Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பப்புவா நியு கினியாவில் நிலச்சரிவு! 15 பேர் பலி பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும். ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல …

  2. மத்திய கிழக்கில்... அமெரிக்க இலக்குகளுக்கு, எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடுகிறதா? மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடலாம் என்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாக மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஈரானும் பாரசீக வளைகுடாவில் பதற்றங்களைத் தூண்டுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றநிலையில், பெயர் வெளியிடாத நிலையில் பேசிய மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஈரானில் இருந்து மிகவும் கணிசமான அச்சுறுத்தல்களின் சமீபத்திய அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ரொக்கெ…

  3. சீனாவிலும் உருமாறிய கொரோனா - உருவாகிய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்த வைரஸ் பீஜிங்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உரு…

  4. குவைத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா! குவைத்துக்கு 8 அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் உட்பட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவைத்துக்கு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகொப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகொப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி அரேபியாவுக்கு 290 மில்லியன் அமெரிக்க டொலர் மதி…

  5. இந்தியா, இலங்கை உள்பட ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் பிறந்தது "2021" புத்தாண்டு பட மூலாதாரம்,TWITTER இந்தியா, இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் 2021ஆம் புது வருடம் பிறந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்பட…

  6. ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது. பட மூலாதாரம்,MÜNSTER DIOCESE படக்குறிப்பு, மன்ஸ்டர் கல்லறைத் தோட்டத்தில் 77 ஆண்டுகளாக கிடந்த போலந்தின்புராதன மணி. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி படை திருடிச் சென்றது. தெற்கு போலந்தின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தேவாலாயத்தினர் இந்த மணியை இரண்டு ஆ…

  7. சீனாவின் பனிச்சிகர நாயகன் வாங் ஷியாங்ஜுன் இறந்திருக்கலாம் என தகவல் பட மூலாதாரம்,DOUYIN படக்குறிப்பு, வாங் ஷியாங்ஜுன் சூழலியல் ஆர்வலர் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்கவரான சீனாவின் வாங் ஷியாங்ஜுன், திபெத்தில் கடுங்குளிர் நீரில் விழுந்ததால் இறந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இவரை அந்நாட்டவர்கள் "கிளேசியர் ப்ரோ" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள். 30 வயதான வாங் ஷியாங்ஜுன், ஒரு பனிப்பாறை நீர்வீழ்ச்சியை ஆராய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வாங்கின் உடல் இ…

  8. பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தம்- இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்! நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த வரைபு கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எட்டப்பட்ட புதிய உறவுக்கான ஒப்பந்தத்தை சட்டமாகக் கொண்டுவருகிறது. பிரெக்சிற் வாக்கெடுப்பு நடந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாளைய தினத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பிரித்தானியா துண்டிக்கிறது. இதனிடையே, ஒன்பது மாதங…

  9. சிரியா பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி - இறந்தவர்கள் சிப்பாய்கள் என தகவல் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, கோப்புப் படம். கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது. பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், ஒரு கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வட்டாரங்கள் பேருந்தில் சிப்பாய்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்று அவை …

  10. பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பிரித்தானியா நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 414 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. "இங்கிலாந்தில் முன்னோடியில்லாத வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், குறிப்பாக எங்கள் வைத்தியசாலைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் இது மிகவும் கவலையாக உள்ளது" என இங்கிலாந்தின் பொது சுகாதார மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சூசன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா தொற்றினால் 71,386 பேர் உயிரிழந்துள…

  11. கமலா ஹாரிஸுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது! Ilango BharathyDecember 30, 2020 அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் தடுப்பூசிப் போட்டுக் கொண்டார். https://thinakkural.lk/article/101855

  12. ஐரோப்பிய நாடான குரோசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு ஐரோப்பிய நாடான குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டடங்கள் சேதமடைந்தன என்பதுடன், சிலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கி…

  13. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் ஈரான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒருவார காலத்தில் 15 இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கும் இயலுமை தங்களிடம் காணப்படுவதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கத் தடைகள் காரணமாக போதுமான அளவு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் நாடு தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், முதல் கட்ட மனித சோதனைகளில் பங்கேற்க 56 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

  14. கோப்புப்படம் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரிலிருந்து 5 கப்பற்படைக் கப்பல்கள் மூலம், 1700க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை ஆள் நடமாட்டமில்லாத தனித்தீவுக்கு வங்கதேச அரசு இன்று அனுப்பி வைத்துள்ளது. அடைக்கலம் தேடி வந்த அகதிகளை ஆள்நடமாட்டமில்லாத தனித்தீவில் கொண்டுவிடும் வங்கதேச அரசுக்கு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் சிட்டகாங் நகரிலிருந்து கடலில் 3 மணி நேரப் பயணத்துக்குப் பின் பாஷன் சார் தீவில் கொண்டுவிடப்படுகின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வங்கதேச அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சிட்டகாங்கில் உள்ள காக்ஸ் பஜார் பகுதியில் இருந்து 1700க்கும் மேற்பட்ட ரோஹிங்கி…

