உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
கொரோனா வைரஸ் வுகானின் ஆய்வுகூடமொன்றிலிருந்தே வெளியானதா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வுகானின் ஆய்வுகூடத்திலிருந்து வைரஸ் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதில் அளிக்கையில் டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். நான் இது குறித்து அறிந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ந்துள்ள இந்த மோசமான சம்பவம் குறித்து நாங்கள் முழுமையாக ஆராய்கின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதியுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை குறிப்பிட்ட ஆய்வு கூடம் குறித்து நான் அவருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்…
-
- 1 reply
- 284 views
-
-
கலிபோர்னியாவின் மதபோதகர் ஒருவர் வீடுகளிற்குள் இருப்பதற்கான உத்தரவினை மீறினார் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அவரது தேவாலயத்தில் பெருமளவானவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கலிபோர்னியாவின் மேர்செட் என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர் என அருகில் வசிக்கும் பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து அந்த தேவாலயத்திற்கு சென்றவேளை ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தனது முழுச்சபையையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார் என அந்த பகுதியின் சட்டமொழுங்கிற்கு பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 251 views
-
-
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் அது பற்றி விரைந்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்குக் கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டுச் சொந்த நாடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் உள்ளனர். ஏராளமானோரின் விசாக் காலம் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தேசிய அவசர நிலையாகக் கருதி விசாக்காலம் முடிந்த பின்னரும் அவர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது. இதனால் விசாக்காலத்தை நீட்டிக்கக் கோரி வரும் விண…
-
- 0 replies
- 215 views
-
-
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்கள் உட்பட பல பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் நோர்த்ரைன் வெஸ்டபலியா பகுதிகளில் விசேட காவல்துறையினரால் இவர்கள் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். தஜிக்கிஸ்தானை சேர்ந்த நால்வரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தலைவர் என கருதப்படும் நபர் சிறையில் உள்ளார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் 2019 இல் ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்களிற்கு ஜேர்மனியில் சிறிய குழுவொன்றை உருவாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். அவர்கள் முதலில் தஜிக்கிஸ்தானில் தாக்குதலை…
-
- 0 replies
- 317 views
-
-
கொரோனா – பிரிட்டனில் வைத்தியசாலைகளுக்கு புறம்பாக 2142 மேலதிக இறப்புகள் பதிவாகி உள்ளன. பிரிட்டனில் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதிவாகிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய இறப்புக்களை விடவும் 2142 இறப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 3 ஆம் திகதிக்குள் கோவிட் -19 ஆல் 6,235 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும், 4,093 இறப்புக்களே சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையால் அறிவிக்கப்பட்ட து. இதேவேளை பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தனியார் வீடுகள் போன்ற இறப்புகளை இறப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பதிவுசெய்யும் சமூக அமைப்பான ONS கொரோனா வைரஸுடன் தொடர்படைய இறப்புகள் குறித்து தகவல்களை வெளியி…
-
- 1 reply
- 320 views
-
-
கொரோனா தடுப்பை இரண்டாம் கட்டமாக்கிய அமெரிக்கா: பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளை மீள நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. ஏறக்குறைய அமெரிக்காவின் அத்தனை நிருவாக அமைப்புகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் சார் நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று தனது நாளாந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொன…
-
- 0 replies
- 309 views
-
-
தவறு செய்து விட்டீர்கள்.. உங்களுக்கான நிதியை நிறுத்த போகிறேன்.. உலக சுகாதார மையத்திற்கு டிரம்ப் செக் உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், கொரோனாவை தடுக்கும் பணியில் உலக சுகாதார மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க உலக சுகாதார மையம் முடிவு எடுத்துள்ளது. எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா கடந்த வருடம் 111 மில்லியன் டாலர் அளித்தது. அதன்பின் தாமாக முன் வந்து 401 மில்லியன் டாலர் அளித்தத…
-
- 11 replies
- 915 views
-
-
பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நோக்கி செல்கிறது இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. எனினும் சில நாடுகளில் 90 வயதை கடந்த முதியவர்கள் சிலர் கொரோனாவை…
-
- 1 reply
- 389 views
-
-
