உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
ஆப்கனில் இருந்து வெளியேறியபின் தாலிபன்களுடன் அமெரிக்கா நடத்திய முதல் சந்திப்பு பட மூலாதாரம், TWITTER / MUJAHID படக்குறிப்பு, தோஹாவில் தாலிபன் பிரதிநிதிகள் கத்தார் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களையும் சந்தித்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்…
-
- 1 reply
- 441 views
-
-
பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு... 17 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்! கடந்த தசாப்தத்தில் பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு 17 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த குறைப்பு ஒரு முக்கிய தேசிய இலக்கை அடைய போதுமானதாக இல்லை. நமது உணவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதே இதன் நோக்கம். தேசிய உணவு மூலோபாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த குறிக்கோள், முழு பிரித்தானியாவின் உணவு முறையின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது . விவசாயம் மற்றும் உற்பத்தி முதல் பசி மற்றும் நிலைத்தன்மை வரை. இது, அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவில் இறைச்சி நுகர்வு 30 சதவீதம் குறைய பரிந்துரைக்கிறது. லான்செட் பிளானட்டரி ஹெல்…
-
- 3 replies
- 365 views
-
-
''சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்'' - பதற்றத்தைக் கூட்டும் ஷி ஜின்பிங் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷி ஜின்பிங் சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு ம…
-
- 1 reply
- 617 views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவின்... ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்! ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை. முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது. இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…
-
- 0 replies
- 191 views
-
-
ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் – தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே, ஆப்கானில் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால் அனைவருக்கும் பிரச்சினைதான் என தலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி தெரிவித்தார். மேலும் கொரொனா நோய்க்கு எதிராக ஆப்கான் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, இரண்டாவது நாளாக இன்றும் தோஹாவில் அம…
-
- 0 replies
- 181 views
-
-
ஆப்கானிஸ்தான் மசூதி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி ஆப்கானிஸ்தான் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சிறுபான்மை குழு பயன்படுத்தும் மசூதியில் நிகழ்த்திய சக்திவாய்ந்த வெடிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக சாட்சிகள் உள்ளது என்று தலிபானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்…
-
- 2 replies
- 495 views
-
-
தென் சீனக் கடலில் மர்ம பொருள் மீது மோதிய அமெரிக்க அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் 8 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் - கோப்புப் படம். அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் நீரில் மூழ்கியிருந்தபோது மர்மப் பொருள் ஒன்றின் மீது மோதியதாகவும், அதில் பல மாலுமிகள் காயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கூறும் அவர்கள், கப்பல் முழுவதும் செயல்படுவதாகவும் கூறுகின்றனர். தென் சீனக் கடலில் சர்வதேச கடற்பரப்பில்…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 480 views
-
-
சமாதானத்திற்கான நோபல் பரிசு இரு ஊடகவியலாளருக்கு அறிவிப்பு இவ்வாண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நோர்வேயில் சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் மரியா ரெசா மற்றும் டிமிட்ரி முராட்டோவ் ஆகியோரு…
-
- 0 replies
- 306 views
-
-
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா October 8, 2021 ஆப்பிரிக்காவின் டான்சானியாவைப் பூர்வீகமாகக் கொண்டு சான்ஸிபாரில் வளர்ந்து பின்னர் 1960களில் இங்கிலாந்துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது படைப்புகளில் வெவ்வேறு கண்டங்கள், கலாச்சாரங்களுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் அகதிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/tanzanian-born-novelist-abdulrazak-gurnah-gets-nobel-prize-in-literature/
-
- 1 reply
- 300 views
-
-
1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. 2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. திருச்சப…
-
- 18 replies
- 982 views
-
-
சீனாவுடன்... அமெரிக்கா, நிச்சயம் போர் புரியும்: ட்ரம்ப் எச்சரிக்கை! சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘தேர்தல் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது. இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை. சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும்’ என கூறினார். தாய்வான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயரதிகாரிகள் இடையே சுவிஸ்லாந்தில் பே…
-
- 0 replies
- 307 views
-
-
பிரித்தானியாவில்... எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்! பிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் 150 இராணுவ லொறி ஓட்டுனர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் 100,000க்கும் மேற்பட்ட லொறி ஓட்டுனர்கள் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சமீபத்திய மாதங்களில் உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல தொழில்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் எரிபொருள் தீர்ந்து பல எரிபொருள் நிலையங்களில் வரிசைகளை…
-
- 34 replies
- 2.4k views
- 2 followers
-
-
ஜேம்ஸ் கல்லஹர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. கானா, கென்யா மற்றும் மலாவி ஆகி…
-
- 0 replies
- 208 views
-
-
