உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
ஜோ பைடனின் உத்தரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை தனியார் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தடுப்பூசி முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் மற்றும் வாரந்தோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். ஜனாதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக, குடியரசுக் கட்சியின் அதிகாரத்தில் உள்ள டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, தென் கரோலினா மற்றும் உட்டா உள்ளிட்ட 5 மாநிலங்களான தனியார் நிறுவனங்கள் மற்றும் மதக் குழுக்களினால் மனு தாக்கல் செய…
-
- 0 replies
- 304 views
-
-
கொலை முயற்சியிலிருந்து தப்பினார் ஈராக் பிரதமர் ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, தலைநகர் பாக்தாத்தில் உள்ள தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகரின் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அவரது இல்லம், ஒரு கொலை முயற்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காதிமி காயமின்றி தப்பினார். எனினும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பிரதம அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது ஆறு உறுப்பினர்கள் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. ஒரு டுவிட்டர் பதிவில் நலமாக இருப்…
-
- 0 replies
- 290 views
-
-
ஆபிரிக்காவில் பயங்கரம் ! பெற்றோல் பௌசருடன் லொறி மோதி விபத்து : 90 க்கும் மேற்பட்டோர் பலி ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் பௌசருடன் லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 க்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லியோனின் தலைநகரில் பெட்ரோல் பௌசருடன் லொறி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ ட்வீட் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங…
-
- 0 replies
- 222 views
-
-
அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு மேற்கு அவுஸ்திரேலியாவில் 18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில் கிளியோ ஸ்மித் என்ற சிறுமி தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போனார், இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கிளியோ ஸ்மித் கூடாரத்தில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டு இரு…
-
- 10 replies
- 694 views
-
-
இங்கிலாந்து மீன்பிடி படகு தொடர்ந்தும் பிரெஞ்சு வசம்!! கடந்த வாரம் பிரான்ஸால் கைப்பற்றப்பட்ட ஒரு பிரிட்டிஷ் இழுவை படகு, சுற்றுச்சூழல் செயலாளரின் பரிந்துரைகளை மீறி, லு ஹார்வில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடற்பரப்பில் பிரான்ஸின் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கும் உரிமம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான மோதல் இடம்பெற்று வருகின்றது. தமது மீனவர்களுக்கு பிரித்தானியா அனுமதி மறுப்பதாக பிரான்ஸ் குற்றம் சாட்டிவரும் நிலையில் பிரெஞ்சு துறைமுகங்களில் பிரித்தானிய படகுகளை தடுப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியது. அத்தோடு பிரிட்டிஷ் பொருட்கள் மீதான எல்லை சோதனைகளை பிரான்ஸ் மேலு கடுமையாக்கியுள்ளது. பிரெக்சிட்டிற்கு…
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஊசி செலுத்திக் கொள்ளும் பெண் ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக். கொரோனா தொ…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 70 பேர் பலி நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின் மேற்குப் பகுதியில், நகரத்திலிருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் செவ்வாயன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் பானிபாங்கோவின் மேயர் கொல்லப்பட்டுள்ளார். வியாழன் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹாடா அரசு தொலைக்காட்சியில் 15 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு நைஜரின் எல்லைப் பகுதிகளில் ப…
-
- 0 replies
- 263 views
-
-
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை! ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்’ எ…
-
- 0 replies
- 175 views
-
-
காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி - உலகத் தலைவர்கள் உறுதி எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க பருவநிலை மாநாட்டில் உலக தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 26 ஆவது பருவநிலை மாநாடு கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறும் இம்மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாரீஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம், புவி வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்பாட்டில் காடுகள் மற்றும் நில பயன்பாடு குறித்த நிகழ்ச்சி நேற்ற…
