Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவின் தலைமையகமான வாட்டிகனில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த முதல் விசாரணையில் இரண்டு கத்தோலிக்க மதகுருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் திருச்சபை உதவியாளராக பணியாற்றிய சிறுவன் ஒருவனை 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேப்ரியல் மார்டினெல்லி எனும் 28 வயதாகும் பாதிரியார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வாட்டிகனில் உள்ள சமயப் பள்ளிக்கு தலைமை தாங்கிய என்ரிகோ ரேடைஸ் எனும் 72 வயதாகும் பாதிரியார் அந்தப் பாலியல் குற்றத்தை மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்ப…

  2. உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது கனடா.! ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டாம் என சீனா விடுத்த எச்சரிக்கையை கனடா நிராகரித்துள்ளது. ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களை வன்முறைக் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தியுள்ள சீனா, அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது என எச்சரித்திருந்தது. ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு குறித்து கனேடிய தரப்பு உண்மையில்அக்கறை கொண்டிருந்தால் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என கனடாவுக்கான சீனத் தூதர் கொங் பீவு வியாழக்கிழமை கருத்து வெளியிட்டார். அத்துடன், ஹொங்கொங்கில் உள்ள 300,000 கனேடி…

  3. அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று! அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்க…

  4. ஆயிரக்கணக்கான வட கொரிய தொழிலாளர்கள் சீனாவில் இருப்பதாக ஜப்பான் தகவல்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Thousands-of-North-Korean-workers-return-to-China-report-says-720x450.jpg சர்வதேச பொருளாதார தடைகளை மீறி 10,000 வட கொரிய தொழிலாளர்களை நாட்டிற்குள் சீன அதிகாரிகள் அனுமதித்திருக்கலாம் என ஜப்பானின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் மைனிச்சி ஷிம்பன் செய்தித்தாள், வடகிழக்கு சீன நகரமான ஹஞ்சூனுக்கு வடகொரிய தொழிலாளர்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. வட கொரியாவின், நாம்போ மற்றும் சோங்ஜின் உட்பட அதன் மூன்று துறைமுகங்களில் சரக்குக் கப்பல்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், கொரோனா வைரஸ…

    • 0 replies
    • 812 views
  5. 2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ‘உயர்ந்த பையன்’ குண்டு வெடித்துச் சிதறியது! இரண்டாம் உலகப் போரில், ஜேர்மனி போர்க்கப்பலை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்று போலந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐயாயிரத்து 400 கிலோகிராம் எடைகொண்ட ‘உயர்ந்த பையன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தபோது வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிகுண்டு, ஜேர்மனி-போலந்து எல்லையிலுள்ள ஸ்வினூஜ்ஸி நகரில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் பியஸ்ட் கால்வாயில் கடந்த ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ஸ்வினூஜ்லி நகரில் இயற்கை எரிவாயு முனையம் அமைந்துள்ள நிலையில், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும்போது வெடித்துச் சிதறினால் மிகப்பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் எ…

  6. கூகிள் மொழிபெயர்ப்பு. கலிபோர்னியா முழுவதும் - லாஸ் ஏஞ்சல்ஸ், ஆரஞ்சு மற்றும் வென்ச்சுரா மாவட்டங்களிலும், ஃப்ரெஸ்னோவிலும் அங்கீகரிக்கப்படாத தேர்தல் வாக்குப்பதிவு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்களன்று, கலிபோர்னியாவின் வெளியுறவுத்துறை செயலர் அலெக்ஸ் பாடிலா மற்றும் அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெரா ஆகியோர் மாநில குடியரசுக் கட்சிக்கு போர்நிறுத்த கடிதங்களை அனுப்பினர், இது இந்த சேகரிப்பு பெட்டிகளில் சிலவற்றையாவது வைத்திருப்பதாகத் தெரிகிறது. திங்கள்கிழமை இரவு NPR க்கு அளித்த அறிக்கையில், கலிபோர்னியா GOP செய்தித் தொடர்பாளர் ஹெக்டர் பராஜாஸ் எழுதினார்: "நாங்கள் கடிதத்திற்கு பதிலளிக்கப் போகிறோம், எங்கள் வாக்கு அறுவடைத் திட்டத்தைத் தொடரப் போகிறோம், வாக்குகளை அடக்க மாநி…

