உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
கசக்கஸ்தான் அமைச்சரவை இராஜினாமா! எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கசக்கஸ்தான் அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளது. கசக்கஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வலப்பெற்றதையடுத்து, அமைச்சரவை தமது இராஜினாமா கடிதத்தை கையளித்தது. இதனை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கசக்கஸ்தானின் ஜனாதிபதி இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். இந்நிலையில், கசக்கஸ்தான் அமைச்சரவையின் இராஜிநாமாவை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட…
-
- 2 replies
- 365 views
-
-
பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! January 4, 2022 பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் கிலக்காகி அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர். போக்டனோஃப் (Bogdanoff) சகோதரர்கள் என அழைக்கப்பட்ட இகோர்(Igor) மற்றும் கிறிச்க்கா (Grichka) இருவரும் ரஷ்யாவை பூர்வீகமாகக்கொண்டவர்கள். பிரான்ஸில்1949 இல் பிறந்தவர்கள். 72 வயதான இருவரும் வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் பாரிஸ் பொம்பிடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டு ஆறு நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என…
-
- 0 replies
- 358 views
-
-
கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா ! கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த நகரை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய உணவு விற்பனையகம் தவிர்ந்த, ஏனைய அனைத்து விற்பனையகங்களும் ஒரே இரவில் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக, 13 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சியான் நகரில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள புத்தாண்டு மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போ…
-
- 0 replies
- 264 views
-
-
ஒமிக்ரோனையடுத்து புதிய கொவிட் மாறுபாடு பிரான்ஸில் கண்டறியப்பட்டது Published by J Anojan on 2022-01-04 ஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்ற நிலையில், கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. IHU என பெயரிடப்பட்ட B.1.640.2 மாறுபாடு IHU மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் வேகம் ஒமிக்ரோனை விடவும் அதிகம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். புதிய மாறுபாட்டுன் தொடர்புடைய குறைந்தது 12 தொற்றாளர்கள் பிரான்ஸ் நகர் மார்செய்ல்ஸ் அருகே பதிவாகியுள்ளனர். https://…
-
- 3 replies
- 496 views
-
-
2022 இல் உலகம்: ஆபத்தான வாழ்க்கையின் மற்றொரு ஆண்டு மூலம்: https://www.theguardian.com/world/2021/dec/29/the-world-in-2022-another-year-of-living-dangerously? தமிழாக்கம்: Google Translate செம்மைப்படுத்தப்படவில்லை! காலநிலை, தொற்றுநோய் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பதட்டங்கள் என்பது கடந்த 12 மாதங்களைப் போலவே அடுத்த ஆண்டு கொந்தளிப்பானதாக இருக்கும். ஒரு புதிய ஆண்டின் விளிம்பில், உலகம் பலவிதமான சவால்களை எதிர்கொள்கிறது: மீண்டும் எழும் கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை அவசரநிலை, ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு இடையிலான போராட்டம், மனிதாபிமான நெருக்கடிகள், வெகுஜன இடம்பெயர்வு மற்றும் நாடுகடந்த பயங்கரவாதம். புதியமாநிலங்களுக்கு இடையேயா…
-
- 0 replies
- 526 views
-
-
வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்? அபுல் கலாம் ஆசாத் பிபிசி பங்களா, டாக்கா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவு பல காரணங்களுக்காக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வங்கதேசத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. பைடன் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக க…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும்: பைடன் ரஷ்யா தனது மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது படையெடுக்க முயற்சித்தால், வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானமாக பதிலளிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைப்பேசி உரையாடலின் போது உறுதியளித்தார். உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையில் பதற்றங்களுக்கு மத்தியில் பைடன் ஒரு மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டாவது உரையாடலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளிவந்துள்ளது. ஜனவரி 9ஆம் மற்று…
-
- 1 reply
- 335 views
-
-
நாடுகளில் வளங்களில் இலாபம் அடைவதே சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் நோக்கம் : அறிக்கை (ஏ.என்.ஐ) சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டம் வீணான செலவுகள், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் பாரிய கடன் சுமைகளுக்கு ஒத்ததாக மாறியுள்ளது. மேலும் நாட்டின் இயற்கை வளங்கள் அல்லது மக்களின் செலவில் பங்கேற்கும் நாட்டின் தலைவர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதை சீன திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பீ.ஆர்.ஐ திட்டங்கள் தொடர்பான 1,814 திட்டங்களில் 270 திட்டங்களில் கடன் நிலைத்தன்மை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள், தேசிய பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக ஆய்வவ…
-
- 1 reply
- 270 views
-
-
ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது ஈரான்: செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதா? 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது. டெக்ரான், விண்வெளியில் ராக்கெட் ஒன்றை செலுத்தி உள்ளதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என தெரியவில்லை. அமெரிக்காவுடன் மோதல் போக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார த…
-
- 1 reply
- 300 views
-
-
33 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகன்: தாயுடன் இணைத்து வைத்த வரைபடம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BEIJING NEWS / WEIBO படக்குறிப்பு, நான்கு வயதில் குழந்தை கடத்தல் கும்பலுக்கு விற்கப்பட்ட லி ஜிங்வேய், ஜனவரி 1 ஆம் தேதியன்று தனது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சீன நபர் ஒருவர் தாம் குழந்தை பருவத்தில் வளர்ந்த கிராமத்தின் படத்தை, நினைவுகூர்ந்து வரைந்த பின்னர், தன்னை பெற்ற தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார். லி ஜிங்வேய்க்கு நான்கு வயதாக இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார். …
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீவிபத்து January 2, 2022 தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறி, வானத்தில் தோன்றியுள்ள கரும் புகை வீடியோ காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன. கூரை மற்றும் தேசிய சட்டமன்ற கட்டிடம் ஆகியன தீப்பிடித்துள்ளது எனவும் தீ கட்டுக்குள் வரவில்லை எனவும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் நகரின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா். பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச் சடங்கு நாடாளுமன்…
