Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 27 நவம்பர் 2020, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காவல்துறை தலைமையகத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வரும் இசை கலைஞர் மிஷெல் ஸெக்லர் (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கருப்பின இசை கலைஞரை மூன்று காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் பிரபல இசை கலைஞர்கள், கால்பந்தாட்ட அணியினர் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். கடந்த சனிக்கிழ…

  2. டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/201125-tigray-ethiopia-mc-10455_df26fe974738625d819b462af20407a6.fit-760w-720x450.jpg எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள் அக்கறை காட்டுவதைப் பாராட்டுகிறோம். ஆனால், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச…

  3. மாய் கத்ராவில் குறைந்தது 600 பேர் படுகொலை: எத்தியோப்பியன் உரிமைகள் அமைப்பு எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் மாய் கத்ரா நகரில் இம் மாத தொடக்கம் முதல் அரங்கேறிய இனரீதியான படுகொலைகளில் குறைந்தது 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு மனித உரிமை அமைப்பு விசாரணைகளில் தெரிவித்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் இராணுவ பதவிகளுக்கு எதிராக டைக்ரேயன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிராந்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடங்கிய நவம்பர் 4 முதல் டைக்ரே பிராந்தியம் கடும் மோதல்களுக்கு முகங்கெடுத்தது. அப்போதிருந்து, தகவல்தொடர்புகள் குறைக்கப்பட்டமையினால் டைக்ரேக்கான அணுகல் இ…

  4. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விதிகளை தளர்த்த ஜேர்மன் மாநிலங்கள் திட்டம் ஜேர்மனியின் 16 மாநிலங்கள், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் 10 பேர் வரை கூடியிருப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளன. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்க கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை டிசம்பர் 20 வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பாடசாலைகள் மற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் அதேவேளை மதுபான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை நா…

  5. சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்: பிடன்! சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும். …

  6. பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முட…

    • 2 replies
    • 903 views
  7. ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்ய தயாராகும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் தனது தோல்வியை ஏற்க தயங்கிவந்த ட்ரம்ப், பிடன் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசாங்க அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளார். எனினும், டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் ட்ரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட அதிகா…

  8. கொவிட்- 19: 200 கோடி தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்! – யுனிசெப் அறிவிப்பு November 24, 2020 கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் (unicef) அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது https://thinakkural.lk/article/92106

  9. வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வு! வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இணையதளத்தில் சர்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவர் அப்தெல்மாலெக் துரூக்தெல் கொல்லப்பட்டதையடுத்து, ‘ஏக்யூஐஎம்’ என்றழைக்கப்படும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மாலியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட சுவிஸ்லாந்…

  10. இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். …

  11. போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி! போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாதங்களுக்குள் 346 பேரைக் கொன்ற நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் ஒப்புதலை எதிர்பார்த்து, அமெரிக்கன் எயார்லைன்ஸ் டிசம்பர் 29 ஆம் திகதி வணிக நடவடிக்கைகளுக்காக மக்ஸ் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இன்று புதன்கிழமை அமெரிக்க …

  12. அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஸவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்! November 21, 2020 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/913…

  13. மறுபரிசீலனை முடிவுகள் ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 5 மில்லியன் வாக்குகள் ஜோர்ஜியாவில் பதிவாகிய பின்னர் மாநில தேர்தல் அதிகாரிகள், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜோர்ஜியாவில் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிக வாக்குகளை பெற்றதாக உறுதிப்படுத்தினர். தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளின்படி, பைடன் 12,284 வாக்குகள் முன்னிலை வகித்த ஜோர்ஜியா மாநிலத்தில் தேர்தல் வாக்களிப்பின் முடிவில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, தணிக்கைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பதிவான வக்குகளை மறுபரிசீலனை செய்ய மாநிலச் செயலாளர் உத்தரவிட்டார். இதன் விளைவாக முன்னர் வெளியான ஜோர்ஜியா தேர்தல் முடிவுகளில் 0.0099 சதவீதம் மாத்திரம் …

  14. பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள்- வேன்களுக்கு 2030ஆம் ஆண்டு முதல் தடை! பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள் மற்றும் வேன்கள் 2030ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படாது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஆனால், சில hybrids இன்னும் அனுமதிக்கப்படும், அவர் உறுதிப்படுத்தினார். புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியாகியுள்ளன. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் பிரித்தானியா, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. நமது பொர…

  15. ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அணி திரளும் உலக நாடுகள் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா அடாவடி செய்கிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …

  16. ட்ரம்பின் கூற்றை நிராகரித்த அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் பதவி நீக்கம்! வெளிநாட்டு தலையீடு மற்றும் ஒரு விரிவான தேர்தல் பாதுகாப்பு முயற்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் கிறிஸ் கிரெப்ஸை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் முன்வைத்து வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தமைக்காகவே அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என அறிவித்த கிறிஸ் கிரெப்ஸை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செவ்வ…