  15. ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை BharatiDecember 29, 2020 ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை2020-12-29T07:05:50+05:30Breaking news, மருத்துவம் FacebookTwitterMore நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது. இப்படித் தெரிவித்திருக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலர் மருத்துவர் ஹரித அலுத்கே. ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த அவர், “எந்தவொரு நாட்டிலும் உள்ள வைரஸும் மாற்றம் அடை…

  16. கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி BharatiDecember 29, 2020 கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி2020-12-29T11:18:45+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குரு அரவிந்தன் தினக்குரல் வாசகர்களுக்கு முதற்கண் இனிய புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தாண்டு எமக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உலகம் முழுவதும் அறிமுகமாகின்றது. இந்த வருடம் அதாவது 2020 ஆம் ஆண்டு கோவிட் -19 தாக்கம் காரரணமாக ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதில் இருந்து மீள்வதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் நடைமுறைக…

  17. சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் BharatiDecember 29, 2020 சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்2020-12-29T13:36:12+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் …

  18. கொவிட்-19: பெல்ஜியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது! Ilango BharathyDecember 29, 2020 கொவிட்-19: பெல்ஜியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது!2020-12-29T14:59:56+05:30உலகம் FacebookTwitterMore கொரோனாப் பரவலைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் நேற்றைய தினம் ஜோஸ் ஹெர்மன்ஸ்( Jos Hermans )என்ற 96 வயது முதியவருக்கு முதல்நபராக பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குறித்த முதியவர், மருந்து செலுத்தப்பட்டபின்னர் 30 …

  19. திபெத்தின் புதிய தலாய்லாமாவை தெரிவு செய்வதில்... சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில், ட்ரம்ப் கையெழுத்து திபெத்தின் புதிய தலாய்லாமாவை தெரிவு செய்வதில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் ஒரு சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020’ என்கிற சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சட்டமூலம் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் முக்க…

  20. இலங்கையை விட அதிக பிரபலமடைந்துவரும் மாலைதீவு விமான நிலையம்.! இலங்கை விமான நிலையத்தில் உள்வரும் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் அதிகமான விமான நிறுவனங்கள் தமது விமான சேவைகளை மாலைதீவு வழியாக செயற்படுத்தி வருகின்றன. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் விமானங்கள் இல்லை என்பதால் இலங்கை விமான நிலையத்தை விட மாலைதீவு விமான நிலையம் 24 மணி நேரமும் இருவழி பாதைகளும் இயங்குவதால் பிரபலமடைந்து வருகின்றது. சகல நாடுகளின் விமானங்களும் தற்போது மலைதீவு ஊடாக நடைபெற்று வருகின்றன காலப்போக்கில் இவ் விமான நிலையம் சர்வதேச நாடுகளை கவரும் வகையில் மாற்றப்படலாம். இலங்கையின் நிலை இவ்வாறு தொட…

  21. வுஹான் கொரோனா வைரஸ் அறிக்கைகளுக்காக சீன பத்திரிகையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை கொவிட்-19 பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜாங் ஜான், ஷாங்காய் நீதிமன்றில் ஒரு குறுகிய விசாரணையின் பின்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு செய்தியாளர்களிடம் கூறினார். ஜாங் ஜான், வெடிப்பின் குழப்பமான ஆரம்ப கட்டங்களில் அறிக்கை செய்ததற்காக மோதல்கள் மற்றும் சிக்கலைத் தூண்டுவதற்கும் வழியமைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்காககே இந் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவை சேர்ந்த …

  22. ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் – ஜோ பைடன் In அமொிக்கா December 27, 2020 12:02 pm GMT by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/dss-1.jpg கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலுக்காக …

  23. ஜேர்மனியில் துப்பாக்கிப் பிரயோகம் – நால்வர் காயம்! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேருக்கு துப்பாக்கிக்குண்டு காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் தனது உயிரை காப்பற்றிக்கொள்ள அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்ததில் அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு …

  24. 20 ஆண்டுகால காத்திருப்பு: அதிநவீன போர் விமானத்தை விமானப்படையில் இணைத்தது ரஷ்யா! ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. 20 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. ராடார், இன்ஃபிராரெட், சோனார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தை கொண்டுள்ள Su-57 குறித்த அறிவிப்பு 2002ஆம் ஆண்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு சுகோய் 57 ரக முதல் விமானம் தயாரிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.