உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26623 topics in this forum
-
பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தில் காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2021/1228…
-
- 18 replies
- 887 views
-
-
ஆஃப்கானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்! ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான ‘Operation Allies Refuge’ என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், ‘அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்’ என கூறினார். முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்க…
-
- 0 replies
- 232 views
-
-
அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு யுரேனியத்தை எங்களால் செறிவூட்ட முடியும்: ஈரான்! அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, எதிர்வரும் தனது ஆட்சியில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று வல்லரசு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஹஸன் ரௌஹானி இந்த கருத்து அமைந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, “ஈரான் நினைத்தால், அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 90 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம…
-
- 0 replies
- 226 views
-
-
கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்? 13 ஜூலை 2021, 08:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போராட்டக்காரர்களை சிலரை பாதுகாப்புப் படையினர் இழுத்துச் சென்றனர் கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர். பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத…
-
- 2 replies
- 497 views
- 1 follower
-
-
சீனாவில்... ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம் கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் 23 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் கட்டிடத்தின் கட்டமைப்பை மாற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உயிருடன் காணப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. https://athavannews.com/2021/1228574
-
- 0 replies
- 301 views
-
-
தம்மிடம் சரணடைந்த ஆப்கான் அரச ராணுவக் கொமாண்டோக்களைச் சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமஎரிக்கத் துருப்புக்கள் முற்றாக வெளியேறியுள்ள நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத் தீவிரவாதிகளான தலிபான்கள் அரச ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றனர். அரச ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பல நகரங்கள் தற்போது தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறானதொரு சண்டயில், தம்மிடமிருந்த ரவைகள் தீரும்வரை போரிட்ட அரச ராணுவத்தின் சிறப்புக் கொமாண்டோப் படையணியின் 22 ராணுவ வீரர்கள் தாம் சரணடைய விரும்புவதாகக் கூறி தலிபான்களின் முன்னால் வரும்போது, அவர்களை அருகிலிருந்து சுட்டுக்கொன்றுள்ளனர் தலிபான்கள். அத்துடன் தலிபான்களில் ஒருவர் இக்க…
-
- 3 replies
- 501 views
-
-
தென்னாபிரிக்க வன்முறையால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போராடி வரும் பொலிஸார் ஆயிரக்கணக்கான பொலிஸ் வீரர்களை வீதிகளில் நிறுத்தியுள்ளனர். நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாதது என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்தார். ஏறக்குறைய ஒரு வார அமைதியின்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர். அதேநேரம் 1,300 வன்முறையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
-
- 2 replies
- 362 views
-
-
கரீபியன் நாட்டின் தலைநகருக்கு வெளியே தனது தனியார் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் ஒரு ஆயுதமேந்திய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார் என்று நாட்டின் செயல் பிரதமர் புதன்கிழமை தெரிவித்தார். முதல் பெண்மணி மார்ட்டின் மோஸும் அதிகாலை வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார். https://www.nydailynews.com/news/world/ny-haitian-president-jovenel-moise-killed-attack-home-20210707-q4dxxwwmnvfftp5atncwsterzm-story.html#nt=pf-double%20chain~top-version1~flex%20feature~curated~haiti-703a~Q4DXXWWMNVFFTP5ATNCWSTERZM~1~1~3~7~art%20yes ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் புத…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஈராக்கில்... கொரோனா வைரஸ் மருத்துவமனையில், தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்! ஈராக்கின் தெற்கு நகரமான நாசீரியாவில் உள்ள கொரோனா வைரஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது 60பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் பல நோயாளிகளைக் காணவில்லை என்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன. இறந்தவர்களில் இரண்டு சுகாதார ஊழியர்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னால் கூடி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இரண்டு பொலிஸ் வாகனங்கள…
-
- 0 replies
- 124 views
-
-
இங்கிலாந்தில் வரும் 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு; பிரதமர் அறிவிப்பு இங்கிலாந்து நாட்டில் வருகிற 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பதிவு: ஜூலை 13, 2021 09:44 AM லண்டன், இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனாவால் 2வது அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. சமீப நாட்களாக ஒரு நாளில் 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு ஜூன் 21ந்தேதி முதல் கட்டுப்பாடு…
-
- 2 replies
- 288 views
-
-
ஆப்கானில்... நிலை கொண்டிருந்த, அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது பொறுப்புக்களை பிராந்தியக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர். …
-
- 1 reply
- 641 views
-
-
பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்! ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு…
-
- 0 replies
- 247 views
-
-
அடுத்த வியாழக்கிழமை ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு : வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகாலம் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைத் தாக்கிய ரம்சம்வார் தாக்குதல் மற்றும் ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து இதன்போது பேச்சு நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என வெ…
-
