேண்டியதில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு கொவிட் தடுப்பூசி அல்லது சமீபத்திய எதிர்மறையான சோதனை முடிவுக்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க கொவிட் கால அனுமதி பத்திரங்கள் உதவும் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் விமர்சகர்கள் நெறிமுறைகள் குறித்து கவலைகளை எழுப்பினர். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் சில நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குச் செல்வதற்கு, கடந்த 48 மணி நேரத்த…
-
- 0 replies
- 159 views
-
-
உக்ரைனின்... எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா? உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் மழலையர் பாடசாலையின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அமைந்துள்ள மழலையர் பாடசாலையின் மீதே நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, ஒரு ஆசிரியரும், காவலாளியும் காயம் அடைந்தனர். 32 குண்டுகள் நகரின் மீது விழுந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும், மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்காவில் 20…
-
- 1 reply
- 343 views
-
-
ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வெளியேற்றம்! மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகள்…
-
- 0 replies
- 191 views
-
-
தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி! ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது. ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 20ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்களை அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, கொவிட்-19 தொடர்பாக ஜேர்மனி அதிக நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் எச்சரித்தார். ஓ…
-
- 22 replies
- 1.1k views
-
-
உக்ரைனுக்கு... இராணுவ ஆயுத... உதவியினை வழங்க தீர்மானித்தது கனடா! ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் ஏனைய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக த…
-
- 0 replies
- 343 views
-
-
திபெத்தியர்களை இலக்கு வைத்து பௌத்த மதத்தை அழிக்கும் சீனா - திபெத்திய தேரர் திபெத்தியர்களின் அடையாளத்தை அழிக்கும் நோக்கில் சீனா புத்தமதத்தை அழித்ததாக திபெத்திய தேரர் லிங் ரின்போச்சே குற்றம் சுமத்தியுள்ளார். பல ஆண்டுகளாக திபெத்தியர்கள் மீது சீனா 'மனிதாபிமானமற்ற மற்றும் மிருகத்தனமான அட்டூழியங்களை' முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தலை லாமாவின் அரண்மனை, மகத்தான பல்வேறு மடங்கள் , புத்தர் சிலைகள் வரலாற்று மற்றும் ஆன்மீக மதிப்புள்ள புத்தர் சிலைகள் , இலக்கியங்கள் மற்றும் பௌத்த அடையாளங்களை சீனா அழித்துள்ளது. இன்று என் தேசம் வறுமையின் பிடியில் உள்ளது. 1000 க்…
-
- 2 replies
- 392 views
-
-
போராட்டம் எதிரொலி: முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது கனடா! கொவிட்-19 சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கம் முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அவசரகாலச் சட்டம் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு வழங்கலாம், ஆனால் அதற்கு வழிவகுக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அரசாங்கம் அவர்களைக் கொண்டுவரவில்லை என்று பிரதமர ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ஆனால், அது குடிமக்களின் சுதந்திர நடமாட்டம் அல்லது ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். மேலும் சட்டவிரோத போராட்டங்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது…
-
- 2 replies
- 482 views
-
-
48 மணித்தியாலத்துக்குள் ரஷ்யாவுடன் பேச்சுவார்தை நடத்த விரும்பும் உக்ரைன்! உக்ரைன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக, ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களை சந்திக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா, துருப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கான முறையான கோரிக்கைகளை ரஷ்யா புறக்கணித்துள்ளது எனக் கூறியுள்ளார். ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து அறிந்துக் கொள்வதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சந்திப்பைக் கோருவதாக அவர் மேலும் கூறினார். உக்ரைனின் எல்லையில் சுமார் 100,000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால், சில …
-
- 0 replies
- 279 views
-
-
கட்டாய COVID-19 தடுப்பூசி மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளை நிறுத்தக் கோரும் எதிர்ப்பாளர்கள் கனடா முழுவதும் பல்வேறு இடங்களில் மூன்றாவது வார இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிற்கு ஆதரவாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. Freedom Convoy போராட்டம் ஜனவரி பிற்பகுதியில் ஒட்டாவாவிற்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து முக்கிய எல்லைக் கடப்புகளில் முற்றுகையிடப்பட்டதுடன், கனடா முழுவதும் இதேபோன்ற போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் கனடா மக்களிற்கு பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எட…
-
- 0 replies
- 300 views
-
-
யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக யுக்ரேனைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டினர் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையால், பிற நாடுகளும் யுக்ரேனில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை…
-
- 10 replies
- 881 views
- 1 follower
-
-
மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர். வித்தியாசமான இரசிய சீன…
-
- 0 replies
- 354 views
-
-
மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு! மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இக்கோங்கோவில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்களை இன்னும் சேகரித்து வருவதாக இந்த வார தொடக்கத்தில் அது கூறியது. எனினும், இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. …
-
- 0 replies
- 181 views
-
-
கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு! அடுத்த வாரம் கடற்படை பயிற்சிக்கு ரஷ்யா தயாராகி வரும் நிலையில், கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘அசோவ் கடல் முற்றிலும் தடுக்கப்பட்டது மற்றும் கருங்கடல் கிட்டத்தட்ட முழுமையாக ரஷ்ய படைகளால் துண்டிக்கப்பட்டது’ என கூறினார். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தங்களில் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டதாக பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார். உக்ரைனின் தெற்கே உள்ள கருங்கடல் மற்…
-
- 0 replies
- 259 views
-
-
பதற்றங்களுக்கு மத்தியில்... ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்! பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி …
-
- 0 replies
- 194 views
-
-
சூரியப் புயலில் சிக்கி எரிந்தன ஸ்பேஸ்எக்ஸின் 40 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்துள்ளன. இது குறித்து ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, “கடந்த வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் வெள்ளிக்கிழமையன்று சூரிய காந்த புயலில் சிக்கி வளிமண்டலத்தை வெப்பமாக்கியது. இந்நிலையில், அப்போது அங்கு எதிர்பார்த்ததை விட மிகவும் அடர்த்தியான வெப்ப நிலை காணப்பட்டதாக” , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் 40 செயற்கை…
-
- 0 replies
- 296 views
-
-
சவுதிஅரேபிய விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் -இலங்கையர்கள் உள்ளிட்ட 12 பேர் காயம் சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் வியாழன் அன்று வான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் துண்டுகளால் 12 பேர் காயமடைந்தனர். ரியாத் - எல்லைக்கு அருகில் உள்ள யேமன் கிளர்ச்சியாளர்களின் விமான நிலையத்தை குறிவைத்து சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை ஆகாயத்தில் வெடிக்கச் செய்ததில், விமானதாக்குதலின் போது குப்பைகள் விழுந்ததில் இவ்வாறு காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நண்பகல் நேரத்தில் ட்ரோன் தாக்குதலில் இருந்து துண்டுகள் விமான நிலைய மைதானத்திற்குள் விழுந்து சில கண்ணாடி முகப்புகள…
-
- 0 replies
- 147 views
-
-
முடக்கப்பட்ட நிதியின் பாதித் தொகையை... ஆப்கானின், மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நிவாரணத்துக்கும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் ஆப்கானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, அந்நாட்டின் வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் உள்ளது. முந்தைய ஆப்கான் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான நிதி சர்வதேச சமுதாயத்திடம் …
-
- 0 replies
- 142 views
-