Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரத்து நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், பங்களாதேஷம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. தலிபான்களால் ஆளப்படும் போரால் பாதிக்கப்…

  2. ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021 ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்க…

  3. அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் September 22, 2021 அவுஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார். https://globaltamilnews.net…

  4. அலெக்சாண்டர் லிட்வினென்கோவின்... கொலைக்கு, ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்! அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த 2006ஆம் ஆண்டு லண்டனின் மில்லினியம் ஹோட்டலில் விஷம் கலந்த கிரீன் டீ குடித்து இறந்தார். பொலோனியம் -210 விஷத்தால், உயிரிழந்தார். இது அரிய கதிரியக்க பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், அப்போது நடத்தப்பட்ட பொது விசாரணையில், இந்த கொலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில…

  5. லா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்! ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இராணுவம் மற்றும் சிவில் காவலர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …

  6. கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் ச‍ேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரச…

  7. ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டினின் கட்சி அமோக வெற்றி ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது. ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்த…

  8. சூடானில் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சி தோற்கடிப்பு சூடானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சதி முயற்சியை அடுத்து சூடானிய தலைநகர் கார்டூம் தெருக்களில் இராணு டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஓம்துர்மனில் உள்ள அரசு வானொலியை கட்டுப்படுத்தும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை காலை இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சதித்திட்டக்காரர்கள் அரசு ஊடக கட்டிடத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது" என்று அந் நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட ஆதாரங்கள் AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளன. சதித…

  9. ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர…

  10. அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது. அவுகஸ் ஒப்பந்தம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய சமநிலையை சீர்குலைக்கும் என்றும் வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்ச…

  11. புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்து செய்துள்ளார். இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுதர…

  12. மேல்நிலை பாடசாலைகளில்... பெண்கள், கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக மாணவிகளின் கல்வி முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஆட்சிபுரிந்த தலிபான்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாரிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விவகார அமைச்சினை மூடியுள்ள தலிபான்கள், அதற்கு பதிலாக முஸ்லீம் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களமாக அதனை …

  13. பயங்கரவாதத்துக்கு எதிராக... நடவடிக்கை, எடுக்கப்போவதில்லை – ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து அதிகமானோர் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது குறித்துக் கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் வட்டார அளவில் நெருக்கடியை ஏற்படுத்தலாம…

  14. அமெரிக்கவுக்குள் வந்து பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்? 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள். அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள்.…

  15. ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…

  16. லேடி ட்ரியூ - 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய பெண் கிளர்ச்சியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMERICAN MUSEUM OF NATURAL HISTORY படக்குறிப்பு, லேடி ட்ரியூ (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினான்காம் கட்டுரை இது) லேடி ட்ரியூ வியட்நாமின் ச்சியெளசோ (தற்போதைய தன்ஹோ மாகாணம்) துணை மாகாண நகரில் உள்ள ச்சியூஸென் பகுதியில் இருக்கும் யென் பின் மாவட்டத்தில் கிறிஸ்துவுக்…

  17. கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்: விலகாத மர்மங்கள் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNS SCIENCE நீருக்குள் புதைந்திருக்கும் 8-ஆவது கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு 375 ஆண்டுகள் ஆகின. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. அது 1,642-ஆவது ஆண்டு. உலகின் எட்டாவது கண்டத்தைத் தேடும் பணியில் டச்சு மாலுமியான ஏபெல் டாஸ்மென் ஈடுபட்டிருந்தார். பூமியின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு பரந்த கண்டம் இருக்கிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தக் காலகட்டத்தில் தெற்கு அரைக்கோளப் பகுதி ஐரோப்பியர்களுக்கு மர்மமாகவே இருந்தது. வடக்கேயுள்ள தங்…

  18. வலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்! அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள தங்களது தூதர்களை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்த நாடு உடனடியாக தூதர்களை திரும்பப் பெற்றதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்கா மற்றும் அவுஸ்தி…

  19. ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில்... ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்! சமீபத்திய நாட்களில் கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஷ் தீவு கும்ப்ரே வீஜா தேசிய பூங்காவில் உள்ள டெனிகுவியா எரிமலையின் தாயகமாகும். இந்த பகுதியை சுற்றி 4222 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாக்மா எரிமலைச் சங்கிலியில் புகுந்து, அதன் உச்சத்தை 6 சென்டிமீட்டர் (2.4 அங்குலம்) உயர்த்தியதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் நிலநடுக்கங்களின் எ…

  20. வடகொரியாவை தொடர்ந்து... தென்கொரியா, ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! வடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களில், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி ஆறு மாதங்களில் நாட்டின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நேற்று (புதன்கிழமை) வடகொரியா மேற்கொண்டது. வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தென்கொரியா, அதன் தலைவர் மூன் ஜே-இன், நாட்டின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையில் கலந்துகொண்டதாக அறிவித்தது. தென்கொரியா, வெற்றிகரமாக ஒரு சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை மற்றும் நீண்ட தூர வான்வழி ஏவுகணையான கே.எஃப்.-21 ஏவுகணை…

  21. சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழனன்று டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். சகோலில் இடம்பெற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான எங்கள் மோதல், மற்றொரு பாரிய வெற்றியாகும் என்று மக்ரோன் அந்த பதிவில் கூறியுள்ளார். சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவின் சகோல் பகுதியில் இஸ்லாமிய அரசின் வரலாற்றுத் தலைவராக இருந்தார் மற்றும் அவரது குழு 2017 இல் கொடிய தாக்குதலில் அ…

  22. டைம்ஸ் 100: நரேந்திர மோதி, ஜோ பைடன் ஆகியோருடன் தாலிபன் தலைவர் பெயரும் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர். இவர்களுடன் தாலிபன் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம் பெற்றுள்ளது. தோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்தி…

  23. ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன. இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும…

  24. Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து கடும் எச்சரிக்கை! Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய குறித்த பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் வலுப்பெறும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239461

  25. தீவிரவாதிகளுக்கு உதவினால்... பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாகிஸ்தான் இரட்டை வேடமிடுவதாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதைப் பொருத்து அந்நாட்டுடனான உறவைத் துண்டிப்பது குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும் என்றும் பிளிங்கென் தெரிவித்துள்ளார். அண்மையில் தலிபான் அமைச்சரவையில் ஹக்கானி தீவிரவாதிகளை இடம்பெறச் செய்ய பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும் பிளிங்கென் சுட்டிக்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.