உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. சமீபத்தில், குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைப்பதோடு, அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பயனர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளன. மேலும், அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை பாகிஸ்தானியர்களி…
-
- 0 replies
- 443 views
-
-
அசோசியேட்டட் பிரஸ் மிகவும் ஆழமானதாக மாறிவரும் சுகாதார நெருக்கடி, வெள்ளிக்கிழமை நிதிச்சந்தைகளின் வீழ்ச்சி வர்த்தகங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்டமை களியாட்ட நிகழ்வுகள்- விளையாட்டுப்போட்டிகள் இரத்து செய்யப்பட்டமை காரணமாக பொருளாதார நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வீடுகளிற்கு செல்லுமாறு கேட்டுள்ளன,அதிகாரிகள் அயல்களையும் பாடசாலைகளையும் மூடியுள்ளனர். கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பரந்து பட்ட நடவடிக்கைள் வேலைவாய்ப்புகளிற்கும்,இலாபங்களிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. வெள்ளிக்கிழமை பல நாடுகள் தாங்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து…
-
- 0 replies
- 263 views
-
-
ரஷிய தாக்குதலில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள நேட்டோ அமைப்பு, துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா ஆதரவுடன் சிரியாவும், போராளிகளின் ஆதரவுடன் துருக்கியும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரியா-ரஷிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி, இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த அவ்வமைப்பிற்கு கோரிக்கை விடுத்தது. அதன்படி பெல்ஜியத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெற…
-
- 1 reply
- 393 views
-
-
சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் நோய்தாக்கம் சீனாவில் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து முழுமையாக குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களை நான்கு நாட்களின் பின் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் கொரோனா வைரஸ்ஸிற்கு நேர்மறையாக காணப்பட்டதாக சீனாவின் ஒரு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்டு 18 நாட்களின் பின்னர் மீண்டும் …
-
- 0 replies
- 502 views
-
-
கொரோனா வைரஸின் தாக்கம் தனது நாட்டு பிரஜைகளை வீட்டினுள்ளேயே இருக்குமாறு தொன்கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறிப்பிடுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய தருணம் எனவும் அநநாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச ரீதியில் பல மடங்குகளாக அதிரித்து வரும் கொரோனாவின் தாக்கம் , பல்வேறு நாடுகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே இதில் இருந்து தாக்கத்தை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்களப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளதோடு , அநாவசியமாக வீட்டில் இருந்து வெளியில் செல்வதையும் தவிர்குமாறு அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76795
-
- 0 replies
- 467 views
-
-
மலேசிய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் புதிய பிரதமராக 72 வயது முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டு உள்ளார். உலகில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அண்மையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, பிரதமர் மகாதீர்முகமது , தமது பதவியை ராஜினாமாசெய்திருந்தார். இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட மகாதீர் முகமது , தொடர்ந்து பதவியை தக்க வைக்கவும்,எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியை தட்டிப்பறிக்கவும் கடும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வந்தனர். மலேசிய அரசியலில், அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை((Muhyiddin Yassin)) புதிய பிரதமராக நியமித்து, அந்நாட்டு மன்னர், அறிவிப்பு ஒ…
-
- 0 replies
- 816 views
-
-
கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய்- பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை கொரோனோ வைரஸ் நோய்க்கு எதிராக போராடுவதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.பில்கேட்ஸ் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தலையங்கத்தில் எழுதி உள்ளதாவது:- ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை இது போன்ற நோய்க்கிருமி தாக்குதல் இருக்கும். கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய் ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோயை எதிர்க்க இப்போது தயாராக இருப்பதன் மூலம், நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், மேலும் இந்த வைரஸின் உல…
-
- 0 replies
- 386 views
-
-
கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய பாராளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி கூறுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்றார். கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். தொற்றுநோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவளை ஈரானில் கொரோனா தொடர்பான…
-
- 1 reply
- 332 views
-
-
என்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி சசெக்ஸ் இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தனது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார். நேற்றிரவு லண்டன், கிங்ஸ் குரொஸ் ரெயில் நிலையத்திலிருந்து எல்என்இஆர் (LNER) ரெயிலில் எடின்பேர்க்கிற்குப் பயணித்தபோது ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினர். எடின்பேர்க்கிற்குச் சென்ற அவர் தனது அரச பட்டத்தைக் கைவிட்டதுடன் தன்னை ஹரி என்று மாத்திரமே அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை எடின்பேர்க்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கிவைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எடின்பேர்க் சர்வதேச மாநாட்டு மையத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்க விமானத்தின் மீது சீனப் போர்க்கப்பல் லேசர் ஒளிக்கற்றையைச் செலுத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவு உள்ளது. இப்பகுதியில் பறந்த அமெரிக்கக் கடற்படையின் விமானத்தின் மீது, சீனப் போர்க்கப்பலில் இருந்து அபாயகரமான லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அபாயகரமான மற்றும் முறையற்ற செயல் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த லேசர் ஒளிக்கற்றை விமானத்துக்கும் அதில் உள்ளவர்களுக்கும் கடும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது. பசிபிக் மண்டலத்திலும் தென்சீனக் கடல் பகுதியிலும் உலவும் சீனப் போர்க்கப்பல்கள் அப்பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெர…
-
- 1 reply
- 416 views
-
-
உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிரிட்டன் அரசு லண்டன் விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லண்டன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பாரீஸ் ஒப்பந்தத்தின் படி செயல்பட பிரிட்டன் அரசு தவறி விட்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இதற்கு தடை விதித்துள்ள கீழ் நீதிமன்றம் அரசு உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தது. ஆனால் இறுதி முடிவு பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் உள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த அவர், புல்டோசர்கள் முன்பு படு…
