உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். தாய்வானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமது பலத்தைப் பயன்படுத்துவதைச் சீனா இதுவரையில் நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் சீனா போர் ஏற்படக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரும் நிலையில் குறித்த விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 333 views
-
-
737 மேக்ஸ் விமான விபத்து: உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க போயிங் நிறுவனம் சம்மதம்! எத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. சிகாகோவில் உள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர்களின் இறப்புக்கான பொறுப்பை விமான தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்கிறார். பதிலுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நிறுவனத்திடம் இருந்து தண்டனைக்குரிய இழப்பீடு கோர மாட்டார்கள். 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அமெரிக்க நீதித்துறையுடன் அபராதம் மற்றும் இழப்பீடாக ஜனவரி மாதம் போயிங் ஒப்புக்கொண்டது. இ…
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
COP26: புதிய பருவநிலை ஒப்பந்தம் கிளாஸ்கோவில் நிறைவேறியது - சாதித்தது என்ன? பால் ரின்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் தளம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பருவநிலை மாற்றத்தால் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். புவியில் வாழும் உயிர்களை அச்சுறுத்திவரும் ஆபத்தான பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய உலகளாவிய ஒப்பந்தம் நிறைவேறியது. பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்துவந்த சிஓபி26 என்று அறியப்படும் ஐ.நா. பருவநிலை உச்சி …
-
- 0 replies
- 510 views
- 1 follower
-
-
சீன ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்திப்பு: முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெய்நிகர் உச்சிமாநாடு திங்கட்கிழமை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செப்டம்பர் 9ஆம் திகதி தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையேயான போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான வழிகள் மற்றும் எங்கள் நலன்கள் இணையும் இடங்களில் ஒன்றாகச் செயல்படுவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்கள். முழுவதும், ஜனாதிபதி பைடன் தெளிவான அமெரிக்க நோக்கங்கள் மற்றும் முன்ன…
-
- 0 replies
- 483 views
-
-
ஏக்வடோர் சிறைச்சாலையில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு தென் அமெரிக்க நாடான ஏக்வடோர் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கலவரம் தொடங்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் தமது சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி, மோதலினால் இலாபம் …
-
- 0 replies
- 237 views
-
-
மீண்டும் பொது முடக்க நிலைமை: நெதர்லாந்தில் மூன்று வாரங்கள் உணவகம், கடைகள் இரவு மூடல்! November 13, 2021 ஐரோப்பாவின் பல நாடுகளில்”கோவிட்” சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் முதல் நாடாக நெதர்லாந்து கோடை காலத்துக்குப் பிறகு முதல் முறையாக நாட்டில் பகுதியான பொது முடக்கத்தை (partial lockdown) அறிவித்திருக்கிறது. அதிகரித்துவரும் வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அடுத்த மூன்று வார காலத்துக்கு இறுக்கமான பல விதிகளை பிரதமர் மார்க் ரூட்டே (Mark Rutte) அறிவித்திருக்கிறார். புதிய கட்டுப்பாடுகள் வருமாறு : *அத்தியாவசியமற்ற கடைகள் (Non-essential shops) மாலை 18:00 மணியுடன் மூடப்படும். …
-
- 0 replies
- 357 views
-
-
திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாயின் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது. அசர் மாலிக் என்பவரை மலாலா யூசப்சாய் திருமணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசப்சாய் கூறியுள்ளார். "எங்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட சிறிய திருமண நிகழ்வில் அசரும் நானும் வாழ்விணையர்களாகத் திருமணம் செய்து கொண்டோம்," என்று செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மலாலா. இந்தப் பயணத்தில் ஒன்றாகப் பயணிப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய்…
-
- 8 replies
- 669 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் எடுக்கிறது: ஜெர்மனியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு Posted on November 12, 2021 by தென்னவள் 10 0 பிரான்ஸ் நாடு கொரோனாவின் 5-வது அலையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் தெரிவித்தார். அங்கு இதுவரை இந்த தொற்றுக்கு 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களாகவே ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற…
-
- 0 replies
- 208 views
-
-