-
- 0 replies
- 224 views
-
-
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு Posted on January 1, 2022 by தென்னவள் 22 0 கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப…
-
- 1 reply
- 413 views
-
-
அமெரிக்காவில் காட்டுத்தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்- ஆயிரம் வீடுகள் தீக்கிரை! அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. டென்வரின் வடக்கே உள்ள போல்டர் கவுண்டியில் வேகமாக தீ பரவி வருவதாக ஆளுநர் ஜெரெட் போலிஸ் தெரிவித்துள்ளார். லூயிஸ்வில்லி மற்றும் சுப்பீரியர் நகரங்களில் உள்ள சுமார் 30,000 பேர் வியாழக்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டனர். அத்துடன் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 169 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்று, வரலாற்று வறட்சிக்கு மத்தியில் இப்பகுதி முழுவதும் காட்டு…
-
- 0 replies
- 229 views
-
-
தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் சக்திகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக தாய்வானை அமெரிக்கா ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்வான் தொடர்பான அமெரிக்காவின் செயல்களுக்காக, அந்த நாடு தாங்க முடியாத விலை கொடுக்க வேண்டியிருக்கும். சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்ல…
-
- 1 reply
- 287 views
-
-
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு EPACopyright: EPA சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.Image caption: சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாண வேடிக்கையுடன் 2022 புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் மக்கள் பெருமளவில் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா …
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
டெல்டா, ஒமிக்ரோன் திரிபுகள் சுனாமியை போல் ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை டெல்டா, ஒமிக்ரோன் போன்ற கொவிட்-19 வைரஸ் திரிபுகள் "சுனாமியை" போல் ஆபத்தான பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். அத்துடன் இது சுகாதார அமைப்புகளில் "மிகப்பெரிய அழுத்தத்தை" ஏற்படுத்தும் என்றும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். உலகளவில் பதிவான கொவிட்-19 தொற்றளர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 20 முதல் 26 வரை கிட்டத்தட்ட 4.99 மில்லியன் புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஐரோப்பாவில் புதிய தொற்றுக்க…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: மனிதர்களை தாக்கும் முதலைகள் - அதிர்ச்சித்தகவல் சர்பாஸ் நசரி பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஆடு மேய்ப்பவரான சியாஹூக், ஒரு குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார். எளிமையான வீட்டு தரையில் படுத்திருந்த சியாஹூக், தனது வலது கையில் ஏற்பட்ட காயத்தால் கடுமையான வலியில் இருக்கிறார். இது ஒரு பயங்கரமான சம்பவத்தின் விளைவு. இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு கடும் வெப்பமான ஆகஸ்ட் மதிய வேளையில், பலவீனமான 70 வயதான இந்த மேய்ப்பன் ஒரு குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றார், அப்போது இரானின் பலூசிஸ்தான் பகுதியி…
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
இது கடைசி அல்ல இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உலகை உலுக்கி வரும் ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்கிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.இந்நிலையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், கொரோனா என்பது…
-
- 2 replies
- 297 views
-
-
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது.அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது.சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒரும…
-
- 0 replies
- 292 views
-
-
பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாசாரத்தின் அம்சம் : இம்ரான் கான் (ஸீ இந்துஸ்தான்) ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர். அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் ப…
-
- 1 reply
- 424 views
-
-
பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை! பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் முகமூடி அணிந்த ஒரு நபர், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக பேசும் கணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இந்தக் காணொளியில் தன் பெயர் டர்த் ஜோன்ஸ் எனவும் அந்த நபர் கூறுகிறார். இந்த காணொளி ஸ்னாப்சாட் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் அவரைப் பின்தொடர்வோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விண்ட்சரில் உள்ள அரச குடும்பத்துக்க…
-
- 0 replies
- 236 views
-
-
புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் கிடையாது: சஜித் ஜாவித் புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால் புத்தாண்டு ஈவ் வெளியில் கொண்டாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அமைச்சர்கள் தரவை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், மக்கள் தங்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை தாமதமின்றி பெறுமாறு வலியுறுத்தினார். இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரண்டும் கிறிஸ்மஸில் பதிவு செய்யப்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன. இங்கிலாந…
-
- 0 replies
- 208 views
-
-
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது. தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது. இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு ந…
-
- 0 replies
- 208 views
-
-
ஒமிக்ரோன் எதிரொலி: கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் பிரான்ஸ்! ஓமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல், தொலைதூரத்தில் பணிபுரிவது கட்டாயமாக்கப்படும். மேலும், பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சனிக்கிழமையன்று பிரான்ஸ் 100,000க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்ததால் இந்த செய்தி வந்துள்ளது. இதுவே பிரான்ஸில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆனால், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், புத்தாண்டை முன்னிட்டு முடக்கநிலை உத்தரவை கொண்டு …
-
- 0 replies
- 254 views
-
-
ஆப்கான் பெண்கள் வெளியில் செல்லத்தடை : தலிபான்கள் புதிய உத்தரவு ஆண் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது என ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. கடந்த 1990களில் பெண்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர். தற்போது மீண்டும் நிர்வாகம் அவர்களிடம் வந்துள்ளதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பாடசாலைகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் பெண் நிருபர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், முழு உடலை மறைக்கும் …
-
- 0 replies
- 270 views
-