  7. கனடா மத்திய அரசின் உதவித் திட்டத்துக்கு முதல் நாளில் 240,640 விண்ணப்பங்கள்! தொற்று நோயின் மத்தியில் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டுக்கான மத்திய அரசின் உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக முதல் நாளில் 240,640 க்கும் மேற்பட்டடோர் விண்ணப்பித்துள்ளனர். சில சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முதல் நாளில் குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய வருவாய்த் துறை அமைச்சரின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜானிக் கோர்மியர் தெரிவித்துள்ளார். கோவிட் -19 தொற்று நோய் காரணமாக வேலை இழந்த கனேடியர்கள் திங்கள்கிழமை முதல் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நெருக்கடி கால நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என கனடா கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது. ஒன்ராறியோ மற்றும் கியூபெக்…

  8. மக்களிடம் மன்னிப்பு கோரி.. கண்ணீர், விட்ட வடகொரிய தலைவர் கிம்! குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், நாட்டு மக்களின் முன்னிலையில் கண்ணீர் விடும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போதே வடகொரிய தலைவர் மன்னிப்பு கோரினார். அத்துடன், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். பதிலுக்கு இராணுவ வீரர்களும் கண்ணீருடன் மரியாதை செலுத்தினர். இதன்போது உரையாற்றிய தலைவர் கிம், ‘நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது …

  9. தேர்தல் பிரசாரத்தில் முகக்கவசத்தை தூக்கி எறிந்த ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட பிறகு பங்கேற்ற முதலாவது தேர்தல் பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் புளோரிடாவின் சான்ஃபோர்டில் நடந்த பேரணியில், பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர். இதன்போது உரையாற்றிய ட்ரம்ப், ‘நான் இப்போது கொரோனா வைரஸ் தொற்றை கடந்துவிட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகானப் பெ…

  10. வடகொரியாவின் ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தையும் தாக்கும்! அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ள வடகொரியாவின் ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை, அமெரிக்காவின் எந்த ஒரு மாநிலத்தையும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவிய சில நொடிகளில் நியூயோர்க் மாகாணமும் அங்குள்ள மக்கள் தொகையில் 25 இலட்சம் பேர் மொத்தமாக சாம்பலாகி விடுவர். அது மட்டுமின்றி, 40 இலட்சம் மக்கள் காயங்களுடன் தப்புவார்கள் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகாத போதும் வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணையை உலகின் வல்லரசு நாடுகளாலும்…

  11. கொரோனா பாதிப்புக்கு பிறகு டிரம்பின் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக உள்ளது - நிபுணர் தகவல் ஜெருசலம் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக இஸ்ரேல் அரசின் ஆலோசகராக செயல்பட்டு வருபவர் டாக்டர் ரோனி காம்சு. இவர் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள் சரியல்ல என கவலை தெரிவித்துள்ளவர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரோனி காம்சு, உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி குறித்து கவலையாக இருக்கிறது என்றார்.மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருக்கும் ஒருவர், தமது ஆதரவாளர்களை சந்திக்க வெளியே செல்வது என்பது எந்தவகையான மன நிலை என்றே புரியவில்லை. இது மக்களுக்கு தவறான ஒரு செய்தியை அளிக்காதா? இது சுகாதார பணியாளர்களை அவமதிக்கும் செயல் அல்லவா? இது கொரோனாவுக்கு எதிர…

  12. சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை கொழும்பு வருகின்றது. இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆரபாய்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வருகின்றது. நாளை மறுதினம், ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என …

  13. ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரம் பேர் உயிரிழப்பு- வெளியானது தகவல் ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஆர்ட்சாக் குடியரசு ஜனாதிபதியின் ஊடக செயலாளர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். அசர்பைஜானில் ஆர்மீனியர்கள் பெரும்பான்மையாகவுள்ள நகோர்னோ – கராபக் பகுதி தன்னாட்சி பெற்றதாக அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் அசர்பைஜான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஆர்மீனியர்களுக்கு ஆதரவாகவும், அசர்பைஜானின் தாக்குதலுக்குப் பதிலடியாகவும் ஆர்மீனிய இராணுவத்தினர் பீரங்கி ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது. இந்நிலையில், கட…

  14. டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று! உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த புதிய நீரூற்றானது கடல் பகுதியில் 14000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீற்றர் உயரம் வரை செல்லும் எனவும் 3000 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமையினால் பல வண்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. htt…

