Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டனில் கொரோனா பரிசோதனை முடிவுகளை கூட்டி அறிவிப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் அண்மைய சில நாட்களில் கொரோனா தொற்றானவர்களின் எண்ணிக்கை சரியாக அறிவிக்கப்படவில்லையாம். இதனால் பிந்திப்போன தரவுகளையும் சேர்த்து, தொற்றுகுள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று சடுதியாக 22,961 ஆல் அதிகரித்தது. நாட்டின் தொற்றுப் பரம்பல், அதற்கேற்ற வெவ்வேறு பகுதிகளில் அதிகாரிகளால் எடுக்க படும் மாறுபட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை தீர்மானிக்க பெரிதும் உதவுவது இந்த தரவுகளே. இந்த தரவுகளே இப்படி தாமதமாகி அதன் பலனாக ஒரு நாளில் மிகுதியாக கூடி இருப்பது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீதான நம்பகதன்மை மீது விழுந்த அடியாக பார்க்கப்படுகிறது. https://www.theguardian.com/world/20…

  2. லண்டன்: பிரிட்டன் தலைநகரிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்த ஆப்ரிக்க சாம்பல் நிற கிளிகள், பார்வையாளர்களை மரியாதை குறைவாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசியதால், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; லண்டனிலுள்ள லின்கோல்ன்ஷைர் உயரியல் பூங்காவில் உள்ள கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன. இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஒரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்யும்; மற்றொரு கிளியோ பார்வையாளரைப் பார்த்து சிரிக்கும். …

    • 10 replies
    • 961 views
  3. ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரம் பேர் உயிரிழப்பு- வெளியானது தகவல் ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஆர்ட்சாக் குடியரசு ஜனாதிபதியின் ஊடக செயலாளர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். அசர்பைஜானில் ஆர்மீனியர்கள் பெரும்பான்மையாகவுள்ள நகோர்னோ – கராபக் பகுதி தன்னாட்சி பெற்றதாக அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் அசர்பைஜான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஆர்மீனியர்களுக்கு ஆதரவாகவும், அசர்பைஜானின் தாக்குதலுக்குப் பதிலடியாகவும் ஆர்மீனிய இராணுவத்தினர் பீரங்கி ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது. இந்நிலையில், கட…

  4. இன்று (3) சனிக்கிழமை காலை பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதி நொய்ஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் உள்ள ஒரு வீட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே சம்பவம் நடந்துள்ளது. நொயிஸி-லெ-செக்கிலுள்ள ரூ இம்மானுவேல் அரகோவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொலைச்சம்பவங்கள் நடந்தன. காலை 11:00 மணி முதல் தீயணைப்பு படை மற்றும் பொலிசார் அங்கு நிலை கொண்டுள்ளனர். முதல் தகவல்படி, குடும்பத்தில் மாமா முறையானவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அ…

  5. ட்ரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும் தனிமைப்படுத்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இது குறித்து ட்ரம்ப் வியாழக்கிழமை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஒரு சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொவிட்- 19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார். தற்போது முதல் பெண்மணியும் (மெலினா ட்ரம்ப்) நானும் எங்கள் கொவிட்-19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்துள்ளோம். இதற்கிடையில் நாங்கள் எங்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் செயல்முறையை ஆரம்பிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் தனிமைப்படுத்தலானது ஒக்டோபர் 15 ஆம் திகதி புளோரிடாவின் மிய…

  6. சீனாவில் கலாச்சார இனவழிப்புக்கு உள்ளாகும் உவீகர் இன முஸ்லிம் மக்கள் ஆகக் குறைந்தது பத்து இலட்சம் உவீகர் (Uighurs) முஸ்லிம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு மையங்களின் வலையமைப்பின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை அண்மையில் பெற்றுக்கொள்ளப் பட்ட இரகசிய ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இவ்வாறான தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுபவர்கள், சீன அரசினால் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும், முகாம்களுக்கு உள்ளே இவர்கள் எவ்வாறு அரசின் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுக் கண் காணிக்கப்படுகிறார்கள் போன்ற விடயங்களையும் இந்த இரகசிய ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. இரகசியமாகப் பேணப…

  7. முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மற்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த எண்ணெய் துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்க்கு இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு டன் ஸ்குய்லின் எண்ணெய் எடுப்பதற்கு 3,000 சுறா மீன்கள் தேவைப்படுகின்றதாம்…

  8. நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்! எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்த அறிப்பினை வெளியிட்டுள்ளார். நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நிலவுக்கு-விண்கலம்-அனுப்/

    • 23 replies
    • 1.9k views
  9. இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கவலை இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறி;த்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் அவர் தனது கவலைகைளை வெளியிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் இன்று கையளிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் கரிசனைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கையிலும் ஜெனீவாவிலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் ஏனையவர்கள் கண்காணிக்கப்படுவது குறித்த தனது கவலையை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தனதுஅறிக்கையி;ல் பதிவு செய்துள்ளார். மனித உரிமை பேரவையின் 43 வது அமர்வில் கலந்துக…

  10. என்னை மருத்துவமனையில் சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு நன்றி: அலெக்ஸி நவால்னி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, தன்னை சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி நன்றி தெரிவித்துள்ளார். ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் அந்நாட்டு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஷ்ய அரசியல் தலைவர் அலெக்ஸி நவால்னியை இரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஜேர்மனி வார இதழ் ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தகவலை நவால்னி திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் தனது உத்தியோக…

  11. சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்... டிரம்ப் - ஜோ பிடன் இடையே முதல் நேரடி விவாதம் வாஷிங்டன் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்க பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஜோ பிடனை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்பும், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவதில்லை என ஜோ பிடனும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் ஜனாதிபதி …

