உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
அமெரிக்காவை... புரட்டி போட்ட, ஐடா சூறாவளி: 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார தடை! அமெரிக்காவின் லூசியானாவில் ஐடா சூறாவளி தாக்கியதால், 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு தடைப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் மட்டுமே வேலை செய்யும் நிலையில், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. சென்ற வார இறுதியில் மெக்ஸிக்கோ வளைகுடாவில் உருவான ஐடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 150MPH (240 கிமீஃமணி) காற்று வீசியது மற்றும் தப்பி ஓடாத மக்கள் அந்த இடத்தில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பேடன் ரூஜ் பகுதியில், அசென்ஷன் பாரிஷில் உள்ள வீடு மீது மரம் விழுந்ததில் ஒரு…
-
- 0 replies
- 271 views
-
-
காபூல் விமான நிலையத்தை... இலக்கு வைத்த, ஐந்து ரொக்கெட் குண்டுகளையும் இடைமறித்தது அமெரிக்கா! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐஎஸ்.ஐஎஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார். பெயர் தெ…
-
- 0 replies
- 269 views
-
-
ஜேர்மனியில்... கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 209 views
-
-
காபூல் விமான நிலையத்தை... கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தலிபான்கள் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் தலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவருகிறது. இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே, காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராக…
-
- 0 replies
- 194 views
-
-
காபூலில் இருந்து... மக்களை மீட்கும், பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. காபூல் விமான நிலையத்திற்குள் அமெரிக்காவால் மீட்கப்பட வேண்டியவர்களில் இறுதியாக 1000 பேர் மட்டுமே உள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர்கள் எப்போது அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது முடிவாகாத நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதில் ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க துருப்புகளும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது 4 ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்க படையினர் மட்டுமே காபூல் விமான நிலையத்…
-
- 0 replies
- 162 views
-
-
இத்தாலிய தீவிலிருந்து 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்கு குடியேறியவர்களின் வருகை சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது. இந்த சனிக்கிழமையன்று மாத்திரம் 539 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் லாம்பேடுசாவுக்கு வருகை வந்துள்ளனர். இத்தாலிய கடலோர காவல் படையினரால் ஒரு மீன்பிடி படகில் நெரிசலான பயணம் கொண்டபோதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் இத்தாலியன் தெற்கே உள்ள தீவில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய தரையிறக்கங்களில் இதுவும் ஒன்றாகும். சனிக்கிழமை லாம்பேடுசா தீவில் தரையிறங்கியவர்கள் லிபியாவிலிருந்து மத்திய தரை கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில்…
-
- 0 replies
- 254 views
-
-
காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் - பைடன் எச்சரிக்கை அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் பெயரிடப்படாத இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு அருகில் "குறிப்பிட்ட, நம்பகமான அச்சுறுத்தல்" பற்றி ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தது. அதேநேரம் விமான நிலைய வாயில்களுக்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்து …
-
- 0 replies
- 427 views
-
-
அமெரிக்கா... ஈராக்கைவிட்டு வெளியேறினாலும், பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கும் – ஜனாதிபதி அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் தலைநகரமான பக்தாத் சென்றிருந்தார். அங்கு, ஈராக் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சவார்த்தையின் பின்னர் உரையாற்றிய அவர், “அமெரிக்காவின் தெரிவு எதுவாக இருந்தாலும் அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியெறினாலும்கூட, பிரான்ஸ் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் போராட, ஈராக்கில் தங்கியிருக்கும். ஈராக் அரசாங்கம் கேட்கும்வரை நாம் தொடர்ந்தும்…
-
- 0 replies
- 253 views
-
-
உலகளவில்... கொரோனாவால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது உலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது. அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்து 8 ஆயிரத்து 160ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 1.85 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 1.13 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அம…
-
- 0 replies
- 362 views
-
-
அலெக்சாண்டரின் மர்ம மரணம்: இந்தியா வந்தவரை முடக்கிய நரம்பியல் குறைபாடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அலெக்சாண்டர் வெண்கல சிற்பம் (உலக நாடுகள், தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினோராம் கட்டுரை இது) 'அலெக்சாண்டர் தி கிரேட்' என உலக வரலாற்றாய்வாளர்களால் போற்றப்பட்டு வந்த பேரரசர், கி.மு 323இல் பாபிலோனில் இறந்ததை வரலாற்றுப் பாட நூல்களில் படித்திப்போம். அவர் மர்ம நோயால் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் அல்லது ந…
-
- 0 replies
- 767 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கப் படையினர். காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து அந்த நபர் தாக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந…
-
- 3 replies
- 499 views
-
-
பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தும் இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே. இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்த இயக்கம் மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளை. இதன் மிகச் சரியான பெயர் கோரேசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State Khorasan Province) என்பதாகும். ஆப்கானிஸ்தானில் இருநது இயங்கும் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கம் இது என அறியப்படுகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொட…
-
- 0 replies
- 300 views
-
-
ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் குறித்து செளதி அரேபியா மெளனம் காப்பதன் ரகசியம் என்ன? சரோஜ் சிங் பட மூலாதாரம், REUTERS 1996 ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபோது, செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் தாலிபன்களை முதலில் அங்கீகரித்தன. இப்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் அடிமை சங்கிலிகளை உடைத்துவிட்டதாக கூறினார். மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகம் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனிக்கு அடைக்கலம் கொடுத்தது. ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம், "மனிதாபிமான அடிப்படையில் அதி…
