உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
இந்தோனீஷியாவில் சிறுபான்மையின மக்களான சீனர்கள் பயன்படுத்தி வந்த 6 கோயில்களை முஸ்லிம் குழு ஒன்று கொளுத்தியதை தொடர்ந்து, போலிசார் 7 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.சுமத்ரா தீவில், தன் வீட்டுக்குஅருகே இருந்த மசூதியிலிருந்து அதிக சத்தம் வருவதாக சீன பெண் ஒருவர் போலிசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, புத்த மற்றும் கன்ஃபூசியர்களின் கோயில்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பான்மையான நாடு இந்தோனீஷியாஆனால், பெருமளவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது சில நேரங்களில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில், இன வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளது. http://www.seithy.com/breifNews.php…
-
- 0 replies
- 266 views
-
-
5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் …
-
- 0 replies
- 426 views
-
-
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு திருவனந்தபுரம் கோர்ட் தூக்கு தண்டனை! Posted by: Mathi Updated: Thursday, January 3, 2013, 17:53 [iST] திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்யா என்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம். கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவு…
-
- 0 replies
- 497 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மோதல் தொடரும் சிரியாவின் நகரனா அலெப்போவில், உதவிகள் செல்வதற்காக மூன்று மணிநேரம் மாத்திரம் மோதல் நிறுத்தம். * அகதிகள் போல பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதால், ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து ஜெர்மனியில் இராணுவமும் உள்நாட்டில் ரோந்தில் ஈடுபடவுள்ளது. * வீடியோ விளையாட்டுக்களுக்காக புதிய நகரங்களை நிர்மாணித்தல். மாய உலகை நிர்மாணிப்பதில் பிரிட்டிஷ் நிறுவனத்தின் சாதனை.
-
- 0 replies
- 455 views
-
-
சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு! by : Litharsan அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தவறான பாதையில் செல்லவேண்டும் என வலியுறுத்தினா…
-
- 9 replies
- 1.6k views
-
-
மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய் “சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் …
-
- 12 replies
- 4.2k views
-
-
டேராடூன்: டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். "பிசியோதெரபி' படித்த இந்த மாணவி, கடைசியாக எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகிஉள்ளன. இதுதொடர்பாக, மாணவி படித்த, சாய் நிறுவனத்தின் டீன் ஹரீஷ் அரோரா கூறியதாவது: பாலியல் பலாத்காரத்தில் பலியான மாணவி, 2008ம் ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, எச்.என்.பி.கார்வால் பல்கலையின் கீழ் செயல்படும், எங்கள் கல்வி நிறுவனத்தில், பிசியோதெரபி பாட வகுப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டு பட்டப்படிப்பான அதில், அவர் கடைசியாக எழுதிய தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து, 73 சத…
-
- 0 replies
- 423 views
-
-
தான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம் தான்சானியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடமேற்கு தான்சானியாவில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டராக பதிவாகியுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியினால் 200 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறித்த பூமியதிர்ச்சியனது ருவாண்டா, உகாண்டா மற்றும் கெ…
-
- 0 replies
- 455 views
-
-
எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா ஜிங் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.72-லட்சத்தைக் தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கு…
-
- 2 replies
- 543 views
-
-
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல் ஹைதராபாத்: வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ஹைதரபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது குறித்து முடிவு செய்யலாம். முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதால் மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்.சில மசோதாக்களை நிறைவேற்றலாம்.ஆனால் மக்களுக்கான சலுகைகளை வழங்க மத்திய அரசிடம் …
-
- 1 reply
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி நோயை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 405 views
-
-
தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக…
-
- 3 replies
- 4.9k views
-
-
திமுக தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவிற்கு எதிராக செயல்பட தயாராக இருக்கும் அழகிரிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க அதிமுக உதவுகிறது என திடுக்கிடும் செய்தி வந்துள்ளது. இதனால் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய பின்னரும் திடீரென மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பை தொடருவதற்கு அதிமுக அரசு முடிவு எடுத்ததன் பின்னணியில் ஒரு தேர்தல் கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து போனார் மு.க. அழகிரி. மற்ற திமுக அமைச்சர்களுடன் சேராமல் தனியே போய் ராஜினாமா கொடுத்த…
-
- 0 replies
- 560 views
-
-
டொரண்டோ downtown பகுதியில் உள்ள Front St. and Bremner Blvd என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஐந்து வயது குழந்தை ஒன்று 9 மீ உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தை தனியாக எவ்வாறு அந்த கட்டிடத்தின் மேலே சென்றது என்றும் விழுந்தது எவ்வாறு என்றும் தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த குழந்தை விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அழுது கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து செய்தி அறிந்தவுடன் மீட்பு குழுவினர் விரைந்து வந்து உடனே அந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த க…
-
- 0 replies
- 377 views
-
-
