உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…
-
- 0 replies
- 202 views
-
-
வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களுக்கு தடை! ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் தடை செய்யப்படுவார்கள் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து உட்புற, வெளிப்புற, தொழில்முறை மற்றும் சமூக விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். விளையாட்டு கழகங்கள் மற்றும் அரங்குகளை ஆதரிக்க மூன்று மில்லியன் பவுண்டுகள் பார்வையாளர் விளையாட்டு நிதி கிடைக்கும் என பொருளாதார அமைச்சர் வாகன் கெதிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸுக்குப் பிந்தைய விருந்தோம்பல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பின்…
-
- 1 reply
- 212 views
-
-
ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி! ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும…
-
- 15 replies
- 652 views
-
-
பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு! பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சுப்பர் ராய் புயலால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. …
-
- 0 replies
- 441 views
-
-
அட்லாண்டிக் தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் திட்டம் தோல்வி ஜோனா ஃபிஷர் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RSPB படக்குறிப்பு, கௌக் தீவு தெற்கு அட்லாண்டிக்கில் இருக்கும் கௌக் என்ற தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் லட்சியத் திட்டத்தின் தலைவர், இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் மனமுடைந்து இருப்பதாகக் கூறியுள்ளார். கௌக் தீவில் பொருத்தப்பட்ட ஒரு தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள், எலிகளை முழுவதுமாக அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு எலியாவது உயிர் பிழைத்திருப்பதைச் சுட்டிகாட்டியுள்ளது. …
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸ் சூறாவளி – உயிரிழப்பு எண்ணிக்கை 75 பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் காரணமாக குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காரணமாக 300,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இழப்பு குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை. போஹோலின் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 49 ஆக உள்ளது, மேலும் குறைந்தது 10 பேரைக் காணவில்லை என்று ஆளுநர் யாப் கூறினார். சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸின் பேரிடர் நிறுவனம், போஹோல் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்ததாகக் கூறியது. இதேவேளை நாட்டின் மிக மோசமாக பாதிக்க…
-
- 0 replies
- 213 views
-
-
கதிரியக்க நெக்லஸ் 5ஜி தாக்கத்தில் இருந்து காக்கும் என கூறி விற்பனை: தடை செய்த அதிகாரிகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RIVM படக்குறிப்பு, கதிரியக்கத்திலிருந்து காக்கும் என விற்பனை செய்யப்படும் பதக்கம் 5ஜி இணைய சேவையால் ஏற்படும் கதிரியக்கத்திலிருந்து காக்கும் எனக்கூறி, விற்பனை செய்யப்படும் கழுத்தில் அணியக்கூடிய நெக்லஸ் உள்ளிட்ட பிரத்யேக பொருட்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவையாக உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டச்சு அணு மற்றும் கதிரியக்க பாதுகாப்பு ஆணையம் (ஏஎன்விஎஸ்), தீங்கு விளைவிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் 10 பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இ…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
ஒமிக்ரோன் மின்னல் வேகத்தில் பரவுகிறது – பிரெஞ்சு பிரதமர் ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பிரெஞ்சு பிரதமர் இதனை அறிவித்துள்ளார். இந்த பயணக் கட்டுப்பாடுகள் தொற்றுநோய்களின் அலைகளைத் தடுக்க கொண்டுவரப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என பிரெஞ்சு பிரதமர் கூறியுள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன…
-
- 2 replies
- 349 views
-
-
பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி - மனித குலத்துக்கான எச்சரிக்கை விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CENAP-ICMBIO 2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர். பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு. இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும்…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
தந்தை நினைவு தினம் “நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை” வடகொரியா அவலம் வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர் தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார்.1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது. இந…
-
- 0 replies
- 226 views
-
-
சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிலிப்பின்ஸின் டி ஓரோ நகரில் தவிக்கும் மக்களை மீட்கும் கடலோரக் காவல்படையினர். தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன. சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 மைல்) வேகத்தில் காற்று வ…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அத…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா ! கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன. உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொ…
-
- 0 replies
- 281 views
-
-
ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க முயன்ற போது வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். மேலும் இந்த வெடி…
-
- 0 replies
- 270 views
-
-
ஆப்கானில் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்காது! ஆப்கானிஸ்தானில் கடந்த ஒகஸ்ட் மாதம் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு, எந்த அமெரிக்க துருப்புகளும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, காபூலை விட்டு வெளியேறிய இறுதி நாட்களில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலின் போது, ஒரு தன்னார்வ ஊழியர் மற்றும் ஏழு சிறுவர்கள் உட்பட குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் உயிரிழந்தனர். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க துருப்புக்களை கொன்ற சில நாட்க…