-
- 0 replies
- 343 views
-
-
ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறி கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வரும் ஹாரி தம்பதி, மார்ச் 31 ஆம் தேதி முதல் அரச பதவிகளில் இருந்து முற்றிலும் விலக உள்ளனர். இந்த நிலையில் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்கள் என்ற காரணத்தினால் ஹாரி தம்பதிக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மார்ச் 1 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள போவதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர். அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய தம்பதிக்கு தங்கள் வரி பணத்தில் பாதுகாப்பு வழங்க பெரும்பாலான கனடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 423 views
-
-
குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு! குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்தோடு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈரானுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஹுபேயில் 65 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/kuwait-has-43-confirmed-cases-of-coronavirus-health-ministry/
-
- 0 replies
- 384 views
-
-
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து! புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இதேவேளை, குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்க…
-
- 0 replies
- 364 views
-
-
பயிர்களை உண்ணும் வெட்டுக்கிளிகளை சமாளிக்க 100,000 வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு சீனா தயாராகி வருகின்றது. ஒரு வாத்தானது ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை சாப்பிடலாம் எனத் தெரிவித்த சீன விவசாய வல்லுநர்கள், வாத்துகளை வைத்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் செயல்முறையானது பூச்சிக்கொல்லிகளை விடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவளை பயிர்செய்கையில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தை குறைப்பதற்கான திட்டங்களை உருவாக்க நிபுணர்கள் குழுவை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்புவள்ளதாகவும் இந்த வாரம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பயிர்செய்கையானது கடந்த இரண்டு தசாப்தங்களாக வெட்டுக்கிளிகளின் தாக்கம் காரணமாக பெரிதும் பாதிக்க…
-
- 3 replies
- 591 views
-
-
கொரோனா வைரஸின் பிடியில் உலகம் சிக்கும் ஆபத்து உருவாகி வருகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை பார்க்கும்போது இது உலகளாவிய நோய்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புள்ளமை தெளிவாகின்றது என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். கொரோன வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவும் அடுத்த கட்டத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என்பதே எமக்கு கிடைத்துள்ள புதிய ஆலோசனை என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக கொரோனவைரசினை எதிர்கொள்வதற்கான அவசர திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம் என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனா பிரஜைகளிற்கு விதிக்கப்பட்ட தடையையும் அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 306 views
-
-
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடுமாறு இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளார். ஜப்பானின் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாகாத பயணிகள் வெளியேறியுள்ளனர். இவர்களின் வெளியேற்றம், அந்த கப்பலில் பயணித்த பயணிகளின் வைத்திய சோதனைகள் தொடர்பில் விமார்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில…
-
- 0 replies
- 747 views
-
-
சிரியாவில் கிளர்ச்சியார்கள் மீது உக்கிர தாக்குதல்: மூன்று பகுதிகளை கைப்பற்றியது அரசுப்படை! by : Anojkiyan சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கிய பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கியப் பகுதிகளான அல் நக்யார், அர நபியா, அல் டையிர் ஆகிய பகுதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சிரிய அரசுப் படைகளால் தங்கள் வசம் உள்ள பகுதிகள் கைப்பற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மீதமுள்ள ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் மேற்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுத…
-
- 1 reply
- 383 views
-
-
சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை! சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 228 views
-
-
கோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சீனா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிற்கு புதிதாக 889பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 75,465 பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 411பேர் தொற்றுநோயின் மையப்பகுதியான ஹூபேயிலிருந்து வந்தவர்கள் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான…
-
- 11 replies
- 689 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு! ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்தநிலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா மற்றும் வட ஆபிரிக்காவுக்குச் சென்று நாடு திரும்பிய ஆஸ்த…
-
- 0 replies
- 286 views
-
-
பாரிஸில் 60 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தமது நாட்டைச் சேர்ந்த பிரஜை எனவும், தனது நாட்டுப் பிரஜையொருவர் கொரோனாவினால் உயிரிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென பிரான்ஸ் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளார். குறித்த நபர் பிரான்ஸ் தலைநகரில் உள்ள பிட்டி சால்பெட்ரியர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதேவளை கொரோனா தொற்று தொடர்பில் இன்றை தினம் இரண்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/76576
-
- 1 reply
- 730 views
-
-
மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள் S.P. Thas அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார். பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்ட…
-
- 6 replies
- 932 views
-
-
ஐரோப்பாவையும் விடாது துரத்தும் கொரோனா வைரஸ்! சீனாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பாவையும் உலுக்க தொடங்கியுள்ளது. ஆசியாவை தவிர்த்து ஐரோப்பாவின் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இத்தாலியில் தற்போது வரை 229 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சில நகராட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இத்தாலியின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அதாவது 167 பேர், வடக்கு பிராந்தியத…
-
- 0 replies
- 299 views
-
-
சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா: 893பேர் இலக்கு– 9பேர் உயிரிழப்பு சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 763 ஆக இருந்தது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இன்று 893ஆக அதிகரித்து உள்ளது. அத்தோடு நேற்று 7ஆக இருந்த எண்ணிக்கை, கூடுதலாக 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை சிவப்பு சமிஞ்சை ஆக உயர்த்தியுள்ளது. தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. காய்ச்சல் அல்லது சு…
-
- 0 replies
- 276 views
-