உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை 24 Views சவுதி (Saudi Arabia)அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக செற்பாட்டாளரான லூஜின் அல் ஹத்லால். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின் லூஜின் அல் ஹத்லால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். ஆனால் அவரது விடுதலை குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும்…
-
- 0 replies
- 435 views
-
-
சதித்திட்டத்தின் பின்னாலுள்ள மியான்மர் இராணுவத் தலைவர்கள் மீது பைடன் பொருளாதாரத் தடைகள் விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மியன்மாரில் நடந்த இராணுவ சதித் தலைவர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிறைவேற்று ஆணையில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இது ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய இராணுவத் தலைவர்கள், அவர்களின் வணிக நலன்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது நேரடியாக தாக்கம் செலத்துகிறது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய பைடன், இன்று, சதித்திட்டத்தின் தலைவர்கள் மீது விளைவுகளை சுமத்தத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை நான் அறிவிக்கிறேன். பர்மிய (மியான்மர்) அரசாங்கத்தில் ஒரு பில்லியன் டொலர்களை ஜெனரல்கள் முறையற்ற முறையில…
-
- 0 replies
- 545 views
-
-
செவ்வாய்க் கிரகத்தில் தடம்பதித்தது ‘நம்பிக்கை’ விண்கலம்- ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று சாதனை! வளைகுடா நாடுகளில் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பிய ‘நம்பிக்கை’ என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 19ஆம் திகதி ஜப்பானின் தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ரொக்கெற் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ‘அல் அமால்’ என அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழில் நம்பிக்கை என பொருள்படும்) இந்த விண்கலம், 1.3 தொன் எடை கொண்டதாகும். இந்நிலையில், குறித்த விண்கலம் 201 நாட்களில் 49 கோடியே 50 இலட்சம் கிலோமீற்றர் தூரம் விண்வெளியில் பயணித்து 2021, பெப்ரவரி ஒன்பதாம் திகதி செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்தது. …
-
- 4 replies
- 869 views
-
-
"கொரோனா சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு. "கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை" என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார். …
-
- 2 replies
- 945 views
-
-
ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு செனட் சபை அங்கீகாரம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கான இரண்டாவது குற்றச்சாட்டு வழக்கு அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று அமெரிக்க செனட் சபை செவ்வாய்க்கிழமை வாக்களித்தது. அதன்படி ஏற்கனவே குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று குடியரசுக் கட்சியின் சில கவலைகள் இருந்தபோதிலும், வரலாற்று குற்றச்சாட்டு விசாரணையுடன் முன்னேற செனட் சபை வாக்களித்தது. 56 செனட்டர்கள் ஆம் என்றும் 44 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர். 56-44 பிளவு என்பது ஆறு குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தனர். அமெரிக்காவின் ஜனாதிபதியொருவர் இதற்கு முன்னர் இது போன்ற குற்றச்சாட்டுக்கு உ…
-
- 1 reply
- 587 views
-
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும்வரை பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது: அமெரிக்கா! 2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘2015ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது. சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஈரானுடனான தங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம்’ என கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடை…
-
- 0 replies
- 331 views
-
-
கொரோனா பாதிப்பு: இங்கிலாந்தில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்ற 3ல் ஒருவருக்கு மனநல பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல் இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று எளிதில் பரவ கூடிய ஒன்றாக மாறி பலரை பாதிப்பிற்கு ஆளாக்கியது. இதுதவிர புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்புகளும் அந்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறியப்பட்டது. இதனால், அந்நாட்டுடனான பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இவற்றில் இந்தியாவும் அடங்கும். இந்நிலையில், லண்டன் இம்பிரீயல் கல்லூரி மற்றும் சவுதாம்ப்டன் பல்கலை கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், ஐ.சி.யூ. சூழலில், வென்டிலேட்டர் தேவையின்றி சிகிச்சை பெற்ற 18 சதவீதத்தினருக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது …
-
- 0 replies
- 450 views
-
-
டிசம்பர் 2019 க்கு முன் சீனாவில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை- உலக சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு பீஜிங் கொரோனா நோய் தோற்றம் குறித்து தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், இதுவரை அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிட்டு உள்ளனர். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்…
-
- 1 reply
- 602 views
-
-
ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனி…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
http://www.thinappuyalnews.com/wp-content/uploads/2021/02/download-13-8.jpg சீனாவுடன் ஆயுத தொடர்புகள் குறித்து.. நூற்றுக்கணக்கான இங்கிலாந்து கல்வியலாளர்கள் மீது விசாரணை! பிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு, குறித்த கல்வியலாளர்கள் தெரியாமல் உதவி செய்தார்களா என்ற சந்தேகத்தில் இவ்வாறு விசாரணை இடம்பெறுவதாக டைம்ஸ் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிக உணர்திறன் வாய்ந்த பாடங்களில் உள்ள அறிவுசார் சொத்துக்கள், நட்புநிலையற்ற நாடுகளுக்கு ஒப்படைக்கப்படுவது தடை…
-
- 2 replies
- 430 views
-
-
அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது! சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் சீன அரசாங்கம் முறையாகக் கைதுசெய்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில் செங் லீ, ஒரு வகையான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதுடன் இந்தக் காவல், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான வாய்ப்பை மறுத்து ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து விசாரிக்க சீனக் காவல்துறையை அனுமதிக்கிறது. இதேவேளை, செங் லீயை முறையாகக் கைதுசெய்வது குறித்து கடந்த வார இ…
-
- 0 replies
- 516 views
-
-
அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு’ எதிராக போராட ஐ.நாவுடன் மீண்டும் இணையும்: அமெரிக்கா 25 Views உலகெங்கிலும் உள்ள “அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு” எதிராக போராடுவதற்காக, 2018 ல் டொனால்ட் ட்ரம்ப் விட்டுச் சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் சேரப்போவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மீட்டமைக்க அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தில் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் காலத்தில் பின் இருக்கை பிடித்த கூட்டணிகளையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந…
-
- 1 reply
- 568 views
-
-
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா! ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது. தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்வெலி ம்கைஸின் தெரிவித்துள்ளார். இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணிய…
-
- 0 replies
- 342 views
-
-
பிரித்தானியாவில் சிறீலங்கா தேசியக் கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது! By Seelan - 16 hours ago Share இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். “உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் …
-
- 3 replies
- 640 views
-
-
உளவுத்துறை தகவல்கள் ட்ரம்புக்கு வழங்கப்படக் கூடாது: ஜோ பைடன்! முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் ட்ரம்புக்கு அது தேவையில்லை. அவருக்கு எந்த மதிப்பீட்டின் உளவுத்தகவல்களை தெரிவிப்பது. ட்ரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே கசியவிட்டு, அதுபற்றி ஏதாவது கமென்ட் அடிப்பதைத் தவிர, வேறு என்…
-
- 2 replies
- 443 views
- 1 follower
-
-
நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோ இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாகவும், கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பி…
-
- 0 replies
- 326 views
-
-
வீகர் மக்களின் மறுகல்வி முகாம்கள் என சீனா கூறும் மையங்களில் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமைக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகும் பெண்கள்
-
- 1 reply
- 521 views
-
-
ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துகிறது அமெரிக்கா - பைடன் முடிவு பட மூலாதாரம், REUTERS ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏமனில் கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் போரில் கிட்டதட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. "ஏமன் போர் நிறுத்தப்படவேண்டும்" என அமெரிக்க அதிபர் பைடன் தனது முதல் வெளிநாட்டு கொள்ளைகள் குறித்த உரையில் தெரிவித்தார். இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிரம்பிற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஒப…
-
- 0 replies
- 542 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்கும் டென்மார்க்! கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் கூறுகையில், ‘மூன்று, நான்கு மாதங்களில், டிஜிட்டல் கொரோனா கடவுச்சீட்டு பயன்படுத்த தயாராக இருக்கும். டேனிஷ் சமுதாயத்தை மீள மறுதொடக்கம் செய்வது முக்கியமானது. இதனால் நிறுவனங்கள் மீண்டும் இயங்க முடியும். பல டேனிஷ் நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக இருக்கின்றன, அவை உலகம் முழுவதையும் ஒரு சந்தையாகக் கொண்டுள்ளன. முதல் கட்டமாக, பெப்ரவரி இறுதிக்குள், டென்மார்க்கில் உள்ள குடி…
-
- 0 replies
- 583 views
-
-
http://athavannews.com/wp-content/uploads/2021/02/Euro-zone-downturn-deepened-in-January-as-lockdowns-hit-services-700x380.jpg புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி! கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரியில் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முடக்கக் கட்டுப்பாடுகள், உற்பத்தியாளர்கள், சேவையாளர்களின் வலுவான செயற்றிறனைப் பாதித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜேர்மனியில் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 626 views
-
-
2,42,000 ஏக்கர்; அமெரிக்காவின் நம்பர் 1 விவசாய நில உரிமையாளர்... என்ன செய்கிறார் பில் கேட்ஸ்? ராஜு.கே Bill Gates ( AP Photo/Elaine Thompson ) பில்கேட்ஸ் அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாய நில உரிமையாளர் என்றால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அது முற்றிலும் உண்மை. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸின் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது அவருடைய ஆரம்பகால கம்ப்யூட்டர் புரோகிராமிங் திறன்களும், அவர் உருவாக்கிய கம்ப்யூட்டர் சாம்ராஜ்யமும்தான். இன்று அவர்தான் அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாய நில உரிமையாளர் என்றால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அது முற்றிலும் உண்மை. பில…
-
- 0 replies
- 813 views
-
-
எகிப்து: 2000 வருடங்கள் பழைமையான தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டுபிடிப்பு - ஆச்சர்ய தகவல்! நமது நிருபர் தங்க நாக்கு கொண்ட மம்மி ( Egyptian antiquities ministry ) எகிப்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்க நாக்கு கொண்ட 2000 வருடங்கள் பழைமையான மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளனர். எகிப்தின் கடவுள் ஒசிரிஸ் Freepik ஒசிரிஸ் - பழங்கால எகிப்தின் ஒரு முக்கிய கடவுளாக கருதப்படுகிறார். இவர் பாதாள உலகின் ஆட்சியாளர் என்றும், உயிரிழந்தவர்களின் நீதிபதி என்றும் கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் மற்றும் சாண்டோ டோமிங்கோ பல்கலைக்கழகத்தினர் சேர்ந்து குழுவாக டொபோசிரிஸ் மேக்னா கோயிலி…
-
- 0 replies
- 803 views
-
-
ஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அனுமதி! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/pfizer-720x450.jpg ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அரசாங்கம் தற்காலிகமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசிகள் முதல் காலாண்டின் இறுதிக்குள் நியூசிலாந்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்தில் 50 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அனுமதி…
-
- 3 replies
- 900 views
-
-
மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது February 3, 2021 Myanmar's soldiers walk near the congress compound in Naypyitaw, Myanmar, February 2, 2021. REUTERS/Stringer NO RESALES NO ARCHIVES மியான்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது. நேற்று (2) இணையத்தள வழியாக மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நாடுகள் மியான்மார் இராணுவப்புரட்சிக்கு எதிராக கூடியிருந்தன. இதன் போது பிரித்தானியா கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தது. …
-
- 28 replies
- 3k views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் அலெக்ஸிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 458 views
-