உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி! இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது புதுப்பிப்பை வெளியிட்ட பிரதமர், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், ‘யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம், ஓமிக்ரோனின் அலை வருகிறது. மாத இறுதிக்குள் பூஸ்டர்களை விரும்பும் அனைத்து பெரியவர்களுக்கும் வழங்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர்களில் கவனம் செலுத்த சில மருத்துவ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படும். புதிய மாறுபாட்டான ஒமிக்ரோன் உடனான போரில் நாங்கள் இப்போது அவசரநிலையை எதிர்கொள…
-
- 0 replies
- 229 views
-
-
2021-ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக மெளனிக்கும் லண்டன் பிக் பென் கடிகார மணியோசை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS மிக முக்கியமான பழுது நீக்கும் வேலைகள் நடைபெற இருப்பதால், வரும் 2021-ஆம் ஆண்டு வரை லண்டனின் மிகப்பிரபலமான பிக் பென் கடிகாரத்தின் மணி ஓசை ஒலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி மணி ஓசையானது, பிரிட்டன் நேரப்படி திங்கள்கிழமை மாலை …
-
- 0 replies
- 302 views
-
-
உ.பி. ரயில் விபத்து: 23 பேர் சாவு உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் அருகில் உள்ள கதௌலி பகுதியில் சனிக்கிழமை தடம்புரண்டு ஒன்றன் மீது ஒன்று சரிந்து கிடக்கும் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள். உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை மாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 23 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒடிஸா மாநிலம், புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு உத்கல் விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்திலுள்ள கதௌலி ரயில் நிலையம் அருகே ரயில் சனிக்கி…
-
- 0 replies
- 416 views
-
-
'சர்வதேச கண்காணிப்புகுறித்து அச்சமில்லை': ரோஹிங்யா விவகாரத்தில் மௌனம் கலைத்தார் ஆங் சான்! மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை விவகாரத்தில், ''சர்வதேச கண்காணிப்புகுறித்து அச்சமில்லை'' என்று அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார். மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அங்கிருந்து தப்பித்துவரும் பல ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துவருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனால், இந்தச் சம்பவம்குறித்து அந்த நாட்டுத் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கி, எ…
-
- 3 replies
- 656 views
-
-
அமெரிக்காவில் மீள்குடியேற்றுவதற்காக மனஸ்தீவு முகாமிலிருந்து 25 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் 25 பேரை அதிகாரிகள் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச்சென்றுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை இவர்கள் போர்ட் மொரெஸ்பையிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளனர். பப்புவா நியு கினியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொதுமக்கள் விவகார அதிகாரி பெவெர்லி தக்கர் இதனை உறுதிசெய்துள்ளார். முதல் தொகுதி அகதிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் மேலும் 25 பேரை அமெரிக்கா அழைத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்…
-
- 0 replies
- 249 views
-
-
தாஜ்மகால் ஒரு இந்து கோவில்: - மீண்டும் பா.ஜ.க எம்.பி. கருத்தால் சர்ச்சை [Thursday 2017-10-19 08:00] உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. தாஜ்மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தர பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது. அதையடுத்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானசங்கீத் சாம் கூறும்போது, “தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்க கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்” என்று தெரிவித்து இருந்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு உத்தர பிரதே…
-
- 0 replies
- 437 views
-
-
1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் பறிமுதல் மெக்ஸிகோவில், முதன்முறையாக 1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பசிபிக் கரையோரத்தில் இருந்து 425 கிலோமீற்றர் தொலைவு கடல் பகுதியில், நீர்மூழ்கிக்கு நிகரான ஒரு படகிலேயே கொக்கெய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் மதிப்பு 42 மில்லியன் அமெரிக்க டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படகைச் செலுத்தி வந்த கொலம்பியாவைச் சேர்ந்த மூவரையும் குவாதமாலாவைச் சேர்ந்த ஒருவரையும் மெக்ஸிகோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ராடாரில் எளிதில் சிக்காத வகையில் அமைக்கப்பட்ட இந்தப் படகின் கீழ்த் தளத்தில், முழுவதுமாக மூடப்பட்ட இரகசியத் தளத்தில் நீர்புகாத வண்ணம் இந்த கொக்கெய்…