  12. கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்! தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே, தென் கொரிய கப்பல்கள் வட கொரியா எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து வட கொரியா அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வட கொரிய கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு அதிகாரியின் உடலைத் தேடி, தென் கொரியக் கப்பல்கள் அத்துமீறி அந்த எல்லைக்குள் நுழைந்தன. இதுபோன்ற ஊடுருவலை தென் கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போது…

  13. 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் 750 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ஆண்டொன்றுக்கு வெறும் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானவரி செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், இருபது ஆண்டுகளுக்கும் மேலான வருமானவரி ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறும் அந்த செய்தித்தாள், கடந்த 15 ஆண்டுகாலத்தில் 10 ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. …

  14. ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா …

    • 47 replies
    • 3.5k views
  15. உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு! உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு வெல்பவர்களுக்கு, நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள். இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்க…

  16. சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்! சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், வடமேற்கு மாகாணங்களில், உய்குர் மற்றும் டர்கிக் மொழிகள் பேசும், 10 இலட்சம் முஸ்லிம் மக்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மதம் தொடர்பான தங்கள் சம்பிரதாயங்களை கைவிட மறுத்ததற்காக, இவர்களுக்கு …

  17. தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, அகதிகள் விவகாரங்கள் மற்றும் குடியகல்வு ஆகியவற்றுக்கு பொறு;பபான அமைச்சர் Honourable Marco E. L. Mendicino இன்று அறிவித்து மேற்படிச் செய்தி ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் Honourable Marco E. L. Mendicino அவர்கள்; ஏற்கெனவே தங்கள் வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்கவிரும்பியவர்கள் மிக விரைவில் அவர்களை கடனாவிற்கு அழைக்கும் வகையில், வாழ்க்கை துணைகளை அழைக்க விண்ணப்பித்த…

  18. டாஸ்மேனியாவில்.. கரையொதுங்கிய, திமிங்கலங்களில் 380 திமிங்கலங்கள் உயிரிழப்பு. அவுஸ்ரேலியாவின் தெற்கு கடற்கரையில் சிக்கித் தவித்த 470 திமிங்கலங்களில் பெரும்பாலானவை இறந்துவிட்டன என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர். டாஸ்மேனியா மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவற்றை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடுமையான மற்றும் ஆபத்தான மீட்பு முயற்சிகளுக்குப் பின் குறைந்தது 380 திமிங்கலங்கள் இறந்துவிட்டன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். டாஸ்மேனியா கடற்பகுதிகள் திமிங்கலங்கள் அதிகளவில் காணப்பட்டாலும் ஒரேயடியாக திமிங்கலங்கள் கரையொதுங்கியதை கடந்த 10 வ…

  19. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். இது அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுக்கு, சீனா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார். இதனையடுத்து, உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "எந்த நாட்டுடனும் பனிப்போரில் ஈடுபடும் நோக்கம் சீனாவுக்கு இல்லை" என தெரிவித்தார். பல்வேறு காரணங்களால், உலகின் இந்த இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து இருக்கிறது. இந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டம் பெரும்பாலும் காணொளி காட்சி வாயிலாகவே நடைபெ…

  20. கொரோனா உயிரிழப்பு : அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமெரிக்காவில் கொரோனாவால் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இது வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு டகோட்டா மற்றும் உட்டா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த மைல்கலை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று புதிய இறப்பு எண்ணிக்கை ஒரு "பயங்கரமான விஷயம்" என்றும், சீ…

  21. கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளமையால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது. புதிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை துஷ்பிரய…

  22. 22 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், Getty Images "கம்போடியாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணாக, நான் பாதுகாப்பாக எண்ணி வெளியே செல்லவும், எனக்கு சௌகரியமான ஆடைகளை அணியவும் விரும்புகிறேன். நான் அணியும் உடைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அது, அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார். "குட்டை பாவாடைகளை அணியும் பெண்களை கட்டுப்படுத்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு பதிலாக கலாசார மரபுகளை நிலைநிறுத்த வேறு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்." கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவரது இணையவழி கோரிக்கை மனுவுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் …

    • 5 replies
    • 1.8k views
  23. கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும் Thomas uylland Eriksen, பேராசிரியர், சமூக மானிடவியல் துறை தமிழாக்கம்: ரூபன் சிவராஜா இன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய இந்த நிலையை ‘நெருக்கடி’ எனும் சொற்பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுவது ஒரு வகையில் குறைமதிப்பீடாகும். இந்தப் பூமியில் நாம் ஏழரை பில்லியனுக்கு மேலுள்ளோம். அம்மக்களில் இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே. இதனை எழுதிக் கொண்டிருக்கும் …

  24. தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் - ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை..! உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படுவது ஈரான். உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டும் வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய அமெரிக்கா- ஈரான் மோதல் போக்கு காரணமாக தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்த…

  25. கொரோனாவால் பட்டினிச்சாவுகள் நிகழும் – ஐ.நா எச்சரிக்கை உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் வறுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் கொரோனாவினால் மேலும் கடுமையாகப் பாதிப்படையும் என ஐ.நா எச்சரித்துள்ளது. உலக உணவு அமைப்பின் இயக்குனர் (WFP) David Beasley கூறும் பொழுது, உலகளவில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந் நிலையினை சரி செய்ய 17 டிரில்லியன் டொலர் அளவிற்கு செலவுகள் பல நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் மூலமாக இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 138 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 85 மில்லியன் மக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. கையிருப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.