பீஜிங்கின் ஆக்கிரமிப்பால் தாய்வானுடன் உறவுகளைப் பேணுவதற்கு தள்ளப்படும் ஐரோப்பா! பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக் குழுவின் தலைவரான ரஃபேல் க்ளக்ஸ்மேன், பிரெஞ்சு செய்தித்தாளான லிபரேஷன்க்கு அளித்த செவ்வியின்போது, தாய்வானுக்கு வலுவான ஐரோப்பிய ஆதரவைக் கோரியதாக தாய்வான் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானுடன் ஈடுபாட்டுடனான ஒத்துழைப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பாவிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது என ரஃபேல் க்ளக்ஸ்மேன க…
-
- 0 replies
- 250 views
-
-
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் நூற்றாண்டு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள இப்பகுதியில் இந்த பனிப்பொழிவுக்கு இடையில் வீடுகளை வெப்பமூட்டுவது குறித்த கவலை எழுந்துள்ளது. ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் இப்படி கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி பனிப்பொழிவு 51 செ.மீ. உயரத்தை அடைந்துள்ளது. 1905ம் ஆண்டு முதல் பதிவானதிலேயே மிக அதிகமான பனிப்பொழிவு இதுவாகும் என்கிறது அரசு ஊடகமான ஜின்ஷுவா. இந்த மாகாணத்துக்கு அருகே உள்ள மங்கோலியாவின் உள் பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு அதில் 5,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார். இ…
-
- 0 replies
- 423 views
-
-
அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி! அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கை என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. எனினும், பயிற்சிகளின் நேரம், பங்கேற்பாளர்கள் மற்றும் இடம் பற்றிய எந்த விபரங்களையும் அது வெளியிடவில்லை. தங்களை மீறி தைவானுடன் பிற நாடுகள் தூதரக உறவு கொள்வதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், தாய்வானுடன் அதிகாரபூர்வமற்ற தூதரக மற்றும் இராணுவ நட்ப…
-
- 0 replies
- 234 views
-
-
பருவநிலை மாற்ற பிரச்சினை விவகாரம்: அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயற்படுவதாக அறிவிப்பு! எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வருகின்ற நிலையில், இந்த அரிய உறுதிப்பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன. அதேபோன்று …
-
- 0 replies
- 213 views
-
-
தலிபான்கள் ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் – இந்தியா தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசர்களுடன் அஜித் தோவல் பேச்சவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். இதேவேளை குறித்த மாநாட்டிற்கு இடையில் அவர் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிக…
-
- 0 replies
- 337 views
-
-
தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து – 3 பேர் படுகாயம் தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த தாக்குதலை நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 27 வயது சிரிய நபரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 2014 இல் ஜேர்மனிக்குள் நுழைந்த பின்னர் அகதி அந்தஸ்து பெற்றார் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சனை காணப்பட்டதாகவும் ஜேர்மன் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2021/1248581
-
- 1 reply
- 388 views
-
-
ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத்த தாக்குதல்: ஆறு பேர் காயம்! ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளப் பகுதியில், நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயமடைந்தன…
-
- 1 reply
- 318 views
-
-
சிங்கப்பூரில் மரண தண்டனை: அறிவுசார் மனநல பாதிப்புள்ள மலேசிய இளைஞரை காப்பாற்றத் துடிக்கும் குடும்பம் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHARMILA படக்குறிப்பு, நாகேந்திரன் தர்மலிங்கம் "உங்கள் மகன் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நவம்பர் 10, 2021 அன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்." - சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள இந்தக் கடிதம் மலேசியாவில் உள்ள ஒரு குடும்பத்தை துயரக்கடலில் மூழ்கடித்துள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, தூக்குத் தண்டனையை எதிர்நோக…
-
- 8 replies
- 828 views
- 1 follower
-
-
சீன பாலைவனத்தில் அமெரிக்க போர் கப்பல் மாதிரிகள்: செயற்கைக்கோள் படங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SATELLITE IMAGE/MAXAR TECHNOLOGIES அமெரிக்கப் போர்க் கப்பல்களின் மாதிரியை சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருக்கும் பாலைவனத்தில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது போல செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த விண் தொழில்நுட்ப நிறுவனமான 'மேக்சர்' (maxar) எடுத்த புகைப்படம் ஒன்றில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று ரயில் தண்டவாளங்கள் மீது நிறுத்தப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. யுஎஸ்என்ஐ நியூஸ் எனும் அமெரிக்க கடற்படை குற…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