-
- 1 reply
- 603 views
- 1 follower
-
-
பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை! சர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது. மற்ற மூன்று எதிர்க்கட்சி பிரமுகர்களான, மைகோலா ஸ்டாட்கேவிச், இகோர் லோசிக், விளாடிமிர் சைகனோவிச் இதே விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார் என பெல்டா தெரிவித…
-
- 0 replies
- 229 views
-
-
சுவீடன் கடற்பகுதியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம்! சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, அப்பகுதியில் பெரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு பேர் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று சுவீடிஷ் கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கவிழ்ந்த கரின் ஹோஜ் என்ற கப்பல் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றைய கப்பலுக்கு ஸ்காட் கேரியர் என்று பெயரிடப்பட்டது. விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தெற்கு சுவீடிஷ் கடற்கரை நகரமான யஸ்டாட் மற்றும் டேனிஷ் தீ…
-
- 2 replies
- 406 views
-
-
ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - அரசின் நிலைப்பாடு என்ன? சிகந்தர் கெர்மானி பிபிசி நியூஸ், ஆப்கானிஸ்தான் 13 டிசம்பர் 2021, 04:30 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதைப் பொருள் பயிரிடும் கோப்புப்படம் தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன. அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி! இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது புதுப்பிப்பை வெளியிட்ட பிரதமர், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், ‘யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம், ஓமிக்ரோனின் அலை வருகிறது. மாத இறுதிக்குள் பூஸ்டர்களை விரும்பும் அனைத்து பெரியவர்களுக்கும் வழங்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர்களில் கவனம் செலுத்த சில மருத்துவ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படும். புதிய மாறுபாட்டான ஒமிக்ரோன் உடனான போரில் நாங்கள் இப்போது அவசரநிலையை எதிர்கொள…
-
- 0 replies
- 230 views
-
-
யுக்ரைன் மீது படையெடுக்க தயாராகி வருகிறதா ரஷ்யா? பால் கிர்பி பிபிசி 42 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யப் படைகள் யுக்ரைன் மீதான போருக்குத் தயாராகி வருகின்றனவா என்று மேலை நாடுகளும் யுக்ரைனும் அச்சத்தில் இருக்கின்றன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு யுக்ரைனில் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பிரச்னைகளைக் கிளப்பிய பிரிவினைவாதிகளுக்கும் ரஷ்யா ஆதரவு தந்திருக்கிறது. படையெடுக்கவோ ஆக்கிரமிக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என்று ரஷ்யா கூறிவந்தாலும், அப்படி ஒருவேளை நடந்தால் கடுமையான, நினைத்துப் பார்க்கவே முடியாத த…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
பேரழிவுகரமான சூறாவளி அமைப்பைத் தொடர்ந்து குறைந்தது 70 கென்டக்கியர்கள் இறந்துள்ளனர், ஆளுநர் ஆண்டி பெஷியர் சனிக்கிழமை காலை ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், "உண்மையில், நாள் முடிவதற்குள் இது 100 ஐத் தாண்டும்" என்று கூறினார். "இது நமது மாநில வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் சூறாவளி நிகழ்வாகும் … பேரழிவின் நிலை நான் இதுவரை கண்டிராதது போல் இல்லை," என்று அவர் கூறினார். இது நமது மாநில வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் சூறாவளி நிகழ்வாகும் … பேரழிவின் நிலை நான் இதுவரை கண்டிராதது போல் இல்லை," என்று அவர் கூறினார். https://www.cnn.com/us/live-news/kentucky-tornado-midwest-south-storms/index.html
-
- 3 replies
- 387 views
- 2 followers
-
-
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல் Posted on December 11, 2021 by தென்னவள் 18 0 பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கா…
-
- 2 replies
- 439 views
-
-
"உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது": அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் ஜோயல் குன்டர் பிபிசி 10 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,DAVID CLIFF/ANADOLU AGENCY VIA GETTY IMAGES ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசு கருத்தடை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே, இந்த முடிவுக்கு வருவதற்கான முதன்மைக் காரணம் என, அத்தீர்ப்பாயம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த வி…
-
- 1 reply
- 620 views
- 1 follower
-
-
பெஞ்சமின் நெதன்யாகு துரோகம் செய்துவிட்டார்: ட்ரம்ப் குற்றச்சாட்டு! தனது நெருங்கிய நண்பரும் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, துரோகம் செய்துவிட்டதாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜோ பைடனின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக பெஞ்சமின் நெதன்யாகு மீது கோபமடைந்ததாக ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கு அமைதியை உருவாக்குவதில் தனது பங்கு பற்றிய புத்தகத்திற்கான நேர்காணலில், ட்ரம்ப் இந்த கருத்தினை வெளியிட்டார். ஆபிரகாம் உடன்படிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு மறுவடிவமைப்பு என்ற புத்தகத்திற்காக இஸ்ரேலிய ஊடகவியலாளர் பராக் ராவிடிடம் பேசிய ட்ரம்ப், ‘இஸ்ரேலை அழிவிலிருந்து காப்பாற்றியதாக நம்புகின்…
-
- 0 replies
- 356 views
-
-
மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு: சித்ரவதைக்கும் பாலியல் துன்புறத்துலுக்கும் ஆளாக்கப்பட்ட பெண் கைதிகள் லாரா ஒவன் மற்றும் கோ கோ ஆங் பிபிசி உலகச் சேவை 10 டிசம்பர் 2021 மியான்மரிலுள்ள பெண்கள் காவலில் இருந்த போது, சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும், பாலியல் வன்முறை மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டனர் என பிபிசிக்கு கிடைத்த பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டை ராணுவம் கைப்பற்றியதை எதிர்த்து போராடிய ஐந்து பெண்கள் கைதுச்செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பின், தடுப்புகாவலிலில் இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கும் சித்ரவதைக்கும் ஆளாக்கப்பட்டனர் என்று கூறுகின்றனர். …
-
- 0 replies
- 314 views
- 1 follower
-