  17. ஆப்கானில் பதிவான 39 படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரிய அவுஸ்திரேலியா அவுஸ்திரேலிய சிறப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் உயர் ஜெனரல், ஆப்கானிஸ்தானிடம் வியாழக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளார். அந்த அறிக்கையில் 23 சம்பவங்களில் 39 ஆயுதமேந்த நபர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களின் நடத்தை குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் தொகுப்புகளை விவரித்த ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், போரின் மத்தியில் படுகொலைகள் இடம்பெற்றதாற்கான ஆதராங்கள் உள்ளதாகவும் கூறினார். …

  18. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கிய கூலிப்படைகளுக்கு பிரிட்டன் ஆதரவு -முக்கிய ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பின்வாங்குகின்றது- கார்டியன் இலங்கை இராணுவத்தினரிற்கு ஆதரவாக 1980களில் செயற்பட்ட கூலிப்படையினருக்கு பிரிட்டன் இராஜதந்திர உதவகளை வழங்கியமை குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைசசு மறுத்து வருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கூலிப்படையினர் யுத்த குற்றங்கள் உட்பட பல வகை குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைனகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்; வெளிவிவகார அமைச்சு அவர்களிற்கு அவசியமான ஆவணங்களை வழங்க மறுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது. இலஙகையில் கினிமினி கூலிப்படையினரின்…

  19. அசர்பைஜானுடனான போரில் தோல்வியை ஏற்றுக்கொண்டது ஆர்மீனியா ஆர்மீனிய பிரதமர் நிகோல் பஸினியன், நாகோர்னோ-கராபாக் மீதான சமீபத்திய போரில் தோற்றதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆர்மீனிய அரசாங்கத்தின் ஜனநாயக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆறு மாத நடவடிக்கையை அவர் வெளியிட்டார். நாகோர்னோ-கராபாக் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அசர்பைஜான் மற்றும் ஆர்மீனிய இனங்களுக்கிடையில் ஆறு வார காலமாக கடும் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் போரை பேரழிவுகரமான முறையில் கையாண்டதாகத் தெரிவித்து தன்னை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவதை நிகோல் பஸினியன் நிராகரித்துள்ளார். எனினும், ஆர்மீனியாவை உறுதிப்படுத்துவதற்கும் அதன் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் தான் பொ…

  20. கோலான் குன்றில் வெடிபொருட்களை புதைத்த சிரிய படையினர் – சிரியாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் வான்தாக்குதல் இஸ்ரேல் சிரியாவில் சிரிய இராணுவ இலக்குகள் மீதும் ஈரானிய இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் மீது வெடிபொருட்கள் வைக்கப்பட்டதை தொடர்ந்து சிரியாவின் வடபகுதியில் உள்ளநிலைகள் மீதும் சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீதும் வான்தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வன்முறை காரணமாக சிரிய படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவநிலைகளையும் ஈரானின் குட்ஸ்படையணியையும் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்கள…

  21. கொவிட்-19 நெருக்கடி: கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் பெண்கள்! தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் கருவை கலைக்க தங்களது அமைப்பு பெண்களுக்கு தபால் மூலமாக மாத்திரைகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், சரியாக வளர்ச்சி அடையாத சிசுவை சுமக்கும் தாய்மார்கள் கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் அவலமும் தற்போது ஏற்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் போலந்து நாட்டில் துவங்கப்பட்ட க…

    • 2 replies
    • 682 views
  22. 95 வீதம் பாதுகாப்பான மருந்தினை உருவாக்கியுளோம் – மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தான் உருவாக்கியுயள்ள கொரோனா வைரஸ் மருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்ககூடியது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 30,000 பேரை அடிப்படையாகவைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இது தெரியவந்துள்ளது என மொடேர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனைகள் 94.5 வீதம் பாதுகாப்பை அளிக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மிகச்சிறந்த நாள் என தெரிவித்துள்ள மொடேர்னா அடுத்த சில வாரங்களில் மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை கோரி விண்ணப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாதிக…

  23. ஜேர்மனி அரசாங்கத்தின் கொவிட்-19 விழிப்புணர்வு விளம்பரம்! மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தும் வகையில், ஜேர்மனி அரசாங்கம், 90 வினாடிகள் ஓடும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுபரவல் காலத்தில், 22 வயது இளைஞர் ஒருவர், வீட்டில் தனித்து இருந்து, நாட்டிற்கு தான் அளித்த சேவை குறித்து, வயதான பின், அவர் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-1…

  24. எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி 99 Views கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார். எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எதியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எதியோப்பிய இராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்…

  25. பிரிட்டன் பிரதமர் சுய தனிமைப்படுத்தலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, அவருடன் தொடர்புகளை கொண்டமைக்காகவே போரிஸ் ஜோன்சன் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அம் மாத இறுதியில் குணமடைந்தார். எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் கொரோனா தொடர்பான எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.