-
- 0 replies
- 388 views
-
-
காபூலில்... தலிபான்களுடன், சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுடன் எந்தவித தடையுமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரு தரப்பிலும் தகவல்களும் ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமான விவகாரங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு காபூல் நகரம் முக்கிய தளமாகத் திகழ்கிறது. ஆப்கான் மக்களின் உணர்வுகளையும் சுதந்திரத்தையும் சீனா மதிக்கிறது. அந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும…
-
- 4 replies
- 961 views
-
-
காபூல் தாக்குதல்: மருத்துவமனைகளுக்கு விரைவுபடுத்தப்படும் காயம் அடைந்தவர்கள் இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு குவிந்துள்ளதால் தாக்குதல் நடைபெறும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தெரிவித்திருந்தன. தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னர், அங்கு `மிக கொடிய` பயங்கரவாத தாக்குதல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரிட்டன் எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாக்குதல் நடைபெறும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஆப்கானிஸ்தான…
-
- 2 replies
- 405 views
-
-
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்திற்கு பயணம் செய்வதற்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களும் இதே போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. காபூல் விமான நிலையத்தில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட காத்திருக்கிறார்கள் என பென்டகன் வட்டாரங்கள் கூறியுள்ளன. லண்டன், கான்பெர்ரா மற்றும் வொஷிங்டனில் இருந்து புதன்கிழமை பிற்பகுதியில் ஒரே மாதிரியான பயண எச்சரிக்கைகள் அந்த பகுதியில் கூடியிருந்த மக்களை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தியது. விமான நிலையம் பற்றிய பாதுகாப்பு எச்சரிக்…
-
- 2 replies
- 512 views
-
-
சிறைவைக்கப்பட்டிருந்த சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி சிறைச்சாலையில் இருந்த சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். சாட் நாடு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. 1982 முதல் 1990 வரை சாட் நாட்டின் ஜனாதிபதியாக ஹசனி ஹப்ரி (79) செயல்பட்டு வந்தார். இவர் தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டார். எதிர்க்கட்சியினருக்கு தூக்குத்தண்டனை விதித்தல் என பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டார். இவரது ஆட்சி காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் ஆட்சியை இட்ரிஸ் துபே இட்னோ என்பவர் கைப்பற்றினர். இதனால், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசனி ஹப்ரி …
-
- 0 replies
- 210 views
-
-
அகதிகள் போர்வையில்... தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை! பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்வதற்குச் சில நாட்களின் முன், இவர் ஆயுதங்களுடன் தலிபான்களின் பக்கம் நின்றிருந்துள்ளமையை பிரான்ஸின் புலனாய்வுப்பிரிவினர் உடனடியாக அவதானித்துள்ளனர். அகதிகள் போல் பிரான்ஸிற்குள் ஊடுருவிய தலிபான் ஆக இவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்பட்ட நிர்வாகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான MICAS நடவடிக்கையின் கீழ் இவரு…
-
- 0 replies
- 257 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கான... உதவியை, நிறுத்தியது உலக வங்கி ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைவதாக உலக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக வங்கி கடந்த 2002 முதல் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1236092
-
- 0 replies
- 222 views
-
-
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்கள் நிலை தொடர்பில் மலாலா கவலை நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மீது தனது கவலையை வெளிப்படுத்தினார் மற்றும் தற்போது ஆப்கானிஸ்தானை ஆளும் பயங்கரவாதக் குழுவுடன் தனக்கு ஏற்பட்ட சோதனையை விவரித்தார். ஒரு வலைப்பதிவு இடுகையில் மலாலா போஸ்டனில் இருந்து ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், 2012 ஒக்டோபரில் பாடசாலைக்கு செல்லும் வழியில் பாகிஸ்தானிய தலிபான் பயங்கரவாதியால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பால் முக முடக்குதலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறினார். நாட்டின் தாலிபான் முற்றுகை காரணமாக பல பெண்கள் மோசமான தலைவிதியை சந்திக்க நேரிடும் என்றும் மலாலா கூ…
-
- 1 reply
- 485 views
-
-
தலிபான்கள் மீது... தடை விதிப்பது குறித்து, பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்! தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை. கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்’ என கூறினார…
-
- 0 replies
- 228 views
-
-
ஓகஸ்ட் 31க்குப் பின்னர்... அமெரிக்கா, தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது- தலிபான்கள் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விமானங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க விமானங்களில் 10 ஆயிரத்து 400 பேரும் அதன் 61 நட்பு நாட்டு விமானங்கள் மூலம் 5 ஆயிரத்து 900 பேரும் காபூலை விட்டு வெளியேறினர். மேலும் பல ஆயிரம் பேர்களை வெள…
-
- 0 replies
- 323 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு... வந்த உக்ரேனிய, விமானம் கடத்தல்! உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த விமானம் உக்ரேனியர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு சென்றதாக உக்ரேனிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விமானம் கடத்தப்பட்டமையினால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து 31 உக்ரேனியர்…
-
- 0 replies
- 424 views
-
-
உக்ரேனுக்கு எதிராக... ரஷ்யா, சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் தடை: ஜேர்மனி எச்சரிக்கை! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் கியேவுக்கான வருகையின் போது உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் மீதான தனது கவலையை புரிந்து கொண்டதாக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். உக்ரேனின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகக் கூறி ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த திட்டத்தை எதிர்க்கிறார். இது பால்டிக் கடலின் கீழ் இயங்கும் மற்றும் ஜேர்மனிக்கு இரட்டை ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும். ரஷ்ய தலைமையிலான …
-
- 0 replies
- 386 views
-
-
ஜூலை மாதத்திலிருந்து... 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: அமெரிக்க ஜனாதிபதி பைடன்! கடந்த ஜூலை மாதத்திலிருந்து 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் ஐந்தாயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், த…
-
- 0 replies
- 334 views
-