-
- 0 replies
- 330 views
-
-
சென்னை: இலங்கையில் புணரமைப்பு பணிக்காக வந்துள்ள சீன கைதிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு [^] காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி [^]யின் 40-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், ராகுல் காந்தி தன்னலமற்ற உன்னத தலைவர். நாளை நாட்டின் தலைமை பொறுப்பை அவர் தான் ஏற்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகி…
-
- 1 reply
- 563 views
-
-
400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் …
-
- 0 replies
- 1k views
-
-
டைம் இதழின் 'இந்த ஆண்டுக்கான மனிதர்' பட்டத்தைப் பெற மறுத்தாரா டிரம்ப்? அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வழங்கும் 'பெர்சன் ஆஃப் தி இயர்' (இந்த ஆண்டுக்கான மனிதர்) சிறப்பிதழுக்கு தாம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கான நேர்காணலுக்கு தாம் மறுத்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதற்கு அந்த இதழ் மறுப்பு தெரிவித்துள்ளது. டைம் இதழில் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும், 'ஒருவேளை' இந்த ஆண்டும் அவர் இந்த ஆண்டுக்கான மனிதர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்படலாம் என்று தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், அந்தப் பட்டத்துக்கானவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள…
-
- 0 replies
- 238 views
-
-
இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால உருவ ஓவியமொன்றை பண்டைய எகிப்திய நகரான ஒக்ஸிரைசஸிலுள்ள மர்மமான கல்லறையொன்றில் கண்டுப்பித்துள்ளதாக ஸ்பெயின் அகழ்வாராச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையில் கண்டுப்பிக்கப்பட்ட இந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து சுருண்ட கேசமுள்ள இளைஞராக ஆசி வழங்கிய வண்ணம் காணப்படுகின்றார். மேற்படி ஆய்வானது பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரசிரியர் ஜோசப் பட்ரோ தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி உருவ ஓவியத்தில் காணப்படும் குறிப்புகளை மொழி பெயர்த்து அந்த ஓவியத்தில் காட்சியளிப்பவர் யார் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஆய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். http://virakesari.lk/articles/…
-
- 9 replies
- 1.2k views
-
-
-
பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு: தெற்காசியத் தலைவர்கள் பங்கேற்பு:- 26 மே 2014 நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக் காக 7,000 பாதுகாப்புப் படை வீரர் கள் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு திங்கள்கிழமை பொறுப்பேற்கிறது. நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்ப…
-
- 0 replies
- 567 views
-
-
நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்கள் மத அவமதிப்பா? கருத்து சுதந்திரமா? * டென்மார்க்கில் நிலவும் உணர்வுகள் குறித்த ஓர் நேரடி அலசல் கேலிச் சித்திரம் வெளிவந்த பத்திரிகை பிரதி கோபன்ஹேகனிலிருந்து ந.சிவேந்திரன் டென்மார்க்கின் நாளிதழான `ஜூலண்ட் போஸ்ட்' வெளியிட்ட முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்கள் உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்திருந்தன. பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எல்லை உண்டா? அப்படியானால், எதை எல்லையாகக் கொள்வது? மத அவதூறு என்பதற்கான வரையறைகள் என்ன? ஒரு மதத்தின் சுயகட்டுப்பாடுகளை அம்மதத்தை அவதூறு செய்யாதவிடத்தும் அம்மதம் சாராத ஏனைய மக்கள் கடைப் பிடிக்க வேண்டுமா? அது அவர்களை கட்டுப்படுத்துமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள…
-
- 0 replies
- 755 views
-
-
இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விக்யான் ஜோதி பொரியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 48 பேர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது லார்ஜி நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக அங்குள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 6 மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கரையில…
-
- 1 reply
- 1k views
-
-
உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை" எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை, ஜேர்மனியில் ஆரம்பம்! உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. இரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் தயாரித்த ரயில்கள், குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் பக்ஸ்டெஹூட் ஆகிய வடக்கு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பிராந்திய ரயில் நிறுவனமான எல்.என்.வி.ஜி.ஆல் இயக்கப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்…
-
- 39 replies
- 2k views
-
-
