உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
கொவிட்-19 எதிரொலி: அமெரிக்காவில் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை உச்சம் தொட்டது! கொரோனா வைரஸ் தொற்றால் பேரிழப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், மார்ச் மாதம் நடுவில் இருந்து வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 3.33 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, அமெரிக்காவில் வேலை செய்வோரின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அங்கு இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 419 views
-
-
கொவிட்-19 நெருக்கடி: ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்- அதிர்ச்சி தகவல் கொரோனா வைரஸ் நெருக்கடியினால் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் நோயிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தொற்றுநோய் மற்றும் பொருளாதார பணி நிறுத்தங்களின் தாக்கத்தின் விளைவாக, வரும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 750 முதல் 1,500 வரை தற்கொலைகள் கூடுதலாக நிகழும் என சிட்னி பல்கலைக்கழகத்தின் Brain and Mind Centre கணித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு…
-
- 2 replies
- 466 views
-
-
ஜேர்மனியில் இலையுதிர்காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் அபாயம் இருப்பதாக, ஜேர்மனியில் உள்ள பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வைரஸ் தொற்று குறைந்து வரு…
-
- 1 reply
- 384 views
-
-
வெனிசுவேலா | அமெரிக்க ஊடுருவல் முறியடிப்பு , தொடரும் ரொம் அண்ட் ஜெரி ஓட்டம் ஞாயிறு அதிகாலை (மே 03) மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படையெடுப்பு ஒன்றை வெனிசுவேலா வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. அமெரிக்காவிற்கும் இப் படையெடுப்பிற்கும் சம்பந்தமில்லை என ஜனாதிபதி ட்றம்ப் கூறியிருந்தாலும், இப் படையெடுப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் என்பது நிருஇக்கப்பட்டுவிட்டது. ஞாயிறு அதிகாலை கொலம்பியாவின் கரையிலிருந்து சில விசைப்படகுகள் புறப்பட்டன. அவற்றில் பெருமளவு ஆயுதங்கள், வெடி மருந்துகள், சட்டலைட் போன்கள் என்று ஒரு படையெடுப்புக்கான பொருட்கள் இருந்தன. சீருடைகளில் அமெரிக்க கொடி பொறிக்கப்பட்டிருந்தது. வெனிசுவேலா கடல் எல்லையைத் தாண்டியதும் வ…
-
- 0 replies
- 545 views
-
-
இஸ்ரேலில் உதயமாகும் தேசிய ஒற்றுமை அரசு! ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி இணைந்தது! by : Anojkiyan இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய ஒற்றுமை அரசிற்கான அதிகார பரவல் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் பதிவாகின. கூட்டணி…
-
- 1 reply
- 641 views
-
-
சீனாவை அமெரிக்கா சந்தேகிப்பது தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை: ஜேர்மனி சந்தேகம் by : Anojkiyan சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அமெரிக்கா சந்தேகப்படுவதானது, கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை என ஜேர்மனி சந்தேகம் வெளியிட்டுள்ளது. வுஹான் நகரின் ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகத்துக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதேவேளை சீனாவின் தலையீட்டுடன் கொரோனா வைரஸ் பரவியிருந்தால்…
-
- 3 replies
- 595 views
-
-
கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம் உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன் உடல் வலி, சளி, தொண்டை வறட்சி போன்றவையும் கொரோனாவின் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அறிதாக வயிற்றுப்போக்கும் ஏற்படுவதும் பின்னர் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா பெரும்பாலும் அறிகுறியே இல்லாமல் பரவுவதாக கூறப்படும் நிலையில், வாசனை இழப…
-
- 0 replies
- 453 views
-
-
வெள்ளைமாளிகை ஊழியருக்கு கொரோனா !: டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை ? - குழப்பத்தில் வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும் வெள்ளை மாளிகை ஊழியருமான கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென அச்சம் எழுந்துள்ளதையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலட் என்றவர் அமெரிக்கா இராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர் மட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்காக உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமானவர்கள் என்பதுடன் டிரம்ப் உள்நாட்டு பயணம் செய்தாலும் வெளிநாட்டு பயணம் செய்தாலு…
-
- 0 replies
- 565 views
-
-
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை! பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் பல்கலைகழக கல்லூரி (யு.சி.எல்) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் பாரம்பரிய மக்களின் இறப்பதற்கான சராசரி ஆபத்து 3.29 மடங்கு அதிகமாகும். ஆபிரிக்க கறுப்பின பின்னணியில் இது 3.24 மடங்கு அதிகமாகவும், பங்களாதேஷுக்கு 2.41 மடங்கு அதிகமாகவும் உள்ளது. கறுப்பின கரீபியன் சமூகங்கள் 2.21 மடங்கு அதிக ஆபத்தில் உள்ளன. இந்திய சமுத…
-
- 0 replies
- 275 views
-
-
500களை கடந்து நிற்கும் UKயின் மரணங்களும் -200களில் குறைந்து நிற்கும் ஐரோப்பிய மரணங்களும்… கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் +539 ஏற்பட்டுள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து குறைவை நோக்கி கீழிறங்கிய பிரிட்டனின் மரணங்கள், மீண்டும் 500 களைக் கடந்த எண்ணிக்கையை தக்கவைத்துள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்களும், அமெரிக்காவின் 76,290 என்ற எண்ணிக்கைக்கு அடுத்த நிலையில், 30,615 ஆக உயர்ந்துள்ளன. புதிதாக அடையாளம் காணப்பட்ட +5,614 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206,715 உயர்ந்துள்ளது. இதேவேளை, பிரான்ஸ…
-
- 0 replies
- 292 views
-
-
சார்ஜாவில் 48 மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!