அமெரிக்க மக்களை அழிக்க முடிவெடுத்து விட்டாரா? - லாக்-டவுனை நீக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்: காற்றில் பறந்த உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷி்ங்டன், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்கும் வகையில் முழுமையான திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் மையப் பிடிக்குள் சிக்கி அமெரிக்கா நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறது, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து அந்த நாடுமுழுமையாக மீளவில்லை.இதுபோன்ற நேரங்களில் லாக்டவுனை நீக்குவதே ஆபத்தானது, அதிலும் பாதிப்பி…
-
- 3 replies
- 552 views
-
-
இந்தியாவுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வான், நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் AGM -84 Haproon Black II ஏவுகணைகள் வான் வழித் தாக்குதலுக்கு உகந்தவை. இவற்றின் மதிப்பு 6992 கோடி ரூபாய் என்றும் கடற்வழித் தாக்குதலுக்கு ஏதுவான நீர்மூழ்கி ஏவுகணை 16MK 54 All Round Up மற்றும் 3 MK 54 Exercise ஏவுகணைகள் 4788 கோடி ரூபாய் மதிப்பிலும் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது. இந்த தளவாடங்கள் கிடைத்தால் பிராந்திய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியாவால் எளிதாக முறியடிக்க முடியும் என தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இந்தியா…
-
- 9 replies
- 946 views
-
-
இத்தாலியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பிரபல மாபியா கும்பல்கள் வீடு வீடாக சென்று உணவு வழங்கும் விநோத சம்பவம் அரங்கேறி வருகிறது. உலக முழுவதும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தென் பிராந்தியங்களில் வாழும் மக்கள் உணவிண்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மாபியா கும்பல்களை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று பாஸ்தா, குடிநீர், பால், மாவு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், மாபியா கும்பல்களின் உதவிகளை கட்டுப்படுத்த இயலாத சூழலே நிலவுகிறது. http…
-
- 0 replies
- 441 views
-
-
டிசம்பரில் கொரோனாவைரஸ் குறித்து எச்சரித்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தாய்வான் பகிரங்கப்படுத்தியுள்ளது. தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் இந்த மின்னஞ்சலை டிசம்பரில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் வுகானில் நிமோனியா போன்ற நோயினால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிப்பதாக தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/122672/Taiwan_coronavirus_bis.jpg இது சார்ஸ் இல்லை என சுகாதார அதிகாரிகள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர் என தாய்வானின் நோய் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் கண்காணிப…
-
- 0 replies
- 361 views
-
-
என்ன செய்யப்போகிறோம்? உலகம் முழுதும் கரோனா தொற்று 20 லட்சம்; ஐரோப்பாவில் உச்சம் தொட்ட கரோனா, தெற்காசியாவை தாக்கும்: நிபுணர்கள் கருத்து டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் தோன்றிய உலக மரண வைரஸான கரோனாவுக்கு இன்று உலகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை நெருங்குகிறது. ஸ்வைன் ப்ளூ என்ற பன்றிக்காய்ச்சலை விடவும் கரோனா கொடியது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒரு காலத்தில் நியூயார்க் என்றால் சொர்க்கபுரி ஆனால் இன்று மரணக்கூடம். ஆம், அங்கு 10,000 பேர் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். நியூயார்க், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் வகையாகச் சிக்கியுள்ளன. இது அமெரிக்காவின் பிற மூலைகளுக்…
-
- 1 reply
- 432 views
-
-
ஜெனீவா: 2009ல் உலகளவில் தொற்றுநோயை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் முதன்முதலில் ‛பன்றிக்காய்ச்சல்' அல்லது ‛எச் 1 என் 1' நோய்த்தொற்று கண்டறிப்பட்டது. இதில் 18,500 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், லான்செட் மருத்துவம், ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நிகழ்ந்த இறப்புகளை உலக சுகாதார அமைப்பு மதிப்பிடவில்லை எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,51,700 முதல் 5,75,400 வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெ…
-
- 2 replies
- 399 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கம் – அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 23000 ஐ கடந்தது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக மோசமான மற்றும் இந்த வாரம் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் உச்சத்தை எட்டக்கூடும் என அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, வேறு எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 587,155 பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட குறிப்பாக 8.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நியூயோர்க்கில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது…
-
- 7 replies
- 519 views
-
-
அத்துமீறும் சீனா – வலுக்கட்டாயமாக வெளியற்றப்படும் ஆபிரிக்கர்கள் சீனாவில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட்ட ஆபிரிக்கர்கள் அவர்களது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை ஆட்கொண்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் குறித்த வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவில் அதன் பாதிப்பு மிக வேகமாக குறைவடைந்து ஹூபே மாகாணம் உள்ளிட்ட முழு நாடும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் மீண்டும் அந்நாட்டில் பரவாமல் இருக்க சீன அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த ஆபி…