- 0 replies
- 506 views
-
-
கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி பட மூலாதாரம், Getty Images கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள். அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். கடந்த செவ்வாய்…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் - பைடன் உறுதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார். மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு ஒன்றிணையுமாறு நாட்டின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். 20 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்க ஒரு காலத்தில் கொண்டு வர விரும்பிய சிறந்த நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 200…
-
- 5 replies
- 525 views
-
-
தீ விபத்தில் 52 பேர் பலி : பலர் காயம் - பங்களாதேஷில் சம்பவம் ! பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளுது. தீ விபத்து இடம்பெற்ற தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீயையடுத்து குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களில் 44 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு இயந்…
-
- 0 replies
- 589 views
-
-
அந்தாட்டிக்காவில் புதிய தாவர இனம் இந்தியா விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு அந்தாட்டிக்காவில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தாட்டிக்கா புவியின் தென் முனையில் உள்ள ஒரு உறைந்த கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவது குறைவாகவே இருக்கும், இதன் காரணமாக மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையிலே புதிய தாவர இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் 2017 ஆம் ஆண்டில் பனியால் மூடப்பட்ட கண்டத்தில் பயணத்தின் போது ஒரு வகை பாசி தாவரத்தை கண்டனர். அடையாளம் காண்பது கடினமான இந்த இனம…
-
- 0 replies
- 441 views
-
-
ஆஃப்கானில்... தலிபான்களுக்கு, எதிராக போராட ஆயுதமேந்தும் பெண்கள்! ஆஃப்காஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற நிலையில், தலிபான்களுக்கு எதிராக போராட அங்குள்ள பெண்கள் ஆயுதமேந்த தொடங்கியுள்ளனர். பெரும்பாலான பெண்கள் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளையும் ஆப்கானிஸ்தானின் கொடியையும் சுமந்து நிற்கும் படங்கள் கடந்த சில நாட்களாக வெளியாகின. தலிபான்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது என்ற காரணத்தால், ஜாஸ்ஜான் மற்றும் கௌர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களின் இந்த முன்னெடுப்பு, காபூல், ஃபார்யாப், ஹெராத் மற்றும் பிற நகரங்களிலும் க…
-
- 0 replies
- 389 views
-
-
மூன்று மாதங்களுக்கு பிறகு... "எவர்கிவன்" சரக்கு கப்பலை, விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம்! சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு எவர்கிவன் சரக்கு கப்பலை, சூயஸ் கால்வாய் ஆணையம் விடுவித்துள்ளது. இதையடுத்து எவர்கிவன் சரக்கு கப்பல், நேற்று (புதன்கிழமை) நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதம் எவர்கிவன் சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்றது. இதன் காரணமாக சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால முயற்சிக்கு பிறகு எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொ…
-
- 0 replies
- 454 views
-
-
கொரோனா தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் நோய்த் தொற்று வராதா? - நிபுணர்கள் கூறுவது என்ன பட மூலாதாரம், Getty Images கொரோனாவுக்கான தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி, இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா என்பதுதான். அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வராதா, அவர்கள் மூலமாக நோய் பரவாதா என்ற கேள்விகள் எழுந்தன. இப்போதும் பலர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்ட பிறகு தமக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் உண்மை …
-
- 1 reply
- 468 views
-
-
முகக்கவசம் அணிவதற்கான... சட்டபூர்வமான கடமையை, முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்: பிரதமர் பொரிஸ்! முகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முகக்கவசம் தொடர்பான அனைத்து சட்டங்களும் அரசாங்கத்தின் தளர்வு வரைபடத்தின் நான்காவது கட்டத்தில் இரத்து செய்யப்படும் என்றும், மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் என்றும், இந்த கட்டத்தில் இருந்து முகக்கவசம் அணிவது தனிப்பட்ட தேர்வாக மாறும் என்றும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். கடைகளில் அல்லது ஒரு மதுபானசாலை அல்லது உணவகத்திற்குள் நுழையும்போது தனிநபர்கள் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்பதே இதன் பொருள். இதுகுறித்து அவர…
-
- 0 replies
- 415 views
-
-
அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ, ஜூலை 4 ஆம் திகதி விடுமுறை வார இறுதியில் மாநிலத்தில் 51 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறினார். கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 200 பேர் உட்பட, நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கியூமோவின் பேரிடர் அவசர நிலைமை அறிவிப்பு துப்பாக்கி வன்முறையை ஒ…
-
- 0 replies
- 310 views
-
-
தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சி... 1,000 ஆஃப்கான் படை வீரர்கள் தஜிகிஸ்தானில் தஞ்சம்! ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள…
-
- 1 reply
- 413 views
-
-
ரஷ்யாவில்... 29 பேருடன், பயணித்த விமானம் மாயம்: தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்! ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 28 பேருடன் ரஷ்ய ஏ.என்-26 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. தேடல் மற்றும் மீட்பு குழுக்கள், தியா ரியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் 22 பயணிகள் மற்றும் …
-
- 0 replies
- 326 views
-
-
நாடு கடத்தப்பட்ட... திபெத்தியர்களுடன், தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்! சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின், அவரது தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனித உரிமைகள் குழு, திபெத் வாட்சை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திபெத்தில் பல உள்ளூர் ஆதாரங்கள் கடும் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1ஆம் திகதி, சி.சி.பி நூற்றாண்டுக…
-
- 0 replies
- 294 views
-