உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் – கொரோனாவின் கோரத்தாண்டவம்! தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியவர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர். அங்கு இறந்தவர்கள் அனைவருமே கொரோனாவால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதும் நிலையில், முதியோ…
-
- 3 replies
- 701 views
-
-
கரோனாவால் ஒவ்வொரு நாட்டின் பாதிப்புக்கும் சீனாதான் பொறுப்பு; பல லட்சம்கோடி டாலர்களில் இழப்பீடு கேளுங்கள்; ட்ரம்ப்பிடம் இந்திய வம்சாவளி அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல் கரோனா வைரஸ் இயற்கையானதாக இருந்தாலும், சீனாவின் வுஹான் நகர ஆய்வகத்திலிருந்துதான் கவனக்குறைவாக பரவியது, கோவிட்-19 வைரஸால் ஒவ்வொரு நாடும் அனுபவிக்கும் துன்பத்துக்கும் சீனாதான் பொறுப்பு, கரோனா வைரஸால் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கேளுங்கள் என அதிபர் ட்ர்ம்ப்புக்கு இந்திய வம்சாவளி அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளார் அமெரிக்க அரசி்ன் தலைமை வழக்கறிஞர்களில் ஒருவராக இருக்கும் ரவி பத்ராவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர். கரோனாவால…
-
- 1 reply
- 306 views
-
-
ஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டி, தனது செயல்பாடுகள் மூலம் உலக தலைவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல். ஏஞ்சலா மெர்கெல் கொரோனா தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மாகாண கவர்னர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு எடுத்தார்.நோய் தடுப்பு பணியில் மாகாண கவர்னர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்தார். அதுவே மெர்கலின் நிர்வாகத்திறமைக்கு சரியான எடுத்துகாட்டு. நாட்டை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை தனது ஒவ்வொரு பேட்டியிலும் மக்களிடம் உணர்த்தினார். எதிர்கட்சிகளை சேர்ந்த மாகாண கவர்னர்களும் மெர்கலின் பேச்சை ஏற்றுக்கொண்டு செயலாற்றினர். அமெரிக்காவை போலவே ஜெர்மனியும் விரைவில் அதிபர் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனாலும் தேர்தலையும், தங…
-
- 3 replies
- 659 views
-
-
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கொரோனாவின் பிறப்பிடமான வெற் சந்தையை மீண்டும் திறக்கும் சீனா.? உலக மக்கள் தொகையை குறைக்கக் கூடிய சார்ஸ், கொரோனா போன்ற வைரஸ்களின் பிறப்பிடம் எது என்று கேட்டால் அது சீனாவின் ‘வெற் மார்க்கெற்’ ( Wet market ) எனப்படும் மரக்கறி, இறைச்சி சந்தைதான். 2003ல் சார்ஸ் வைரஸ் பரவி உலகளவில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர் . அவ்வைரஸ் மனிதனுக்கு பரவக் காரணம், சீனாவின் குயாங்டாங்க் மாகாணத்தில் விற்கப்பட்ட புனுகுப் பூனைகள்தான். அந்த பூனையிடமிருந்து மனிதனுக்கு சார்ஸ் வைரசை பரப்பிய பெருமை சீனாவின் இந்த சந்தையையே சேரும். அதே போல், தற்போது வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க காரணமான கொரோனாவை பரப்பியதும் இந்த 'வெற் மார்க்கெற்’ தான். ஹூபெய…
-
- 0 replies
- 433 views
-
-
ரமலான் (Ramadan) (/ˌræməˈdɑːn//ˌræməˈdɑːn/; அரபு மொழி: رمضان Ramaḍān, IPA: [ramaˈɮˤaːn] இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமஜான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம். ரமதான் என்ற வார்த்தையானது, அராபிய வார்…
-
- 2 replies
- 579 views
-
-
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதன் காரணமாக ஜப்பானின் சுகாதார துறை செயல் இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்கவேண்டிய அழுத்தம் காரணமாக ஜப்பான் மருத்துவமனைகளின் அவசரசேவை பிரிவுகள் நோயாளிகளிற்கு கிசிச்சை வழங்க முடியாத நிலையில் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகளுடன் அம்புலன்ஸ் ஒன்றை 80 மருத்துவமனைகள் திருப்பியனுப்பின என பிபிசி தெரிவித்துள்ளது. ஜப்பானின் சுகாதார சேவை அதிக அழுத்தத்திற்குள்ளாவதை தடுப்பதற்காக மருத்துவர்கள் குழுவொன்று டோக்கியோவின் மருத்துவமனைகளிற்கு உதவி வருகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 423 views
-
-
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக சர்வதேச யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஐநாவின் முயற்சிகளிற்கு அமெரிக்காவும் ரஸ்யாவும் தடை போடுகின்றன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக அரசாங்கங்கள் ஆயுதக்குழுக்கள் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் மோதல்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஒரு மாதத்திற்கு முன்னரே வேண்டுகோள் விடுத்திருந்ததை கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பிரான்ஸ் ஜேர்மனி உட்பட பல நாடுகளும்மனித உரிமை அமைப்புகளும்பரிசுத்த பாப்பரசரும் இதற்கு ஆதரவளித்துள்ள போதிலும் டிரம்ப் நிர்வாகம் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது எனகார்டியன் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 319 views
-
-
"அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்" - டொனால்டு டிரம்ப் Getty Images கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறையப் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,938ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 4,636 பேர் இந்த பெருந்தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர். Getty Images டொனால்ட…
-
- 4 replies
- 1.2k views
-
-
சீனா அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை கொரோனா வைரஸ் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்தநாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்த தாக்கம் காரணமாக பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் இந்நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவியது குறித்து டொனால்ட் ட்ரம்ப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “வைரஸ்…
-
- 2 replies
- 640 views
-
-
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா பரவ துவங்கிய காலகட்டத்தில் அதிகளவு மாஸ்க்குகளை , அமெரிக்கா ஏற்றுமதி செய்ததால், தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பலரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரை: கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிப்பதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், அந்நாட்டிற்கு லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு மிக்க மாஸ்க்குகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை அமெரிக்கா ஏற்றுமதி செய்தது. இந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மாஸ்க் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்தது. க…
-
- 1 reply
- 472 views
-
-
தைபே: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான தைவானில், தன் கோர முகத்தை காட்டவில்லை. பல்லாயிரம் கி.மீ., துாரத்தில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், கொத்துக் கொத்தாக உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தைவானில்இதுவரை, 400 பேர் மட்டுமே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குட்டி நாடு இந்த கொடிய கிருமியிடம் இருந்து, இந்த குட்டி நாடு, தங்களை எப்படி தற்காத்துக் கொண்டது? அது பற்றி, அந்நாட்டு அதிபர் சாய் இங் -வென், கூறியதாவது:கடந்த, 2003ல் ஏற்பட்ட, 'சார்ஸ்' வைரஸ் தொற்றுக்கு, தைவானில் ஏராளமான உயிர்களை இழந்தோம். அந்த மோசமான அனுபவம், எங்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. எனவே, கடந்த ஆண்டு டிசம…
-
- 0 replies
- 299 views
-
-
சர்வதேச சமூகத்திற்கு எதிரியாக மாறும் சலூன் கடைகள்..? அமெரிக்காவில் 50% பாதிப்புக்கு காரணம் சலூன்கள்.? சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் தான் கோர தாண்டவம் ஆடியுள்ளது. உலகளவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் சமூக தொற்றாக பரவிவிட்டதால் அங்கு பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் பேரிழப்பு. இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனா…
-
- 2 replies
- 667 views
-
-
(நா.தனுஜா) நடைபெறுவது வேறுபட்ட அரசியல் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல. மாறாக இது மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போராகும் என்று சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாவிடின் அவரவர் சொந்த நாட்டிலேயே மேலும் பலர் மரணிப்பதைக் காணவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் 'த எகொடொமிஸ்ட்' என்ற ஊடகம் கடந்த 16 ஆம் திகதிக்குரிய நாளிதழில் 'சீனா வெல்கிறதா? - கொவிட் - 19 இன் பூகோள அரசியல் காரணிகள்' என்பதை அதன் முதற்பக்கத்தலைப்பாகப் பிரசுரித்திருக்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் இது குறித்து அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைக…
-
- 0 replies
- 333 views
-
-
சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட ஐம்பது வீதம் அதிகம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்பநாட்களில்வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் மருத்துவ பணியாளர்களின்பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் தெரிவித்துள்…
-
- 4 replies
- 644 views
-
-
புவி கோளவடிவானது என நாம் கூறிக்கொண்டாலும் பூமியின் வடிவம் ஒரு சீரான கோளமல்ல நீர்ப்பரப்பை அகற்றிவிட்டு அவதானித்தோமேயானால் புவி கோணல்மாணலான ஒரு கல்போன்றுதான் காட்சியளிக்கும் வடதென் துருவங்களைவிட புவியின் மத்தியபகுதியே சற்று உப்பியதுபோல் காணப்படுகின்றது புவிதன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்கின்றது ஆனால் உண்மையில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் நேரம் 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுத்துக்கொள்ளும் பூமியின் ஒரு நாளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாம் புவி தன்னைத்தானே ஒரு தடவை முழுமையாக சுற்றுவதைத்தான் ஒரு நாள் எனக்கூறுகின்றோம் இவ்வாறு புவி தன்னைத்தானே சுற்றுவதில் சந்திரனின் ஈர்ப்புவிசை தாக்கத்தை செலுத்துகின்றது இதனால்…