வேலையில்லா இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது ``வேலையிழப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி`` - இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு பொருளாதார மாநாட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் சொன்ன வார்த்தைகள். அதே மாநாட்டின் மற்றொரு நாளில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் பேசுகையில், ``இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை’’ என்றார். வேலை இழப்பவர்கள் சொந்தத் தொழில் தொடங்குவார்கள், இதனால் இந்தியாவில் அதிக அளவில் தொழில் முனைவோர்கள் உருவா…
-
- 0 replies
- 357 views
-
-
71 பயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் நொறுங்கியது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்ற ஒரு ரஷ்ய விமானம் நொறுங்கியது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. 71 பயணிகள் மற்றும் விமான குழுவினர் இதில் பயணித்துள்ளனர். சரடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்…
-
- 2 replies
- 752 views
-
-
கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார். எல்லாவா என்ற இந்த 22 வயதுப் பெண், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் வடக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள யாட்கிர் மாவட்ட்த்தில் அமைந்திருக்கும், நீலகந்தராயன்கடே என்ற தீவுக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். ஆறு சூழ்ந்த தீவாக இருக்கும் இந்த கிராமத்தில் இருந்து ஆற்றைக்கடந்து செல்ல ஒரு மர மிதவைதான் இருக்கிறது.இந்தப் பெண்ணுக்கு நீச்சல் தெரியாது; ஊரில் மருத்துவ வசதி இல்லை. அருகில் மருத்துவமனை இருக்கும் இடம் ஆற்றுக்கு அப்பால் இருக்கிறது. அது ஆறு பெருக்கெடுத்து சீற்றத்துடன் ஓடும் காலங்களில் இயங்குவதில்லை. இந்…
-
- 1 reply
- 507 views
-
-
சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை. போர் தொடங்கியது எப்படி? போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்…
-
- 3 replies
- 1k views
-
-
வட ஈராக்கிலுள்ள கொஷோ கிராமத்தை சுற்றி வளைத்துள்ள ஐ.எஸ்.போராளிகள், அங்குள்ள மக்களுக்கு மதம் மாறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளனர்.அவ்வாறு மதம் மாறுவதற்கு தவறுபவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொஷோ கிராமத்திலுள்ளவர்கள் மதம் மாறத் தவறும் பட்சத்தில் அந்த கிராமத்திலுள்ள 2,500 பேரும் கொல்லப்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அதிர்ச்சி தகவலை பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. போராளிகள் அந்தப் பிராந்தியத்தில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.கடந்த வாரம் க…
-
- 1 reply
- 469 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதை ரஷ்யா ஆதரிப்பதாக அந்நாட்டு அதிபர் மெட்வெதேவ் கூறினார். இந்திய பிரதமரும், ரஷ்ய அதிபரும் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். இதற்காக இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வெதேவ் நேற்றுமுன்தினம் இரவு டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கும், மெட்வெதேவும் சந்தித்து பேசினர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் உலைகள் அமைப்பது பற்றி ஆலோசித்தனர். பின்னர் ரஷ்ய அதிபர் மெட்வெதேவ், நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்படும்போது, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் என்பது ரஷ்யா…
-
- 1 reply
- 462 views
-
-
குண்டு வீச்சினை எதிர்கொள்ள தயாராயிருங்கள், கற்காலத்திற்கு செல்வதற்கு தயாராகயிருங்கள் என ரிச்சட் ஆர்மிட்டேஜ் குறிப்பிட்டதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்தார் என முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். நான் இதனை மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகமாக கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தால் பாகிஸ்தானை தாக்குவோமென அமெரிக்கா எச்சரித்தது [23 - September - 2006] முஷாரவ் கூறுகிறார் செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தலிபானிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டின் மீது விமானத் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா எச்சரித்ததாக ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். சி.பி.எ…
-
- 0 replies
- 770 views
-
-
உலகப் பார்வை: போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் படத்தின் காப்புரிமைPAUL KANE தனக்கு சொந்தமான இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுத…
-
- 0 replies
- 376 views
-
-
உலகப்பார்வை: சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். அட்டைப்படத்தில் இளவரசி - சர்ச்சையில் சஞ்சிகை படத்தின் காப்புரிமைVOGUE ARABIA / BOO GEORG சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று 'வோக் அரேபியா' சஞ்சிகை கூறியுள்ளது. பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண்…
-
- 0 replies
- 589 views
-