உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள். தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். …
-
- 0 replies
- 236 views
-
-
ஆப்கானில் தலிபான் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கின்ற அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு இன்னும் ஒருமாதகாலமே இருக்கின்ற நிலையில் தலிபான் பாரிய வன்முறையில் ஈடுபட்டு;ள்ளதால் ஆப்கானின் பலபகுதிகளில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. கந்தஹாரின் ஸ்பின்பொல்டாக் மாவட்டத்தில் பொதுமக்களையும் முன்னாள்மாகாண அதிகாரிகளையும் தலிபான் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலை செய்துள்ளது. காஸ்னி மாகாணத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளை தலிபான் அமைப்பு கொலை செய்துள்ளது. அமெரிக்க பிரிட்டன் தூதரகங்கள் தலிபானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை யுத்த குற்றம் என வர்ணித்துள்ளன. சர்வதேச சட்டங்களினால் பாதுகாக்கப்…
-
- 0 replies
- 336 views
-
-
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில்... கனேடிய தொழிலதிபருக்கு, சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை! தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஸ்பாவோர், மீதான வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, போதை மருந்து வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் லாய்டுக்கு, சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒருநாளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில…
-
- 0 replies
- 423 views
-
-
கோவிட் தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டோரில் பலர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், 8 ஆயிரம் முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கு கடற்கரை அருகே உள்ள ஃப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இந்த செவிலியரின் செயல்பாடு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 6 பேருக்கு மட்டுமே இப்படி உப்புக்கரைசல் ஊசி போடப்பட்டதாக நம்பப்பட்டது. இப்படி தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்…
-
- 3 replies
- 596 views
-
-
நூற்றுக்கணக்கான... அரச படையினர், தலிபான்களிடம் சரணடைவு ! அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையளித்து சரணடைந்ததாக குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர் அம்ருதீன் வாலி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து பின்வாங்குவதால் தாலிபான் போராளிகள் குழு தற்போது ஆப்கானிஸ்தானின் மாகாண தலைநகரங்களில் கால் பகுதிக்கு மேற்பட்டவற்றினை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்ப…
-
- 2 replies
- 653 views
-
-
தாய்லாந்தில் கொரோனா அதிகரிப்பையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு கோரி போராட்டம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமரை பதவி வில…
-
- 0 replies
- 504 views
-
-
ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டன் பிரஜை ஜேர்மனில் கைது! ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் இங்கிலாந்து பிரஜையொருவர் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தி பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது. டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் பேர்லினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்ததாக ஜேர்மன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மதிப்பிடப்படாத பணத் தொகைக்கு பதிலாக அவர் குறைந்த பட்சம் ஒருமுறையாவது ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை பெர்லினுக்கு வெளியே போட்ஸ்டாமில் கைது செய்யப்பட்டதுடன், புதன்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவு…
-
- 0 replies
- 355 views
-
-
இளம் பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்யும் தலிபான்கள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வதாக “த மெயில்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான்கள் புதிய நகரம் அல்லது மாவட்டத்தைக் கைப்பற்றும் போதெல்லாம், உள்ளூர் மசூதிகளின் பேச்சாளர்கள் மூலம் அனைத்து உள்ளூர் பெண்கள் மற்றும் விதவைகளின் பெயர்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலிபான்களுக்கு அஞ்சும் மக்கள் தங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். …
-
- 7 replies
- 851 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக, தலிபான்கள் மீது... தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை…
-
- 0 replies
- 290 views
-
-
இங்கிலாந்தில்... இதய அறுவை சிகிச்சை காத்திருப்பு, 40 சதவீதம் அதிகரிக்கலாம்! அடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்காக அதிக அரசாங்க பணம் தேவை என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதய சேவைகள் கொவிட் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, முக்கிய இதய பராமரிப்புக்கான காத்திருப்பு பட்டியல்கள் மிக நீளமாக இருந்தன என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் கூறியது. காத்திருப்பு பட்டியலைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு 1…
-
- 0 replies
- 350 views
-
-
போர் நிறுத்தத்திற்கான... சர்வதேச அழைப்புகளை, நிராகரித்து தலிபான்கள் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. சமீபத்திய தாக்குதல்களில் டஸன் கணக்கான தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலையீடுக்கு எதிராக எச்சரித்தார். ஆ…
-
- 0 replies
- 311 views
-
-
கிரேக்க தீவான... ஈவியாவில், காட்டுத்தீ: குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றம்! கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் படகுகளில் வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க போதுமான உதவி அனுப்பப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் பல பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. கிரேக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 45சி (113எஃப்) ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பல காட்டுத் தீ பதிவாகியுள்ளது. ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ தற…
-
- 0 replies
- 210 views
-
-
வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக “பதற்றமான” சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை…
-
- 0 replies
- 208 views
-
-
சிங்கப்பூர் தேசிய நாள்: கேலி செய்யப்பட்ட சின்னஞ்சிறு தீவு பணக்கார நாடாக உருவெடுத்தது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் தனது 56-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறது. இன்று சிங்கப்பூரின் தேசிய நாள். 1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சிங்கப்பூர் உருவெடுத்தது இந்த நாளில்தான். சமீப தசாப்தங்களாக உலக அளவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளின் வருடாந்திரப் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது சிங்கப்பூர். ஆனால் அது தனி நாடாக உருவான போது கட்டமைப்புகள் ஏதும் இல்லாத, உணவுப் பொருள் உற்பத்தி …
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide பாரிய மனிதப் புதைகுழிகளில் ஏற்கனவே புதைக்க ப்பட்டிருந்த 19 பொஸ்னிய முஸ்லிம்களின் எச்சங்கள், தோண்டியெடுக்கப்பட்டு, டீஎன்ஏ சோதனைகள் மூலம் அவை அடையாளங் காணப்பட்டு, பிரேதப் பெட்டிகளில் வைக்கப்பட்டு, அந்தக் கிழக்கு பொஸ்னிய நகரத்தின் ஓரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட துயிலும் இல்லத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன. படுகொலை நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் அருகிருந்த வொல்யாவிற்சா (Voljavica) என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பது வயது நிரம்பிய வாஹிட் சுல்ஜிச் (Vahid Suljic) தனது குடும்பத் தாருடன் ஸ்றபிறெனிற்சாவில் அடைக்கலம் தேடியிருந்தார். இனவழிப்பிலிருந்து அவரால் உயிர் பிழைக்க முடிந்தது. ஆனா…
-
- 0 replies
- 475 views
-
-
இஸ்ரேல் நிலைகளை நோக்கி லெபனானின் ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேல் நிலைகளை நோக்கி ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளர் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டத…
-
- 0 replies
- 207 views
-
-
டோக்கியோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் படுகாயம் - சந்தேக நபர் கைது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் மேற்கு நகரிலுள்ள செடாகயா வார்டு பகுதியில் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து…
-
- 0 replies
- 217 views
-
-
உலக சுகாதார நிறுவனத்தின், கோரிக்கையை... பிரான்ஸ்- ஜேர்மனி நிராகரித்தது! தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என உலக சுகாதார நிறுவனம் முன்வைத்திருந்த கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, பிரான்ஸ் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் முதியவர்கள் …
-
- 0 replies
- 238 views
-
-
ஈரான் மீது... இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக, இஸ்ரேல் எச்சரிக்கை! தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ், ‘எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார். பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான்…
-
- 0 replies
- 226 views
-
-
"டெல்டா கொவிட்" மாறுபாடு... 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்! மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா கொவிட்-19 மாறுபாடு, 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புதிதாக கொரோனா…
-
- 0 replies
- 170 views
-
-
ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை! ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம் வீழ்ந்ததாக பல ஆதாரங்கள் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாண தலைநகராக இது மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதால் கிளர்ச்சியாளர்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களை கைப்பற்றி இப்போது முக்கிய நகரங்…
-
- 0 replies
- 191 views
-
-
இரண்டு தடுப்பூசி அளவுகளை... செலுத்திய மாணவர்களுக்கு, குழுக்கள் முறையில் பணப் பரிசு! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள், இந்தப் போட்டியில் 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும். இளைஞர்களிடையே தடுப்பூசி வீதங்களை உயர்த்துவதற்கான சமீபத்திய ஊக்கமாக, இந்த அறிவிப்பை சசெக்ஸ் பல்கலைக்கழகத் திட்டம் வெளியிட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் குழுக்கள் முறையில் சேர்க்கப்படுகிறார்கள், ஐந்து வெற்றியாளர்கள் தங்களுக்கான 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும். குறிப்பாக மாணவர்கள் இரண்டு தடுப்பூ…
-
- 0 replies
- 353 views
-
-
துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்! துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் எல்லை வழியாகத் துருக்கி வந்தடைந்த சரக்கு லொரியை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது சிறுவர்கள், பெண்கள் என 300இற்கும் மேற்பட்டோர் பதுங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளனர். ஆப்கான் அகதிகளைக் கையாளத் துருக்கி அரசு தெளிவான நெறிமுறைகளை இன்னும் வகுக்காதத…
-
- 0 replies
- 311 views
-
-
கொவிட்-19: இங்கிலாந்தில் 18- 34 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்! இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் தெரிவித்துள்ளார். சுமார் 1,000 இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் மேலும் கூறினார். தடுப்பூசி போட மக்கள் முன்வந்தது மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர்களின் அளவு கடந்த குளிர்காலத்தில் உச்சத்தை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அவர் கூறினார். குளிர்கால எழுச்சியின் போது மருத்துவமனையில் இருந்தவர்களில் ச…
-
- 0 replies
- 322 views
-
-
சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்? உமர் ஃபாரூக் பாதுகாப்பு ஆய்வாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சண்டை விமானம். விமானப்படைக்கு ஆறாவது தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானத்தை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியிருக்கிறதா? கிடைக்கும் சமிக்ஞைகளைப் பார்த்தால் இந்த கேள்விக்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது. 'ஆறாவது தலைமுறை' போர் விமானங்கள் மூலம் 'அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்' (NGAD) என்ற திட்டம், அடுத்த 10 ஆண்…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-