-
- 1 reply
- 207 views
- 1 follower
-
-
எத்தியோப்பியாவில் அவசரகால நிலை எத்தியோப்பியாவின் அமைச்சரவை உடனடியாக நாடு தழுவிய அவசரகால நிலையை செவ்வாயன்று அறிவித்துள்ளது. அதேநரம் தலைநகரையும் தம்மையும் பாதுகாக்கத் தயாராகுமாறு குடிமக்களுக்கு அடிஸ் அபாபாவில் உள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயில் இருந்து போராளிகள் நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் அணிவகுத்து வருவதனால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF)பல நகரங்களைக் கைப்பற்றியதாகக் கூறியதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந் நிலையில் வடக்கு எத்தியோப்பியாவின் பெரும்பகுதி தகவல் தொடர்பு மு…
-
- 0 replies
- 391 views
-
-
வடக்கு வேல்ஸில்... பறவைக் காய்ச்சல்: கால்நடை மருத்துவர்கள் ஆய்வு! வடக்கு வேல்ஸில் உள்ள ஒரு வளாகத்தில் கோழி மற்றும் காட்டுப் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரெக்ஸ்ஹாம் கவுண்டியில் உள்ள ஒரு வளாகத்தில் எச்.5.என்.1 வைரஸ் மாறுபாடு இருப்பதை வேல்ஸின் தலைமை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தினார். உடனடியாக அந்த இடத்தைச் சுற்றி தற்காலிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் காணப்படும் இறந்த காட்டுப் பறவைகள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளன. மேலும் அவை ஆதாரமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதுதவிர அப்பகுதியில் கால்நடை மருத்துவ ஆய்வு நடந்து வருகிறது. ஜனவ…
-
- 0 replies
- 251 views
-
-
காபூல் இராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 400 படுக்கைகள் கொண்ட சர்தார் தாவுத் கான் மருத்துவமனையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்-கே, பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் தலிபான் போராளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கும் குறித்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தாக…
-
- 0 replies
- 296 views
-
-
உச்சிமாநாட்டில் பங்குபற்றவில்லை: சீனா மற்றும் ரஷ்யா தலைவர்கள் மீது பைடன் தாக்கு..! கிளாஸ்கோவில் இடம்பெறும் காலநிலை உச்சிமாநாட்டிற்கு சமூகமளிக்காத சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாதமை பெரும் தவறு என குறிப்பிட்ட ஜோ பைடன், பற்றியெரியும் வனப்பகுதி குறித்து ரஷ்ய ஜனாதிபதி மௌனமாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். சீனா, ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உட்பட ஏனைய நாடுகள் இதுவரையான பேச்சுவார்த்தைகளில் ஆற்றிய பங்கு குறித்து வினவிய போதே அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். காலநிலை உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்ளவில்லை. …
-
- 0 replies
- 152 views
-
-
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம்! வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கான 2019ஆம் ஆண்டு முயற்சியை புதுப்பித்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்டவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட ஆசிய மாநிலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் அந…
-
- 0 replies
- 203 views
-
-
தென்மேற்கு பிரித்தானியாவில் ரயில் மோதியதில் பலர் காயம் தென்மேற்கு ஆங்கிலேய நகரமான சாலிஸ்பரியில் உள்ள பிஷர்டன் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சிறுகாயங்களுக்கு உள்ளன சாரதி உட்பட சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த சாலிஸ்பரி நிலையம் அருகே தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 100 பேரை வெளியேற்ற உதவியதாக டோர்செட் & வில்ட்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்து…
-
- 0 replies
- 246 views
-
-
தனிமைப்படுத்தல் இல்லாது பயணிகளை வரவேற்கும் தாய்லாந்து தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தனது எல்லைகளை திறந்துள்ளது. 18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நாடு தனது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இராச்சியத்தின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது, சுற்றுலா அதன் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும். 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த ஆண்டு அதன் பொருளாதாரம் மோசமான செயல்திறனைக் கண்டது. புதிய பயண வழிகாட்டல்கள் நவம்பர் 1 முதல் 60 க்கும் மேற்பட்ட "குறைந்த ஆபத்துள்ள" நாடு…
-
- 0 replies
- 286 views
-
-
டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஜோக்கர் வேடம் தரித்து கத்திக்குத்து ; 17 பேர் காயம் டோக்கியோவில் பயணிகள் ரயிலொன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் கொலை முயற்சியில் ஈடுபட்ட 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பேட்மேன் திரைபடத்தில் ஜோக்கரின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் ஆடையை அணிந்திருந்தார் என்று சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலினால் 70 வயதுடைய பயணியொருவர் மார்பில் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார். தாக்குதல் நடந்தபோது, ரயிலுக்குள் இருந்து பயணிகள் ஓடும் காட்சிகள் கையடக்கத் த…
-
- 0 replies
- 666 views
-
-
நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து அவுஸ்ரேலிய பிரதமர் பொய்யுரைத்துள்ளார் – மக்ரோன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விடயம் குறித்து தன்னிடம் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பொய் கூறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க 37 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்த காரணத்தால் பிரான்ஸ் கோபமடைந்துள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அவுஸ்ரேலியா பேச்சுவார்த்தை நடத்தயது. கடந்த செப்டம்பரில் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடு காணப்படும் நிலையில் G20 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாட…
-
- 0 replies
- 157 views
-
-
-
- 0 replies
- 639 views
-
-
ஏமன் விமான நிலையம் அருகே நடந்த வெடி விபத்தில் 12 பேர் பலி ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயம். எனினும் இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சனிக்கிழமையன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய டிரக் வெடித்து சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். அதே நேரத்தில் அந்த வாகனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. வெடிப்பு சம்பவம் பலமாக இருந்தது மற்றும் நகரம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இதால் அருகிலுள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்க…
-
- 0 replies
- 273 views
-
-
முதன்முதலில் பொது வெளியில் தோன்றினார் தலிபான் தலைவர் ! தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றியுள்ளார். ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் பேசியுள்ளார். தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார். புதிய தலிபான் அரசின் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் க…
-
- 0 replies
- 297 views
-
-
சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது. தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறைகள் ஆபயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறை மீட்சியைக் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான மெக்னீசியததில் 95சதவீதமானவற்றை …
-
- 0 replies
- 197 views
-
-
டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டமாஸ்கஸைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தளங்களை குறிவைத்து தாக்கப்பட்ட ஏவுகணைகள் சிலவற்றை அழித்ததாக சிரிய வான் பாதுகாப்பு இராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சில பொருள் இழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லெபனானுக்குச் செல்லும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் கப்பலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உ…
-
- 0 replies
- 159 views
-
-
அமெரிக்க பூர்வகுடி தலைவரின் தலைமுடியை வைத்து கொள்ளுப் பேரனை உறுதி செய்த விஞ்ஞானிகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1876ம் ஆண்டு நடந்த லிட்டில் பிக்ஹார்ன் போரில் 1,500 பூர்வகுடி அமெரிக்கர்களைக் கொண்ட படைக்கு சிட்டிங் புல் தலைமையேற்று போர் புரிந்தது மிகவும் புகழ் பெற்ற சம்பவம். 19-ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற அமெரிக்க பூர்வகுடி இனத் தலைவர் 'சிட்டிங் புல்' என்பவரின் தலைமுடி மாதிரியை வைத்து அவரது கொள்ளுப் பேரன் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிட்டிங் புல்லின் தலை முடி…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடா நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கனடா நாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது பெண்மணியான அனிதா ஆனந்த், கனடாவின் ஒக்வில்லே பகுதியில் நடைபெற்ற தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த நிலையில், கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சஜ்ஜன், ராணுவத்தில் பாலியல் தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வது குறித்து ஏற்பட்ட சர்ச்சையில் வேறு துறைக்கு மாற்றப்பட, அவருக்கு பதிலாக அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்…
-
- 1 reply
- 547 views
-