உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL/GETTY IMAGES படக்குறிப்பு, 1939-ஆம் ஆண்டில் திபெத்தியர்களுடன் ஜெர்மானியக் குழுவினர் 1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார். எழுத்தாளர் வைபவ் புரந்தரே இந்தச் சுவாரஸ்யமான ஆய்வுப் பயணம் பற்றி விவரிக்கிறார். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மா…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
சான் ஜோஸ்: ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் - அள்ளப் போவது யார்? விக்டோரியா ஸ்டன்ட் பிபிசி ட்ராவல் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியும். ஆனால் அது யாருக்குச் சொந்தமானது என்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அதில் இருந்தது அத்தனையும் தங்கமும் இன்னபிற மதிப்புமிக்க பொருள்களும். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். அது 1708-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி. கொலம்பியா நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் சான் ஜோ…
-
- 1 reply
- 429 views
- 1 follower
-
-
பாரம்பரிய திருவிழாவில் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டொல்பின்கள் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டொல்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், இரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டொல்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/113350
-
- 0 replies
- 427 views
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம் குடாய் நூர் நாசர் பிபிசி இஸ்லாமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முல்லா அப்துல் கனீ பராதர் (நடுவில்) ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே கா…
-
- 10 replies
- 836 views
- 1 follower
-
-
துருக்கியுடனான பதற்றம்: மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்திய தரைக்கடலில் துருக்கியுடன் பதற்றம் நீடித்து வருவதால், மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்க கிரேக்கம் திட்டமிட்டுள்ளது. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், கிரேக்க ஊடக அறிக்கையின்படி, ஏதென்ஸ் நான்கு புதிய போர் கப்பல்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஜனவரியில், கிரேக்கம் 18 விமானங்களுக்கு முன்பதிவு செய்தது. அவற்றில் 12 விமானங்கள் 2.5 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கிரேக்கத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 ரஃபேல் ஜெட் விமானங்களில், 12 தற்போது பிரான்ஸில் சேவையில…
-
- 0 replies
- 311 views
-
-
தனிப்பட்ட வாழ்க்கையை... ஆழமாக ஆராய, சீனா ‘சட்டங்களை’ அறிமுகப்படுத்துகிறது! சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) சீன மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய அதன் வேகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாலி யாங் கூறியுள்ளதாவது, “இப்போது பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் விதிமுறைகளுடன், தேர்வுகளின் அனைத்துப் பகுதிகளும் கணிசமாகக் குறுகுவது போல் உணர்கிறது. குழந்தைகளுக்கான வீடியோ கேம் நேரத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெற்றோர்களால் பாராட்டப்பட்டன. ஆனால் டிவி மற்றும் பொழுதுபோக்கு ந…
-
- 0 replies
- 203 views
-
-
ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.! ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தலிபான் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு மிகவும் மோச…
-
- 0 replies
- 162 views
-
-
ஜப்பானின் பெரும்பகுதியை... தாக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை சோதித்தது வடகொரியா! வடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய செய்தி முகமையான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பாதுகாப்பு அறிவியல் அகாடமி செப்டம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது என்றும், இரண்டு வருடங்களாக ஆயுதங்கள் வளர்ச்சியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் விரோதப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகளை வலுவாகக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக இந்த சோதனை மூலோபாய மு…
-
- 0 replies
- 227 views
-
-
தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி ஆரிஃப் ஷமீம் பிபிசி உருது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தது என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும், ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக கத்தாருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட 4471 சதுர மைல்கள் கொண்ட இந்த சிறிய நாட்டின் 'ராஜதந்திர' வெற்றிகளைப் பார்ப்போம். …
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
ஸ்பெயினில் காட்டுத் தீ ; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில் புதன்கிழமை ஆரம்பித்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் ராணுவப் பிரிவும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் ஆறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த கோடை காலத்தில் ஐரோப்பா நாடுகள் சில பல காட்டுத்தீக்கு உள்ளாகிவருகிறது. காலநிலை மாற்றம்…
-
- 0 replies
- 274 views
-
-
ஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை தலிபானின் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தலிபான்களின் எழுச்சி, 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நிலவிய கொடூரமான ஆட்சி நிலைக்கு நாடு மீண்டும் திரும்புமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மறுப்பு, பொது வாழ்வில் இருந்து விலக்குதல் ஆகியவையும் அடங்கும். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தலிபானின் கல்வி அமைச்சர், பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு உட்பட பல்கலைக்கழகங்களில…
-
- 0 replies
- 281 views
-
-
நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை சோதித்தது வடகொரியா வடகொரியா வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் பணிக்கக் கூடிய ஒரு புதிய வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்தை (KCNA) மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் நிறுத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாடு தனது இராணுவத் திறனை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'குரூஸ்' என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பு சுமார் 1,500 கிலோமீட்டர் (930 மைல்) தூரம் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. குரூஸ் ஏவுகணையின் சோதனை "நமது அரசின் பாதுகாப்பை மிகவும் நம்பகத்தன்மையுடன் உறுதிப்படு…
-
- 0 replies
- 255 views
-
-
'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் ஆண்ட்ரூ கர்ரி பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்…
