உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
கொரோனா வைரஸ் : பிரித்தானிய ராஜதந்திரி ஹங்கேரியில் உயிரிழந்தார் கொரோனா வைரஸ் நோயினால் பிரித்தானியாவின் சிரேஸ்ர ராஜதந்திரி ஒருவர் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார். புடாபெஸ்ற்-இல் (Budapest) உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் துணைத் தலைவரான ஸ்டீவன் டிக் (Steven Dick) நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 37 வயதான ஸ்டீவன் டிக்கின் உயிரிழப்பினால் தூதரக ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் அவர் தனது தாய்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாகச் செயற்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஸ்டீவன் எமது அன்புக்குரிய மகன், பேரன் மற்றும் மருமகன் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 292 views
-
-
உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருபகுதியினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். Covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் மூன்று வாரங்களுக்கு வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 3,434 ஐ எட்டியதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது பாதிப்புமிக்க நாடாக மாறியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 219 views
-
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களில் உச்சநிலையை எட்டலாம் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேறு இரு நிபுணர்களும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர். வன்டெர்பிட் பல்கலைகழகத்தின்…
-
- 0 replies
- 314 views
-
-
பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா : வைரசினை எதிர்கொள்வது குறித்து சமூக ஊடங்களில் தொடர்ந்து அறிவுரைகள் - ஆலோசனைகள் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனக்குள்ள பாரிய சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து மௌனமாகயிருந்த ஒபாமா தற்போது டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் அவற்றினை முகநூலில் மீள்பதிவு செய்துவருகின்றார். பராக் ஒபாமா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான புதிய நடவடிக்கைகளி;ற்கான காரணங்களையும் தெளிவுபடுத்த…
-
- 0 replies
- 619 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாராவுக்குள் புகுந்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர். காபூலின் சோர் பஜார் பகுதியிலுள்ள (Shor Bazar area of Kabul) குருத்வாராவில் இன்று காலை 4 பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். தகவலின்பேரில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. முடிவில் குருத்வாராவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் ஆப்கானிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் காயமடைந்த…
-
- 0 replies
- 327 views
-
-
நியுயோர்க்கின் மருத்துவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிற்கு விட்டமின் சி யினை பெருமளவிற்கு வழங்க ஆரம்பித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்றூ வெபர் என்ற மருத்துவர் நான் ஐசியுவில் உள்ள நோயாளிகளிற்கு 1500 மில்லிகிராம் விட்டமின் சியினை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை விட்டமின் சியை வழங்குவதாக அவர் நியுயோர்க் போஸ்டிற்கு மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவகம் பரிந்துரை செய்துள்ளதை விட 16 மடங்கு அதிகமாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடிப்படையாக வைத்தே விட்டமின் சி யை வழங்குவதாக வெபர் தெரிவித்துள்ளார். விட்டமின் சி வழங்கப்…
-
- 0 replies
- 411 views
-
-
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இளவரசர் சார்லஸ் மற்றும் சீமாட்டி கமிலா தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். மேலும், கடந்த சில தினங்களாக சார்லஸ் வீட்டில் இருந்தபடியே தமது அலுவல் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இளவரசரும் சீமாட்டியும் ஸ்காட்லாண்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிறத…
-
- 5 replies
- 782 views
-
-
நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் பண ஒறுப்புத் தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது. யேர்மனியில் தற்போது நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் கொறொனோ தொடர்பாகப் புதிய சட்டவரைபுகளை மாநில அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. பொது வெளியில் இருவருக்கு மேல் கூடுதல், மூதாளர் இல்லங்கள் மருத்துவமனைகளுக்குப் பார்வையாளராகச் செல்லுதல் போன்றவற்றுக்கான பண ஒறுப்புத் தண்டணையாக ஒவ்வொருவருக்கும் 200யூரோவும், சுற்றுலா மற்றும் கிறில் போன்றவற்றை முன்னெடுத்தால் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் 250யூரோவும், விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் 1000 யூரோவும், பங்கேற்றபாளருக்கு 250யூரோவும், வீட்டிலிருந்து 50 மீற்றருக்கு அப்பால் உணவு உண்ணுதல் மற்றும் உணவகத்திற்குபோதல் போன்றவற்றிற்கு 50யூரோவும் எ…
-
- 8 replies
- 679 views
-
-
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். கோப்பு படம் “அட.. இதெப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?” - இப்படித்தான் உலக நாடுகளையெல்லாம் இன்றைக்கு அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது புதின் ஆளுகிற ரஷியா. உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷியா.ரஷியா, இப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியப்பட வைப்பதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல உ…
-
- 17 replies
- 1.9k views
-
-
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. 10 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கோப்பு படம் பிஜிங்: சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிர…
-
- 0 replies
- 232 views
-
-
நியுயோர்க்கில் கொரோனா வைரஸ் அதிவேகபுகையிரதத்தை விட வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ஆளுநர் அன்றூ குயுமோ மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியுயோர்க் நிலங்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ள கனரி பறவை போல காணப்படுகின்றது,நியுயோர்க் வேகமாக பாதிக்கப்படுகின்றது நியுயோர்க்கில் தற்போது நடப்பது நாளை கலிபோர்னியா இலினொய்சில் நடக்கலாம்,எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட உச்சநிலையை விரைவில் அடைந்துவிட்டோம், அது நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் அனுப்புகின்ற உயிர்காக்கும் கருவிகள் போதுமானவையாகயில்லை எனவும் அவர் கு…
-
- 1 reply
- 289 views
-
-
மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு! உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே பெடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்பெயினிலும் தற்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 743பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,249 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 69 ஆயிரத்து 176 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிர…
-
- 1 reply
- 313 views
-
-
நிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் : லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரிக்கை நிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் என்று லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு விடுத்த அவரகாலநிலை அறிவிப்பினையும் மீறி இன்று செவ்வாய்க்கிழமை ஏராளமான பயணிகள் நிலக்கீழ் ரெயில்கள் மூலமாகப் பயணம் செய்துள்ளனர். மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்துச் சேவைகள் முக்கியமான அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றுகின்றவர்களுக்காக இயக்கப்படுகின்றன. எனவே அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி ரெயில்களில் பயணம் செய்வதை நிறுத்தாவிட்டால் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் இறந்துவிடுவார்கள் எ…
-
- 1 reply
- 335 views
-
-
இத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல் ஒன்று கசிந்தது! இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64 ஆயிரம் பேர் குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 6 ஆயிரத்து 77 ஆகக் காணப்படுகிறது. இந்நிலையில், வைரஸ் தொற்று தொடர்பாக தம்மை பரிசீலித்துக்கொள்வதற்காக மட்டுப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077… March 24, 2020 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானி…
-
- 13 replies
- 1.2k views
-
-
சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஹான்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிடவே, அந்த ட்வீட் வைரலானது. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,138 ஆக இருக்கிறது. அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1,02,844 பேர் மீண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று (24.3.2020) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. …
-
- 3 replies
- 829 views
-
-
கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெய்னில் கொரோனா தொற்றுக்குள்ளான 514 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2,696 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா தெற்றுக்குள்ளானவர்களின் தொகையும் 39,673 ஆக பதிவாகியுள்ளது. இதேவளை கொரோனா பரவலின் வேகம் காரணமாக ஸ்பெய்ன் நாடு தழுவிய ரீதியில் பூட்டல் நடவடிக்கையை கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/78561
-
- 0 replies
- 326 views
-
-
ஆஸ்திரியாவின் பிரபலமான இஸ்கில்<span style="color: #404040; font-family: Helmet, சுற்றுலா நகரில் உள்ள மதுபானசாலையிலிருந்தே ஐரோப்பிய -ஸ்கன்டினேவியன் நாடுகளிற்கு கொரோனா வைரஸ் பரவியதா என சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனாவைரசினால் பலர் பாதிக்கப்பட்டமை குறித்து தகவல்களை வெளியிடாதமைக்காக குறிப்பிட்ட மதுபானசாலையின் நிர்வாகிகளை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் அவுஸ்திரியாவின் அல்ப்ஸ் பகுதியில் உள்ள சிறிய நகரமான இஸ்கிலின் பிரபலமான மதுபானசாலை அதன் இரவு வாழ்க்கைக்கும் வருடாந்த இசைநிகழ்வுகளிற்கும் மிகவும் பிரபலமானது. கிட்ஸ்லொக் என்ற மதுபான விடுதியில் பணியாற்றிய நபர் ஒருவர் பெப்ரவரி இறுதியில் வைரசினால் பாதிக்கப்பட்டார்,ஆனால் நிர்வாகிகள் இது குறித்து தங்களிற்கு தகவல…
-
- 0 replies
- 525 views
-
-
கொரோனா வைரசின் புதிய உலகளாவிய மையமாக அமெரிக்கா மாறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பா போன்றதொரு நிலையை அமெரிக்கா விரைவில் எதிர்கொள்ளும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால் அந்த நாடு வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கிரட் ஹரிஸ் தெரிவித்துள்ளார். நாங்கள் அமெரிக்காவில் பெருமளவானவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்துள்ளோம், அமெரிக்கா வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறும் என உடனடியாக தெரிவிக்க முடியாது ஆனால் அதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/7…
-
- 0 replies
- 289 views
-
-
கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வரும் சீனா, வூகானை தலைநகராகக் கொண்ட ஹூபேய் மாகாணத்தை முடக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல தளர்த்தி வருகிறது. சீனாவைப் பொறுத்தவரை, 81 ஆயிரத்து 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 5 ஆயிரத்து 120 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 72 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 270 பேர் உயிரிழந்தனர் என சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பரவும் அபாயம் குறைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் உள்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவ…
-
- 1 reply
- 333 views
-
-
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.p அதே போன்று ஒரே நாளில் 139 பேர் அதற்குப் பலியாகி, உயிரிழப்பு 550 ஐ தாண்டியுள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருவதை அடுத்து அத்தியாவசிய மருந்துகள், மாஸ்குகள், சானிடைசர்கள் உள்ளிட்டவை பதுக்கப்படுவதை தடுப்பதற்கான சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனிடையே அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கொரோனாவுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி <strong>குளோரோகுயின் மாத்திரைகளை சாப்பிட்ட 60 வயதான தம்பதியரில் கணவர் உயிரிழந்தார்</strong>. அவர…
-
- 3 replies
- 632 views
-
-
காத்மண்டு : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளை நேபாள அரசு மூடியுள்ளது. சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா நோய் தொற்று உலகின் பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற பல நாடுகளும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகளிலும் எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவுதலை கட்டுக்குள் வைக்க மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள நாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளை வரும் மார்ச்.,29 வரை தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்ப…
-
- 0 replies
- 270 views
-
-
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு நன்றி. யூரூப்
-
- 3 replies
- 789 views
-
-
உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள்- ஐ.நா. அவசர கோரிக்கை! உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையிலும் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச் சண்டை, பயங்கரவாதத் தாக்குதல்கள் என இடைவிடாமல் போர்கள் இடம்பெறுகின்ற நிலையில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட…
-
- 1 reply
- 819 views
-