-
- 3 replies
- 649 views
-
-
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ஜேர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் மற்றும் பிராந்திய முதல்வர்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின்படி குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல், ஒரு வரைவு திட்டத்தைத் தீட்டி 16 மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மெர்கலின் திட்டம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஒரு வாரகாலத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். ஜேர்மனியி…
-
- 9 replies
- 1.1k views
-
-
கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி உலகின் 37.7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய் பரவி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,391 லிருந்து 52,952 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 லிருந்து 1,783 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வைரஸில் உள்ள பிறழ்வுகளைப் பார்த்து, விரைவாக பரவுவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். வைரஸ் மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால் இது மோசமடைந்து வருவதாக அர்த்தமல்ல என்று லண்டன் மரபியல் ந…
-
- 1 reply
- 797 views
-
-
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமேசானில் வாழும் பழங்குடியின மக்கள் பிரேசிலியா: உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள்…
-
- 5 replies
- 684 views
-
-
கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயல் இழக்க செய்யும். இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை …
-
- 1 reply
- 557 views
-
-
கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம்: பிரித்தானியா நம்பிக்கை உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து எவ்விதமான ஆதாரமும் தங்களுக்கு வழங்கப்படவிலை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இவ்வாறு ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில் தமது பார்வையில் குறித்த கருத்து வெறும் ஊகமாகவே கருதப்…
-
- 0 replies
- 379 views
-
-
அமெரிக்காவை புரட்டியெடுத்து வரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது! கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான பிரேஸிலில் முதன்முறையாக நேற்று ஒரேநாளில் 600இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 95 ஆயிரத்து 325 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் …
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் எச்சரிக்கை அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் கொரோனா பாதிப்பால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். பதிவு: மே 07, 2020 08:27 AM வாஷிங்டன் உலகின் வல்லரசு நாடு அமெரிக்கா, தற்போது கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, 37.40 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், 2.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும், 12.37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது உலக பாதிப்பு மற்றும் பலியி…
-
- 0 replies
- 385 views
-
-
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 9,623 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 1,24,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 1,222 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அது உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த 10 நாடுகள் வரிசையில் இடம் பிடித்து விட்டது. சீனாவின் வூகானில் இருந்து உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா துவக்கத்தில் ரஷ்யாவில் மெதுவாக பரவியது. ஆனால் சில நாட்களாக அங்கு பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 5 மண்டலங்களில் தீவிரமாக கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கினை அந்நாட்டு அரசு இம்மாதம் 11ம் தேதி வரை நீட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை! சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 250 இற்க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை பிரித்தானியா கொள்வனவு செய்துள்ளது. இந்த நிலையில், குறித்த வென்டிலேட்டர்கள் குறித்து பிரித்தானிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து பெறப்பட்ட வென்டி…
-
- 16 replies
- 1.7k views
-
-
திருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா.? வெளியான ஆராய்ச்சி முடிவு.! பாரிஸ்: கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் முதல் நபருக்கு வுஹனில் கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி கொரோனா ஏற்பட்டது.அவருக்கு பெரும்பாலும் டிசம்பர் 1ம் தேதி கொரோனா தாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதே போல் வுஹனில் இருக்கும் பல்வேறு நபர்கள் டிசம்…
-
- 4 replies
- 900 views
-
-
தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது: பிரான்ஸ் பிரதமர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது என பிரான்ஸ் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கான திட்டவரைபை, நேற்று (திங்கட்கிழமை) செனட் சபையின் வாக்கெடுப்பிற்காக முன்வைத்த பின்னர், அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் கூறுகையில், ‘இது பெரும் சிக்கலான விமர்சனத்திற்குரிய நேரம். ஆனால் நாம் தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க இருக்க முடியாது. ஊரடங்கு காலத்தில், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையை நிறைவேற்றிப் பொறுப்புடன் நடந்து கொண்டமையால், அதன் பலனை நாம் பெற்றோம். கொரோனாப் பரவலைத் தடுத்துள்ளளோம். …
-
- 2 replies
- 487 views
-
-
கொரோனா வைரஸ்: முடக்கநிலைக்குப் பிந்தைய வாழ்க்கை - சீன மக்கள் பணிக்கு திரும்பியது எப்படி? படத்தின் காப்புரிமைGetty Images கோவிட்-19 நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் சமூக அளவில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் சீனாவில் முடக்கநிலை முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்கள் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். படத்தின் காப்புரிமைGetty images Image caption கோப்புப்படம் வுஹான் நகரில் இருந்து மேற்கில் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யிச்சாங் என்…
-
- 0 replies
- 550 views
-
-
வுஹானில் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் கொரோனா வைரஸின் மையமான சீனாவின், ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இன்று மீண்டும் பாடசாலைகளுக்கு செல் ஆரம்பித்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க வுஹான் நகரமானது ஜனவரி மாதம் முதல் கடுமையாக பூட்டப்பட்டிருந்தது. எவருக்கும் உள்ளேயோ அல்லது வெளியிலோ செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்குள் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் பரவலானது முற்றாக குறைந்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, எல்லைகள் திறத்தல், உள்நாட்டு பயணம் மீண்டும் தொடங்குதல் மற்றும் சில வணிகங்க நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 458 views
-
-
அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பதிவு: மே 06, 2020 11:07 AM வாஷிங்டன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். டாக்டர் பிங் லியூ அவரது வீட்டில் தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று ரோஸ் காவல் து…
-
- 1 reply
- 474 views
-