-
- 0 replies
- 713 views
- 1 follower
-
-
ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடு 12 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது. …
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
ஆப்கானின், 100 பயணிகள் கொண்ட முதல் பயணிகள் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக கத்தாரில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானில் நடைபெற்ற உள்நாட்டு போர், தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானில் இருந்து வெளிநாட்டு மக்களும், ஆப்கான் மக்களும் வெளியேறி வந்தனர். தாலிபான்கள், காபூலை கைப்பற்றினாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகள் வசமே இருந்தது. ஆனால் கடந்த 31 ஆம் தேதி, தோஹா ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், காபூல் விமான நிலையம் தாலிபான்களின் வசம் வந்தது. இந்நிலையில், நேற்று காபூல் வி…
-
- 0 replies
- 445 views
-
-
9/11 விசாரணையின் முதல் ஆவணத்தை வெளியிட்டது எஃப்.பி.ஐ 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை முன்னிட்டு சவுதி அரேபியாவினால் கடத்தல்காரர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட தளவாட ஆதரவு தொடர்பான புதிதாக வகைப்படுத்தப்பட்ட 16 பக்க ஆவணத்தை எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், கடத்தல்காரர்களுக்கு அமெரிக்காவில் உள்ள சவுதி கூட்டாளிகளுடன் இருந்த தொடர்புகளை விவரிக்கிறது. ஆனால் சவுதி அரசு, சதிக்கு உடந்தையாக இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில ஆவணங்களை ஆறு மாதங்களுக்குள் வகைப்படுத்த ஒரு இடைக்கால மதிப்பாய்வைத் தொடங்குமாறு பைடன் முன்பு ஒரு நிர்வாக உ…
-
- 0 replies
- 299 views
-
-
உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்? உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார். அல்கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி 2020 இல் இராணுத்தினர் நடத்திய ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என ஊகங்கள் பரவின. இந் நிலையில் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளார் என இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய…
-
- 0 replies
- 501 views
-
-
மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் உயிரிழப்பு மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது. இதனை தொடர்ந்து இராணுவ …
-
- 0 replies
- 215 views
-
-
‘இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி... சண்டையாக மாறிவிடக் கூடாது’: பைடன்- ஷி ஜின்பிங் பேச்சு! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமாகியுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது. தொலைபேசியில் உரையாடிய இரு தலைவர்களும், விரிவான, கேந்திர ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும், ஒத்த கருத்துடைய விஷயங்கள், மாறுபடும் விஷயங்கள் என இரண்டையும் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கு…
-
- 0 replies
- 376 views
-
-
தலிபான்களின் வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும்: எம்.ஐ.5. எச்சரிக்கை! ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஐ.5.இன் இயக்குநர் கென் மெக்கல்லம் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டு அரசாங்கத்தை தலிபான்கள் மிக எளிதாக கவிழ்த்தனர். இது, உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். மேற்கத்திய நாடுகளில் அல்-கொய்தா பாணியில் மீண்டும் மி…
-
- 0 replies
- 348 views
-
-
சிரியா அகதியாக, துயரங்கள், தடைகளைக் கடந்து விமானி பயிற்சி பெற்ற பெண் மாயா கசல் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNHCR/ ANDREW MCCONNELL படக்குறிப்பு, மாயா கசல் மாயா கசல் சிரியாவின் உள்நாட்டு போரிலிருந்து தப்பி வந்த லட்சக்கணக்கானவர்களில் ஒருவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது கல்வியை பெற போராட வேண்டியிருந்தது. அவர் தற்போது விமானியாக தகுதி பெற்றுள்ளார். ஐ.நா அகதிகள் முகமையின் நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார். "ஓவ்வொரு முறை நான் விமானத்திற்குள் நுழையும்போத…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் அஷ்ரஃப் கனி அரசு வீழ்ந்த பரபரப்பான கடைசி சில மணி நேரங்கள்: தாலிபன்கள் பிடிக்கு காபூல் வந்தது எப்படி? மொகமது மடி, அகமது காலித், சையது அப்துல்லா நிசாமி பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AP IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 15 அன்று, காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தாலிபன்கள். தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனியின் புத்தகம் அவரது மேசையிலேயே இருக்கிறது. ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளனர். கல்வி, சர்வதேச முதலீடு, ஜனநா…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் சவுக்கால் அடித்துக் காயப்படுத்தப்பட்ட செய்தியாளர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARCUS YAM/LOS ANGELES TIMES/SHUTTERSTOCK படக்குறிப்பு, தாலிபன்களால் சித்திரவதை செய்யப்பட்ட செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எடிலாட்ரோஸ் என்ற செய்தித்தாள் நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
சம உரிமை கோரி... போராட்டம் நடத்திய, பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்! சம உரிமை வேண்டும் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்தில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், பெண்களை தலிபான்கள் சவுக்கால் அடித்ததாக கூறப்படுகின்றது. நேற்று (புதன்கிழமை) காபூல் நகரில் ஒரு வீதியில் அணிவகுத்துச் சென்ற பெண்களை தடுத்து நிறுத்திய தலிபான்கள், சவுக்கால் அடித்தும் மின்சாரத்தை உமிழும் தடிகளால் தாக்கியதாகவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் கூறுகின்றனர். தலிபான்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்த ஒருநாளுக்கு பிறகு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள்ளாக நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இதுவாகும். பெண்களின் உரிமைகளுக்கு உறுதியளிப்பதாக தலிபான்…
-
- 0 replies
- 360 views
-
-
ஐடா சூறாவளி: இந்திய வம்சாவளியினர் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பு - கள நிலவரம் சலீம் ரிஸ்வி பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALIM RIZVI/BBC அமெரிக்காவில் கடந்த வாரம் வீசிய ஐடா சூறாவளி மற்றும் கனமழை நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த இரு மாகாணங்களில் குறைந்தபட்சம் 40 பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில் 13 பேரும் நியூ ஜெர்சியில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். நான்கு பேரைக் காணவில்லை. நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சிய…
-
- 1 reply
- 402 views
- 1 follower
-