Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இங்கிலாந்தில் மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்-வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இங்கிலாந்தில் ஊரடங்கை தளர்த்த பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ளார். பதிவு: ஏப்ரல் 17, 2020 12:54 PM லண்டன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்திருந்தார். இதனிடையே மருத்துவமனையில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகளை இங்கிலாந்து பதிவு செய்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 13,729 ஆக உயர்ந்துள்ளது. வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியதாவது:- நடைமுறையில் இ…

  2. அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மேம்பாட்டுக்கு மூன்று கட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார் அதிபர் டிரம்ப். 7 மாகாண ஆளுநர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய அவர், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மிகவும் அதிகமாக கொரோனா பாதிப்புடைய பகுதிகளில் மக்களை கட்டுக்குள் வைப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். குறைந்த அளவு பாதிப்புடைய பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். வர்த்தகம், கல்வி நிலையங்கள் போன்றவற்றை மூன்று கட்டங்களாக மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு கட்டமும் 14 நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நோய் பரிசோதனைக் கருவிகளும் நோயை…

    • 0 replies
    • 440 views
  3. சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா பரவியதா? – விசாரிக்கும் அமெரிக்கா கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கையினை ஏனைய நாடுகள் மறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்களை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கின்றது. ஆரம்பத்தில் குறித்த வைரஸ் பரவல் இத்தாலியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், பின்னாட்களில் அமெரிக்காவில் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. இந்நிலையில் குறித்த நிலைவரம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகள் தமது நாடுகளில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கைகளை மறைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை …

  4. ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு! by : Litharsan அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயி…

  5. கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வ…

    • 3 replies
    • 485 views
  6. கொரோனாவை சமாளிக்க கடன் வழங்க IMF திட்டம் by : Benitlas கொரோனாவால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக சர்வதேச நிதியத்தால் கடனாக கொடுக்கக்கூடிய முழுத் தொகையான 76 லட்சம் கோடி ரூபாய் நிதியினை உலக நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வொசிங்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மொத்தமாகவுள்ள 189 உறுப்பு நாடுகளில் 102 நாடுகள் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கோரியுள்ளதாக குறிப்…

    • 0 replies
    • 457 views
  7. கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்! பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார். இறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில் செவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட. மருத்துவப் பணியாற்றி வந்த இவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால் எப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர். …

  8. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடனும் வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிதல் மற்றும் வெப்பநிலை சோதனை என்பனவற்றுடனும் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன. இதன்படி, வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு 37.5 செல்சியசுக்கும் அதிக…

  9. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகள் மீட்பு- 24பேர் பட்டினியால் மரணம் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்டபடகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர்,கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் காணப்பட்டுள்ளனர், ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மீன்பிடிப்…

  10. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலை திரும்பாது - ஸ்பெயின் பிரதமர் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் சுமார் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். எனினும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதுவரை ஸ்பெயினில் 1,77,633 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இத்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வாழக்கை இயல்பு நிலைக்கு திரும்பாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார். இந்த வாரத் தொடக்கத்தில் அங்கு தொழிற்சாலைகள், கட…

    • 2 replies
    • 556 views
  11. 2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு! உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளமை இதுவரை கண்டிறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 981 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 708 பேர் இதுவரையான காலப்பகுதியில் மரணித்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 78 ஆயிரத்து 932 பேர் இதுவரை குணமடைந்துள்…

  12. பீஜிங்: சீனாவின் வூகானிலிருந்து தான் முதன் முதலாக கொரோனா உலகமெங்கும் பரவத் துவங்கியது. இன்றுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,500 ஆகி உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சீன …

    • 0 replies
    • 331 views
  13. கொரோனா வைரஸ் வுகானின் ஆய்வுகூடமொன்றிலிருந்தே வெளியானதா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வுகானின் ஆய்வுகூடத்திலிருந்து வைரஸ் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதில் அளிக்கையில் டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். நான் இது குறித்து அறிந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ந்துள்ள இந்த மோசமான சம்பவம் குறித்து நாங்கள் முழுமையாக ஆராய்கின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதியுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை குறிப்பிட்ட ஆய்வு கூடம் குறித்து நான் அவருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்…

    • 1 reply
    • 284 views
  14. கலிபோர்னியாவின் மதபோதகர் ஒருவர் வீடுகளிற்குள் இருப்பதற்கான உத்தரவினை மீறினார் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அவரது தேவாலயத்தில் பெருமளவானவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கலிபோர்னியாவின் மேர்செட் என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர் என அருகில் வசிக்கும் பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து அந்த தேவாலயத்திற்கு சென்றவேளை ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தனது முழுச்சபையையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார் என அந்த பகுதியின் சட்டமொழுங்கிற்கு பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டுள்ளார். …

    • 0 replies
    • 252 views
  15. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் அது பற்றி விரைந்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்குக் கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டுச் சொந்த நாடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் உள்ளனர். ஏராளமானோரின் விசாக் காலம் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தேசிய அவசர நிலையாகக் கருதி விசாக்காலம் முடிந்த பின்னரும் அவர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது. இதனால் விசாக்காலத்தை நீட்டிக்கக் கோரி வரும் விண…

    • 0 replies
    • 215 views
  16. ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்கள் உட்பட பல பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் நோர்த்ரைன் வெஸ்டபலியா பகுதிகளில் விசேட காவல்துறையினரால் இவர்கள் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். தஜிக்கிஸ்தானை சேர்ந்த நால்வரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தலைவர் என கருதப்படும் நபர் சிறையில் உள்ளார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் 2019 இல் ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்களிற்கு ஜேர்மனியில் சிறிய குழுவொன்றை உருவாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். அவர்கள் முதலில் தஜிக்கிஸ்தானில் தாக்குதலை…