வுஹான் கொரோனா வைரஸ் அறிக்கைகளுக்காக சீன பத்திரிகையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை கொவிட்-19 பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜாங் ஜான், ஷாங்காய் நீதிமன்றில் ஒரு குறுகிய விசாரணையின் பின்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு செய்தியாளர்களிடம் கூறினார். ஜாங் ஜான், வெடிப்பின் குழப்பமான ஆரம்ப கட்டங்களில் அறிக்கை செய்ததற்காக மோதல்கள் மற்றும் சிக்கலைத் தூண்டுவதற்கும் வழியமைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்காககே இந் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவை சேர்ந்த …
-
- 0 replies
- 398 views
-
-
பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/worl…
-
- 12 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 286 views
-
-
பாதுகாப்பு படையினர் மீது பெருந் தாக்குதல்களை நடத்தி வந்த மாவோயிஸ்டுகள் இப்போது காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து இருக்கின்றனர். இதற்கு காரணம் காங்கிரஸ் உருவக்கிய சல்வா ஜூதும் என்ற அமைப்புதான்! ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா என விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய காடுகளும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளின் வலிமை வாய்ந்த பிரதேசம்.. இதில் குறிப்பாக சத்தீஸ்கரின் தண்டேவடா, பஸ்தர் பிரதேசங்கள் மாவோயிஸ்டுகளின் கொடி பறக்கும் கோட்டை... இதேபோல்தான் இதர மாநிலங்களிலும் பழங்குடி இன மக்கள்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதார பலம்.. இந்த ஆதார பலத்தை சிதைக்கும் முயற்சியாகத்தான் 1991ல் உருவானது ஜன் ஜாக்ரன் அபியான்... அதாவது நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் இயக…
-
- 0 replies
- 441 views
-
-
7 ஜூன், 2013 பிபிசியின் மீளக்கட்டியமைக்கப்பட்ட தலைமை அலுவலகத்தை எலிசபெத் மகாராணியார் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்காக லண்டனின் மையப்பகுதியில் இருக்கின்ற ''நியூ புரோட்காஸ்டிங் ஹவுஸ்'' என்னும் எமது தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த மகாராணியார், இங்கு நடந்த ஒரு இசைக்கச்சேரியின் நேரடி ஒலிபரப்பை கேட்டு ரசித்ததுடன், எமது செய்தி தயாரிப்பு அறைகளுக்கும் விஜயம் செய்தார். அதன் பின்னர் பிபிசி வானொலியின் கலையகத்துக்கும் அவர் வருகை தந்தார். அங்கு நேரலையில் உரையாற்றிய மகாராணியார், இந்த நிலையம், எதிர்காலத்தில் பிபிசியின் பணிகளுக்கு மிகவும் சிறப்பாகச் சேவையாற்றும் என்று நம்புவதாகக் கூறினார். அத்துடன் அதனை அதிகாரபூர்வமாக திறந்து வைப்பதா…
-
- 0 replies
- 470 views
-
-
ஐ.நா அலுவலகத்தில் உயிரிழந்த ரஷ்ய தூதுவர்.. ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் வதிவிட தூதுவர் விடாலி ஜுர்க்கின், அவரது அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (20ஆம் திகதி) தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, விடாலி ஜுர்க்கின் இறந்துள்ளதாக, ரஷ்யாவின் நிரந்தர ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜுர்க்கின் சுமார் 40 வருடங்களை ரஷ்யாவின் தேசிய பணிக்காக அர்பணித்துள்ள நிலையில், 20 வருடங்கள் பெல்ஜியம் மற்றும் கனடாவிற்கான உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஐ.நாவிற்கான வதிவிட தூதராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் விடாலி ஜுர்க்கின் உய…
-
- 0 replies
- 330 views
-
-
இந்தியாவைப் புறம்தள்ளும் இலங்கை அரசு புலிகளுடனான தற்போதைய போர் முடிந்ததும் இந்தியா இனித் தேவையில்லை என்ற ரீதியில் புறம்தள்ளப்பட்டுள்ள நிலைதான் இன்றுள்ளது. புலிகளை பலமிழக்கந்வெய்ய வேணடுமெனில் இந்தியாவின் நட்புறவு வேண்டும். அது முடிந்து பத்து நாட்களும் இல்லை இந்தியா ஓரம் கட்டுப்பட்டவிட்டது. ரஸ்சியாவிற்கும், சீனாவிற்கும் பாகிஸ்த்தானுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு நாடகம் இந்தியா எமக்குத் தேவையில்லை என்பதை மறைமுகப்பாணியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மீண்டும் இலங்கையில் இந்தியா மண்கவ்வியுள்ளது. இன்று ஆசியப்பிராந்தியத்தில் எதுவுமே இல்லாத சிறீ லங்கா கொட்டமடித்து பேசத்தொடங்கியுள்ளது. வல்லரசுகள் கூட பேசப்பயப்பிடும் விடயங்களில் கூட சிறீலங்கா முரசம் அடித்துப் பேசுகின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீன நாடாளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தையொட்டி தலைநகர் பீஜிங் வரும் பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தும் பாதுகாப்புப்படையினர்; நீதி கேட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து பேட்டியெடுக்க முயன்ற பிபிசி செய்தியாளருக்கும் தடை. * செல்வந்த அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மறுபக்கம்; அமெரிக்காவின் வறிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு. * உலகிலுள்ள மொத்த சிவப்புக்கல் இரத்தினங்களில் சுமார் சரிபாதி மொசாம்பிக் நாட்டில் இருந்தாலும் அவற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் பயன்பெற்றிருக்கிறதா?
-
- 0 replies
- 279 views
-
-
மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள ஜனதா கட்சி அலுவலகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வக்கீல்களை கைது செய்ய போலீசார் சென்ற போது, ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரான சுப்பிரமணியசாமி ஐகோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். பின்னர், சுப்பிரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "என் மீது முட்டை வீசிய வக்கீல்களை பார் கவுன்சிலில் இருந்து நீ…
-
- 3 replies
- 2k views
-
-
பிரான்ஸின்... கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின். பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு! பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன. இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் திகதியில் இருந்து, இந்தியா, பிரேஸில், சிலி, தென்னாபிரிக்கா, போன…
-
- 0 replies
- 253 views
-
-
காஷ்மீரின் முடிவில்லாத துயரம் இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. காஷ்மீரின் நகர் மக்களவை இடைத்தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறையும், மிகக் குறைந்த வாக்குகளே பதிவானதும் புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் பயனுள்ளதாக இருப்பதற்குப் பதில் வசைமாரிக்கே வழிவகுத்தன. உண்மையான பிரச்சினைகளைத் திரையிட்ட…
-
- 1 reply
- 566 views
-