உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத…
-
- 0 replies
- 377 views
-
-
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்…
-
- 0 replies
- 291 views
-
-
உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார். இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/world/80/140206
-
- 1 reply
- 522 views
-
-
கொரோனாவின் அகோரம்: அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் என்றுமில்லாத உயிரிழப்பு..! by : Litharsan மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 718 பேரை வைரஸ் காவுகொண்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 820 பேர் உலக அளவில் மரணித்துள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதிலும் தற்போது உயிரிழப்புக்களின் வீதம் அதிகரித்த…
-
- 4 replies
- 859 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் …
-
- 1 reply
- 590 views
-
-
வெளிநாட்டவர்கள் உள்நுழையத் தடை விதித்தது இந்தோனேசியா! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் ரெட்னோ மார்சுடி, தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறினார். அந்தவகையில் குறித்த தடை உத்தரவு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் தமது நட்டு பி…
-
- 0 replies
- 338 views
-
-
சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீ: தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு! by : Litharsan சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் (Xichang) பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதில் சிக்கிய சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர். இதுவரை ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்…
-
- 0 replies
- 295 views
-
-
ஜெர்மனியின் நிதியமைச்சர் தற்கொலை: கொரோனோ கேட்கும் தொடர் பலி- மாயா March 30, 2020 - admin · கொரோனோ ஒரு மன்னன் கடமை தவறியதை உணரும் போது போது உயிர் துறப்பதை சிலப்பதிகாரத்தில் படித்தோம். ஆனால் கொரோனா பாதிப்பால் தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் ஜோசஃப் ஷாஃபரின் தற்கொலை, கொரோனாவின் துயரம் எத்தனை கோணங்களில் நம்மைத் தாக்கப் போகிறது என அச்சுறுத்துகிறது. ஜெர்மனியின் நிதித் தலைநகரான ஹெஸ்ஸி மாநிலத்திலுள்ள ஃப்ராங்க்ஃபர்ட் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் நிதியமைச்சர் ஜோசஃப். ஒரு மரணக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கொள்ளை நோயின் பொருளாதார பாதிப்பிலிருந்…
-
- 0 replies
- 533 views
-
-
அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி by : Litharsan அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெர…
-
- 4 replies
- 645 views
-
-
மணிலா: கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் ஓடுபாதையில் புறப்பட்டபோது திடீரென விபத்துக்குள்ளானது. விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததில் 8 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விபத்தில் சிக்கிக்கொண்டது.உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அடையாளம் காணப்பட்டவர்களில் நிக்கோ பாடிஸ்டா என்ற இளம் மருத்துவரும் அ…
-
- 0 replies
- 306 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் புதிய சுவாச கருவி ஒன்றை மெர்சிடிஸ் பார்முலா ஒன்னில் இடம்பெற்றுள்ள (Mercedes Formula One) குழுவினர் ஒரே வாரத்தில் உருவாக்கி உள்ளனர். இந்த கருவி இப்பொது லண்டன் மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. CPAP எனப்படும் Continuous Positive Airway Pressure கருவி ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் தேவையின்றி, அதிக அழுத்தம் வாயிலாக காற்றையும், ஆக்சிஜனையும் இந்த கருவி வாயிலாக கொரோனா நோயாளிகளின் நுரையீரல்களுக்குள் செலுத்த முடியும். இந்த CPAP தொழில்நுடபத்தை மேம்படுத்தி அந்த குழுவினர் 100 சுவாசக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். விரைவில் தினமும் 1000 கருவிகளை …
-
- 4 replies
- 628 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன…
-
- 0 replies
- 774 views
-
-
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இளவரசர் சார்லஸ் மற்றும் சீமாட்டி கமிலா தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். மேலும், கடந்த சில தினங்களாக சார்லஸ் வீட்டில் இருந்தபடியே தமது அலுவல் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இளவரசரும் சீமாட்டியும் ஸ்காட்லாண்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிறத…
-
- 5 replies
- 782 views
-
-
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள் கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது. இந்த கட்…
-
- 2 replies
- 1k views
-
-
பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த…
-
- 16 replies