    • 0 replies
    • 318 views
  17. கொரோனா – பிரிட்டனில் வைத்தியசாலைகளுக்கு புறம்பாக 2142 மேலதிக இறப்புகள் பதிவாகி உள்ளன. பிரிட்டனில் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதிவாகிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய இறப்புக்களை விடவும் 2142 இறப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 3 ஆம் திகதிக்குள் கோவிட் -19 ஆல் 6,235 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும், 4,093 இறப்புக்களே சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையால் அறிவிக்கப்பட்ட து. இதேவேளை பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தனியார் வீடுகள் போன்ற இறப்புகளை இறப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பதிவுசெய்யும் சமூக அமைப்பான ONS கொரோனா வைரஸுடன் தொடர்படைய இறப்புகள் குறித்து தகவல்களை வெளியி…

  18. கொரோனா தடுப்பை இரண்டாம் கட்டமாக்கிய அமெரிக்கா: பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளை மீள நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. ஏறக்குறைய அமெரிக்காவின் அத்தனை நிருவாக அமைப்புகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் சார் நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று தனது நாளாந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொன…

  19. தவறு செய்து விட்டீர்கள்.. உங்களுக்கான நிதியை நிறுத்த போகிறேன்.. உலக சுகாதார மையத்திற்கு டிரம்ப் செக் உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், கொரோனாவை தடுக்கும் பணியில் உலக சுகாதார மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க உலக சுகாதார மையம் முடிவு எடுத்துள்ளது. எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா கடந்த வருடம் 111 மில்லியன் டாலர் அளித்தது. அதன்பின் தாமாக முன் வந்து 401 மில்லியன் டாலர் அளித்தத…

  20. பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நோக்கி செல்கிறது இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. எனினும் சில நாடுகளில் 90 வயதை கடந்த முதியவர்கள் சிலர் கொரோனாவை…

  21. அமெரிக்க மக்களை அழிக்க முடிவெடுத்து விட்டாரா? - லாக்-டவுனை நீக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்: காற்றில் பறந்த உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷி்ங்டன், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்கும் வகையில் முழுமையான திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் மையப் பிடிக்குள் சிக்கி அமெரிக்கா நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறது, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து அந்த நாடுமுழுமையாக மீளவில்லை.இதுபோன்ற நேரங்களில் லாக்டவுனை நீக்குவதே ஆபத்தானது, அதிலும் பாதிப்பி…

  22. இந்தியாவுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வான், நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் AGM -84 Haproon Black II ஏவுகணைகள் வான் வழித் தாக்குதலுக்கு உகந்தவை. இவற்றின் மதிப்பு 6992 கோடி ரூபாய் என்றும் கடற்வழித் தாக்குதலுக்கு ஏதுவான நீர்மூழ்கி ஏவுகணை 16MK 54 All Round Up மற்றும் 3 MK 54 Exercise ஏவுகணைகள் 4788 கோடி ரூபாய் மதிப்பிலும் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது. இந்த தளவாடங்கள் கிடைத்தால் பிராந்திய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியாவால் எளிதாக முறியடிக்க முடியும் என தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இந்தியா…

    • 9 replies
    • 947 views
  23. இத்தாலியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பிரபல மாபியா கும்பல்கள் வீடு வீடாக சென்று உணவு வழங்கும் விநோத சம்பவம் அரங்கேறி வருகிறது. உலக முழுவதும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தென் பிராந்தியங்களில் வாழும் மக்கள் உணவிண்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மாபியா கும்பல்களை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று பாஸ்தா, குடிநீர், பால், மாவு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், மாபியா கும்பல்களின் உதவிகளை கட்டுப்படுத்த இயலாத சூழலே நிலவுகிறது. http…

    • 0 replies
    • 442 views
  24. டிசம்பரில் கொரோனாவைரஸ் குறித்து எச்சரித்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தாய்வான் பகிரங்கப்படுத்தியுள்ளது. தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் இந்த மின்னஞ்சலை டிசம்பரில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் வுகானில் நிமோனியா போன்ற நோயினால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிப்பதாக தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/122672/Taiwan_coronavirus_bis.jpg இது சார்ஸ் இல்லை என சுகாதார அதிகாரிகள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர் என தாய்வானின் நோய் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் கண்காணிப…

    • 0 replies
    • 361 views
  25. என்ன செய்யப்போகிறோம்? உலகம் முழுதும் கரோனா தொற்று 20 லட்சம்; ஐரோப்பாவில் உச்சம் தொட்ட கரோனா, தெற்காசியாவை தாக்கும்: நிபுணர்கள் கருத்து டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் தோன்றிய உலக மரண வைரஸான கரோனாவுக்கு இன்று உலகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை நெருங்குகிறது. ஸ்வைன் ப்ளூ என்ற பன்றிக்காய்ச்சலை விடவும் கரோனா கொடியது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒரு காலத்தில் நியூயார்க் என்றால் சொர்க்கபுரி ஆனால் இன்று மரணக்கூடம். ஆம், அங்கு 10,000 பேர் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். நியூயார்க், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் வகையாகச் சிக்கியுள்ளன. இது அமெரிக்காவின் பிற மூலைகளுக்…

    • 1 reply
    • 433 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.