தொற்றுப் பரவல் பாதிப்புக்கு பிறகு வாடகை கார் ஒட்டுநர்கள் பற்றாக்குறை! உரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொற்றுநோய்க்குப் பிறகு பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 300,000 என்ற பலம் வாய்ந்த பணியாளர்கள் படையில், தற்போது 160,000பேர் குறைவாக உள்ளதாக உரிமம் பெற்ற தனியார் கார் வாடகை சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்த பற்றாக்குறையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் இரவு நேர பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல போராடி வருபவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. முடக்கநிலையின் போது, மக்களின் தேவை சரிந்ததால் பல ஓட்டுநர்கள் தொழிலை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 326 views
-
-
ஜோ பைடனின் உத்தரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை தனியார் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தடுப்பூசி முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் மற்றும் வாரந்தோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். ஜனாதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக, குடியரசுக் கட்சியின் அதிகாரத்தில் உள்ள டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, தென் கரோலினா மற்றும் உட்டா உள்ளிட்ட 5 மாநிலங்களான தனியார் நிறுவனங்கள் மற்றும் மதக் குழுக்களினால் மனு தாக்கல் செய…
-
- 0 replies
- 303 views
-
-
கொலை முயற்சியிலிருந்து தப்பினார் ஈராக் பிரதமர் ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, தலைநகர் பாக்தாத்தில் உள்ள தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகரின் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அவரது இல்லம், ஒரு கொலை முயற்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காதிமி காயமின்றி தப்பினார். எனினும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பிரதம அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது ஆறு உறுப்பினர்கள் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. ஒரு டுவிட்டர் பதிவில் நலமாக இருப்…
-
- 0 replies
- 289 views
-
-
ஆபிரிக்காவில் பயங்கரம் ! பெற்றோல் பௌசருடன் லொறி மோதி விபத்து : 90 க்கும் மேற்பட்டோர் பலி ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் பௌசருடன் லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 க்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லியோனின் தலைநகரில் பெட்ரோல் பௌசருடன் லொறி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ ட்வீட் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங…
-
- 0 replies
- 221 views
-
-
அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு மேற்கு அவுஸ்திரேலியாவில் 18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில் கிளியோ ஸ்மித் என்ற சிறுமி தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போனார், இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கிளியோ ஸ்மித் கூடாரத்தில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டு இரு…
-
- 10 replies
- 693 views
-
-
இங்கிலாந்து மீன்பிடி படகு தொடர்ந்தும் பிரெஞ்சு வசம்!! கடந்த வாரம் பிரான்ஸால் கைப்பற்றப்பட்ட ஒரு பிரிட்டிஷ் இழுவை படகு, சுற்றுச்சூழல் செயலாளரின் பரிந்துரைகளை மீறி, லு ஹார்வில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடற்பரப்பில் பிரான்ஸின் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கும் உரிமம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான மோதல் இடம்பெற்று வருகின்றது. தமது மீனவர்களுக்கு பிரித்தானியா அனுமதி மறுப்பதாக பிரான்ஸ் குற்றம் சாட்டிவரும் நிலையில் பிரெஞ்சு துறைமுகங்களில் பிரித்தானிய படகுகளை தடுப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியது. அத்தோடு பிரிட்டிஷ் பொருட்கள் மீதான எல்லை சோதனைகளை பிரான்ஸ் மேலு கடுமையாக்கியுள்ளது. பிரெக்சிட்டிற்கு…
-
- 1 reply
- 372 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஊசி செலுத்திக் கொள்ளும் பெண் ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக். கொரோனா தொ…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 70 பேர் பலி நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின் மேற்குப் பகுதியில், நகரத்திலிருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் செவ்வாயன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் பானிபாங்கோவின் மேயர் கொல்லப்பட்டுள்ளார். வியாழன் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹாடா அரசு தொலைக்காட்சியில் 15 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு நைஜரின் எல்லைப் பகுதிகளில் ப…
-
- 0 replies
- 262 views
-