- 1.3k views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். விஞ்ஞானி மைக்கேல் லெவிட் லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்று…
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மெகன் தம்பதிக்கான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகையான மெகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியும் மெகனும் சுதந்திரமாக இருக்க விரும்பியதால் அவர்கள் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.இதற்கு நீண்ட ஆலோசனைக்கு பிறகு 2-ஆம் எலிசபெத் ராணி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அரச பட்டம், பதவிகளை துறக்கவும் முடிவு…
-
- 0 replies
- 341 views
-
-
சீனாவில் நான்காவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி! வெளிநாட்டு பயணிகளுக்கான எல்லைகள் மூடுவதன் மூலமும் சர்வதேச விமான சேவைகளின் குறைத்தமையின் மூலமாக சீனாவில் தொடர்ந்தும், நான்காவது நாளாக கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பிரகாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்நாட்டவர் உட்பட 31 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இது அதற்கு முந்திய நாளில் 45 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,304 ஆகவும் வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கையை 81,470 ஆகவும் அதிகரி…
-
- 0 replies
- 644 views
-
-
கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு ஹெலன் பிரிக்ஸ் பிபிசி நியூஸ் Getty Images உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார். சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனித…
-
- 13 replies
- 1.8k views
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, நியூயார்க் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுப்பு: இதையடுத்து, 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, மருத்துவ துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதை, அதிபர், டொனால்டு டிரம்ப் ஏற்கவில்லை. 'முழு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை' என, அவர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில், வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ண…
-
- 1 reply
- 508 views
-
-
மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி இடமளித்திருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. அவர் கரோனா தொற்றால் இறக்கவில்லை; இயற்கையான மரணம். அப்படியென்றால், இறந்தவர் அவ்வளவு பிரபலமா? ம்ஹூம். அதுவும் கிடையாது. பிறகு, எதற்காகத் தொலைக்காட்சி இவ்வளவு முக்கியத்துவம் தந்தது? ஏன் தந்தது என்பதில்தான் இன்றைய ஜெர்மனியின் முழு நிலையும் தெரியவரும். கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு ஜெர்மனியைப் பாதித்திருக்கிறது என்பதும் புரியும். கரோனா தொற்றில் ஜெர்மனி நான்காம் படிநிலையை அடைந்திருக்கிறது. ஜெர்மனி மட்…
-
- 0 replies
- 419 views
-
-
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில், 1 வயது நிரம்பாத குழந்தை, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது. முதல் முறை: கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், வயதானவர்களே. இந்நிலையில், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், வைரஸ் பாதிப்பால், அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை அம்மாகாண கவர்னர் உ…
-
- 0 replies
- 319 views
-
-
மே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? ஒபாமா பகிர்ந்த ஆய்வுக் கட்டுரை! தமிழில்: Shyamsundar நியூயார்க். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன நடக்கும் என்று அமெரிக்க ஆய்வு கட்டுரை ஒன்று விளக்கி உள்ளது. மூன்று மாதத்திற்கு முன் அப்படி ஒரு வைரஸ் இருப்பது யாருக்குமே தெரியாது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த தொடக்க காலத்தில் SARS-CoV-2 என்று அழைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க எல்லா நாடுகளையும் ஏறத்தாழ பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 471,820 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 155 நாடுகளின் பொருளாதாரம் இதனால் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.…
-
- 1 reply
- 807 views
-
-
பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077… March 24, 2020 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானி…
-
- 13 replies
- 1.2k views
-
-
வாஷிங்டன்: உலகில் மற்ற எந்த நாட்டை விடவும், கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது அமெரிக்கா. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால், அமெரிக்காவில் 33 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் அரசிடம் நிவாரணம் கோரி வந்தனர். 10.9K people are talking about this கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெ…
-
- 0 replies
- 506 views
-