பப்புவா நியூ கினியாவுடனான... சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை, அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. படகு மூலம் அவுஸ்ரேலியா வை அடைய முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக கான்பெர்ராவால் வழங்கப்பட்ட இரண்டு பசிபிக் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்றாகும். இந்நிலையில் குறித்த நாட்டுடனான ஏற்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என அவுஸ்ரேலியா கூறியுள்ளது. இருப்பினும் அவுஸ்ரேலியாவின் வலுவான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை என உள்து…
-
- 0 replies
- 236 views
-
-
ஊழியர்கள் அனைவரும்... அலுவலகம் சென்று, வேலை செய்யுமாறு பிரிட்டிஷ் பிரதமர் கோரிக்கை பிரித்தானியாவில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். உற்பத்தியைப் பெருக்கவும், இளம் ஊழியர்கள் வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அது முக்கியம் என அவர் கூறினார். பிரித்தானியாவில் நாள்தோறும் புதிதாக பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுகிறது. என்றாலும், கொரோனா தொற்று பரவல் பிரித்தானியாவில் பெரிய அச்சுறுத்தலாக இல்லை என பொரிஸ் ஜோன்சன் கூறினார். ஊழியர்களின் போட்டித்தன்மையை உறுதிசெய்ய நேரடியான தகவல் பரிமாற்றம் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தமது அலுவலக ஊழியர்கள், முழுமையாகப் …
-
- 0 replies
- 281 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு... வடகொரியா பகிரங்க எச்சரிக்கை தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா, ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசர கூட…
-
- 0 replies
- 293 views
-
-
தாய்வான் உடன்படிக்கைக்கு... இணங்க, சீனா ஒப்புக்கொள்வதாக பைடன் அறிவிப்பு தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையைக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஒப்பந்தத்தை கடைபிடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்பதை தெளிவுபடுத்திய நிலையில் இதற்கு இருதரப்பும் இணங்க ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தாய்வானை தனது சொந்த பிரதேசம் என கூறிவரும் சீனா, தேவைப்பட்டால் அதனை வலுக்கட்டாயமாக எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு சீனாவே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்வான், தாங்கள் ஒரு சுதந்திர நாட…
-
- 0 replies
- 268 views
-
-
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடக சேவை இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உலகளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவை முக்கிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளில் உள்ள பயனாளிகள் அவதிக்குள்ளாகினர். வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியன செயலிழந்தன | Virakesari.lk
-
- 19 replies
- 1.1k views
- 1 follower
-
-
இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பெறுகிறார்கள். உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்றிலிருந்து (04) வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று (05) அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜேர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு | Virakesari.lk
-
- 0 replies
- 282 views
-
-
ஷாஹீன் புயலில் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்பு: 32 அடி உயரம் எழுந்த அலைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஷாஹீன் புயல் தாக்கிய பிறகு மஸ்கட் நகரில் தெருவில் வெள்ளம் போல தேங்கியுள்ள நீரில் மூழ்கிக் கிடக்கும் கார் ஒன்று. வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் இரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரம் நெடுகிலும் 150 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசியது, கடும் மழை பொழிந்தது. இதனால், கடுமையா…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
"புதிய வைரஸ்கள், வலிமையான பாக்டீரியாக்கள் ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகுவதால் பரவ வாய்ப்பு" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிபடர்ந்திருக்கும் பிரதேசம் புவி வேகமாக வேகமாக வெப்பமடைந்துஆர்க்டிக்ப் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மதிக்காத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது. பனி உருகுவதால், பனிப்போர் காலத்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு உலைகள், சுரங்கங்களிலிருந்து ஏற்படுட்ட சேதங்கள் போன்றவை வெளிப்படலாம் என அவ்வறிக்கை கூறுகிறது. ஆர்க்டிக் பகு…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா ரஷ்யா முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலிலிருந்து, சிர்கான் என்ற அதிவேக ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இது நவீன ஆயுத அமைப்புக்களின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிர்கான் ஏவுகணை ஒலியின் ஒன்பது மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலும் தாக்கும் திறன் கொண்டது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சிர்கானின் சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவடையும் எ…
-
- 0 replies
- 229 views
-
-
பிரான்சுடன் மோதல்: பரிஸ் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்தது அல்ஜீரியா! பிரான்ஸுக்கான தங்கள் நாட்டுத் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது. அல்ஜீரியா அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர் பிரான்சை ‘இனப்படுகொலை’ என்று குற்றம் சாட்டியது மற்றும் பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய சர்ச்சையான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது. அத்துடன் அல்ஜீரிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் இராணுவ விமானங்களை அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்தது. பிரான்ஸின் ஜெட் விமானங்கள், அல்ஜீரிய பிரதேசத்தின் மீது பறந்து மேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பகுதியை சென்றடைகின்றன. அங்கு அதன் வீரர்கள் பர்கானே நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆயுதக…
-
- 0 replies
- 292 views
-
-
இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு! இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது. ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. எனினும், இந்த விமானம் விழுந்து நொறுங்கி பொழுது தரையில் இருந்த யாருக்கும் காயம்…
-
- 0 replies
- 205 views
-