  15. நாளை அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகளின் கீழ் மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியேற தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் தற்போதைய சூழலில் விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி, வட இங்கிலாந்து முழுவதும் மதுபான விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை கட்டாயமாக மூடப்படுவது அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் போதிய உதவிகள் மேற்கொள்ளாமல் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பது ஏற்புடையதல்ல என அங்குள்ள தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் மையப்புள்ளியாக அமைந்துள்ள அனைத்து பகுதி…

  16. இன்று (3) சனிக்கிழமை காலை பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதி நொய்ஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் உள்ள ஒரு வீட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே சம்பவம் நடந்துள்ளது. நொயிஸி-லெ-செக்கிலுள்ள ரூ இம்மானுவேல் அரகோவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொலைச்சம்பவங்கள் நடந்தன. காலை 11:00 மணி முதல் தீயணைப்பு படை மற்றும் பொலிசார் அங்கு நிலை கொண்டுள்ளனர். முதல் தகவல்படி, குடும்பத்தில் மாமா முறையானவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அ…

  17. லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது. லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமைய…

    • 3 replies
    • 805 views
  18. அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது: ஈரான்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/3500-720x450.jpg அர்மீனியா- அசர்பைஜான் நாடுகளுக்கிடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது என ஈரான் கூறியுள்ளது. இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி கூறுகையில், ‘நகோர்னோ-கராபக் பகுதியில் அசபைஜானுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் படையினர் அனுப்பப்படுவதை ஈரான் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. அந்த பயங்கரவாதிகளுடன் ஈரான் பல ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது’ என கூறினார். நகோர்னோ-கராபத் என்ற மாகாணத்துக்கு உரிமைக் கொண்டாடும் விவ…

    • 0 replies
    • 545 views
  19. சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரைவழங்குவதற்குஅமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை- சீன தூதரகம் கடும் சீற்றம் Rajeevan Arasaratnam October 6, 2020 சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரைவழங்குவதற்குஅமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை- சீன தூதரகம் கடும் சீற்றம்2020-10-06T10:54:18+05:30அரசியல் களம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள…

  20. பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த 53.26 சதவீத மக்கள் தொடர்ந்து பிரான்ஸுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்று ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 85.6 சதவீத மக்கள் பங்கேற்றிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதேபோன்ற வாக்கெடுப்பில், இதைவிட அதிகமாக மக்கள், அதாவது 56.7 சதவீத மக்கள் பிரான்சின் அங்கமாக தொடர ஆதரவாக வாக்களித்திருந்தனர். நி…

  21. காஸ்ஸெம் சோலேமானீ கொல்லப்பட்டதற்கு ட்ரம்ப் மட்டுமல்ல அமெரிக்க அரசாங்கமும் காரணம்: ஈரான்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/61e12c26a0274693b02bc23d7d20fe3e_8-720x450.jpeg ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கத்தையும் ஈரான் குற்றம் சாட்டுகிறது. கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில், ஈரான் உயர்மட்ட…

    • 0 replies
    • 671 views
  22. பெற்றோர், தாத்தா,பாட்டியை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம் ஆரம்பம்.! பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான குலுக்கல் முறையிலான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கொரோனா பெரும் தொற்றால் தாமதமடைந்த இந்தப் புதிய திட்டம் குறித்த விபரங்களை கனடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ (Marco Mendicino) நேற்று அறிவித்தார். கனடாவுக்கு பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை அழைக்க விரும்பும் கனடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் இணையத்தில் https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html படிவத்தை பூர்த்தி செய்யலாம் என அமைச்சர் மார்கோ மெண்டிசினோ கூறினார். கனடாவிற்கு தங்க…

  23. வைத்தியசாலையிலிருந்து திரும்பிய ட்ரம்ப் வெள்ளை மாளிகையில்..... கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார். வெள்ளைமாளிகையின் மேல் தளத்திற்கு சென்ற ட்ரம்ப் தனது முகக்கவசத்தை கழற்றி ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வோல்டர் ரீட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் ட்ரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே அலுவலக பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த 3…

  24. உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள் Bharati October 5, 2020 உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்2020-10-05T23:30:40+05:30Breaking news, கட்டுரை பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பாரிஸ் நகரம் இன்று திங்கட்கிழமை முதல் உயர் தொற்று வலயமாகின்றது (maximum alert zone). இதன்படி நடைமுறைக்கு வரவிருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக உணவகங்கள் மூடப்படமாட்டாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது ஆயினும் அருந்தகங்கள் (Bars) அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுகின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.