-
- 0 replies
- 608 views
-
-
-
- 8 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி விமானத்துறை, சேவைத்துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் அனைவரின் வேலையும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு நிலவுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இது நீடித்தால் 2007-09இல் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. வேலை கொடுப்பவர்கள் இல்லை, விற்பனைகள் சரிவு,…
-
- 3 replies
- 1k views
-
-
36000 மக்களை இழந்த நிலையில், அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் - திறவுங்கள் 50 மாநிலங்களை கொண்ட அமெரிக்காவில் 8 மாநிலங்கள் வீட்டில் இருக்க சொல்லி கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அதேவேளை, பொருளாதார சங்கடங்களால் அமெரிக்கர்கள் 'லொக் டவுனை' முடிவிற்கு கொண்டுவர கேட்டு வீதிகளில் போராடிவருகிறார்கள். சிலர் ஆயுதங்களுடன் வீதிகளில் காணப்பட்டனர்
-
- 1 reply
- 669 views
-
-
ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் உயிரியல் பூங்கா விலங்குகள் ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் உயிரியல் பூங்கா விலங்குகள் பரிதவித்து வருகின்றன. ஜெர்மனியில் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த கொடிய வைரசுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, மக்கள் கூட்டம் அதிகம் வரும் தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் உயிரியல் பூங்காக்களும் அடங்கும். அதன்படி அந்த நாட்டின்…
-
- 0 replies
- 303 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா வைரசினால் 3.3 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1.2 பில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. தீவிர சமூகவிலக்கல் காணப்பட்டால் கூட 122 மில்லியன் பேர் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p&…
-
- 1 reply
- 604 views
-
-
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் - ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்தே அவர் அவ்வாறு தெரிவித்தார். அதேபோல இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களைவிட, இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஊரடங்கு வெற்றிகரமாக இருந்ததை காண்பிப்பதாகவும் ஜென்ஸ் தெரிவித்தார். எனினும், இத்தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்…
-
- 0 replies
- 342 views
-
-
உலகின் மிகப்பெரியா பொருளாதார, இராணுவ, அரசியல், தொழில்நுட்ப என அடுக்கிக்கொண்டே போகலாம் அமெரிக்காவை பற்றி. ஆனால், என்னதான் பெரிய வல்லரசு என்றாலும், அதன் பலமான கட்டமைப்புக்குள் உள்ள ஓட்டைகளை இந்த கோவிட் 19 தொற்று படம் போட்டு காட்டியுள்ளது. அதில், முக்கியமானது - உணவு. நகர் வாழ்க்கையை கொண்டுள்ள மக்களில் போதிய சேமிப்பு இல்லாத மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
-
- 5 replies
- 1.1k views
-
-
ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கிலீட் சயின்சஸ் என்கிற நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் என்கிற மருந்தைத் தீவிர சுவாசக் கோளாறு இருந்த கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இருவரைத் தவிர அனைவரும் ஒருவாரத்துக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டும் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் கேத்லீன் முல்லன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். தேசிய நலவாழ்வு மையம் ரெம்டிசிவிர் உட்படப் பல்வேறு மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்து வருவதாகவும…
-
- 1 reply
- 386 views
-
-
ரஸ்யா புதன்கிழமை செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி கட்டளைப்பீடத்தின் தளபதி ஜெனரல் ஜோன் ரேய்மன்ட் இதனை அறிவித்துள்ளார். இது விண்வெளிக்கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்த ரஸ்யாவின் ஏமாற்று நடவடிக்கைகளை புலப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ரஸ்யாவிற்கு போட்டி விண்வெளி ஆயுத திட்டங்களை கைவிடும் நோக்கமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஆக்கிரமிப்பை எதிர்ப்பது குறித்தும் தேசத்தையும் தனது நேசநாடுகளையும் அமெரிக்காவின் நலன்களையும் விண்வெளியில் இடம்பெறும் விரோத நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது குறித்தும் உறுதியாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவி…
-
- 3 replies
- 467 views
-
-
உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு! by : Litharsan கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறரை இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நோயால் நேற்று 84 ஆயிரத்து 515 பேர் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 20 இலட்சத்து 83 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 1 reply
- 448 views
-