-
- 0 replies
- 385 views
-
-
கொவிட்-19 வைரஸ் பரவாது தடுப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் நீண்ட நாட்களாக வீட்டில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொழுதுபோக்குகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரக்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின் தேசிய ஆய்வுகூடம் என்பன இணைந்து புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளன. இதன்படி விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஒன்லைன் மூலம் அது தொடர்பான பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. இப் பயிற்சியினை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை சிறார்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://news.lankasri.com/science/03/2240…
-
- 3 replies
- 491 views
-
-
இந்தோனேசிய கிராமொன்று சமூகவிலக்கல் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான பேய்கள் போன்று வேடமிட்ட தொண்டர்களை பயன்படுத்துகின்றது. மக்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜாவா தீவின் கெபு கிராமத்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை பயன்படுத்துகின்றனர். பேய்களை போல வேடமிட்டவர்களை பயன்படுத்தும் தந்திரோபாயம் வெற்றியளிக்க ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள கிராமத்தவர்கள் மக்கள் வீடுகளில் இருந்து வருவது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். பேய்கள் தோன்றிய பின்னர் பெற்றோரும் குழந்தைகளும் வீடுகளில் இருந்து வெளியேறுவதை குறைத்துக்கொண்டுள்ளனர் என கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் ஆபத்தை மக்கள் உணரச்செய்வதற்காக இந்த முயற்சி என உள்ளுர் …
-
- 0 replies
- 363 views
-
-
கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர் நிதி அளிக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டாலரை அளிக்கும் என்றார் அவர். ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்ற அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர நிதி வழங்கப்படும் என்றார். கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்…
-
- 4 replies
- 499 views
-
-
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஒத்துழைப்பில் சீனா ஆக்கப்பூர்வமாகப பங்காற்றும் - பில்கேட்ஸ் பெய்ஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா என்று கூறப்படுகிறது. இருப்பினும் சீனா கொரோனா வைரஸை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.இது குறித்து சீன ஊடகம் ஒன்றிற்கு பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணி பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது, சீனாவில் பணி மற்றும் உற்பத்தி செயல்கள் மீட்…
-
- 0 replies
- 422 views
-
-
சீனாவில் மீண்டும் அதிகரிக்கின்றது நோயாளிகளின் எண்ணிக்கை- ரஸ்ய எல்லை நகரம் குறித்து அச்சம் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள சீனா ஞாயிற்றுக்கிழமை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய வைரஸ் மையமாக ரஸ்ய எல்லையில் உள்ள அதன் நகரம் மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. சீனா ரஸ்ய எல்லையிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவிலிருந்து ஹெய்லோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்தவர்களில் 48 பேரிற்கு நோய் தொற்று உள்ளமை கண்டுபிடிக்…
-
- 0 replies
- 375 views
-
-
``இப்படி ஒரு நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற செய்கைகள் எங்களை திகைப்புக்கு உள்ளாக்குகிறது. இது போன்ற சிலரின் நடவடிக்கைகளால்தான் சமூகப்பரவல் மிகவேகமாக நடந்து வருகிறது.” உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்று அதிக அளவில் பரவிவரும் சூழலில், இருமும்போதோ தும்மும்போதோ கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வான்கோவர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட்டைப் பயன்படுத்திய ஒருவர், லிஃப்ட்டிலிருந்து வெளியேறும் முன்பு, அங்கிருக்கும் பட்டன்களில் எச்சிலை உமிழ்ந்துவிட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ அங்கிருப்பவர்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படு…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டதைத் தவிர, சுகாதாரம் மற்றும் கொரோனா தொற்று தொடர்பாக உளவுத்துறையும், சுகாதார அமைப்பும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் சொந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 60,433 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 22,115ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிக் கொண்டிருக்கி…
-
- 0 replies
- 535 views
-
-
கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவில் கட்டுக்கடங்காத நிலையில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர். அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு! கொரோனாவை விட மோசமான ஒன்று வரும் ஜூன் மாதம் வரபோகிறது. அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் 55 வயதான பொறிஸ் ஜோன்சன் கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார். திடீரென மத்திய லண்டனில் உள்ள சென் தோமஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜோன்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவர் த…
-
- 3 replies
- 716 views
-