Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் - உலக நாடுகள் வர்த்தக உறவுகளை துண்டிக்கவேண்டும் - ஐநா அறிக்கையாளர் 03 JUL, 2025 | 03:52 PM காசா நிலவரம் தொடர்பில் உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என ஐநாவின் அறிக்கையாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள உரையாற்றியுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நிலைமை ஊழிக்காலம் போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் …

  2. பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக் தனது இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டை கையில் வைத்திருக்கிறார். கட்டுரை தகவல் அனஸ்தேசியா கிரிபனோவா மற்றும் ஸ்கார்லெட் பார்டர் பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் செர்ஹி மெல்னிக் தனது சட்டைப் பையில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு உலோகத் துண்டை வெளியே எடுக்கிறார். அது துருப்பிடித்திருக்கிறது. அந்த உலோகத் துண்டை கையில் பிடித்தவாறே, "இது என் சிறுநீரகத்தைக் கீறி, என் நுரையீரலையும் இதயத்தையும் துளைத்தது," என்கிறார் அந்த யுக்ரேனிய வீரர். ரஷ்ய டிரோனின் துண்டுகள் போல தோற்றமளிக்கும் அந்த உலோகத் துண்டில், உலர்ந்த ரத்தத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக…

  3. இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில…

  4. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்! அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிற நிலையில் சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுந…

  5. அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்! கடந்த ஜூன் மாதத்தில் பல இரவுகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், ஆலயத்தின் கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சந்தேகத்திற்குரிய வெறுப்பு குற்றமாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பக்தர்களும் மற்றவர்களும் உள்ளே இருந்ததால், கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20 முதல் 30 தோட்டாக்கள் வளாகத்தில் சுடப்பட்டன. இது ஆயிரக்கணக்கான டொலர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் விரைவான…

  6. 60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்! தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எனது பிரதிநிதிக…

  7. 01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921

  8. 01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷ…

  9. 01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்…

  10. 01 JUL, 2025 | 04:31 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே…

  11. பட மூலாதாரம்,PIER MARCO TACCA/GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இது ஒரு புதிய யோசனை அல்ல, ஏனென்றால் நேட்டோவின் ராணுவம் ஏற்கனவே உள்ளது, இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளல்லாத நாடுகளும் அடங்கும். ஆனால் ஐரோப்பாவைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து வரும் நிலையில், ஐரோப்பா ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைக் குறித்து மீண்டும் வி…

  12. ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு! காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர். https://athavannews.com/2025/1437647

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 29 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் "போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்." 'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது. அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்து…

  14. காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு! காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437497

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (இடது), இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (வலது) 8 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார். மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரா…

  16. 4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன் 28 ஜூன் 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் …

  17. பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து 29 JUN, 2025 | 10:48 AM பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர் இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார். சில கருத்துக்கள் "ஆழ்ந்த…

  18. பட மூலாதாரம்,INSTAGRAM/REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர். ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர். இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. திர…

  19. ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத்தளத்தை இலக்குவைத்தது - அந்த தளம் ஏன் முக்கியமானது - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன? Published By: RAJEEBAN 24 JUN, 2025 | 12:12 PM cbs news அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கத்தார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலை "மிகவும் பலவீனமான பதில்" என்று ஜனாதிபதி டிரம்ப் வர்ணித்தார். அதை அமெரிக்கா எதிர்பார்த்தது மற்றும் "மிகவு…

  20. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப் June 28, 2025 1:01 pm இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதை தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். தொடர்புடைய சிலரிடம் நான் கலந்துரையாடியுள்ளேன்.அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று …

  21. கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்! கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார். ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்…

  22. 27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் …

  23. மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்…

  24. பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அல…

  25. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.